★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Wednesday, 29 February 2012

முதல்வருடன் கூடங்குளம் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை

சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் கூடங்குளம் போராட்டக்குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கூடங்குளம் போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் உட்பட 4 பேர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். தமிழக அரசு அமைத்த வல்லுனர் குழு தாக்கல் செய்த அறிக்கைப்பற்றி பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.


உதயகுமார் பேட்டி

கூடங்குளம் மக்களின் அச்சம் பற்றி முதல்வருடன் விவாதிக்கப்பட்டதாக போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்தில் உதயகுமாருடன் 4 பேர் பங்கேற்றனர். ஜெயலலிதா உடனான 15 நிமிட சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உதயகுமார் கூடங்குளம் வட்டார மக்களை சந்திக்குமாறு முதல்வரிடம் கேட்டுகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 


இனியன் குழு மீது புகார்

இனியன் தலைமையிலான குழு கூடங்குளத்தில் 2 மணி நேரமே இருந்தது என்று புகார் தெரிவித்துள்ளார். கூடங்குளம் வட்டார மக்களை சந்தித்து  வல்லுனர் குழு கருத்து கேட்கவில்லை எனவும் முதல்வரிடம் கூடங்குளம் போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் புகார் தெரிவித்துள்ளார். அணு உலை கட்டிடம் குறித்து எனக்கு எந்தவித ஐயமும் இல்லை எனவும் அணு உலைகளிலிருந்து வரும் கதிரியக்க கசிவு குறித்தே மக்களிடம் அச்சம்  நிலவுகிறது என்றும் கதிரியக்க கசிவு குறித்து விஞ்ஞானிகள் முரண்பட்ட தகவல்களை தருவதாகவும் உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆயுள் காலம் முடிந்த பிறகு கூடங்குளம் அணுமின் நிலையம் செயலிழக்க செய்யப்படும் என்றும் அவ்வாறு செயலிழக்க செய்யும்போது ஏற்படும் விளைவுகள்  குறித்து விளக்கம் அளிக்கவும் முதல்வரிடம் உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

Monday, 27 February 2012

மறத்தமிழர் சேனை 50,000 உறவுகளை தாண்டுகிறது , வணங்குகிறோம்

மறத்தமிழர் சேனை இணையதளம் தொடங்கப்பட்ட மிகக்குறுகிய நாட்களிலேயே  50,000 உறவுகளை தாண்டி வெற்றிநடை போடுகிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இதனை, இத்தனை எளிதில் சாத்தியமாக்கிய மறத்தமிழர் சேனை நிர்வாகிகளையும், எங்கள் மீது அளவிடமுடியாத பிரியங்கொண்ட உறவினர்களையும், எவ்வளவு சிறப்பான செயல்களையும் ஒருநொடியில் உதறிவிட்டு தொடர்ந்து விமர்சிக்கும் ஆலோசகர்களையும், நெடிய பயணத்தில் உடன்வருவதைப் போல் நடித்து எங்களை பலவீனப்படுத்த முயற்சிக்கும் சக இயக்கத்தார்களையும், எதிரியாகவே இருந்தாலும் என்னதான் எழுதுகிறார்கள் என்று தினந்தினம் எங்களை பார்வையிடும் மாற்று சமூகத்தார்களையும் பெருமையுடன் வணங்குகிறோம்.
   
                                              இது நம் சமூகத்திற்கான வெற்றி. 

Sunday, 26 February 2012

பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்



-இரா.சுந்தரவந்தியத்தேவன்

சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் நூலின் முன்னுரை:

காடுகட்டி நாடாண்ட வரலாறும் குற்றப்பரம்பரையான கதையும்
-ப. சரவணன்
                                             1
பிரித்தானியக் காலனித்துவ ஆட்சி இந்தியாவில் வலுவாக வேரூன்றிய பிறகு, கி.பி. 1800களில் சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது. மாகாணத்தை உருவாக்கியதுமே, காலனிய அரசு, கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் அரசின் நிதி நிலையை உயர்த்திட ரெவின்யூ போர்டு (Board of Revenue), டிரேட் போர்டு (Board of Trade & வணிகம்) ஆகியவற்றை நிறுவித் தங்களது நலன்களைப் பெருக்குவதில் தனிக்கவனம் செலுத்தியது.
இதே நேரத்தில் உதயமான ‘இந்தியத் தேசியக் காங்கிரஸ்’ (1885) கட்சியின் செயல்பாட்டினால் கலக்கமுற்ற காலனிய அரசு, தன்னுடைய அதிகாரத்தை மேலும் பலப்படுத்த எத்தனித்தது.- குறிப்பாக, ‘சூரத் மாநாட்டில் (1907) காங்கிரசாரிடையே ஏற்பட்ட மிதவாத & தீவிரவாதப் பிளவின் காரணமாக உருவான திலகரின், தலைமையிலான தீவிரவாத அமைப்பினரின் செயல்பாட்டினை எதிர் கொள்ள முடியாது அது திணறியது. இத் தீவிரவாத அமைப்பை ஒடுக்கி அடக்குவதற்காகச் சட்டவிடிவிலான பல்வேறு சதிகளைப் பிரிட்டிஷ் அரசு தீட்டியது. இதன் மறு பகுதியாக, இங்குப் பரம்பரையாக உடல் வலிமை கொண்டு செல்வாக்குச் செலுத்திவந்த சில தீரமான உள்நாட்டுக் குழுக்களையும் எதிர் கொள்ளும் வகையில் & அவர்களையும் தம் ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்து அடிமைப்படுத்தும் நோக்கில் & பல குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் காலனிய அரசு ‘குற்றவியல் பரம்பரைச் சட்டம் & 1871′ (Criminal Tribes Act 1871) போன்ற சட்டங்கள், மேலும், உள்ளூர் பிரஜைகள் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்வதைத் தடுத்து நிறுத்தவும், முஸ்லீம்களைக் காங்கிரசிலிருந்து தனிமைப்படுத்தவும் பல்வேறு தந்திரோபாயங்களை மேற் கொண்டது. (தமிழகத்தில், பிறமலைக் கள்ளர்கள் காங்கிரசில் சேருவதைப் பெரும்பாலும் தடுத்து நிறுத்தியதற்காகக் ‘கள்ளர் சமூக அபிவிருத்தி’ அதிகாரியாகப் பணி புரிந்த கி.ரி. இராஜா அய்யருக்கு வெள்ளைய அரசு ‘ராவ்பகதூர்’ பட்டம் வழங்கியது. முஸ்லீம்களுக்குச் ‘சலுகைகள்’ அளித்துக் காங்கிரசிலிருந்து பிரித்ததை, ‘மிண்டோ மார்லி’ சீர்திருத்தம் அம்பலப் படுத்தியது. இவற்றையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும்.)

                                         வட இந்தியாவில், பிரித்தாளும் சூழ்ச்சியினால் முஸ்லீம்களைத் தனிமைப்படுத்தி வெற்றி கண்ட பிரிட்டிஷ் அரசு, அவ்வகை முயற்சிகளால் தென்னிந்தியாவில் & குறிப்பாகச் சென்னை மாகாணத்தில் & வெற்றிபெற முடியவில்லை. எனவே, அதற்கு மாற்றாகப் ‘பிராமணர் – பிராமணர் அல்லாதோர்’ இயக்கங்களை ஊக்குவித்தது. அதிலும் பிராமணர் அல்லாதோரிடையே இருந்த மூர்க்க குணம் மிக்க சமூகத்தாரை மற்ற சமூகத்தாரிடமிருந்து தனிமைப்படுத்த விரும்பியது. இத்தகு சூழலில்தான் சென்னை மாகாணத்தில், தமிழக மாவட்டங்களில் ஆதிகுடிகளாக வாழ்ந்து வரக்கூடிய தோம்பர், குறவர், இருளர், பிச்சாரி, ஆதிதிராவிடர், கள்ளர், மறவர், படையாச்சி, காலாடி, சுங்காலி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சமூகத்தார்மீது பிரிட்டிஷ் அரசு ‘குற்றவியல் பரம்பரைச் சட்டம்&1911′ என்னும் கொடிய சட்டத்தைப் பாய்ச்சியது. (பாமர வழக்கில் இது கைநாட்டுச் சட்டம், கைரேகைச் சட்டம் என அழைக்கப்பட்டது).
                                                 
                                                  குற்றவியல் பரம்பரைச் சட்டத்தைச் சில பழங்குடிகள்மீது மட்டும் திணித்ததற்குக் காரணம், பல்வேறு சாதி, மதம், இனம், மொழி, பண்பாடு முதலியவற்றைக் கொண்ட பரந்த பாரதத்தை ஆட்சியதிகாரத்துக்குள் கொண்டுவர ஈடுபட்ட பல போர்களில் சில இனக் குழுக்கள் தங்களது நலனுக்கு எதிரானவர்கள் என்பதைப் பிரிட்டிஷார் கண்டு கொண்டதும், பல இனக்குழுக்கள் ஆயுதம் தாங்கிப் போர் புரிந்து ஆங்கிலேயர்களை ஆட்டம் காண வைத்ததுமே என்கிறார் பாவெல் பாரதி அவர்கள். 1885இல் சந்தால் இன மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டம் வங்காளத்திலும், பீகாரிலும் பல பகுதிகளை ஆங்கிலேயர்களின் நிர்வாகத்திலிருந்து இரண்டாண்டுகள் பின்வாங்கும் அளவுக்குப் போர்க்குணத்துடன் நடைபெற்றதை, திலீப்&டி&சௌசாவின் ‘குற்றமுத்திரை’ நூல்வழி அவர் எடுத்துக்காட்டியுள்ளார். மேலும், அக்காலத்தில் பெரும் பணக்காரர்களாகவும் வெள்ளையர்களுக்கு அணுசரனையாகவும் இருந்துவந்த இந்திய விவசாயக் குடிகளின் சொத்துக்களுக்கு ஆபத்தானவர்களாக உணரப்பட்ட நாடோடிகள், அலைந்து திரியும் உழவர்கள், வனவாசிகள், பழங்குடிகள் போன்றவர்களின் நட மாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் முன்னின்றது என்பர். எனவே, தொடர்ச்சியான வலுவான ஆட்சியை நிலைநிறுத்தச் சில தொல்குடிகளைச் ‘சட்டம்&ஒழுங்கு’ என்னும் அதிகாரத்துக்குள் பிரிட்டிஷார் ஒடுக்கி வைத்தனர் எனலாம்.

                                                                       2
                                            நவீனக் குற்றவியல் சமூகமாக இஸ்லாம் சமூகத்தையும், இன ஒடுக்கத்தை எதிர்த்துப் போராடும் ஈழத் தமிழர்களைக் குற்றவியல் இனமாகவும் அறிமுகப்படுத்தி உலகளவில் ஒருவிதக் கற்பிதத்தை ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்திருப்பதைப் போலவே, கள்ளர்களையும் அன்றைய வெள்ளைய அரசு ‘குற்றவாளிகள்’ என்ற கண்ணோட்டத்துடனேயே அறிமுகப்படுத்தியிருந்தது. எனவே, மற்ற இனக்குழுக்களைவிடக் கள்ளர் சமூகத்தின் மீது & குறிப்பாகப் பிறமலைக்கள்ளர்கள் மீது & இக் கொடுஞ் சட்டத்தைப் பிரயோகிக்க, அது எல்லாவகையிலும் முயற்சித்தது.
இங்கிலாந்தில், குற்றப்பரம்பரையாக முத்திரை குத்தப்பட்ட ‘ஜிப்ஸிகள்’ போன்றவர்களை ஒடுக்குவதற்காக இயற்றப்பட்ட சட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு, இந்தியாவில் முதன் முதலில் தனிநபர்களை ஒடுக்கும் விதமாகப் ‘போக்கிரிகள் தடைச் சட்டம்’ (1836) அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு ஒட்டுமொத்த இனத்தையே குற்றவாளிகளாக அறிவிக்கும் குற்றப் பரம்பரைச் சட்டம் (1871) கொண்டு வரப்பட்டது. 1911இல் இது மேலும் சில திருத்தங்களைக் கண்டது. திருத்தப்பட்ட இச்சட்டம், பிற மாகாணங்களுக்கு 1914இல் விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி, இதை மதுரைப்பகுதியில் உடனடியாக அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தன. அதாவது, ‘மதராஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், ஜில்லா அதிகாரிகள் மூலம், ஜில்லாக்களில் குற்றத் தொழில் புரிவோர் சங்கியைத் (பட்டியல்) தயாரித்து அனுப்பக் கோரினார். அதன்படியே அதிகாரிகள், தங்கள் ஜில்லாக்களில் வழிப்பறி, மாடு கடத்தல், கொள்ளை, கன்னக்களவு, கொலை முதலான பெருங்குற்றங்களுக்கான விபரமும் அவற்றின் தன்மையும் குறித்து விளக்கத்துடன் சேகரித்து அனுப்பினர். தஞ்சை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய ஜில்லாக்களில் குற்றத்தொழில் செய்தல் அதிகமாக இருப்பதாகப் புள்ளி விபரங்கள் புலப்படுத்தின. குற்றத்தொழில் செய்து வந்தவர்களில் அதிகமானோர் கள்ளர், மறவர் ஆகிய வகுப்பார் என்பதும் தெரிய வந்தது. அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ள குற்றப்பிரிவு புள்ளி விவரங்கள், ‘ரேகைச் சட்டம்’ அமல்படுத்துவதற்கு ஆதாரமாகவே இருந்தது’ என்கிறார் பெ. முத்துத் தேவர், தமது மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு என்னும் நூலில்.
குற்றப் பரம்பரைச் சட்டம் 1914இல் மாகாணங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டபோது, மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்தவர் H.G. கிளின்ச் என்னும் வெள்ளையர். அவர், கீழக்குடி கள்ளர்களை இச்சட்டத்தைப் பயன்படுத்தி ஒடுக்க வேண்டும் என 4.5.1914 அன்று அரசுக்குப் பரிந்துரை ஒன்றை அனுப்பினார் என்றாலும், 1915இல்தான் மதுரைப்பகுதியில் இது அமல்படுத்தப்பட்டது. சொல்லப்போனால், மதுரையிலிருந்து ஆறு மைலுக்கு அப்பாலிருந்த மேல்நாட்டுக் கள்ளர்களின் தலைமை யிடமான கீழக்குயில்குடியில்தான் & தற்போதைய பெயர் கீழக்குடி & முதன்முதலில் அமல்படுத்தப்பட்டது-. இதன்படி வயது வந்த ஆண்கள் அனைவரும் ‘கேடிகள்’ (K.D. – Known Dacoits) என்னும் பட்டியலின் கீழ்ப் பதிவு செய்யப்பட்டனர். அப்போது மதுரை கலெக்டராக இருந்தவர் ‘நேப்’ என்னும் வெள்ளையர். அவர், இச்சட்டத்தின்கீழ் அனைவரையும் பதிவு செய்வதைவிடக் குற்றவாளிகளை மட்டும் பதிவு செய்து கவனிக்க வேண்டியதன் அவசியத்தை அரசுக்கு எடுத்துரைத்ததோடு, இச்சட்டத்தின்கீழ் வரவேண்டிய மேலும் மூன்று ஊர்களைப் பரிந்துரைத்தார். அவரது பரிந்துரையின் பேரில் இச்சட்டம் சொரிக்கான்பட்டி, மேலஉரப்பனூர், பூசலப்புரம் ஆகிய ஊர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. (G.O. No : 2233, Judical 16th Sep. 1915).
                                                                 -oOo-
‘கலெக்டர் நேம்’ கேட்டுக்கொண்டதற்கிணங்க, மேலே குறிப்பிட்ட இந்த நான்கு ஊர்களில் வாழும் வயது வந்த பிறமலைக் கள்ளர்கள் எல்லோரையும் கு.ப. சட்டத்தின்கீழ்ப் பதிவுசெய்வதை நிறுத்திவைக்க, அரசு இடைக்காலத் தடை விதித்தது-. இப்படிச் செய்தது நன்நோக்கத்தில் அல்ல. மாறாகக் கள்ளர் சமூகத்தில் குற்றவாளிகளைத் தவிரக் குற்றம் செய்யாதவர்களையும் சேர்த்துப் பதிவு செய்வதற்காகச் சட்டத் திருத்தம் வேண்டியிருந்தது. அதற்காகவே இந்த இடைக்காலத் தடை என்பர். (C.T. Act G.O. No : 1023, Judical dt. 4-5-1914. G.O. 2233 Judical dt 16-9-1915 declaring Keelakkudi, Sorikkanpatti, Melaurappanur and Poosalapuram kallars as criminal tribes. Amendment to C.T. Act manual proposal Negatived criminal tribes Act of 1911)
கு.ப. சட்டத்தை எப்படியும் கள்ளர்கள்மீது திணித்துவிடப் பிரயாசை கொண்டிருந்த வெள்ளைய அரசு சட்டத் திருத்தத்திற்குப் பிறகு மதுரைக் கலெக்டரிடமிருந்து மீண்டும் அறிக்கையைக் கோரியது. அப்போது கலக்டெர், நாட்டு மக்களின் உண்மையான நிலையை உணர்ந்து தேவையான ஆதாரங்களை எடுத்துக்காட்டுவதற்கு மாறாக, கள்ளர்கள் திருட்டுப்பழக்கமுடையவர்கள், துப்புக்கூலி வாங்குபவர்கள், குடிக்காவல் வசூலிப்பவர்கள், ஜல்லிக்கட்டு என்னும் முரட்டுத்தனமான மாட்டு விளையாட்டைக் கொண்டு சண்டை சச்சரவுகளை உண்டு பண்ணுபவர்கள், நிலமில்லாதவர்கள், நிலமிருந்தாலும் உழைத்துப் பிழைக்கும் ஊக்கமில்லாதவர்கள் எனக் காரணங்களை காட்டி, மேலே குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை மதுரை மாவட்ட கெசட்டியர், எட்கர் தர்ஸ்டனின் Caste and Tribes of Southern India நூலில் உள்ள செய்திகள் முதலியவற்றிலிருந்து எடுத்து ஆதாரங்களை வைத்தார். அதன் பிறகு, பதிவு செய்யும் இந்த வேலை 1919களில் துரிதமானது. பிறமலை நாட்டில் குற்றப்பரம்பரைச் சட்டம் பிரயோகிக்கப் படுவதற்கு, முதலில் புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டன. (குற்றவாளிகள் பற்றிய புள்ளி விவரம், ரெங்காச்சாரி என்னும் போலீஸ்காரர் மூலம் சேகரிக்கப்பட்டது.- இவரை ‘நிர்&101′ என்னும் சாட்டுப் பெயர் (Nick Name) வைத்துக் கிராம மக்கள் அழைத்திருக்கின்றனர். கிராம மக்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையே கலகத்தை உண்டு பண்ணிக் கேடிகள் பட்டியலை அதிகரித்தவர் இந்த நிர்&101 என வரலாறு கூறுகிறது.)

                                பிறமலை நாட்டிலிருந்த மிகப்பெரிய குறை யாதெனில், ஆரம்பத்திலேயே கு.ப.சட்டத்தின் பாதகத்தை அரசுக்கு விவரமாக எடுத்துக்கூறத் தகுதிவாய்ந்த நபர்கள் இல்லாததேயாகும். ஆனால், மேலஉரப்பனூர் மக்கள் இச்சட்டம் அமலுக்கு வந்தவுடனேயே, திரு. ஜார்ஜ் ஜோசப் (பின்னாளில் ரோசாப்பூ தேவர்) B.A., பாரட்&லா அவர்களை அணுகினர். அவர் கைரேகையைப் பதிப்பது மற்றும் பதிவு செய்வது என்னும் உத்தரவைச் சத்தியாகிரக முறையில் எதிர்க்குமாறு அறிவுறுத்தினார். அதோடு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் நடத்திய கைரேகைப் பதிப்புப் போராட்டத்தையும் எடுத்துரைத்து, இருக்கின்ற ஒரே தீர்வு ஜனநாயக முறையில் ஒத்துழைக்க மறுப்பதுதான் என்றார். அதன் பிறகு, மேலஉரப்பனூர் கள்ளர்களின் மனுவை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாடிஸனிடம் சமர்ப்பித்தார்.

                                       இதோடு கள்ளர்கள் சார்பில் வெள்ளையத் தேவர் என்பவர், 6——&7&1915இல் மதுரையிலிருந்து சென்னை அரசாங்க பிரதான காரியதரிசிக்குத் தந்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதன் விபரம்:& ‘மதுரை ஜில்லா திருமங்கலம் தாலுக்கா உரப்பனூர் தேவமார்கள் ரூ.3500க்குக் கிஸ்தி செலுத்தக்கூடிய பட்டாதாரர்கள். எனவே குற்றப் பரம்பரைச் சட்டம் இவர்கள்மீது பிரயோகிக்கும் முன் விசாரனை செய்யவும்’.

                                        இந்தத் தந்திக்கு நடவடிக்கை என்ன என்பது தெரியவில்லை. இதன் பிரதி ஒன்று மதுரை ஜில்லா போலீஸ் ஆபீஸ் பைலில் உள்ளதாக பெ. முத்துத்தேவர் குறிப்பிடுகிறார். ஆனால் இதற்கு எவ்வித விளைவும் ஏற்படவில்லை. விடயம் கிடப்பில் போடப் பட்டதை, இந்த நூல் கூறுகிறது.

                                          இப்படி மேலஉரப்பனூர் கள்ளர்களுக்கு இருந்த துடிப்புணர்வு, மற்ற நாட்டுக் கள்ளர்களிடம் இருந்ததா என்பதற்கும் ஆதாரம் இல்லை. எனினும், சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய இந்தக் கொடிய சட்டத்தைப் பிறமலைக் கள்ளர்கள் எதிர்க்காமலில்லை. அவர்கள் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் சுதந்திர உணர்வும், வீரமும் அற்றவர்களாக இருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. திருமலை நாயக்கர் காலத்திலிருந்தே & அதற்கு முன்பும் & தன்னரசு நாடுகளை அமைத்துக் கொண்டு, ‘காடுகட்டி நாடாண்ட’ பரம்பரையினரான அவர்கள், இச்சட்டத்தின்கீழ்த் தங்களைப் பதிவு செய்ய மறுத்தனர். மேலும், மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள கள்ளர்களில் ஒரு பகுதியினரை மட்டும் ‘குற்றம் புரியும் சமூகம்’ எனப் பிரித்து அடக்குமுறையைப் பிரயோகிப்பதில் அதிகாரிகளுக்கும் சிக்கல் இருந்தது. ஒரு ஊரில் உள்ளவர்கள் குற்றவாளிகள் எனக் கண்காணிக்கப்படுவதும், அடுத்த ஊரில் உள்ளவர்கள் அப்படிக் கண்காணிக்கப்படாமலிருப்பதும் குறித்த ‘மாற்றாந்தாய் மனப்பான்மை’யைப் பற்றிக் கள்ளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் வாயடங்கிப் போயினர். எனவே, இந்தச் சட்டத்தை முழுவதும் அமல்படுத்துவதில் ஒருவிதத் தொய்வு நிலை ஏற்பட்டது.

                                        குற்றப் பரம்பரைச் சட்டத்தைக் கள்ளர்களிடையே நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருந்தபோதிலும், அதனை எப்படியும் பிரயோகித்து வெற்றி பெற வேண்டும் எனக் கங்கனம் கட்டிய வெள்ளைய அரசு, 1919இல் ‘லவ்லக்’ என்னும் போலீஸ் சூப்பிரண்டென்டை மதுரை மாவட்டத்தில் பணியமர்த்தியது. கடும் உழைப்பாளியும் சீர்திருத்தவாதியுமான லவ்லக் வட இந்தியாவிலும், தென் தமிழகத்திலும், பல்வேறு இடங்களில் குற்றப் பரம்பரைச் செட்டில்மெண்டுகளிலும், குற்றவாளிகளின் புனர்வாழ்வுத் தொழில் துறையிலும் பணிபுரிந்தவர். எனவே, அவரைக் கொண்டு இச்சட்டத்தை அமல்படுத்த அரசு எத்தனித்தது, முழுச் சுதந்திரம் அளித்தது. அதன் அடிப்படையில் கள்ளர்கள் பற்றிய ஓர் அறிக்கையை லவ்லக், அரசுக்குச் சமர்ப்பித்தார்.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு :

                                        ‘கள்ளர் நாட்டில் குற்றத்தொழில் செய்த கிரிமினல் வாரண்டியர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், இவர்களைத் திருடர்கள் என்று சொல்வதற்கில்லை. ஸ்காட்லாந்து தேசமாகிய என்னுடைய நாட்டிலும், சோசலிசச் சமுதாய அமைப்பை விரும்பும் மலைநாட்டினர் இருந்தார்கள்.’
‘கள்ளர்களின் மத நம்பிக்கையைக் கவனித்தால், இவர்கள் உலகில் அதிகமாகச் செல்வம் குவித்து வைத்திருப்பதைப் பிரித்து இல்லாதவர்களுக்கு விநியோகம் செய்யப் படைக்கப் பட்டவர்கள் என்று தங்களைக் கருதுகிறார்கள். கீழ்நாட்டுச் சோஷலிஸ்டுகள் போலவும், ஏகபோக உரிமையோடு சண்டை போடுவதில் தீவிர விருப்பமுள்ள சமதர்மவாதிகள் வழியிலும் செல்கிறார்கள் என்று கருதப்பட வேண்டியிருக்கிறது.’

                                 ‘இப்போது எடுத்துவரும் குற்றத்தொழில் தடுப்புமுறையும், இவ்வினத்தாரைப் பதிவு செய்து கண்காணித்து வருவதும் சரி என்று நான் கருதுவதற்கில்லை. இதனால் நல்ல பலன் கிடைக்காது….. ஒரே பிரதேசத்தில் பதிவான குற்றவாளிகளும் பதிவாகாத இதரரும் இருக்கும் போது, பாகுபாடு செய்து அடக்குவது சிரமம். இந்தச் சட்டம் சரியாக செயல்பட வேண்டுமானால், திருமங்கலம் தாலுகாவில் வாழ்ந்து வரும் பிரான்மலைக் கள்ளர்களை மாத்திரமல்லாமல், இவ்வினத்தைச் சேர்ந்த எவரானாலும், இந்த ஜில்லாவிலும், இராமநாதபுரம் ஜில்லாவிலும் வாழ்ந்து வரும் யாவரையும், குற்றத் தொழில் செய்தவரானாலும் செய்யாதவரானாலும் வயது வந்த அத்தனை பேரையும் பதிவு செய்திட வேண்டும்….. சட்டப் பிரயோகம் செய்து அடக்கு முறையை மட்டும் கையாண்டால், அது பெரும் ஆபத்தில் போய் முடியும். அடக்குமுறைச் சட்டம் கையாளப்படும்போதே, கள்ளர் சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகளையும் அமல்படுத்தத் தவறக்கூடாது.’
இப்படி லவ்லக்கின் ரிப்போர்ட், கலக்டெர் நேப்பின் ரிப்போர்ட், மாகாண போலீஸ் இன்ஸ்பெக்டரின் ரிப்போர்ட் ஆகியவற்றைக் கொண்டு சென்னை சர்க்கார் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அது: ‘பிறமலை நாட்டில் வயது வந்த எல்லாப் பிறமலைநாட்டுக் கள்ளர்களையும் குற்றத்தொழில் செய்யும் நபர்களாகப் பதிவு செய்யும் 10&1&கி பதிவேட்டில் பதிவு செய்து கண்காணிக்கவும்.’ இந்த உத்தரவு, 1918களின் இறுதியில் மதுரை கலக்டெருக்குக் கிடைத்தபின் இதற்கான ஒரு தனி அலுவலகம் மதுரையில் உருவானது. இதில் 1. முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட் (கைரேகைச் சட்டக் கலக்டெர்) 2. ஸ்பெஷல் போலீஸ் இன்ஸ்பெக்டர் 3. ஸ்பெஷல் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் 4. ஏட்டுகள் 5. கான்ஸ்டேபில்கள் ஆகியோர் இந்தக் குழுவில் இருந்தனர். மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி ‘க்னப்’ கள்ளர்கள் பதிவுசெய்தலைத் தொடங்கி வைத்தார்.

                                                                       3
                                    1915இல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பாடிசன் கு.ப. சட்டம் 1911, பிரிவு& 5இன்படி, மேல உரப்பனூர் கள்ளர்களுக்கு ரேகைப் பதிவிலிருந்து விலக்கு அளித்தார் என்பர். எனினும், பிறமலைக் கள்ளர்களின் குற்றப் பரம்பரையினர் ஒவ்வொருவரும் அருகிலுள்ள காவல் நிலையத்திலோ, பரிசோதனை மையத்திலோ, தன் இருப்பிடத்திலிருந்து 5 மைல் தூரத்திலுள்ள புறக்காவல் நிலையத்திலோ பிற்பகல் 11.00 மணி முதல் மாலை 4.00 மணிக்குள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். ஒருக்கால் 5 மைலுக்குள் இவை இல்லாது போனால், அருகிலுள்ள கிராம உரிமையியல் நீதிபதியிடம் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் இவ்விலக்கினை மக்கள் ஏற்றுக் கொண்டாலும், ஆஜராவதற்கான நேரம் கேள்விக்குள்ளானது. பல நேரங்களில் அவர்கள் காவல் நிலையத்தில் தூங்குமாறும், அருகே இருக்குமாறும் கட்டாயப்படுத்தப்பட்டனர். எந்த ஒரு விஷயமாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல நேர்ந்தால், ‘ராதாரி சீட்டு’ (Rathari Chit) என்னும் ‘பாஸ்போர்ட்’டினைப் பெற்றுச் செல்லவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். (இந்தச் சீட்டில் வ.எண், பெயர், குற்றப்பதிவு எண், குற்றப் புலனாய்வுத் துறை, குழு எண், வெளியே போவதற்கான காரணம், செல்லும் வழித்தடம், நேரம், திரும்பும் நேரம், பெருவிரல் ரேகைப் பதிவு ஆகியவை இருந்தன). மூன்று பிரதிகளைக் கொண்ட இந்த ராதாரிச் சீட்டின் முதல் படி உள்ளூர் காவல் நிலையத்திலும், இரண்டாவது படி அந்த நபர் செல்ல இருக்கும் காவல் நிலையத்துக்கும், மூன்றாவது படி அந்த நபரிடமும் தரப்பட்டது-. வழியில் எங்காவது இரவு தங்க நேர்ந்தால், அந்தக் கிராமத்தின் தலைவனது கையொப்பம் பெறப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

                                      குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கீழ் 10&1&A&B இல் எல்லோரையும் பதிவு செய்வதைக் கண்டு வெகுண்டெழுந்த பிறமலைக் கள்ளர்கள் அனைவரும், நும்மகுண்டு நாட்டில் கூடி, மற்றவர்களுக்கும் ‘ஓலை’ மூலம் செய்தி அனுப்பினர். இச்சட்டத்திற்குத் தாங்கள் அடிபணியக்கூடாது எனப் பேசி முடிவெடுத்த தருணத்தில், பிறமலைக் கள்ளர்கள் அதிகமாக வாழ்ந்து வரும் பெருங்காம நல்லூரில் இச்சட்டத்தை அமல்படுத்த அரசு தீவிரமாக முயற்சித்தது. ’29.3.1920 அன்று மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி, பெருங்காம நல்லூரில் வசிக்கின்ற 7 வயதுக்கு மேற்பட்ட கள்ளர்கள், 03.04.1920 அன்று காலை 11.00 மணிக்குப் பதிவு பெறுவதற்காகப் போத்தம்பட்டியிலுள்ள தனித்துணை ஆட்சியர் முன் ஆஜராக வேண்டுமென அறிவித்தார்’. இந்த அறிவிப்பு கிராம முன்சீப்புகள் மூலம் சுற்றுக்கு விடப்பட்டது. ஆனால், அன்றைய நாள் பதிவு தோல்வியில் முடிந்தது. எனினும், போலீஸ் படையுடன் 3.4.1920 அன்று பெருங்காமநல்லூரில் ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு பதிவு விறுவிறுப்படைந்தது. மாயக்காள் என்னும் பெண் உட்பட, இந்தக் கலவரத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

                                              பிறமலைக் கள்ளர்களின் விடாப்பிடியான தன்மை, பெருங்காம நல்லூர் கலவரத்தில் எதிரொலித்ததால் சற்று நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டிய அவசியத்தை அரசு உணர்ந்தது. சட்டத்தின் மூலம் உறுப்பினர்களைப் பதிவு செய்யும் அதேநேரத்தில், நிர்வாக அமைப்புகள் மூலமாக அவர்களது சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் அரசு முன்வந்தது. அதன்படி கள்ளர் பஞ்சாயத்து அமைப்பு, கள்ளர் சீர்திருத்தப் பள்ளி, கள்ளர் கூட்டுறவு சங்கங்கள் முதலிய நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில் கள்ளர் பஞ்சாயத்துக்கு முக்கிய இடம் தரப்பட்டது. ‘தன் கையைக் கொண்டே தன் கண்ணைக் குத்துவது’ என்பதற்கேற்பக் கள்ளர் ஒருவரையே பஞ்சாயத்துத் தலைவராக நியமித்து, அவர் மூலமாகவே எல்லா நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இதுவரை கள்ளர்களின்மீது அமல்படுத்தப்பட்ட கொடுஞ் சட்டத்தையும், அதனால் அவர்கள் அடைந்த கொடுமையையும் கண்டோம். இனி கள்ளர்கள் யார்? என்பதை, ஒரு பருந்துப் பார்வையில் காண்போம்.

                                                                     4
                             கள்ளர் நாடு என்பது, கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்ற நிலப்பரப்பைக் குறிக்கும். இவர்கள் இராஜதானி&எட்டு நாடுகள் & இருபத்து நான்கு உபகிராமங்கள் என்னும் அமைப்பின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். கள்ளர் என்ற பொது அடையாளத்திற்குள் பிறமலைக் கள்ளர், கீழ்நாட்டுக் கள்ளர், மேல்நாட்டுக் கள்ளர், ஈசநாட்டு கள்ளர், கந்தவர்வக் கோட்டைக் கள்ளர், நாட்டாக் கள்ளர், தெக்கத்திக் கள்ளர், கூட்டப்பல் கள்ளர், பெரிய சூரியூர் கள்ளர், தொண்டைமான் எனப் பல பிரிவுகள் உள்ளனர். ஆனால், இந்தக் கள்ளர்களின் பூர்வ வரலாறு குறித்து உறுதியான தகவல்கள் இல்லை; பல்வேறு கதைகள் மட்டும் உள்ளன. கள்ளர்கள், தீபகற்பத்தின் தெற்கில் முதலாவதாக ஊடுருவிய திராவிட இனக்குழுக்கள் என்று H.A. ஸ்டூவர்ட்ஸ் போன்றோர் கருத்துத் தெரிவித்தாலும், அவர்களைப் பற்றிய பொதுவான கருத்து, கள்ளர்கள் தொண்டை மண்டலமான காஞ்சிபுரத்திலிருந்து தெற்கு நோக்கி வந்து புதுக்கோட்டை, நத்தம், மேலூர் பகுதிகளில் குடியேறியவர்கள் என்பதே. மேலும், இவர்கள் நாக வம்சத்தைச் சார்ந்தவர்கள், களப்பிரர்களின் படைப்பிரிவினர், பல்லவர்களின் வழித்தோன்றல்கள், சோழர்களின் வாரிசுகள், என்றெல்லாம் கருதப்படுகின்றனர். இனி, பிறமலைக் கள்ளர்கள் பற்றி மட்டும், சற்றுத் தனித்துப் பார்ப்போம்.

                                                 தனி அரசை நிறுவித் தன்னாட்சி புரிந்து வந்த பிறமலைக் கள்ளர்களின் நாட்டு எல்லைகளைப் பார்த்தோமேயானால், மேற்கில் மதுரை நகரமும் திருபரங்குன்ற மலைகளும், தெற்கில் நாகமலையும், கிழக்கில் மேற்குமலைத்தொடரும், வடக்கில் குண்டாறும் உள்ளன. இந்த எல்லைகளுக்குள்தான் பிறமலைக் கள்ளர்கள், ‘அம்பலம்’ என்ற பட்டத்தோடு (அம்பலம் & தலைவர்) நாட்டை ஆண்டனர்.
மேலும் கள்ளர்களின் நகர எல்லைகளாக இராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்கள் ஆகியன இருந்தாலும் இவர்கள் ஒருபோதும் அந்த ஆட்சியாளர்களுக்கு அடங்கியதில்லை. மாறாக அவர்களது ஆட்சி அதிகாரத்தைச் சீர் குலைப்போராகவே இருந்தனர். தம்மை இரண்டாம் பிரஜைகள் ஆக்கும் அதிகார அமைப்புக்கு எதிரான தம்ஆளுமைச் செயல்பாடுகள் காரணமாக கள்ளர்கள் தமக்கென்று சட்டம் & ஒழுங்கு மற்றும் வருவாய் அமைப்புகளைக் கொண்டு தன்னாட்சியை அனுபவித்து வந்தனர் என்பது உறுதியாகிறது.

                                    கள்ளர்கள் என்றாலே திருடர்கள் என்னும் அழுத்தமான பதிவு, சமூகத்தின் பொதுப்புத்தியில் உறைந்துபோய்க் கிடக்கிறது. இப்பொதுப்புத்தியின் கருத்துப்பிடிப்புக்கு ஆட்பட்டுதான், லூயிஸ் டூமண்ட் பிறமலைக் கள்ளர்கள் பற்றி மேற்கொண்ட ஆய்வுக்காகச் சென்னைப் பல்லைக்கழகத்தின் அன்றைய துணைவேந்தர் திரு. கி.லி. முதலியார் அவர்களைத் தொடர்பு கொண்டபோது, கள்ளர்கள் பற்றி அவர் விவாதிக்க மறுத்ததாக அறியமுடிகிறது. இவ்வாறு கள்ளர்கள் பொதுச் சமூகத்தால் ஒதுக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம், அவர்கள் ஆநிரைகளைக் கவர்ந்ததேயாம். சங்க காலத்திலும் ஆநிரைகளைக் கவர்ந்து செல்லும் கூட்டம் ஒன்று இருந்தது. அவர்கள் (ஆநிரைக்) கள்வர் எனப்பட்டனர். எனவே, கள்ளர்கள் கள்வர் ஆக்கப்பட்டனர். ஆனால் ‘கள்ளர்’ என்னும் சொல்லுக்குக் கரியவர், பகைவர் என்று பொருள் உண்டு என நிறுவியுள்ளார் கோபாலசாமி ரகுநாத ராசாளியார். வீரர் என்னும் பொருள் பற்றியே ‘கள்ளர்’ என்னும் குலப்பெயர் தோன்றியிருக்கிறது என்று பொருள் எழுதுகிறார் ந.மு. வேங்கடசாமி நாட்டார். மேலும், கள்வர் என்பதே உயர்ந்த பொருள்தான் என்பதைச் சங்க இலக்கியங்களில் பயின்று வரும் ‘கள்வர் கோமான் புல்லி’, ‘கள்வர் பெருமகன் தென்னன்’ என்று மன்னர்களை அழைத்திருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார். ந.மு.வே. நாட்டார். எனவே ‘கள்ளர்’ என்ற சொல்லுக்குத் ‘திருடர்’ என்னும் பொருள், இங்குப் பொருந்தாது. கள்ளர்களைப் பொறுத்தவரை, ‘திருட்டு’ என்பது சமூகக் குற்றமாகக் கருதப்படவில்லை. மாறாக, முதன்மையான பொழுதுபோக்காகவே இருந்து வந்துள்ளது. எனவேதான், ‘கள்ளர் நாட்டில் குற்றத் தொழில் செய்த கிரிமினல்கள் இருந்தார்கள் என்றாலும், இவர்களைத் திருடர்கள் என்று சொல்வதற்கில்லை’ என்கிறது லவ்லக் ரிப்போர்ட். (ஆனால் 1899இல் நாடார் மக்களுக்கு எதிராக நடந்த சிவகாசிக் கொள்ளையில், மேலநாட்டுக் கள்ளர்கள், முக்கிய பங்காற்றினார்கள். அது அந்தக் காலகட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு தனித்து ஆராயப்பட வேண்டும்.) கள்ளர்கள் வேளாண்மை மூலமாகத் தமது வருவாயின் ஒரு பகுதியைப் பெற்றிருந்தாலும், துப்புக்கூலி (திருட்டுப்போன கால்நடைகளைத் துப்புத்துலக்கிக் கண்டறிவதற்குப் பெறும் கூலி), குடிக் கூலி (குடிமக்களைக் காப்பதற்காகப் பெறும் கூலி) என்னும் இரு வழிகள் மூலமாகவும் தங்களது வருவாயைப் பெருக்கிக் கொண்டனர். இந்த இரு கூலிகளில் குடிக்கூலியான காவல்கூலி, வெள்ளைய அரசின் வருவாயைப் பெரிதும் பாதித்தது.- ஒவ்வொரு கள்ளர் கிராமத்திலும், ‘காவல்காரர்கள்’ அரசுக்கு இணையானதொரு காவல் நிலையத்தை நடத்திக் கொண்டிருந்தனர். மக்களும் கள்ளர் காவலையே ஏற்று நடக்க வேண்டிய நிலையில் இருந்தனர்.
ஆட்சிமுறை மாறும்போது ஆளுவோரின் தன்மையும் மாறுகிறது. மன்னர்களின் ஆட்சி நிலவியபோது பிறகுடிகளிடமிருந்து தம்மைக் காக்கும் பொறுப்பை கள்ளர் சமூகத்தாரிடம் ஆட்சி யாளர்கள் ஒப்படைத்தனர். ஆனால் அதிகாரத்தை எல்லாவிதமாகப் பயன்படுத்திய பிரிட்டிஷ் அரசு ஆட்சிக்கு வந்தபோது, ஆட்சி அதிகாரத்திற்கு வெளியில் இருக்கும் ‘கள்ளர் காவல்’ போன்ற குறுக்கீடுகளை விரும்பவில்லை. மேலும், ஆட்சியாளர்களிடமிருந்தே காவல் கூலியைக் கள்ளர்கள் பெற்றதை மதுரை மாவட்ட எஸ்.பி. திரு. பவுண்டி (Baudry) தனது மேல்அதிகரிக்கு எழுதிய கடிதத்தால் தெரியவருகிறது. அது : ”காவல் என்ற பெயரில் மக்களிடமிருந்து மிரட்டி பணம் பறிக்கின்ற முறை இங்கு இன்றும் நடைமுறையில் உள்ளது. சாதாரண குடிகள் மட்டுமல்லாது ஐரோப்பிர்களும், மேஜிஸ்ட் ரேட்டுகளும் கூட காவல் கூலி கொடுத்து வருகின்றனர். நான் இங்கு எஸ்.பி.யாக முதன் முறை பதவியேற்ற பொழுது ஒரு கள்ளர் இனத்துக் காவல்காரன் என்னிடம் வந்து காவல் கூலி கேட்டான். நான் தர மறுத்தால் எனது உடமைகளைக் கொள்ளையடித்து விடுவேன் என்று மிரட்டினான். நானும் அவனுக்குக் காவல்கூலி கொடுத்தேன். அவன் கேட்ட அளவிற்கு இல்லாமல் சிறிது பணம் கொடுத்தேன். அன்று என் வாழ்க்கையில் முதன்முறையாக நான் மிகவும் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். அதனால் இவ்வகையில் காவல் என்ற பெயரில் மிரட்டிப் பணம் பறிக்கின்ற வழக்கத்திற்கு நாம் உடனடியாக முடிவு கட்டவேண்டும்”.
எனவே, இந்தக் காவல் முறையை ஒழிப்பதற்காக அரசு, முயற்சித்தவைகளுள் ஒன்றுதான் உசிலம்பட்டி நாட்டாண்மை அம்மையப்பக் கோனாரைத் தூண்டிவிட்டுக் கள்ளர்களைக் காவல் காக்கும் பணியிலிருந்து நீக்கியதாகும். இதற்காகக் கோனார்கள் ஒரு ‘பொது நல நிதியை’ (fund) வசூலித்து, தங்களுக்குள் ஒருவரைக் காவலாளியாய் நியமித்துக் கொண்டனர். இந்தக் கலகம் ‘பண்டு கலகம்’ என்றே அழைக்கப்பட்டது. பண்டு கலகத்தினால் கள்ளர்கள் எல்லோரும் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

                                         கள்ளர்கள் குடிக்கூலியும், துப்புக்கூலியும் பெற்றது கூட ஏதோ ரௌடித்தனம் செய்யவேண்டும் என்பதற்காக அல்ல; தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவே என்பது வரலாறு நெடுகிலும் காணப்படுகிறது. குறிப்பாகத் திருமலை நாயக்கர் காலத்தில் (கி.பி.15 ஆம் நூற்றாண்டு), அவர் பாளையங்களை உருவாக்கி & பாளையம் என்பது ‘பாலிகாடு’ என்னும் தெலுங்குச் சொல்லின் மறுவடிவம், இதற்கு இராணுவக் குவியல் தங்கியிருக்கும் இடம் என்பது பொருள் & அரசாட்சி புரிந்து வந்தபோதும், இவர்கள் தன்னரசு ஆட்சி புரிந்து வந்துள்ளனர். திருமலை நாயக்கரால் கள்ளர்களை ஒடுக்குவதற்காக எடுக்கப்பட்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. எனவே, அவர்களோடு நாயக்கர் சமாதான மாகவே போக வேண்டியிருந்தது என்பது, சமூக&வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது.
ஆக, அதிகார மையத்தின்கீழ் அரசாட்சி புரிந்த கள்ளர்கள் தான், நாளடைவில் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். குற்றப் பரம்பரைச் சட்டம் என்னும் கைரேகைச் சட்டம் மூலமாக அவர்களை ஓர் எல்லைக்குள் முடக்கிவைத்து, அவர்களது அசைவுகள் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. தனூர் வேதத்தைக் கற்றுத் தன் கைவிரலை இழந்த ஏகலைவனைப் போலவே, இவர்களும் தன்னரசு வேதத்தால் தங்களது கைரேகையை இழந்தார்கள். ஏகலைவனின் பெருவிரல் அவன் கற்ற வில் வித்தையின் குறியீடு மட்டுமன்று; அவனது ஆண்மையின் குறியீடு. அதைப் போலவே, கள்ளர் சமூகத்து ஆண்களின் பெருவிரலும் அவர்களின் ஆண்மையின் குறியீடு எனப் பேரா.இ. முத்தையா குறிப்பிட்டிருப்பது முற்றிலும் பொருத்தமானது. இப்படிச் சட்டத்தின் பெயரால் நடந்த இக்கொடுமைகளை எதிர்த்து, 1930களில் பல விவாதங்கள் நடந்தன. 1936களில் பண்டித ஜவஹர்லால் நேரு, ‘சட்டப் புத்தகத்திலிருந்து இந்தச் சட்டம் நீக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என்றார். இதே போல, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு சுப்பராவ், ஹரிஜன சேவா சங்கத் தலைவர் கி.க்ஷி. தக்கா, ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, உ. முத்துராமலிங்கத் தேவர் போன்றோர் இக்கொடுஞ்சட்டம் நீக்கப்படுவதன் அவசியம் குறித்துப் பேசி வந்தனர். இந்த விடயத்தில் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பணி, தனித்து மதிப்பிட வேண்டிய ஒன்று. தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒருசேரப் புலமை பெற்ற அவரது சாதுர்யமான பேச்சு, கள்ளர்களை ஒன்று திரட்டியதோடு அன்றைய அரசையும் முடக்கிப் போட்டது. அதன் விளைவால், 1947இல் போலீஸ்துறை அமைச்சராக இருந்த பி. சுப்பாராவ், இந்தச் சட்டத்தை வாபஸ் வாங்குவதற்கான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். பேகம் சுல்தான் அம்ருதீன் போன்றவர்களால் இதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டபோதும், தீர்மானம் நிறைவேறியது; சுதந்திரத்திற்குப் பிறகு தானாகவே காலாவதியானது.

                                                 வெள்ளைய அரசின் கீழ்தான் கள்ளர்கள் கொடுந்துன்பத்திற்கு ஆளானார்கள் என்றால், சுதந்திர இந்தியாவிலும் அது நீண்டு கொண்டுதான் இருக்கிறது. காங்கிரசின் நடவடிக்கையில் அதிருப்தியடைந்து முத்துராமலிங்கத் தேவர் அவர்கள், ‘பார்வர்டு பிளாக்’ என்னும் கட்சியை நிறுவியது நாம் அறிந்ததே. தேவரின் இறப்பிற்கு முன்னும் பின்னும் பார்வர்டு பிளாக்கை எவராலும் வீழ்த்த முடியவில்லை என்பது வரலாறு. அவரது சுட்டுவிரலுக்கு ஒட்டுமொத்தக் கள்ளர் சமூகமும் கட்டுப்பட்டது. அதன் காரணமாகவே கள்ளர் சமூகம், பின்னாளில் கஷ்டப்பட்டது. உதாரணமாக 1952இல் ‘பெரியகுளம்’ சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் என். ஆர். தியாகராஜனை, பி.கே. மூக்கையா தேவர் தோற்கடித்தற்காகவே காங்கிரஸ், வைகை அணையைக் கட்டுவதற்குப் பிறமலைக் கள்ளர்களது குடியிருப்பு களைக் காலி செய்து வஞ்சம் தீர்த்துக் கொண்டது. (அணை கட்டுவதற்கு மாற்றிடம் இருந்தபோதும், காங்கிரஸ் அதை நிராகரித்தது). சோழ வந்தான் வேளாளர்களுக்கும், மானாமதுரை பார்ப்பனர்களுக்கும் சாதகமாக வைகை அணை அமைந்தது.
அதே போல, மதுரைக்கு அருகே பிறமலைக் கள்ளர்களது பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைத் தாண்டிக் காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த திருப்பரங்குன்றம் சின்ன கருப்பன் அம்பலத்திற்கு, நீர்ப்பாசன வசதியைக் காங்கிரஸ் செய்து தந்தது. காங்கிரசின் அமைச்சராயிருந்த ராஜாராம் நாயுடு அவர்களுக்கு மட்டும், நீர்ப்பாசனக் கால்வாய்கள் அமைத்துத் தந்ததும் கவனிக்கத்தக்கது.

                                         ஆக, வரலாறு நெடுகிலும் பிறரிடம் உயர்ந்தபட்ச மரியாதையையும் கண்காணிப்புக்கு எதிரான அச்சுறுத்தலையும் தொடர்ந்து பெற்றுவந்த கள்ளர் சமூகத்தின் அடையாளங்களைப் பதிவு செய்யும் முகத்தான், காலனிய காலத்து எதிர்ப்புரட்சியையும் தொகுத்தளிக்கும் இனவரைவியலாக இந்நூல் விரிந்திருக்கிறது. இதற்காக உழைத்திருக்கும் நூலாசிரியர் திரு. சுந்தரவந்தியத்தேவன் பற்றியும் கொஞ்சம் பேசியே ஆகவேண்டும்.

                                      புத்தக மூட்டையையும் வாழ்க்கை மூட்டையையும் சுமக்க வேண்டிய தருணத்தில், நாளெல்லாம் ‘கூன்’ பொதியைச் சுமந்து அலையும் மாற்றுத்திறனாளி, வந்தியத்தேவன். இந்தப் பொதியோடே ஊர் ஊராக அலைந்து திரிந்து, தனது இனத்தாரின் வரலாற்றைச் சேகரித்திருக்கிறார். ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்பதையும் மறந்து, தன் இனத்தாருக்காகவே வாழ்க்கையைத் தொலைத் திருக்கிறார். புத்தகங்களிலும், நூலகங்களிலும் மட்டும் குறிப்புகளை எடுக்காமல் களஆய்வின் மூலமாகவும் தரவுகளைச் சேகரித்திருக்கிறார் (மக்கள் வரலாறு என்பது, வளாகம் சாராத படிப்புக்கு வெளியே தானே இருக்கிறது!) அதன் விளைவாகக் கள்ளர்களது சமூக அமைப்பு, நாட்டு அமைப்பு, குடும்ப உறவுகள், குலதெய்வ வழிபாடு, கள்ளர்களது அரசியல் பங்களிப்பு முதலியவற்றை எல்லாம் இந்நூலில் விரிவாகக் காணமுடிகிறது. குறிப்பாகப் பின்னிணைப்பில் அவர் கொடுத்திருக்கக்கூடிய ஆவணங்கள் மதிப்புமிக்கவை. கள்ளர்கள் பற்றிய ஆய்வில் இனிவரும் தலைமுறை இதனூடே பயணிக்காமல் செல்லவே முடியாது என்னும் அளவிற்கு, ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
இந்தக் கடுமையான உழைப்பிற்காகவும் விடாப்பிடியான முயற்சிக்காவும், அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தரமறிந்து வரிசையிடக்கூடிய வகையில் இந்நூலும் அமையும் என்பதை உரக்கக் கூறலாம். இறுதியாக….
‘சாதிப்பெருமை பேசும் தமிழ்ச் சமூகத்தில் சாதிப்பெயரைச் சொல்லிச் சொல்லியே பொதுவாழ்வின் மையத்திலிருந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட பூர்வகுடிகளின் எழுச்சிமிக்க வரலாற்றைப் பேசும் இந்நூல் பொய்களை ஆராதிக்கவில்லை; உண்மைகளைத் தேடச் செய்கிறது; பொதுவாசகரிடம் புரிந்துணர்வைக் கோருகிறது.’

- ப. சரவணன்
உசாத்துணை

1. ந.மு. வேங்கடசாமி நாட்டார், கள்ளர் சரித்திரம், 1923
2. பெ. முத்துத்தேவர், மூவேந்தர் குலத்துத் தேவமார் சமூக வரலாறு, 1982
3. முகில்நிலவன் (தொ.ஆ.), குற்றப்பரம்பரை அரசியல், 2010
4. சு. வெங்கடேசன், காவல் கோட்டம், 2001
5. Bipinchandra, India’s Struggle for Independence, Penguin, 1989

நன்றி: http://www.tamilpaper.net/?p=5160

வயிறா... வசதியா...? - maraththa mizhar senai

''மிழகத்தில் பயன்பாட்டில் உள்ள 3,800 மெகாவாட் உயர் அழுத்த மின்சாரத்தில், 1,800 மெகாவாட் மின்சாரத்தை, சென்னையைச் சுற்றியுள்ள சில கார்ப்பரேட் கம்பெனிகளே கபளீகரம் செய்துகொள்கின்றன. இதனால் எங்கள் தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன. மின்சாரம் என்பது நாட்டின் பொதுச்சொத்து. அதில் அனைவருக்கும் சமபங்கு வேண்டும். சிலருக்கு மட்டும் 0% மின்வெட்டு... எங்களுக்கு 60% மின்வெட்டு.

கார்ப்பரேட் கம்பெனிகளே, நீங்கள் தாய் உள்ளத்தோடும் கருணையோடும் யோசித்து முடிவெடுத்து உங்களது பங்கான 30% மின்வெட்டை ஏற்றுக்கொண்டால், எங்கள் வாழ்வும் மலரும். சமூக வளர்ச்சியில், நீங்களும் பங்கு எடுத்த பெருமை கிடைக்கும்''
-இப்படி, கார்ப்பரேட் கம்பெனிகளை நோக்கி வேண்டுகோள் விடுத்துள்ளன தமிழகத்திலிருக்கும் பருத்தி, பஞ்சுநூல் மில் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள்.


இதைப் பார்க்கும்போது... ஒரு கொலை செய்த ரவுடி... பல கொலைகளை செய்த/செய்துகொண்டிருக்கும் ரவுடியை பார்த்து ஜீவகாருண்யம் பேசுவது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. ஆம், தங்களுடைய வருமானத்தில் சிறு தடங்கல் ஏற்பட்டதற்கே... சித்தாந்தம், வேதாந்தம், சமூகப் பொறுப்பு, சமூக அக்கறை பற்றி பேசும் இந்தப் பருத்தி, பஞ்சு, நூல் மில் முதலாளிகள்தானே... லட்சக்கணக்கில் பருத்தி விவசாயிகள் மாண்டு மடிந்து கொண்டிருக்கும்போதும்... இதயத்தை இரும்பாக்கிக் கொண்டு பருத்தி ஏற்றுமதிக்குத் தடை கோரினார்கள்.

விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலையில் பருத்தியை கொள்முதல் செய்து... நூல், ஆடை என ஏற்றுமதி செய்து, தாங்கள் கொழுத்த லாபம் சம்பாதிக்க, பருத்தி ஏற்றுமதிக்குத் தடை வாங்கினார்கள் இந்த முதலாளிகள். இப்போது, மின்சார பிரச்னை என்றதும், சமூகசமத்துவம் பற்றி பேசுகிறார்கள்.
ஒன்று உள்ளூர் வர்த்தகம் என்றால், இன்னொன்று உலக வர்த்தகம். ஒன்று சிறிய சுரண்டல்... மற்றொன்று பெரிய சுரண்டல். இதில் நியாயம், தர்மம் என்கிற சொற்களுக்கு இடமே இல்லை.

'கட்டுப்பாடற்ற உலக வணிகம், கட்டுப்பாடற்ற உலக முதலீடு நம் நாட்டுக்கு நல்லதல்ல. நல்லது செய்வது போல ஒரு மாயையை உண்டாக்கி, ரத்தம் வராமல் கொன்று விடும்' என்று கடந்த 30 ஆண்டுகளாக கரடியாக பலரும் கத்திக் கொண்டே இருக்கிறார்கள். 'வலிமையான மிருகம், எளிய மிருகங்களை வேட்டையாடி தின்று விடுவது போல... வலியவன், எளியவனை அழித்து விடுவான்’ என்று எச்சரிக்கை செய்தார்கள். 'பொருளாதாரத்தில் கடைநிலையில் இருக்கும் விவசாயிகள் முதலில் பலியாவார்கள். அடுத்து, சிறுசிறு தொழில்களை விழுங்குவார்கள்’ என்றும் எடுத்துச் சொன்னார்கள். அதற்கெல்லாம் யாருமே காது கொடுக்கவில்லையே!

தொழில் சுணக்கத்தால் வருவாய் குறைந்ததையே தாங்க முடியாமல் ஆர்ப்பாட்டம் செய்யும் ஆலை அதிபர்கள், வாழ்நாள் முழுவதையும் வறுமைக்கு அடகு வைத்த விவசாயிகளைப் பற்றி இப்போதாவது சிந்தித்துப் பார்க்கட்டும். இந்தியாவில் இருக்கின்ற பஞ்சாலைகளில் பாதி தமிழ்நாட்டில் இருப்பதாகப் பெருமை பேசுகிறார்கள். அது எவ்வளவு உண்மையோ, பருத்தி விவசாயிகள் தற்கொலைக்கு அவர்களும் ஒரு காரணம் என்பதும் அவ்வளவு உண்மை. பருத்தி விவசாயிகளை வைத்து கொழுத்தவர்கள், செத்து விழுந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு என்ன செய்தார்கள்? ஒரு குடும்பத்தையாவது தத்து எடுத்து உதவி இருப்பார்களா?

'தடையற்ற உலக வர்த்தகச் சட்டம்' இந்திய அரசின் முட்டாள்த்தனமான பொருளாதாரக் கொள்கை முடிவு. 100 கோடி மக்களை வறுமையில் தள்ளிவிட்டு, உலக பணக்காரர்கள் 100 பேரை உருவாக்கியதைத் தவிர எதைச் சாதித்தது உலகமயம்? பன்னாட்டு கம்பெனிகளுக்கு பட்டுக்கம்பளம் விரித்தபோது தடுக்கத் தவறிவிட்டு, தற்பொழுது வேண்டுகோள் விடுத்து என்ன புண்ணியம்?

இவர்கள் கதை இப்படியென்றால்... அரசு தன் பங்குக்கு மின்கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் கூத்தடித்து வருகிறது. அந்தக் கூட்டத்தில் சில அரைவேக்காடுகள், 'விவசாயத்துக்கு எதற்காக இலவச மின்சாரம்... அதற்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும்?' என கேள்விகளை எழுப்புகின்றனர்.

அரசே ஒரு சிலரை தயார் செய்து இப்படி கேள்விகளைக் கேட்க வைத்து, பின்பு 'மக்கள் கருத்தே மகேசன் கருத்து’ என்கிற பெயரில் விவசாயத்துக்கு மின்கட்டணம் விதிக்க நடத்தும் சூழ்ச்சியாகக்கூட இதை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது!

விவசாயம் என்பது வயிறு சம்பந்தப்பட்டது... தொழிற்சாலைகள் என்பது வசதி சம்பந்தப்பட்டது. வசதியைப் பெருக்கிக் கொள்ள, பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமாட்டு விலையில் நிலம், தடையில்லா மின்சாரம், வரிச்சலுகை, தண்ணீர் சலுகை, கூலிச்சலுகை என அள்ளி அள்ளிக் கொடுப்பது இந்தக் குருட்டு கண்களுக்குத் தெரிவதில்லை. மாறாக, விவசாயத்துக்குக் கிள்ளிக் கொடுக்கும் இலவச மின்சாரம் கண்களை உறுத்துகிறது.

650 கோடி முதலீடு செய்த ஜப்பானைச் சேர்ந்த நோக்கியா செல்போன் கம்பெனிக்கு, ஓராண்டில் இந்திய அரசு கொடுத்த சலுகைகள் மட்டும் 700 கோடிக்கும் மேல். ஆனால், 120 கோடி மக்களுக்கு சோறு போடும் உழவர்களுக்கு, சலுகை கொடுக்கக் கூடாதாம்.

அய்யா புண்ணியவான்களே வாழ்க்கைக்கு எது முக்கியம்... சோறா...
செல்போனா..?

-தூரன் நம்பி
நன்றி: பசுமைவிகடன், 10.3.2012

கட்டபொம்மன் ( கெட்டி பொம்மு நாயக்கன் ) முதல் விடுதலை போராட்ட வீரனா ?


சில வரலாற்று பதிவுகள் .....
கெட்டி பொம்மு நாயக்கன் பாஞ்சால குறிச்சியில் ஒரு பாளையகாரனாக ஆட்சி செய்து மக்களோடு சேர்ந்து இந்திய விடுதலை போராட்டத்தை முதலில் துவங்கினான் என்றும் , அவன் வெள்ளையருக்கு எதிராக போர்புரிந்தான் என்றும் இன்று வரை பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது . வந்தேறிகளின் வரலாற்றை மட்டுமே படித்து வந்த நாம் நமது வரலாற்றை இழந்து நிற்பது ஏதோ எதேச்சையாக நிகழ்ந்தது அல்ல . நமது உரிமைகளையும் உடமைகளையும் இழந்தது இருட்டடிப்பு செய்யப்பட்டது திட்டமிட்ட செயல் ஆகும்.


இனி கெட்டி பொம்மனின் வீர தீர செயல்களை நம் முன்னோர்கள் பதிவு செய்துள்ளதை கொஞ்சம் காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும் .

புதிய வந்தேறிகளான ஆற்காட்டு நவாபிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமை பெற்ற வெள்ளைகரனுக்கும் பழைய வடுக வந்தேறியான கெட்டி பொம்மு நாயக்கனுக்கும் இடையே தென் தமிழ் நாட்டு பகுதியில் வரி வசூல் கொள்ளை சம்பந்தமாக நடந்த பூசல் எப்படி சுதந்திரபோர் அல்லது போராட்டமாகும் !

வீரபாண்டிய கட்டபொம்மன் திரை படத்தை பார்த்துவிட்டு அந்த மாயை அகலாதொருக்கு இதெல்லாம் அதிர்ச்சி செய்தியே !!

முதலில் கெட்டி பொம்மு நாயக்கனை கட்டபொம்மன் என அடையாலபடுதுவதே
ஒரு வரலாற்று பிழையாகும் . மூவேந்தர் மரபின் மூத்த குடியான பாண்டிய வம்சதாருக்கும் வடுக வந்தேறியான தெலுங்கு கெட்டி பொம்முவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை .
வடுக வந்தேறி ஆட்சியாளர்கள் தமிழகத்தை கைப்பற்றி ஆளத் தளைப்பட்ட பொது தங்கள் வடுக அடையாளத்தை மறைக்கும் வண்ணம் தங்கள் பெயரோடு சோழர் , பாண்டியர், என்ற அடை மொழிகளை பயன்படுத்தினர் , இதன் காரணமாக சில குழப்பங்கள் ஏற்பட்டன . இந்த உண்மையை தமிழர்கள் விளங்கி கொள்ளவேண்டும் .
இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் மொழி வழி தேசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுவிடும் சூழலிலேயே வீட்டிலும் , இரண்டு பிற மொழியினர் தனியே பேசிக்கொள்ளும் போதும் அவரவர் தாய் மொழியிலேயே ''மாட்லாடி கொள்ளும் போது'' ஒரு ஆட்சியாளனாக இருந்த தமிழ் மண்ணை ஆண்ட கெட்டி பொம்மு நாயக்கன் திரை படத்தில் வருவது போல் தமிழில் வீர வசனம் பேசியிருப்பானா ?
ஜாக்சன் துரையிடம் ''டப்பு லேது'' என்று தான் மாட்டிலாடியிருப்பார். என்பதை பொய்யுரை பரப்புவோர் கவனிக்க வேண்டும் .
மேலும் இந்த கெட்டி பொம்முவின் முன்னோரான ஜெகவீர கெட்டி பொம்மு பாளையக்காரன் ஆனதே குறுக்கு வழியில்தான் . முதலில் கிழக்கிந்திய கம்பெனியோடு சேர்ந்துகொண்டு வரி வசூல் செய்த கெட்டி பொம்மு பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியோடு ஏற்பட்ட முரண் பாடு காரணமாக கம்பெனிக்கு திரை செலுத்தி வந்த எட்டையபுரம் பாளையத்தின் மீது அடிக்கடி சண்டையிட்டு பொது மக்களை சூறையாடினான் . அவன் தன் குடிமக்களிடமே அதிக வரிகளை வர்புரிதிப் பெற்றான் , கம்பெனிக்கு துணிகள் நெய்து வழங்கி வந்த நெசவாளர்களை துன்புறுத்தி அவர்களிடமிருந்து பணம் பறித்தான் , அவர்களை சாட்டையால் அடித்தும் , கை கால்களை கட்டிவைத்து அட்டை பூசிகளை கடிக்க விட்டும் கொடுமை செய்தான் . கெட்டி பொம்முவின் கையாட்கள் நெசவாளர்களின் வீடுகளை கொள்ளையிட்டு அவர்களின் பெண்களின் வாயில் மண்ணை கொட்டியும் , நெசவாளர்களின் கண்களில் கள்ளி பாலை ஊற்றியும் கொடுமை படுத்தினர் . பலருடைய பற்கள் அடித்து நொறுக்க பட்டதுடன் செருப்படியும் , சாட்டையடியும் வழங்கப்பட்டது.

ஆனால் கெட்டி பொம்மு ஆங்கிலேயரை எதிர்த்து போராடினான் என்றும் அவனே முதல் சுதந்திர வீரன்போல பொய்யுரை பரப்புவோர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள முனைவர் கே .கே .பிள்ளையின் ''தமிழக வராலாறு , மக்களும் பண்பாடும்'' என்ற நூலை படிக்கவும் .
மேலும் கெட்டி பொம்மு திருசெந்தூரில் தீப ஆராதனை மணி அடிப்பதை பாஞ்சால குறிச்சியில் கேட்பதற்காக வழி நெடுக மணி மண்டபங்கள் கட்டிவைத்தான் . அவைகள் கற்றளிகள் அல்ல வெறும் ஓலை குடிசைகளே ! அவைகள் கட்டபட்டதிலும் தமிழர்களே பாதிக்கப்பட்டனர் . ஏனெனில் பனை ஓலைகளையும் , மரங்களையும் யாரையும் கேட்காமல் வெட்டி கொண்டு வந்தனர் . இதனால் பனை மரத்தை ஆதாராமாக கொண்டு வாழ்க்கை நடத்திய நாடார் சாதி மக்கள் வெறுப்படைந்தனர் . ஒரு முறை கெட்டி பொம்முவின் கையாட்களுக்கும் குரும்பூர் நாடார்களுக்கும் பெரும் சண்டை நடந்தது. இதனால் நாடார் சாதி மக்கள் ஒருபோதும் அவனை ஆதரித்தது இல்லை. இதை நா.வானமாமலை பதிபுத்துள்ள ''வீரபாண்டிய கெட்டி பொம்மு கதை பாடல்'' நூல் மூலம் அறியலாம் .
ஆயுதம் ஏந்திய பாஞ்சாலன் குறிச்சியின் ஆட்கள் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட கூலியாட்களுடன் எட்டயபுரத்தை சேர்ந்த அச்சங்குளம் கிராமத்தில் கம்மங் கதிர்களை அறுத்துக் கொள்ளையிட்டு சென்றனர் . இது தொடர்பாக எட்டப்ப நாயக்கன் 15.01.1799 இல் ஜாக்சனுக்கு புகார் அனுப்பினான் . ஊத்துமலை பாளையத்தில் கங்கை கொண்டான் வட்டத்திலுள்ள மனியகாரரை மிக மோசமாக நடத்தி இரவு நேரத்தில் கால்நடைகளையும் , அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்ததுடன் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர் என்று 13.06.1799 இல் ஊத்துமலை பாளையக்காரர் லூசிங்க்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார் . 05.08.1799 இல் சிவகிரி பாளையக்காரர் அனுப்பிய புகார் , 07.08.1799 இல் ஊத்துமலை பாளையக்காரர் அனுப்பிய புகார் ஆகியவற்றில் கெட்டி பொம்முவின் தம்பி துரைசிங்கம் , தானாபதி பிள்ளை ஆகியோருடன் கோலார்பட்டி , ஏழாயிரம்பண்ணை , அழகாபுரி , நாகலாபுரம் , காடல்குடி , குளத்தூர், மணியாச்சி , மேலமந்தை , ஆத்தங்கரை , கடம்பூர் பாளையங்களை சேர்ந்தவர்களும் கொள்ளையடித்துள்ளனர் என்பதும் , எட்டயபுரம் , ஊத்துமலை , சொக்கம்பட்டி ,ஆவுடயாபுரம் , தலைவன் கோட்டை ஆகிய கும்பினிய ஆதரவு பாளையக்காரர் களுக்கும் போதிய பாதுகாப்பு அழிக்க கோரி மேற்கண்ட கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்த வரலாற்றை J.F. KERANS - Some Account of the Panchalamkurichy polegar and the State of Trinelvelly . என்ற நூலில் பதியப்பட்டுள்ளது.

தமிழர்களே இப்போது சொல்லுங்கள் இந்த வடுக வந்தேறியா சுதந்திர போர் வீரன் .தமிழர்களே நமது வரலாற்றை நாம் ஆய்ந்து தெளியாமல் அன்னியரின் ஆதிக்கத்திலிருந்து மீள முடியாது. எனவே இந்திய தேசிய மாயை , திராவிட தேசிய மாயை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு , இருக்கும் உடமைகளை காக்கவும் , இழந்த உரிமைகளை மீட்கவும் , தமிழர் தேசிய விடுதலை களத்தை அமைப்போம் வாருங்கள் !

இரா
. சீவானந்தம் ,
வழக்கறிஞர் ,
சட்ட ஆலோசகர் ,
தமிழர் களம் .
கருவூர் .

-நன்றி ; நம் வேர்கள் 

தமிழ் நாடா? திராவிட நாடா?

- தி.பரமேசுவரி 

கருணாநிதி

“1912 ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்ற அமைப்பின் வழிகாட்டியாக இருந்த டாக்டர் நடேசனார்தான் திராவிட இயக்கத்தின் நிறுவனர். 1913 ஆம் ஆண்டு நடந்த அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவில் திராவிடர் சங்கம் என அது பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டாக்டர் நடேசனார் தொடங்கிய திராவிடர் சங்கம்தான் இன்று வளர்ந்துள்ள மொழி உணர்வு, பகுத்தறிவு உணர்வு, சமூக நீதி ஆகியவற்றுக்கு அடித்தளம் என்பதை அறிந்து கொள்ளலாம். எனவே திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை தி.மு.க சார்பில் ஆண்டு முழுவதும் திராவிடர்களாகிய நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். இது தமிழன் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் விழா, தன்மான உரிமைத் திருவிழா என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்” என்று மானமிகு முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழக மக்களை... தவறு... திராவிட மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

உண்மையில், “மலையாளியான டாக்டர் டி.எம். நாயர், தமிழ்நாட்டுத் தெலுங்கரான சர். பி.டி. தியாகராச செட்டியார் ஆகிய இரு பேரறிஞர்களின் கூட்டு முயற்சியால்தான் இந்தப் புதிய கட்சி ஆரம்பிக்கப் பெற்றது. 1920 இல் முதன்முதலாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒற்றைக் கட்சியாகத் தேர்தலில் புகுந்து பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. ஏ. சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராகவும் பனகல் அரசர் பி. இராமராய நிங்கார், கே. வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய இருவரும் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்த அமைச்சரவையில் தமிழர் ஒருவர் கூட இடம் பெறவில்லை. முதல்வரான ஏழே திங்களில் சுப்புராயலு ரெட்டியார் நோய் காரணமாகப் பதவி விலகியதால் இரண்டாவது அமைச்சரான பனகல் அரசர் முதல் மந்திரியானார். இதனால் காலியான ஓர் இடத்திற்கு ஆந்திரரான ஏ.பி. பாத்ரோ நியமிக்கப் பெற்றார். தொடர்ந்து தமிழர் புறக்கணிக்கப்பட்டனர். 1923 இல் நடந்த சட்ட மன்றத்தேர்தலில் மீண்டும் பனகல் அரசரே முதல் அமைச்சரானார். டி.என். சிவஞானம் பிள்ளை என்ற ஓய்வு பெற்ற அதிகாரி அமைச்சரானார்.

1916 இல் ஜஸ்டிஸ் கட்சி தோன்றியதிலிருந்து 1936 இல் அந்தக் கட்சியின் ஆட்சி அஸ்தமித்தது வரையுள்ள 17 ஆண்டுக் காலத்திலே சுத்தத் தமிழர் எவரும் அந்தக் கட்சியின் தலைவர் பீடத்தில் ஏறியதில்லை. அது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அதன் தலைமை ஆந்திரரிடமே இருந்தது. பிராமணர் ஆதிக்கத்திலிருந்து பிராமணரல்லாத்தாரைக் காப்பதற்குப் பிறந்த ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியிலே அரிசனர் எவரும் அமைச்சராக்கப்படவில்லையென்பதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும். இத்தனைக்கும் இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, வி.ஐ. முனுசாமிப்பிள்ளை, தர்மலிங்கம் பிள்ளை, என். சிவராஜ் ஆகிய பட்டதாரிகளான அரிசனத் தலைவர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் முன்னணியில் இருந்தனர். ஆனால் அப்படி ஒரு நீதியை அரிசன மக்களுக்கு வழங்கவில்லை நீதிக் கட்சி. பிராமணர் ஆதிக்கத்தை அழிக்கப் பிறந்த நீதிக் கட்சியின் ஆதரவோடு என். ஆர். சேதுரத்தினம் ஐயர் கூட அமைச்சராக முடிந்தது. ஓர் அரிசனருக்கு அந்தப் பேறு கிடைக்கவில்லை”.

(தமிழகத்தில் பிற மொழியினர் - பக்கம் 31-32, 35)

கருணாநிதி சொல்லும் நடேசனார் ஒரு தெலுங்கு முதலியார். ஆனால், அவர் தெலுங்கர் என்பதை வெளிக்காட்டாமல் தமிழர் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தும் இவ்வறிக்கையை நரித்தனத்துடன் வெளியிட்டுள்ளார் கருணாநிதி. தெலுங்கர்களால் தொடங்கப்பட்டது ஜஸ்டிஸ் கட்சி. அக்கட்சி ஆட்சியில் இருந்தவரை சென்னை மாகாணம் தெலுங்கு முதல்வர்களாலேயே ஆளப்பட்டது. ஏ. சுப்பராயலு ரெட்டி, பனகல் அரசர்(ராஜா பனங்கன்டி ராமராயநிங்கார்), பி. முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர் (ராஜா ராமகிருஷ்ண ரங்காராவ்), சர். கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய தெலுங்கர்களே ஆண்டனர். ஆந்திரம் பிரிந்து போன பிறகுதான் காமராசர் முதல்வர் பதவிக்கு வர முடிந்தது என்பதை மறக்கக் கூடாது. பிராமணர், பிராமணரல்லாதார் என்ற சாதிப் பிரிவினைப் போராட்டத்தில் தமிழர் என்ற மொழிவழி இன உணர்வு மங்கி இன்று மறைந்தே போய்க்கொண்டிருப்பதை இப்போதாவது நாம் உணர வேண்டும். இப்படிச் சொல்வதனால், சாதிவழி ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்வதாகப் பொருளில்லை. சாதீய ஏற்றத்தாழ்வுகளைக் களையும் நம் முயற்சியில் மொழி, இன உணர்வை இழந்து, தெலுங்கர் உள்ளே புக இடம் கொடுத்து விட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று வரையிலும் தமிழகத்தில் தமிழரால் தொடங்கப்படும் கட்சிகள் சாதீய அடையாளத்துடன் பார்க்கப்படுவதையும் தெலுங்கர்களால் 'திராவிட' என்னும் அடைமொழியுடன் தொடங்கப்படும் கட்சிகள் “பொதுவான கட்சிகளாகப்” பார்க்கப்படுவதையும் கவனத்தில் கொள்வது நல்லது.

தமிழ்நாட்டில் அரசியல் செய்து பிழைப்பு நடத்தும் தெலுங்கர்கள் தலைமைப்பதவியை நோக்கி நகர்வதை எல்லாக் கட்சிகளிலும் பேதமின்றிப் பார்க்க முடியும். தமிழ்த் தேசிய அடையாளத்துடன் இயங்கும் அமைப்புகளிலும் தெலுங்கர்கள் ஊடுருவி, தலைமைப் பதவியில் இருப்பதைப் பார்க்கும்போது தமிழரின் அறிவைப் பற்றி அவர்கள் 'தமிழர் தந்தை' என்று போற்றும் ஈ.வெ. ராமசாமி சொன்னது சரிதானோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இன்று வரையிலும் பொருளாதாரம், ஊடகம், அரசியல் என மாநிலத்தை நிர்ணயிக்கும் அனைத்துத் துறைகளும் பெரும்பாலும் அவர்கள் கையிலேயே உள்ளது. வடநாட்டினரை ஏன் கணக்கில் கொள்ளவில்லை என்ற கேள்வி எழலாம். நம் பொருளாதாரத்தை அவர்களும் சேர்ந்துதான் சுரண்டுகிறார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் அதிகாரம், பதவிகளில் இருப்பவர் யார் என்பதை மனச்சாட்சியுடன் சிந்தியுங்கள்.

"தெலுங்கருக்குத் தெலுங்கு பாஷையில் பிறந்திருக்கும் உண்மையான அபிமானம் தமிழருக்குத் தமிழினிடமில்லை" (பாரதி தமிழ் பக்: 273 -274) என்று பாரதியும் சுதேசமித்திரனில் அப்போதே இடித்துரைத்திருக்கிறார். அன்று முதல் இன்று வரையிலும் இந்த நிலையில் மாற்றம் இல்லை. தமிழ்நாட்டில் தமிழுக்கு ஏற்றம் இல்லையென்பதே கசப்பான உண்மை. ஓர் அயலானுக்குக் கூட இடம் கொடுக்கும் தமிழன், மற்றொரு தமிழன் அங்கே அமர்வதைச் சகிப்பதில்லை. தமிழர் இப்படித் தமக்குள் ஏற்றத்தாழ்வு கொண்டு இருப்பதாலேயே நாம் இன்று வரையிலும் திராவிடக் கட்சிகளால் ஆளப்பட்டு வருகிறோம். நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான் வரைக்கும் இது பொருந்தும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில், விருந்தோம்பும் பண்பில் சிறந்த தமிழர், உகாதி மற்றும் ஓணம் பண்டிகைகளுக்கு விடுமுறை விட்டு மிகச் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆந்திர முதல்வர் இராஜசேகர ரெட்டி விமான விபத்தில் அகால மரணமடைந்தபோது அரசு விடுமுறை கொடுத்து அஞ்சலி செலுத்தினோம். சென்னையை ஆந்திரத்தோடு சேர்க்க வேண்டுமென்று போராடிய பிரகாசம் பந்துலுவுக்கு சென்னை பாரிமுனையில் சிலையும், தெருவின் பெயரும், உண்ணாவிரதமிருந்த பொட்டி ஸ்ரீராமுலுவிற்கும் மயிலையில் சிலையும், சென்னையை ஆந்திரத்தோடு சேர்க்க வேண்டுமென்று மாநகராட்சியில் போராடிய பிட்டி தியாகராசருக்கு அங்கேயே சிலை, தெருவின் பெயர், சென்னையின் இதயப்பகுதிக்கும் அங்கே உள்ள அரசு கலையரங்கத்திற்கும் அவர் பெயரை வைத்து மரியாதை செலுத்தியிருக்கிறோம். இவ்வளவும் போதாதென்று இந்த அவமான வரலாற்றிற்கு நூற்றாண்டு விழாவும் கொண்டாட வேண்டுமென்று கூறுகிறார் கருணாநிதி.

நன்றி :  தடாகம்.காம் - maraththa milar senai - maraththami zhar senai

Saturday, 25 February 2012

துப்பாக்கியல்ல தீர்வு! - maraththamila r senai

                      அன்மையில் நடந்தேறிய இரண்டு வங்கிக் கொள்ளைகள் எந்த அளவுக்கு அதிர்ச்சியை அளித்ததோ அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது, நள்ளிரவில் நடந்த காவல்துறையின் அதிரடி நடவடிக்கை. 

                             கொள்ளைக்காரர்களைக் காவல்துறையினர் பிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்தியிருந்தால் அதைத் தமிழக காவல்துறையின் திறமை, சாதனை என்று போற்றிப் பாராட்டலாம். எந்தவித வலுவான ஆதாரங்களோ சாட்சியங்களோ இல்லாமல், ஐந்து பேரைக் குற்றவாளிகள் என்று காவல்துறையே தீர்மானித்து அவர்களைச் சுட்டும் கொன்றுவிட்டிருப்பதை, கடமையைச் செய்திருக்கிறது காவல்துறை என்று அங்கீகரிக்க முடியவில்லை. 


                              வழக்கமாக எல்லா என்கவுன்டர் மரணங்களிலும் நடப்பதுபோல, காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்குத் துப்பாக்கித் தோட்டாக்கள் உராய்ந்து காயம் ஏற்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் என்று கருதப்படுபவர்கள் மட்டும் மரணமடைந்திருக்கிறார்கள். கதவை உடைத்ததற்கான அடையாளமோ கொலையுண்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் பெரிய அளவிலான போராட்டம் நடந்ததற்கான அடையாளமோ இல்லை என்பது ஒருபுறம் இருக்க, காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்ட நபர்கள் அவர்களே அல்ல என்று தேசியக் காட்சி ஊடகங்கள் வெளிச்சம் போட்டு வேறு காட்டுகின்றன.  

                                 வங்கிக் கொள்ளையும், அதில் தொடர்புள்ள குற்றவாளிகளைப் பிடிப்பதும் அல்ல பிரச்னை. குற்றவாளிகள் என்று சந்தேகிக்கும் நபர்களை அதற்குப் போதுமான ஆதாரமோ, சாட்சியமோ இல்லாமல், அவர்களிடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் தண்டிக்கும் உரிமை காவல்துறைக்கு உண்டா இல்லையா என்பதுதான் இந்த என்கவுன்டர் சம்பவம் எழுப்பும் மிக முக்கியமான கேள்வி.

                                       குற்றவாளிகள் என்று கருதப்படும் ஐந்து பேரில் ஒருவரையாவது உயிருடன் பிடித்து நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி இருந்தால், காவல்துறை தற்காப்புக்காகத்தான் துப்பாக்கிச் சூட்டில் இறங்கியது என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியும். இப்போது, நம்முன் ஓடுகின்ற கேள்வி, அந்த ஐந்து பேரில் ஒருவர் அல்லது இருவர் இந்தக் கொள்ளையில் தொடர்பே இல்லாதவராக இருந்திருந்தால், விவரம் தெரியாமல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தால், அவரும் கொல்லப்பட்டிருப்பாரே, அது எந்த வகையில் நியாயம் என்பதுதான். 

                                        ""சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு என்று சமூக விரோதக் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் இதுபோல சில அதிகார அத்துமீறல்களை அங்கீகரிப்பதால், சமூக விரோதிகளுக்குப் பயம் இருக்கும்'' என்பது காவல்துறையினரின் வாதமாக இருந்தால் அது ஏற்புடையதல்ல. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கும் துப்பாக்கியைப் பயன்படுத்துவது என்பதை சட்டத்தின் ஆட்சியில் அனுமதிக்க முடியாது.  

                                    தீவிரவாதிகள், தேசத் துரோகிகள், சதித்திட்டத்தில் ஈடுபடுபவர்கள் போன்றவர்களிடத்தில் காவல்துறை கையாளும் அணுகுமுறையை கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரிடம் கையாளக் கூடாது. காவல்துறை என்கவுன்டரைத் தனது ஆயுதமாகப் பயன்படுத்துவது தெரிந்தால் இதுவரை கத்தி, கைத்துப்பாக்கி என்று மட்டுமே செயல்பட்டு வரும் குற்றவாளிகள் இனிமேல் ஏகே 47, வெடிகுண்டு என்று தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்ளத் தொடங்குவார்கள். அப்போது, அவர்களை எதிர்கொள்ளவே முடியாத நிலைக்குப் பழைய ரைபிள்களை வைத்துக் கொண்டிருக்கும் காவல்துறை தள்ளப்படுமே, அதை யோசித்துப் பார்த்தார்களா?

                                            காவல்துறை சட்ட-ஒழுங்கை நிலைநாட்டவும் சமூக விரோதிகளை ஒடுக்கவும் பல இடையூறுகளை எதிர்கொள்ள நேர்கிறது என்பது உண்மை. சமூக விரோதிகளில் பெரும்பாலோருக்கு அரசியல் ஆதரவு இருக்கிறது என்பதும் உண்மை. முறையாக விசாரணை நடத்திக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தினால், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர் என்கிற காவல்துறையினரின் ஆதங்கத்திலும் நியாயம் இருக்கிறது. அதற்காக, நீதி பரிபாலனத்தைக் காவல்துறையே எடுத்துக் கொள்வதா என்ன? 

                                      குற்றவியல் சட்டத்தின் அடிப்படைத் தத்துவமே, நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும்கூடத் தவறில்லை. ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதானே தவிர, நூறு நிரபராதிகள் ஒரு குற்றவாளியைத் தண்டிப்பதற்காகக் கொலை செய்யப்படலாம் என்று சொல்லவில்லை. சட்டத்தை மக்கள் எப்படிக் கையில் எடுத்துக்கொள்ள முடியாதோ அதேபோலக் காவல்துறையும் நீதிபரிபாலனத்தை, இன்னார் குற்றவாளி, இன்னார் நிரபராதி என்று தீர்ப்பளித்து அவர்களுக்குத் தண்டனை பிறப்பிப்பதைத் தனது கையில் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது. 

                                                சமூக விரோதிகளை அடக்குவதற்கும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் காவல்துறை அத்துமீறுவதை அனுமதிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் அதன் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பேசுகிறார்கள். யார் குற்றவாளி, யார் நிரபராதி என்பதைக் காவல்துறை தீர்மானித்துத் தீர்ப்பளிக்க அனுமதித்துவிட்டால், ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அந்தத் துறை செயல்பட்டு எதிர்ப்பாளர்கள் அனைவரையும் வாயடைக்கச் செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தட்டிக் கேட்கவோ, விமர்சனம் செய்யவோ, உரிமையே இல்லாத ஒரு சூழலுக்கு இதுபோன்ற செயல்கள் நம்மை நகர்த்திவிடக் கூடும்.  

                           முதல்வரின் பிறந்த நாள் பரிசாகக் குற்றவாளிகளை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதிலாக, ஐந்து பேரை விசாரணையே இல்லாமல் சுட்டுத் தள்ளி சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்ததாகக் கூறிக்கொள்ளும் சென்னை மாநகரக் காவல்துறை ஆட்சிக்கும் காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை. 

                                      குற்றவாளிகள் என்று கருதுவோரை காவல்துறை எந்தவித விசாரணையும் இல்லாமல் குருவி சுடுவதுபோல சுட்டுத் தள்ளுவது அல்ல, பெருகிவரும் குற்றங்களைத் தடுப்பதற்கான தீர்வு. காக்கிகளின் கையில் லத்தி இருப்பதையே மனித உரிமை மீறல் என்று சர்வதேச மனித உரிமை ஆணையம் கூறும்போது, காவல்துறையினர் துப்பாக்கித் தீர்ப்பு வழங்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

Thursday, 23 February 2012

வங்கி கொள்ளையர் 5 பேர் சுட்டுக்கொலை

சென்னையை கலக்கிய வங்கி கொள்ளையர்கள் சென்னை வேளச்சேரி அருகில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொள்ளையர்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கொள்ளையர்கள் பதிலுக்கு தாக்கியதில் 2 காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 2 போலீசாரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த போலீசாரை பார்த்து ஆணையர் திரிபாதி ஆறுதல் கூறினார்.



கமிஷனர் விளக்கம்...

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 5 பேரும் வெளிமாநிலத்தவர்கள் என்று காவல் துறை ஆணையர் திரிபாதி தெரிவித்துள்ளார். ரகசிய தகவலின் பேரில் வேளச்சேரியில் நள்ளிரவில் கொள்ளையர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். வீட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையரை வெளியே வருமாறு போலீசார் எச்சரித்தனர். ஜன்னல் வழியே போலீசாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பொதுமக்களை தாக்கப்போவதாகவும் கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர். கொள்ளையர்கள் தாக்குதலில் 2 பேருக்கு குண்டடிப்பட்டதால் போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். 1 மணி நேரம் நீடித்த இந்த என்கவுண்டரில் 5 பேரும் வீழ்த்தப்பட்டதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்.

வடமாநில கொள்ளையர்கள்...

போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 5 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. வங்கி கொள்ளை தொடர்பான போலீஸ் வீடியோவில் இருந்தவர் கும்பலின் தலைவன் என்றும் வீடியோவில் இருந்த நபர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரி முன்னாள் மாணவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. என்கவுண்டர் நடந்த வீட்டிலிருந்து கட்டுகட்டாக பணம் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கொள்ளையர்களின் கூட்டாளிகள் பற்றி போலீசார்
தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்குகள் என்ன...

கொல்லப்பட்டோர் ஒரே மாத இடைவெளியில் 2 வங்கிகளில் கைவரிசையை நிகழ்த்தியுள்ளனர். முதல் கொள்ளை பெருங்குடி பரோடா வங்கியில் ஜனவரி 23ம் தேதி நடந்தது. வங்கி ஊழியர்களை மிரட்டி 20 லட்ச ரூபாயை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றனர். இதனையடுத்து, கடந்த திங்களன்று சென்னை கீழ்க்கட்டளை ஐ.ஓ.பி.வங்கியில் 2 வது கொள்ளை சம்பவம் நடந்தது. கீழ்க்கட்டளை வங்கியிலும் கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டினர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.14 லட்சத்தை சுருட்டி கொள்ளையர்கள் கைவரிசை நிகழ்த்தினர். கொள்ளையர்களை பிடிக்க சுமார் 45 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

எஸ்.ஆர்.எம் கல்லூரியில் விசாரணை...

கொள்ளை கும்பல் தலைவன் சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவன் என்பதும் தெரியவந்துள்ளது. கொள்ளை கும்பல் தலைவனின் மற்ற கூட்டாளி பற்றி அறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் மாணவர் சிலரை விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். கும்பலின் தலைவன் தங்கள் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் மாணவன் என்பதால் மாணவர்கள் பீதியடைந்துள்ளனர். கொள்ளையர்கள் பற்றி அறிய எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் நிர்வாகிகளையும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எல்லாமே 23ம் தேதி..

சென்னை பெருங்குடி பரோடா வங்கியில் ஜனவரி 23ம் தேதி கொள்ளை நடந்தது. அதே போல் கொள்ளையர்கள் 5 பேரும் பிப்ரவரி 23ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய என்கவுண்டர்...

தமிழ்நாட்டில் என்கவுண்டரில் ஒரே நேரத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்படுவது இதுவே முதல் முறையாகும். தமிழ்நாடு போலீஸ் இதற்கு முன் 2002ல் பெங்களூரில் 5 பேரை கொன்றது. பெங்களூரில் தீவிரவாதி இமாம் அலி உட்பட 5 பேர் 2002ல் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நடந்துள்ள மிகப்பெரிய என்கவுண்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2010ல் திண்டுக்கல் பாண்டி உட்பட 2 பேர் நீலாங்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


அடையாளம் தெரிந்தது...

சுட்டுக்கொல்லப்பட்ட 5 பேர் யார் யார் என்ற அடையாளம் தெரியவந்துள்ளது. வினோத் குமார், வினய் பிரசாத், ஹரீஷ் குமார், அபே குமார் ஆகியோர் பீகாரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஐந்தாவது நபரான சரிகரே மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

14 லட்சம் பறிமுதல்

என்கவுண்டர் நடந்த வீட்டில் இருந்து 14 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் பயன்படுத்திய 7 துப்பாக்கிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். எஞ்சிய பணத்தை கைப்பற்ற தேவைப்படின் எஸ்.ஆர்.எம் கல்லூரி விடுதிகளில் சோதனை நடத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளையர்களின் கூட்டாளி வேறு யாரேனும் உள்ளனரா என தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. கொள்ளையரின் டைரியில் உள்ள முகவரியிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வேறு யாருக்காவது பணத்தை பங்கிட்டு கொடுத்தார்களா அல்லது கொள்ளையிட்ட பணத்தை உல்லாசமாக செலவிட்டார்களா என்றும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


என்கவுண்டர் நடந்தது எப்படி?

வங்கி கொள்ளையர் சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ரகசிய தகவலின் பேரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை போலீசார் சுற்றி வளைத்தனர். வீட்டுக்குள் இருந்த கொள்ளையர்களை வெளியே வருமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் போலிசாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால்  சண்டை மூண்டது. பொதுமக்களை தாக்கபோவதாகவும் கொள்ளையர் மிரட்டியதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். கொள்ளையர் சுட்டதில் ஆய்வாளர் 2 பேருக்கு குண்டடிப்பட்டதால் போலீசார் பதிலடி கொடுத்தனர். ஒரு மணிநேரம் நீடித்த இந்த சண்டையில் கொள்ளையர்கள் 5 பேரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

வீடு எடுத்தது எப்படி

கொள்ளையர்கள் 3 மாதங்களாக வேளச்சேரியில் வீடு எடுத்து தங்கியிருந்தனர். கொள்ளையரின் வீடு ஏ.எல்.முதலி தெருவில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பாகும்.  3 மாடிகள் கொண்ட குடியிருப்பின் தரை தளத்தில் கொள்ளையர்கள் குடியிருந்தனர். ரூ.20,000 அட்வான்ஸ், ரூ.5,000 வாடகை கொடுத்து டிசம்பரில் குடிபுகுந்தனர். கொள்ளையர்கள் 5 பேரும் கல்லூரி மாணவர்கள் என வேளச்சேரி மக்களிடம் கூறி வந்தனர். கொள்ளையர்களுக்கு வீடு கொடுத்தவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.


தகவல் தந்தது யார்?

போலீசார் வெளியிட்ட சி.சி.டி.வி உருவத்தை பார்த்து கொள்ளையர்கள் அடையாளம் தெரியவந்தனர்.  சந்தேகத்தின் பேரில் ஒருவர் காவல்துறை உயர் அதிகாரிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரித்ததில் கொள்ளையர்கள் பற்றி வந்த தகவல்கள்  உண்மை என உறுதியானது.

ஆயுதம் வந்தது எப்படி ?

பீகாரை சேர்ந்த 4 பேரும் தமது மாநிலத்தில் கள்ளத்துப்பாக்கியை வாங்கி வந்தனர். வங்கி அதிகாரியை மிரட்ட பயன்படுத்திய துப்பாக்கி மூலம் போலீசாரை சுட்டனர்.துப்பாக்கி குண்டுகளும் பீகாரில் இருந்து வாங்கிவரப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


காயமடைந்த போலீஸ்...

குண்டடிப்பட்ட ஆய்வாளர்கள் 2 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆய்வாளார்கள் கிறிஸ்டியன் ஜெயசீலி (துரைப்பாக்கம்), ரவி (தேனாம்பேட்டை) ஆகியோர் காயமடைந்துள்ளனர். கொள்ளையர்கள் சுட்டதில் ஜெயசீலிக்கு இடது கையிலும், ரவிக்கு இடுப்பிலும் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக நிபுணர் குழுவினர் மக்களுக்கு எதிராக அறிக்கை அளித்தால் அணுமின் நிலையம் முற்றுகை: கூடங்குளம் போராட்டக்குழு அறிவிப்பு

ராதாபுரம், பிப்.23-
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் கடலோரத்தில் அமைக்கப்பட்டு உள்ள அணுமின் நிலையத்தை மூடக்கோரி அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவினர், போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட நிபுணர் குழுவினரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்து, போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் திருப்திகரமாக உள்ளதாக தமிழக குழுவினர் அறிவித்தனர்.
இந்த நிலையில், போராட்டக்குழு சார்பில் 72 மணி நேர உண்ணாவிரதம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. உண்ணாவிரத பந்தலில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசியதாவது:-
போராடும் மக்கள் சார்பில் தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவிடம் 2 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. போராடும் மக்களை சந்திக்காமலும், போராட்டக்குழுவினர் சார்பில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவை சந்திக்காமலும் தமிழக குழுவினர் சென்னை சென்றதன் மூலம் நமது 2 கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை.
தமிழக குழுவினர் மீண்டும் கூடங்குளம் வந்து போராடும் மக்களை சந்திக்க வேண்டும் என்று கோரி இந்த 72 மணி நேர உண்ணாவிரதத்தை நடத்தி வருகிறோம். நிபுணர் குழுவினர் தமிழக அரசிடம் அளிக்கும் அறிக்கையில், கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என்று கூறப்பட்டு இருந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கையை கொளுத்துவோம்.
நமது கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளேன். சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசிடம், கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், மக்களை திரட்டி அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டு போராடுவோம்.
இவ்வாறு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசினார்.
கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் நடத்தும் 72 மணி நேர உண்ணாவிரதம் இன்று (வியாழக்கிழமை) இரவில் முடிவுக்கு வருகிறது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மீனவர்கள் யாரும் நேற்றும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கூடங்குளத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Sunday, 5 February 2012

பரமக்குடி துப்பாக்கி சூடு மறத்தமிழர் சேனை கூட்டுசதி மருதமலர் குற்றச்சாட்டு

பரமக்குடி துப்பாக்கி சூடு குறித்து தாழ்த்தப்பட்டவர்களின் சார்பில் வெளிவரும்  மருதமலர் என்கிற இதழ், தனது 2011 - டிசம்பர் மாத பதிப்பில் பக்கம் 27 ல்   மறத்தமிழர் சேனையின் கூட்டுசதியால்தான் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது என குற்றம்சாட்டியுள்ளது. 

                         அதன் பிரதி 


சங்கரன்கோவில் - மறத்தமிழர் சேனை - தமிழக அரசியல்

"சங்கரன்கோவில் தொகுதியை பொதுத்தொகுதி ஆக்கு!" சர்ச்சையைக் கிளப்பும்   மறத்தமிழர் சேனை 
             என்கிற தலைப்பில்  தமிழக அரசியல் பத்திரிகையில் 28.01.2012 அன்று, பக்கம்  28 & 29 வெளியான செய்தி. 



Saturday, 4 February 2012

ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு - maraththamil ar senai

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. சிதம்பரம் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை 65 பக்கங்கள் கொண்‌டதாக இந்த தீர்ப்பின் அமைந்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கி‌ய முற்போக்கு கூட்டணி அரசு நிம்மதி அடைந்திருக்கிறது .




                             இதற்கென சு. சாமி இன்று காலை கோர்ட்டுக்கு முதல் ஆளாக வந்தார். பின்னர் கோர்ட்டுக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய சு.சாமி., கூறுகையில்: மதியம் 12.15 க்கு தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி ‌தெரிவித்தார். என்வே நான் இன்னும் சிறிது நேரத்தில் போய் வருகிறேன். சிதம்பரத்திற்கு எதிராக நிச்சயம் தீர்ப்பு வரும். இந்த தீர்ப்பு ஊழலுக்கு எதிராக கிடைத்த வெற்றியாக இருக்கும் என்றார். சிதம்பரம் அரசியல் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப்போகும் தீர்ப்பு என்பதால், அரசியல் வட்டாரங்கள் உச்சகட்ட பரபரப்பில் இருந்தன. ஆனால் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் சிதம்பரம் உள்பட அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

                                              .கோர்ட்டுக்குள் சு. சாமிக்கு மட்டும் அனுமதி: இன்றை தீர்ப்பு விவரம் அறிவிக்கப்படும் போது கோர்ட் அறைக்குள் சு. சாமி மட்டும் அனுமதிக்கப்பட்டார். ஏனையோர் அனைவரும் கோர்ட்டுக்கு வெளியே இருந்தனர். கோர்ட் வளாகம் சுற்றிலும் நிருபர்கள், அரசியல்வாதிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் சு. சாமி கோர்ட் வளாகத்திற்கு மாற்று வழியில் சென்றார்.  

                                                சு. சாமி அதிர்ச்சி பேட்டி : இந்த மனு தள்ளுபடியானதை அடுத்து கோர்ட்டுக்கு வெளியே வந்த சு.சாமியை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகள் கேட்டனர். இப்போது அவர் இந்த உத்தரவு எனக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் தருகிறது. நான் ஆனால் இன்னும் பின்வாங்க மாட்டேன் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்றார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், ராஜாவோடு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி கடந்த செப்டம்பரில், சி.பி.ஐ., கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ., கோர்ட்டில் சாமி ஆஜராகி சாட்சியம் அளித்தார். தவிர, தன் கோரிக்கைக்கு ஆதாரமாக, பல முக்கிய ஆவணங்களையும் நீதிபதி ஷைனி முன் சமர்ப்பித்தார்.சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜரானபோது, சுப்ரமணியசாமி முன்வைத்தகுற்றச்சாட்டுகள்: ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா மீது இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள் உள்ளன. முதலாவது, 2008ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரத்திற்கு 2001ம் ஆண்டு விலையை நிர்ணயம் செய்தது. இரண்டாவது, ஸ்வான், மற்றும் யூனிடெக் கம்பெனிகளின் பங்குகளை வெளிநாட்டு கம்பெனிகளான எடிசாலட் மற்றும் டெலினார் கம்பெனிகளுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கியது. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளிலும் அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு பங்கு இருக்கிறது. ஏனென்றால், ஸ்பெக்ட்ரத்திற்கு விலை நிர்ணயம் தொடர்பான முடிவுகளை, நிதி அமைச்சரும், தொலைத் தொடர்பு அமைச்சரும் இணைந்து தான் எடுக்கவேண்டும் என்று, 2003ம் ஆண்டு அமைச்சரவை தீர்மானம் கூறுகிறது.  

                                         ராஜாவுக்கு யோசனை :அதன்படி நிதி அமைச்சர் சிதம்பரமும், தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவும், 2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் தொடர்பாக மூன்று முறை சந்தித்துப் பேசியுள்ளனர். அதேபோல், கடந்த 2008ம் ஆண்டு ஜூலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த, இந்த இரண்டு அமைச்சர்களும் தாங்கள் எடுத்த முடிவு பற்றி தெரிவித்துள்ளனர். மேலும், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற எந்த நிறுவனமும், மூன்று ஆண்டுகளுக்குள் தங்கள் லைசென்சை விற்பனை செய்யக்கூடாது என்பது சட்டம். ஆனால், "2ஜி' லைசென்சைத்தான் விற்கக் கூடாது. பங்குகள் மூலம் கம்பெனியை விற்பனை செய்யலாம் என்ற யோசனையை ராஜாவிடம், சிதம்பரம் தெரிவித்திருக்கிறார் என்றார்.அத்துடன் கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதியிட்ட நிதி அமைச்சகத்தின் ஆவணத்தையும், கோர்ட்டில் சாமி ஒப்படைத்தார். இந்த ஆவணத்தில்தான், "சிதம்பரம் வலியுறுத்தியிருந்தால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏலமுறையை கடைபிடித்திருக்கலாம்' என,
குறிப்பிடப்பட்டிருந்தது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு:ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில், நேற்று முன்தினம் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 2008 ஜனவரி மாதத்தில் இருந்து, தொலைத் தொடர்பு அமைச்சகம் வழங்கிய 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ரத்து செய்ததோடு, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டுமா என்பதை சி.பி.ஐ., கோர்ட்டே முடிவு செய்யும் என, குறிப்பிட்டிருந்தது.இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் இன்று அறிவித்தது.

சிதம்பரம் தப்பியதால் காங்., மகிழ்ச்சி: இன்றைய சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வெளியான பின்னர் காங்., செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி நிருபர்களிடம் கூறுகையில்: சிதம்பரம் மீது குற்றம் இல்லை என்பது மகிழ்ச்சி தருகிறது. விசாரணை கோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் இதனை உறுதி செய்துள்ளது. அரசியல் லாபத்திற்காக அரவ் மீது அவதூறாக குற்றம் சாட்டிய எதிர்கட்சிகள் குறிப்பாக பா.ஜ., இந்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். மத்திய அமைச்சர் கபில்சிபல் கருத்து தெரிவிக்கையில் இந்த தீர்ப்பு இப்படித்தான் வரும் என்பது எனக்கு தெரியும் இதனால் எவ்வித ஆச்சரியமும் இல்லை. பா.ஜ.,வுக்குத்தான் அதிர்ச்சியாக இருக்கும் என்றார்.

பா.ஜ., செய்தி தொடர்பாளர் இது குறித்து கூறுகையில்: போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. இன்னும் மேல்முறையீடு வரை செல்ல வழி இருக்கிறது. இன்றைய தீர்ப்பு மத்திய அரசு மீதான ஊழல் கறையை போக்கிடாது என்றார்.