திருநெல்வேலி, ஜன.31: திருநெல்வேலியில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டது.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசுக் குழுவுடன் 4-ம் கட்டப் பேச்சு நடத்துவதற்காக வந்தவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த தாக்குதலைக் கண்டித்து அணுஉலை எதிர்ப்பாளர்கள் ஆட்சியர் அலுவலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் கூறுகையில், யாருக்காகவும் நாங்கள் போராடவில்லை. எங்களது போராட்டம் வாழ்வாதார போராட்டம். இந்த போராட்டம் ஓயாது எனத் தெரிவித்தனர். மத்தியக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்தவர்களுடன் 50-க்கும் மேற்பட்ட பெண்களும் வந்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, பேச்சுவார்த்தை நடத்த வந்தவர்களுக்கு பாதுகாப்பாக வந்தோம் எனத் தெரிவித்தனர்.தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்து முன்னணியினரும், காங்கிரஸ் கட்சியினரும்தான் காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர்.இருதரப்பினரும் மாறி மாறி கோஷங்கள் எழுப்பியதால் இப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்துவிட்டு உதயக்குமார் ஆதரவாளர்கள் அங்கிருந்து கிளம்பினர்.
Tuesday, 31 January 2012
உச்சிதனை முகர்ந்தால் - பிழைக்கத் தெரியாதவர்களின் சினிமா
கடந்த வாரத்தில் பார்த்த திரைப்படங்களில் உச்சிதனை முகர்ந்தால் பற்றிய பகிர்வு இது.
ஈழத்தைப் பற்றிய அருமையான பகிர்வு. ஒரு பதின்மூன்று வயது பெண் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கருத்தரிக்க, அதை கலைக்க தமிழகம் வருகிறாள் புனிதவதி அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. புனிதவதி என்ற பெயரில் நடித்து இருக்கும், இல்லை வாழ்ந்து இருக்கும் நீநிகாவின் திறமை அபாரம்.
இதில் ஒரு காட்சி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு நிறைய காட்சிகள் அருமை. குறிப்பாக ஒரு காட்சியில் சிங்களக் கருவை சுமக்கும் தன் மகளை கொன்று விட நினைக்கும் தாய், தன் மகள் மாடியில் இருந்து எட்டிப் பார்க்கும் போது தவறி விழுந்து விடுவாளோ என்று பதறுவது தாய்மையின் பாசம் சொல்லுகிறது.
திரு நங்கைகளை மிக அழகாக காட்டிய ஒரே படம் இது தான் என்று நினைக்கிறேன். (நர்த்தகி இன்னும் பார்க்கவில்லை). ஏழாம் அறிவை தமிழர்களின் பெருமை என்று உளறியவர்கள் இதை ஒரு தரம் பார்க்கலாம்.
கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய "இருப்பாய் தமிழா நெருப்பாய்" என்ற பாடலில் தெறிக்கிறது தீ.
கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய "இருப்பாய் தமிழா நெருப்பாய்" என்ற பாடலில் தெறிக்கிறது தீ.
சரி விசயத்துக்கு வருவோம். இந்த படத்தை எந்த கணக்கில் சேர்ப்பது. இன்றைய நிலையில் சினிமா என்பதன் அர்த்தமே மாறிவிட்டது. மூன்று மணி நேரம் என்னை கட்டிப் போட வேண்டும். எதையாவது காட்ட வேண்டும் என்று பிரயத்தனப்படும் இயக்குனர்கள். இது தான் இன்றைய சினிமா.
குப்பைப் படங்கள் எல்லாம் எடுக்கப்படுவது கூட தவறில்லை. ஆனால் அதை நம் மீது திணிக்க முயலும் மீடியா மீது தான் மிகப் பெரிய வெறுப்பு.
பணம், பணம் பணம் என்று பார்த்து இன்று நாம் சினிமா என்பதை வியாபாரம் என்று ஒரு பார்வையில் மட்டுமே பார்க்கிறோம். சினிமா என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு அடையாளம். ஐம்பது வருடங்கள் கழித்து ஒஸ்தி, வெடி, மயக்கம் என்ன என்று யாரும் பார்க்கப் போவது இல்லை. (பார்த்தால் காறித் துப்புவார்கள் என்பது வேறு விஷயம்)
இன்னொரு விஷயம் கேவலமான வார்த்தைகள் வரும் தமிழ் படங்கள் நிறைய பார்த்து இருப்போம். அந்த வார்த்தைகள் எல்லாம் சென்சார் போர்டுக்கு தெரியவில்லை. ஆனால் உச்சிதனை முகர்ந்தால் படத்தில் "இலங்கை" என்று வரும் வார்த்தைகள் சென்சார் செய்யப்பட்டு உள்ளன. இவர்களுக்கு சோனம் கபூர் நடு விரலைக் காட்டியதில் தவறே இல்லை.

ஹாலிவுட், பாலிவுட் என்று இருப்பதை எல்லாம் பார்த்து காப்பி அடிப்பவர்களுக்கு உலக சினிமாவில் எடுக்கப்படும் நல்ல சினிமாக்கள் இருப்பது தெரியவே இல்லை போலும். (தெய்வத் திருமகள், நந்தலாலா எடுத்தவர்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை)
கலைக்காக படம் எடுப்பவர்களை இன்று பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்ல வேண்டும். அந்த வகையில் வருகிறார் உச்சிதனை முகர்ந்தால் இயக்குனர். ஆனால் காலம் தாண்டியும் நிற்கப் போவது இந்தப் பிழைக்கத் தெரியாதவர்தான்.
பின் குறிப்பு: இந்த படத்தை DVD-யில் தான் பார்க்க முடிந்தது. இங்கே எந்த தியேட்டரிலும் தியேட்டரிலும் ரிலீஸ் ஆகவில்லை என்பது ஒரு வருத்தமான உண்மை. அப்படி பார்த்ததுக்கு இயக்குனர் மன்னிப்பாராக.
பின் குறிப்பு: இந்த படத்தை DVD-யில் தான் பார்க்க முடிந்தது. இங்கே எந்த தியேட்டரிலும் தியேட்டரிலும் ரிலீஸ் ஆகவில்லை என்பது ஒரு வருத்தமான உண்மை. அப்படி பார்த்ததுக்கு இயக்குனர் மன்னிப்பாராக.
Sunday, 29 January 2012
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் சிறப்புக்கூட்டம்
மறத்தமிழர் சேனை அலங்காநல்லூர் ஒன்றியத்தின் சார்பில் 29-01-2012 அன்று மாலை 4.00 மணியளவில், பாலமேடு தேவர்மகாலில் இந்திய தேசத்தின் அடையாளம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா சிறப்புக்கூட்டம் மதுரை புறநகர் மாவட்டத்தலைவர் நாகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
விழாவிற்கு மாநில இளைஞர் சேனை துணைச் செயலாளர் G.M.P. மருதுபாலா அவர்கள் முன்னிலை வகிக்க, R.C.செந்தில்குமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதனைத்தொடர்ந்து மாநில மாணவர் சேனை செயலாளர் மு.வெள்ளைப்பாண்டியன் அவர்கள், மாநில இளைஞர் சேனை செயலாளர் ம.கார்த்திக் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள்.
நிர்வாகிகளின் கருத்துரைகளைத் தொடர்ந்து மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா சிறப்புக்கூட்டத்தை தமிழர் அரசியல் பேசக்கூடிய மறத்தமிழர் சேனை எதற்காக நடத்துகிறது என்பதை மைய்யமாக வைத்து தனது சிறப்புரையை வழங்கினார்.
Wednesday, 18 January 2012
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் - புறக்கணிப்போம்
திருநெல்வேலி : சங்கரன்கோவில் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சங்கரன்கோவிலை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மறைவை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் எஸ். முத்துச்செல்வி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துச்செல்வி சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக உள்ளார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ., சங்கரலிங்கத்தின் மகள் ஆவார்.
சங்கரன்கோவில் தொகுதி 1967 முதல் தனித்தொகுதியாக இருந்து வருகிறது. தொடர்ந்து 45 வருடங்களாக தனித்தொகுதியாகவே இருந்துவரும் சங்கரன்கோவில் தொகுதியை பொதுத்தொகுதியாக மாற்றவேண்டுமென மறத்தமிழர் சேனை உள்ளிட்ட அனைத்து பெரும்பான்மை சமூக இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் "தேர்தலை புறக்கணிக்க முடிவு" செய்துள்ளோம்.
"இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஒருங்கிணைத்த அம்பேத்கர் கூட ரிசர்வு தொகுதிகள் ஒதுக்கீடுகள் பத்தாண்டுகளுக்கு இருந்தால் போதுமென்றுதான் கோரிக்கை வைத்தார். ஆனால் கடந்த 1967 முதல் தொடர்ந்து 45 வருடங்களாக சங்கரன்கோவில் தனித் தொகுதியாகவே இருந்து வருகிறது. கடந்த பல வருடங்களாக சங்கரன்கோவிலை பொதுத் தொகுதியாக அறிவிக்க வேண்டுமென மறத்தமிழர் சேனை உள்ளிட்ட பெரும்பான்மை சமூக இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், தற்பொழுது முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மறைவையொட்டி சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போதைய சூழலில் 1947 க்கு பின்பு சுதந்திர இந்தியாவில் பிறந்த தாழ்த்தப்பட்டவர் அல்லாத எந்த குடிமகனும் இந்த தொகுதியில் எம்.எல்.ஏ., ஆக இயலாது என்பது, இது ஒரு சாதி, சமய சார்பற்ற சனநாயக நாடுதான் என்கிற நிலையை கேலிக்குரியதாக மாற்றியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இதைவிட கொடுமை இந்த தொகுதியை பொறுத்த வகையில் நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்தையுமே தனித்தொகுதிகளாக வைத்திருப்பதுதான்.
"இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஒருங்கிணைத்த அம்பேத்கர் கூட ரிசர்வு தொகுதிகள் ஒதுக்கீடுகள் பத்தாண்டுகளுக்கு இருந்தால் போதுமென்றுதான் கோரிக்கை வைத்தார். ஆனால் கடந்த 1967 முதல் தொடர்ந்து 45 வருடங்களாக சங்கரன்கோவில் தனித் தொகுதியாகவே இருந்து வருகிறது. கடந்த பல வருடங்களாக சங்கரன்கோவிலை பொதுத் தொகுதியாக அறிவிக்க வேண்டுமென மறத்தமிழர் சேனை உள்ளிட்ட பெரும்பான்மை சமூக இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், தற்பொழுது முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மறைவையொட்டி சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தொகுதியில் வாழுகின்ற 17 சதவிகிதமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மீதமுள்ள 83 சதவிகித பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூக மக்களின் அரசியல் உரிமைகளை அடியோடு 50,60 வருடங்களுக்கு தகர்த்தெறிவதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் எங்கள் மீது மறைமுகத் தீண்டாமையை திணித்து வருகிறது. 'அரசியல் பொருளாதார நிலைகளில் உயர்வடைய' என்ற காரணத்தினால் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கையின் மூலம் கருப்பசாமி நான்கு முறையும் இனி சிவப்புசாமி ஏழுமுறையும் எம்.எல்.ஏ., வாக இருந்துவிட்டால் மட்டும் சமூக நீதி ஏற்பட்டுவிடுமா?
ரிசர்வு தொகுதிகளை எதிர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல. தாழ்த்தப்பட்ட சமூகம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமென்றாலும் ரிசர்வு தொகுதி ஏற்பாடுகளை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் ஒரே தொகுதி நீண்டகாலம் தனித்தொகுதியாகவே இருப்பது நியாயமல்ல. ஒவ்வொரு தேர்தலுக்கும் ரிசர்வு தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் தான் சமூகங்களுக்கிடையே பகைமை ஏற்படாது. தாழ்த்தப்பட்டோரின் அரசியல் தளமும் விரிவடையும்.தற்போதைய சூழலில் 1947 க்கு பின்பு சுதந்திர இந்தியாவில் பிறந்த தாழ்த்தப்பட்டவர் அல்லாத எந்த குடிமகனும் இந்த தொகுதியில் எம்.எல்.ஏ., ஆக இயலாது என்பது, இது ஒரு சாதி, சமய சார்பற்ற சனநாயக நாடுதான் என்கிற நிலையை கேலிக்குரியதாக மாற்றியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இதைவிட கொடுமை இந்த தொகுதியை பொறுத்த வகையில் நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்தையுமே தனித்தொகுதிகளாக வைத்திருப்பதுதான்.
தனித்து களம் கண்டாலே வெற்றி பெற்றுவிடக் கூடிய அளவில், எங்கள் இனமக்கள் அதிகமாக பரவி வாழக்கூடிய சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த, அருகருகேயுள்ள இரண்டு தொகுதிகளையும் தொடர்ந்து தனித்தொகுதிகளாகவே வைத்திருப்பதன் மூலம் ஜமீன்களாகவும், மன்னர்களாகவும், போர்ப்படை தளபதிகளாகவும் உலவிவந்த சொந்த மண்ணிலேயே, எங்களை அடிமைகளாக ஆக்க முயலுகிறார்கள். எங்களின் நியாயமான உரிமைகளையும், உணர்வுகளையும் சிதைத்துவிட்டு இடைத்தேர்தலை நடத்திவிடலாம் என்று தேர்தல் ஆணையம் செயல்படுமேயானால் நாங்கள் ஒட்டுமொத்தமாக 'தேர்தலை புறக்கணித்து' வாக்குசாவடிகளுக்கு செல்லமாட்டோம். தேர்தல் நாளன்று வீடுகள் தோறும், கிராமங்கள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி எங்கள் எதிர்ப்புகளை கடுமையாக தெரிவிப்போம்."
என்கிற நிலைப்பாட்டை அனைத்து மக்களும் அறிகின்ற வகையில் மறத்தமிழர் சேனையின் சார்பில் அறிவித்து வருகின்றோம். இதனிடையே நடிகர் மு.கார்த்திக் அவர்களை தலைவராக கொண்ட அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வருகின்ற சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது. திரைப்பட நடிகர் கார்த்திக் அவர்களுக்கு யாராவது அரசியல் பாடம் நடத்த வேண்டும். அதுவரை இப்படியான கோமாளித்தன அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டே இருப்பார். அவரால் முடிந்தால் ஒரு வேட்பாளரை நிறுத்தட்டும் முடிந்தவரை நம் பலத்தை நாம் நிரூபிக்கலாம். இடைத்தேர்தலில் ஆளும்கட்சியே வெற்றிபெற வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது 'பிரதர்'. இதில் உங்களின் ஆதரவை மதிக்கப் போவதில்லை அவர்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு நிகழ்ந்த அவமானம் உங்களுக்கானது மட்டும் அல்ல.
Sunday, 15 January 2012
Wednesday, 4 January 2012
விடுதலைப் புலிகள் இலச்சினையுடன் அஞ்சல் தலை
விடுதலைப் புலிகளை இயக்கத்தை ஆதரிக்கும் ஒரு அமைப்பு இந்த அஞ்சல் தலைகளை வெளியிடுவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் அனுமதித்திருப்பது வரவேற்க்கதக்கது. இதன் மூலம் உலகநாடுகள் நமது உரிமைப்போரை அங்கீகரித்ததாக மறத்தமிழர் சேனை கருதுகிறது.
இதனிடையே, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய படங்கள், இலச்சினைகளுடன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது குறித்து கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதர் கிறிஸ்டின் ரொபிசொனை நேற்று சந்தித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அஞ்சல் தலைகளை புழக்கத்தில் இருந்து உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
-maraththami zhar senai

பெரியாறு அணை - நிபுணர் குழு அறிக்கை - maraththami zhar senai
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு ஆலோசனை சொல்ல சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவினர் டெல்லியில் நேற்று முன்தினம் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும். முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வுகளால் அணைக்கு பாதிப்பு ஏற்பட்டதா? என்று ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சி.டி. தத்தே, டி.கே. மேத்தா குழுவின் அறிக்கையை ஏற்கக்கூடாது என்று கேரள அரசு வாதிட்டது.
இதற்கு தமிழக அரசு சார்பில், முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது. நிலநடுக்கத்தால் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நில நடுக்கங்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்பட்டதா? என்று ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட தத்தே, மேத்தா குழுவினர் அறிக்கை குறித்து விவாதிக்க நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு நேற்று 2-வது நாளாக கூடியது. அப்போது தத்தே, மேத்தா குழுவினர் அறிக்கை பிரிக்கப்பட்டு அதில் தெரிவித்துள்ள விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நீண்ட விவாதத்துக்கு பிறகு நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவினர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
1979-ம் ஆண்டு முதல் முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. அதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை. முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவானதாக உள்ளது. நில நடுக்கங்களால் அணைக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தொழில்நுட்ப குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2010-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் அணையின் தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நாங்கள் மீற முடியாது. எனவே அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க உத்தரவிட முடியாது.தற்போதைய நிலையே நீடிக்கவேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தனது இறுதி அறிக்கையை அடுத்த மாத இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யவும், அதை இறுதி செய்வதற்காக வருகிற 24, 25-ந்தேதிகளில் மீண்டும் கூடவும் ஆனந்த் குழு முடிவு செய்துள்ளது.
Sunday, 1 January 2012
ஆங்கில புத்தாண்டு வாழ்த்து - MARATHTHAMIZ HAR SENAI
அனைத்து மக்களுக்கும், நிர்வாகிகளுக்கும், உறவினர்களுக்கும் எங்களது இதயப் பூர்வமான புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் . இந்த புத்தாண்டில் அமைதியும், நல்ல வளமும் செழித்தோங்க வாழ்த்துகிறோம். எல்லா வளர்ச்சியையும் பெற்று, நமது இனம் முன்னேற்றமடைய நாம் பாடுபடுவோம். தமிழக அனைத்து துறைகளிலும் முதன்மை சமூகமாக, நாம் திகழ வேண்டும் என்ற உன்னத, உயரிய லட்சியத்தை அடைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உங்கள் மறத்தமிழர் சேனை முனைப்புடன் செயல்படுத்தி வரும் வேளை இது.
புதிய நம்பிக்கை, புதிய உற்சாகத்துடன் 2012 ம் ஆண்டு பிறக்கிறது. வரும் புத்தாண்டு அனைத்து சோதனைகளையும் வென்று சாதனை படைக்கும் ஆண்டாக அமைய வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி குறைந்து பொது பிரச்னையில் இனத்தின் நலனுக்காக அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிற நிலை உருவாக வேண்டும். இந்த புத்தாண்டில் இவையெல்லாம் நடைபெற வேண்டும் என கூறி இனிய புத்தாண்டு வாழ்த்துகளை மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Subscribe to:
Posts (Atom)