★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Friday, 18 March 2011

தமிழர் களம்- கரூரில் புதுமலர் பேச்சு.

தேடிச் சோறுநிதந் தின்று – பல
         சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுழன்று – பிறர்
         வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
         கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
          வீழ்வே னென்று நினைத் தாயோ ?
                                     என்கிற மகாகவியின் வரிகளுக்கு ஒப்பான வாழ்வை, இத்தரணியிலே மேற்கொண்டு உதாரண கர்த்தாக்களாக திகழ்கின்ற தனித்தமிழர் சேனையின் தலைவர் அய்யா நகைமுகன் அவர்களே, எங்கெல்லாம் தமிழன் ரத்தம் சிந்துகின்றானோ அங்கெல்லாம் தனது குருதியும் கொட்டப் பட்டதாக துடிதுடித்துப் போகும் உணர்ச்சிக் கவிஞர் அய்யா காசி ஆனந்தன் அவர்களே, தமிழ் நிலத்திற்கு ஒவ்வாத திராவிட அரசியலை வேரறுக்க நித்தமொரு களம் காணும் அறிஞர் குணா அவர்களே, எழுகதிர் ஆசிரியர் அருகோ அவர்களே, தன்மானத் தமிழ் மறவர் கூட்டமைப்பின் தலைவர் புலவர்.பாவிசைக்கோ அவர்களே, மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் செந்தில்மள்ளர் அவர்களே, திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களே, இந்த கரூர் மாநகரத்திலே தமிழர்களத்தின் சார்பில் இங்கே சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த தமிழர் பெருவிழா மாநாட்டிற்கு அழைத்து எமக்கும், எமது இயக்கத்திற்கும் பெருமை சேர்த்த தமிழர்களம் பொதுச்செயலாளர் அண்ணன் திரு.அரிமாவளவன் அவர்களே, நாம் தமிழர் இயக்கத்தின் செரோன் அவர்களே, கூட்டத்திலே பெருந்திரளாக கலந்து கொண்டிருக்கிற ஆன்றோர்களே, சான்றோர்களே, உங்கள் அனைவருக்கும் நான் சார்ந்த மறத்தமிழர் சேனையின் சார்பில்
மாலைநேர வணக்கங்கள்.

                                            இந்த மேடை எனக்கு முற்றிலும் புதிதானது. இதற்குமுன் தமிழ், தமிழர், திராவிடர் எதிர்ப்பு என்று பொதுமேடைகளில் அங்கம் வகித்ததில்லை. அறிஞர் குணாவை இதற்குமுன் நான் பார்த்ததேயில்லை, கடந்த 21/08/2010 அன்று இராமேஸ்வரத்தில் மறத்தமிழர் சேனையின் சார்பில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி “மறவர் மண்ணுரிமை மாநாடு” நடைபெற்றது. அம் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அண்ணன் அரிமாவளவன் அவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த நட்பின் தொடர்ச்சியாக இந்த விழாவிற்கு அழைக்கப் பெற்று இங்கே தற்போது பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த மேடை எங்களுக்கு புதிதே தவிர தமிழ்த் தேசியமோ, தமிழன்தான் இந்த மண்ணை ஆழ வேண்டும் என்கின்ற வேட்கையோ புதிதல்ல.
                                              தமிழ்ச்சாதியின் ஓர் அங்கமான மறவர்களின் பிரதிநிதியாக, தமிழகத்து மண்ணிலேயிருந்து திராவிட வந்தேறிகள் விரட்டி அடிக்கப்படவேண்டும், என்கிற கொள்கையின் பாற் நின்று கேட்கிறேன். எனதருமை சகோதரன் செரோன் அவர்கள் பேசும்பொழுது மூச்சுக்கு முந்நூறு தடவை ‘தந்தை பெரியார்’ ‘தந்தை பெரியார்’ என்று முழங்கினார். நான் கேட்கிறேன், தமிழ்ச்சாதி பெண் ஓருத்தி பெற்றெடுத்த மகனாயிருந்து கேட்கிறேன் தந்தை பெரியார், தந்தை பெரியார் என்கிறீர்களே, அவன் எவனின் தந்தை. இந்தியாவிற்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை தந்தையாக்கியது காங்கிரஸ்காரன் என்றால், ஈ.வெ.ராமசாமி நாயக்கரை தமிழகத்தின் தந்தையாக்கியது தான் தி.மு.கவின் சாதனை. இன்றைய சூழலில் கன்னடியன் ஈ.வெ.ராவை பெயர் சொல்லி அழைத்தால் கூட வழக்கு என்கிறது திராவிட அரசுகள். இனி வரும் காலங்களில் பெரியார் என்று அழைக்காமல் ஈ.வெ.ராமசாமி என்று அவரை எவரேனும் அழைத்தால், அழைத்தவனின் மண்டை உடைந்தால் கூட ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை. இது திராவிட வந்தேறிகளின் ஆட்சி நடக்கும், வந்தாரையெல்லாம் வரவேற்கும் செந்தமிழ் நாடாகும்.
                                                   எனக்கு முன்னே இங்கே பேசிய தலைவர்களெல்லாம் ஈழத்து தமிழ் மக்களுக்கு பாடுபாதகம் புரிந்த காங்கிரஸை, தமிழ் மண்ணிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி ஏறிய வேண்டுமென்று பேசினர். நாங்கள் எல்லாம் போர்த்தொழிலை குலத்தொழிலாகக் கொண்டு வளர்ந்த கொற்றப் பரம்பரையினர் வழிவந்தவர்கள். ஒருவரை கருவருக்க வேண்டுமென்றால், கருவருக்கப்பட வேண்டியவனின் கட்டிய மனைவியின் கருவிலே இருக்கக்கூடிய சிசு வரைக்கும் சிதைத்தாக வேண்டும். இதிலே தயவு தாட்சண்யம் பார்த்து விட்டு விட்டோம் என்றால், நாளை அதுவே நமக்கு எமனாகிப் போகும். அதைப்போலவே தமிழ்நிலத்திலே ஆழக் கிளைபரப்பி எங்கும் நிறைந்து திரியும் நச்சு திராவிடத்தை தாங்கி நிற்கும் அனைத்து கட்சிகளையும் நாம் கருவருத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த மேடையில் வீற்றிருக்கும் அய்யா காசி ஆனந்தன் போன்றவர்கள் எம்மை மன்னிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் ம.தி.மு.க. தலைவர் வை.கோ வுடன் நெருங்கி பழகி வருபவர். தமிழகத்திலே இருக்கக் கூடிய திராவிட கட்சிகளின் தலைமைகள் எல்லாமே வந்தேறிகளின் கைகளில் இருக்கிறது. ராமதாஸ் கட்சி ஆரம்பித்தால் அது வன்னியர் கட்சியாம். சரத்குமார் கட்சி ஆரம்பித்தால் அது நாடார் கட்சியாம். கார்த்திக் கட்சி ஆரம்பித்தால் அது தேவர் கட்சியாம். திருமாவளவன் கட்சி ஆரம்பித்தால் அது தலித் கட்சியாம். அட ஏ.சி.சண்முகம், ராஜகண்ணப்பன், ஈஸ்வரன், இப்படி பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. ஆனால், ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கட்சி ஆரம்பித்தால் அது பொதுக்கட்சியாம். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தால் அது பொதுக்கட்சியாம். வை.கோ ஆரம்பித்த கட்சியும் பொதுக்கட்சியாம். அட நேத்து ஆரம்பிச்ச விஜயகாந்த் கட்சிகூட பொதுக்கட்சியாம். ஏன், விஜயகாந்த், வை.கோ, எம்.ஜி.ஆர், போன்றவர்களுக்கு சாதி இல்லையா?
                                            அதாவது, இந்த மண்ணின் மைந்தர்கள் கட்சி அது சாதி கட்சியென்றும், திராவிட வந்தேறிகள் கட்சியென்றும் பிரகடனப் படுத்துவதன் மூலமாக தமிழ்ச் சமூகங்களை ஒன்றோடொன்று மோதவிட்டு வந்தேறிகள் எல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே நாம் காங்கிரஸோடு சேர்த்து ஓட்டு மொத்த திராவிட கட்சிகளையும் விரட்டி அடித்தே ஆக வேண்டும். கிட்டத்தட்ட 13 தமிழ்ச் சாதி அமைப்புகள் ஒன்றிணைந்து “தமிழ்ச்சமூகங்களின் கூட்டமைப்பு” என்ற பெயரில் திராவிட எதிர்ப்பை காட்டிவந்தோம். இந்த மேடையிலே அமர்ந்திருக்கக் கூடிய சகோதரர் செந்தில்மள்ளர் உட்பட நாங்கள் அந்த கூட்டமைப்பிலே அங்கம் வகித்தவர்கள்.
                                                 சிறையிலே இருக்கக்கூடிய சீமானை பார்க்க தமிழ்ச் சமூகங்களின் கூட்டமைப்பு சார்பாக அனைவரும் தயாரான போது உடனடியாக மறுத்து; பார்க்க விரும்பவில்லை என்றவன் நான். சகோதரர் சீமானின் ஈடுயிணையற்ற தியாகத்தை மதிப்பவர்களில் நானும் ஒருவன். அவருடைய போராட்ட குணத்திலோ, போராடும் துணிவிலோ குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. மாசு மருவற்ற அவரது தமிழ்ஈழ விடுதலையை நாங்களும் விரும்புகிறவர்கள்தான். ஆனால், பெரியாரை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும், திராவிட கருத்தியலை மறைமுகமாக ஏற்றுக் கொண்டிருக்கும் சீமானால் பயனொன்றுமில்லை.
                                                      பெரியாரின் பேரனாக தன்னை பிரகடனப்படுத்தி வரும் சீமான் அவர்கள் நாளை நிச்சயம் கருணாநிதியை தந்தையாக ஏற்றுக் கொள்வார். பொடாவின் மூலம் புகழடைந்த வை.கோ இன்று ஜெயலலிதாவோடு சினேகம் கொள்ள முடிந்ததுபோல, நாளை சீமானால் எதுவும் நடக்கலாம். ஆகவேதான் சந்திக்க மறுத்தேன். இந்த தமிழர் பெருவிழா பேரணியானது துவங்கியயிடம் மலையாளி எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து. தமிழனுக்காக நடத்தப்படும் எந்த நிகழ்வும் இறுதியாக வந்தேறிகளிடம் சரணடையும், தற்போது மலையாளியிடமிருந்து துவக்கியுள்ளீர்கள் இது நிச்சயம் தமிழனுக்கு நன்மை அளிக்கட்டும். கனவுத் தொழிற்சாலையாக கருதப்படும் திரைத்துறையைச் சார்ந்த இயக்குநர் புகழேந்தி அவர்கள் தமிழனின் பாரம்பரிய உடையான வேஷ்டி-சட்டையில் எளிமையாக வந்துள்ளார்கள். ஆனால், அரசியலில் அங்கம்வகிக்கும் அண்ணன் அரிமாவளவனோ பேண்ட்-சர்ட்டில் வந்துள்ளார். ஆள்வேற நம்மளை விட சிவப்பாக, தாடியோடு இருப்பதால் நடிக்கும் எண்ணம் இருக்கிறதோ எண்ணவோ ? இனிமேலாவது இது போன்ற பொது மேடைகளில் அமர்கின்ற போது தமிழரின் பாரம்பரிய உடைகளில் பங்கேற்போம்.
                                       தமிழன் வாழவேண்டும், தமிழினம் ஆள ஆள வேண்டும் என்கிற தணியாத தாகத்தின் அடிப்படையில் களமாடி வருகின்ற இந்த இயக்கத்தைப் பற்றியும், இதன் தலைவர் அரிமாவளவன் அவர்களையும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தால், பழகியிருந்தால் நிச்சயம் நானும் உங்களில் ஒருவனாக மஞ்சள் சிவப்பு கொடிபிடித்து உங்களோடு களம் கண்டிருப்பேன். ஆனால், இன்று எமது சமூகத்திற்கான மறத்தமிழர் சேனையை கட்டமைத்து விட்டோம். எனவே முடியாது. ஆனாலும் பிழையொன்றுமில்லை , எங்களின் கொடியும் மஞ்சள் சிவப்புதான். கொள்கையும் மண்ணின் மைந்தர்களின் ஆட்சிதான். எனவே இனிவரும் காலங்களில் மண்ணின் மானம் காக்க மறத்தமிழர் சேனை உங்களோடு இணைந்து போராட தயாராக இருக்கிறது என்கிற ஊத்திரவாதத்தை தந்து இந்த நல்லதொரு வாய்ப்பை நல்கிய உங்களுக்கு கோடானுகோடி நன்றிகளை உரித்தாக்கி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.