★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Friday, 27 April 2012

இந்தியக் குழுவின் சுற்றுலாப் பயணம் வெறும் கண்துடைப்பு நாடகம்

அனலை நிதிஸ் ச. குமாரன்

சிறிலங்காவிற்கு பயணத்தை மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் மகிந்தாவின் அமைச்சர்களையும் சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளையும் கேட்டுத்தான் மூச்சுக்கூட விடுகிறார்கள். ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்கள்.
இந்தியக் குழுவினர் அழைத்துச் செல்லப்பட்ட அனைத்து இடங்களும் இதற்காகவே முன்னரே தயார் செய்யப்பட்டவை. என்ன பேச வேண்டும் என்கிற பாடம் எடுத்த பின்னரே தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் மட்டுமே இந்தியக் குழுவினருடன் சந்திக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

மனித உரிமை அமைப்புக்களையோ அல்லது சர்வதேச பத்திரிகையாளர்களையோ தமிழர் பகுதிகள் சென்று செய்தி திரட்ட அனுமதி மறுக்கப்படுகிறது. நடக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் வெளிச்சத்திற்கு கொண்டுவந்து விடுவார்கள் என்கிற அச்சத்தில் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கிறது. இவ்வாறான ஒரு நிலையில், இந்தியக் குழுவினர் சிறிலங்கா சென்றனர்.
இந்தியக் குழுவினருக்கு சொகுசு பயணத்தையே சிறிலங்கா அரசு செய்து கொடுத்தது. இராணுவ வானூர்திகள் மற்றும் குளிரூட்டப்பட்ட சிறிலங்கா அரசின் சிறப்பு சொகுசு பேருந்துகளில் பயணங்களை மேற்கொண்ட குறித்த குழுவினர் சிறிலங்கா அரசின் நேரடி கண்காணிப்பிலேயே இருந்தார்கள். தவறிக்கூட பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பார்த்துவிடக் கூடாதென்கிற கோட்பாட்டில் சிங்கள அரசு இருந்தது.
மகிந்தாவின் நேரடி கட்டளையின்படி, அவருடைய சகோதரர் பசில் மற்றும் அமைச்சர்கள் டக்ளஸ், கருணா போன்றவர்களின் நேரடிக் காண்காணிப்பில் பயணங்களை மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவினர் குறித்த நபர்களை புகழ்பாடிக் கொண்டே தமது பயணத்தை தொடர்ந்தனர்.தாம் தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டுமென்கிற கோரிக்கையை முன்வைத்ததாக இந்தியா திரும்பியதும் தெரிவித்தார்கள் குறித்த குழுவினர்.இக் குழுவினர் தெரிவித்த கருத்து வெளிவந்த மறுதினமே ஒருபோதும் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என்றும் அப்படியானதொரு வாக்குறுதியை இந்தியக் குழுவினருக்கு தாம் வழங்கவில்லையென சிறிலங்கா அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்
ஈழத் தமிழர்களின் நிலைமைகளை பார்க்கப் போவதாக அறிவித்த குறித்த அனைத்துக் கட்சி குழு என்பது ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சினையை அறியாதவர்களே.இந்தியாவின் இரு பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிகள் ஒருபோதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை 1980-களின் பிற்காலத்திலிருந்து இதுநாள் வரை எடுத்ததில்லை. தி.மு.காவும்,அ.தி.முகாவுமே 1967-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மாறிமாறி தமிழகத்தை ஆண்டு வருகிறார்கள்.இரு பிரதான வட இந்தியக் கட்சிகளும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதை விட சிறிலங்காவுடன் இராஜதந்திர உறவை பேணுவதே இந்தியாவிற்கு சிறந்தது என்று கருதுகின்றன.
குறித்த குழுவின் உறுப்பினர்கள் இரு பிரதான வட இந்தியக் கட்சிகளின் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டவர்கள். தமது கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ அதனையே வெளியில் கூற வேண்டும் என்கிற கட்டுப்பாடு இக் குழுவின் உறுப்பினர்களுக்கு இருக்கிறது.நாச்சியப்பன் போன்ற தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நாடாளுமன்றம் சென்றவர்கள் தாம் தமிழர் என்பதனைவிட தாம் சோனியாவின் அடிவருடிகள் என்பதனைக் கூறவே விரும்புகிறவர்கள்.சோனியா கொடுக்கும் பதவிகளுக்காக வால் பிடிக்கும் நாச்சியப்பன் போன்ற தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் தமது தலைமை சொல்வதையே வெளியில் கூற வேண்டும்.
தமிழீழமே தமது இறுதி இலட்சியம் என்று கூறி ஆயுதமேந்திய டக்ளஸ் போன்றவர்கள் தமிழர்களுக்கு பல இன்னல்களை செய்தார்கள். இவர்கள் போன்ற எட்டப்பர்களினால் தான் தமிழீழ தனியரசு மலராது இன்றும் பல இன்னல்களைச் சந்திக்கிறது. பதவி மோகத்தினால் கவரப்பட்ட டக்ளஸ் போன்றவர்கள் தொடர்ந்தும் தாமே தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறுவது வெட்கக்கேடானது.
தமிழகத்தின் சூளைமேட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்கிற இளைஞர்1986-ஆம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக டக்ளஸ் தேவானாந்தா மீது சூளைமேடு போலீசார் 1987-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.அதன் பிறகு டக்ளஸ் இந்தியாவிலிருந்து தப்பி சிறிலங்கா சென்று விட்டார். டக்ளஸை தேடப்படும் குற்றவாளியென1994-ஆம் ஆண்டில் சென்னை கூடுதல் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அன்றிலிருந்து இன்றுவரை பல தடவைகள் இந்தியா சென்று அரச தலைவர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்தவரே டக்ளஸ்.
இந்தியக் குழுவில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் இந்தியாவின் குடிமகனைக் கொன்ற ஒரு குற்றவாளியைப் பார்த்து ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைத்தார். ஒவ்வொரு வெளிநாட்டு பிரதிநிதிகள் யாழ் வந்தாலும் அவர்களை யாழ் மத்திய கல்லூரிக்கு அழைத்துச் செல்லாமல் வழியனுப்பி வைக்க மாட்டார் டக்ளஸ். தான் இக்கல்லூரியில் படித்த காரணத்தினாலும் மற்றும் தனது விசுவாசிகள் பலர் இக்கல்லூரியில் பணிபுரிவதினாலும் இக்கல்லூரிக்கு அதிக சலுகைகளை வழங்கியே வந்துள்ளார் டக்ளஸ்.
இந்தியக் குழுவினரும் இக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இந்தியக் குழுவினரில் ஒருவரான நாச்சியப்பன் டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைத்ததும் அவர் தன்னையே மறந்து சிரித்துக் கொண்டார். நாச்சியப்பன் போன்றவர்கள் எப்படியெல்லாம் வால் பிடிக்கிறார்கள் எனபதற்கு இச்சம்பவமே சான்று.
பல கோடித் தமிழ் மக்களின் நாயகன் எம்.ஜி.ஆரை டக்ளசுடன் இணைத்துப் பேசிய நாச்சியப்பனுக்கு தமிழகத்தில் அ.தி.மு.காவினர் என்ன விருதை அளிக்கப் போகிறார்கள் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நாச்சியப்பன், டக்ளஸ் போன்ற புல்லுருவிகள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் எங்கேயும் பிழைத்துக் கொள்ளும் வல்லமையுடையவர்கள். எது எப்படியாயினும் தமிழர்களைப் பணயக் கைதிகளாக வைத்து பிழைப்பு நடத்தும் இவர்கள் போன்ற எட்டப்பர்களை புறக்கணிப்பதே ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
இந்தியக் குழுவிற்கு கிடைத்த புகழாரம்
சிறிலங்காவின் அமைச்சர்கள் பலர் இந்தியக் குழுவினரை புகழ்பாடி அறிக்கைகள் விட்டார்கள். சிறிலங்காவிற்கு எதிராக உலக நாடுகளில் வலுத்துவரும் நிலைப்பாடுகளை சரிசெய்ய தேவைப்பட்ட கருவியே குறித்த இந்தியக் குழுவினர். இந்தியருக்கு சிறிலங்காவில் வேலையில்லை என்று கூறி கோஷமிட்ட பல சிங்களக் கட்சிகள் மற்றும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவான சில கட்சிகள் இந்தியக் குழுவினருக்கு எதிராக எதனையும் பேசாமல் தற்போது இருக்கிறார்கள்.இதன் மூலம் சிறிலங்காவின் கபட நாடகம் என்னவென்பதனை இலகுவாக அறியக் கூடியதாக உள்ளது.
இந்தியக் குழுவினரின் பயணத்தின் மூலமாக தமிழர்களுக்கு எவ்விதத்திலும் பயனில்லை. சிறிலங்காவிற்கு நட்சான்றிதல் கொடுக்கவே இந்த வட இந்தியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா சென்றார்கள் என்றால் மிகையாகாது. தி.மு.க.மற்றும் அ.தி.மு.க.உறுப்பினர்கள் பங்கேற்காவிட்டாலும் சிறிலங்கா சென்ற இந்திய நாடாளுமன்றக் குழு மிகவும் சிறப்பாகச் செயற்பட்டதாக சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன சமீபத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு வருட காலத்துக்குள் நாங்கள் பல மக்களை மிகவும் வேகமாக மீளக் குடியமர்த்தியுள்ளோம். தமது கிராமங்களில் குடியேற முடியாமல் மிகவும் சொற்பமானவர்களே இருக்கிறார்கள். யாரையும் நாங்கள் கட்டாயமாக முகாம்களில் தங்கவைக்கவில்லை.பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்பட்ட 4.6 மில்லியன் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட புத்தூர் குட்டிமடம் குளத்தையும் இந்திய குழுவினர் பார்த்திருக்கிறார்கள்.அவை தொடர்பாக அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று அமைச்சர் யாப்பா கூறினார்.
இந்தியக் குழுவினரை சந்தித்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியதாவது, “அரசியல் தீர்வு உட்பட தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளின் தற்போதைய நிலை மற்றும் வடக்கின் உண்மை நிலைவரம் போன்ற விடயங்களை மிகவும் ஆழமாக இந்திய பாராளுமன்ற குழுவிற்கு தெளிவுபடுத்தியுள்ளோம். ஒரு மணித்தியாலம் வரை நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததுடன் இருதரப்பும் மனம்விட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து பரந்தளவில் பேசியுள்ளோம். இந்திய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஒத்துழைப்புகளையும் தேவையான உதவிகளையும் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது."
சம்பந்தன் அவர்களின் பேச்சிலிருந்து ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவை தமிழர் தரப்பினர் புறக்கணிக்கக் கூடாதென்கிற இராஜதந்திர ரீதியிலேயே இவர் பேசியுள்ளார். பாரதிய ஜனதாக் கட்சி தற்போது எதிர்க்கட்சியாக இருக்கிறது.இக் குழுவினால் இந்திய அரசியலில் எவ்வாறான மாறுதல்களை கொண்டு வர முடியும் என்பதே அனைவர் மனங்களிலும் எழும் கேள்வி.
சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஒவ்வொரு வினாடியும் என்ன நடக்கிறது என்பதனை இந்திய அரசிற்கு உளவு சொல்ல பல இந்திய உளவுத்துறையினர் ஈழப் பகுதியில் நிற்கிறார்கள். இந்திய நடுவன் அரசினால் வழங்கப்பட்ட பணிகளைச் செய்வதே கொழும்பில் இருக்கும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வேலை. ஆக, இந்தியக் குழுவினால் மட்டும்தான் உண்மை நிலைமைகளை அறிய முடியும் என்பது பொய் வாதம்.
இந்தியக் குழுவினரை சந்தித்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகையில், “சிறிலங்கா அரசுடனான பேச்சுகள் குறித்து நாம் இந்திய நாடாளுமன்றக் குழுவினருக்கு தெளிவுப்படுத்தினோம்.அத்துடன், இதுவரையில் நடைபெற்று வந்த பேச்சுகள் குறித்தும் விளக்கமளித்தோம். சிறிலங்கா அரசு நேர்மையான நீதியான முறையிலும் பேச்சுக்களில் ஈடுபடவில்லை என்ற விடயத்தையும் இந்தியக் குழுவினரிடம் சுட்டிக்காட்டினோம்.”
அவர் மேலும் தெரிவிக்கையில்இ “சிறிலங்கா அரசு சரியான முறையானதொரு பேச்சுக்கு வரவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பு. அவ்வாறு பேச்சுக்கு வந்து அதில் இணக்கம் ஏற்பட்டால் தெரிவுக்குழு குறித்து பரீசிலிக்கலாம் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் தெரிவித்தோம். வடக்கு, கிழக்கு பிரச்சினைகளையும் இந்தியக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். குறிப்பாக, சம்பூர் பிரச்சினை, முல்லைத்தீவில் அரங்கேற்றப்படும் சிங்களக் குடியேற்றம் ஆகியன பற்றி விரிவாக விளக்கப்பட்டது. அதுமாத்திரமின்றி, நீண்டகாலமாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பிலும் இந்தியக் குழுவிற்கு நாம் விளக்கமளித்தோம்."
பிரேமச்சந்திரன் கூறிய அனைத்து விடயங்களும் ஏற்கனவே இந்திய அரசிற்கு நன்கே தெரியும். சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு எந்தவொரு தீர்வையும் முன்வைக்காது என்பதனை நன்கே அறிந்து வைத்துள்ளது இந்திய நடுவன் அரசு. தமிழர்களின் உணர்வுகளை அறியாத, இது நாள் வரையில் சிறிலங்கா அரசிற்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுத்து வந்த வட இந்தியாவின் இரு பிரதான கட்சிகளும் ஈழத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் உதவப் போவதில்லை.
தமிழகத்தின் அழுத்தத்தின் காரணமாகத்தான் இந்தியா ஈழத் தமிழர் சார்பிலான எந்த முடிவையும் எடுக்க முடியும். நான்காம் கட்ட ஈழப் போர் முடிவுற்று ஒரு வருடத்தில் ஒரு குழுவை இந்திய நடுவன் அரசு சிறிலங்காவிற்கு அனுப்பியது. இக்குழுவில் தி.மு.க. சார்பில் கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோரும் இடம்பெற்று இருந்தனர். இக்குழு சென்ற காலத்திலிருந்து இன்று வரை ஏதேனும் மாற்றங்கல் இடம்பெற்றுள்ளதா என்பதனை அறிய,முன்பு சென்ற இருவரில் யாரேனும் ஒருவரை அனுப்பி வைத்து, நிலைமையை ஒப்பிட்டு பார்ப்பதுதான் சரியான வழியாக இருந்திருக்கும்.
ஏப்ரல் 11-ஆம் தேதியன்று அ.தி.மு.க. குறித்த இந்திய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெறாது என்று அறிவித்தார் ஜெயலலிதா. பயணம் மேற்கொள்வதற்கு முதல் நாளன்று திடீரென்று தி.மு.காவும் சிறிலங்கா செல்லாது என்று அறிவித்தார் கலைஞர் கருணாநிதி. தி.மு.கவும்,அ.தி.முகவும்தான் தமிழகத்தை 1967-ஆம் ஆண்டிலிருந்து மாறிமாறி ஆட்சி செய்துவரும் கட்சிகள்.இந்த இரு கட்சிகள்தான் ஈழத் தமிழர் பிரச்சினையில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்சிகள். இவைகள்தான் உண்மை நிலையை நேரில் பார்த்து ஈழத் தமிழர்களின் சார்பில் மத்திய அரசின் முன் குரல் கொடுக்க வேண்டியவர்கள்.
மத்திய அரசிற்கு உண்மையாகவே அக்கறை இருந்திருக்குமேயானால்,இந்தப் பயணக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு முக்கிய கட்சிகளான அ.தி.மு.கவும்,தி.மு.கவும் இடம்பெறுவதை உறுதி செய்திருக்க வேண்டும். இந்தியக் குழுவின் பயணத்தினால் ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயனில்லை என்பதனை நன்கே அறிந்து முடிவு எடுத்தன தி.மு.க.மற்றும் அ.தி.மு.க.
இந்தியாவின் ஆதரவுடன் உலக நாடுகள் பிரயோகிக்கும் அழுத்தங்களிலிருந்து தப்பிக்கவே இப் பயணத்தை சிறிலங்கா பாவிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சோடிக்கப்பட்ட இடங்களைப் பார்த்துவிட்டு சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மிக வளர்ச்சியடைந்து இருக்கிறது என்று கூறுவது மடத்தனம்.

Monday, 23 April 2012

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை நிறுவ வேண்டும்

சுதந்திர போராட்ட வீரரும்,  இராமநாதபுரம்  மாமன்னருமாகிய  ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் திருவுருவ சிலையை   இராமநாதபுரத்தில் அமைக்க வேண்டும்





Tuesday, 17 April 2012

தமிழ்நாட்டில் கல்வித்துறை சீர்கேடு அடைந்துள்ளது

தமிழ்நாட்டில் கல்வித்துறை எந்த அளவுக்குச் சீர்கேடு அடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையும் அதில் கிடைத்துள்ள சான்றுகளுமே போதுமானவை. ஒரு தனியார் பள்ளியில், பொதுத் தேர்வில் பலரும் முறைகேடாகத் தேர்வு எழுதி வருவதாக மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவுக்கு மின்அஞ்சல் வந்ததையடுத்து, அவர் திடீர் ஆய்வு நடத்தியதில் கிடைத்த சான்றுகள் அதிர்ச்சி தருபவை. 


                            கணிதத் தேர்வு வினாக்களுக்கான விடைகளை அலுவலகத்தில் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருக்கிறார் ஒருவர். 20 பிரதிகளை ஆட்சியர் கைப்பற்றுகிறார்.  8 தேர்வு அறைகளின் கண்காணிப்பாளர்களிடம் கணித வினாக்களுக்குரிய விடைகளின் துண்டுத்தாள் (பிட்) இருக்கிறது. எப்படி வந்தது? பதில் இல்லை. எந்த மாணவர்களிடமிருந்து பறிமுதல் செய்தீர்கள்? பதில் இல்லை.  8 ஆசிரிய-ஆசிரியைகளின் செல்போன்களிலும் தேர்வு நேரத்தில் ஏராளமான அழைப்புகள் பதிவாகியிருந்தன.  ஓர் ஆசிரியரின் சட்டைப்பையில் மாணவரின் பெயர், தேர்வு எண், ரூ.200 பணம் இருந்துள்ளது.  அதிர்ச்சி அளிக்கும் இந்தச் சம்பவத்தில் இந்தத் தனியார் பள்ளிக்குத் துணை போய் இருப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

                            இத்தகைய முறைகேடுகள் முதலில் அரசுப் பள்ளிகளில்தான் மிகச் சிறிய அளவில், யாருக்கும் பாதிப்பில்லை என்ற அளவில் தொடங்கின. கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வகுப்புக்கே வராமலும், (எஸ்எம்எஸ் வருகைப் பதிவு என்பது இன்னொரு மோசடி) பாடம் நடத்தாமலும், பேருந்து நேரத்துக்கு ஏற்ப வகுப்புகளை ஆசிரியர்கள் "கட்' அடித்துவிட்டுப் போவதும் நடந்துகொண்டிருக்கின்றன.  கற்பித்தல் பணியில் ஆசிரியர்களின் உழைப்பு இல்லாவிட்டால், மாணவர்கள் மட்டும் எப்படி மதிப்பெண் பெற முடியும்? மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், எந்தப் பாடத்தில் தேர்ச்சி குறைந்துள்ளதோ அந்த ஆசிரியருக்கு இடமாற்றம் வரும். ஆகவே, ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளை மட்டும் ஆசிரியர்களே சொல்லிக் கொடுத்துவிடுவது வழக்கமாக இருந்தது. இந்த விடைகளில்கூட எது சரி என்று தெரியாமல், செல்போன் மூலமாக வேறொரு ஊரில் தேர்வு அறையில் உள்ள ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து, சொல்லும் வழக்கமும் இங்கேதான் தொடங்கியது.  செல்போனில் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கு மட்டுமே விடை கேட்டு வாங்கி, மாணவர்கள் 40 விழுக்காடு பெற்று தேர்ச்சி பெறச் செய்வதால், இவர்கள் சிறந்த மாணவர்களுக்குப் போட்டியே இல்லை என்பதால், இதனை மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவற்றைக் கண்டும் காணாமல் இருந்தார்கள். 

                           இத்தகைய முறைகேடுகள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், அரசியல்வாதிகளின் பினாமிகள் நடத்தும் தனியார் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே நடக்கத் தொடங்கிவிட்டன.  பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளிலும் இதே முறைகேடுகள்தான். கண்காணிப்பாளருக்கு பிரியாணி மற்றும் கவர் உண்டு. இதில் தனியார் பள்ளிகளில் சிறப்பாகக் கவனித்தால், அரசுப் பள்ளிகளில் அதன் தரத்துக்கேற்ப கவனிக்கிறார்கள். எங்கே நேர்மையும் ஒழுக்கமும் கற்றுத் தரப்பட வேண்டுமோ, அங்கே ஊழலும் முறைகேடுகளும் அரங்கேற்றப்பட்டன.  வேதியியல் செய்முறைத் தேர்வில், பாக்கெட்டைத் திறந்தால் ஆய்வு செய்ய வேண்டிய உப்பின் பெயர் எழுதியிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

                          எல்லா மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வில் 40-க்கு மேல்தான் இருக்க வேண்டும் என்பதில் கவனமாகச் செயல்படுகிறார்கள். தனியார் பள்ளிகளில் 50-க்கு 50 கொடுத்து, எழுத்துத் தேர்வில் இன்னும் கூடுதல் மதிப்பெண் காட்டப் பார்க்கிறார்கள்.  இதிலும்கூட, ""மாணவர்கள் பாவம், இதில் மதிப்பெண் வாங்கியாகிலும், எழுத்துத்தேர்வில் குறையும் மதிப்பெண்ணை ஈடுசெய்துகொள்ளட்டும்'' என்று கல்வி அதிகாரிகளும் இரக்கம் காட்டுகிறார்கள். இதிலெல்லாமா கருணை காட்டுவது? பிறகு கல்வியின் தரத்தைப் பற்றி பேச முடியுமா?

                                 இப்போது மாணவர்கள் தேர்ச்சி மட்டுமே பள்ளிகளின் குறிக்கோளாக இல்லை. 100 விழுக்காடு பெற்று, தலைசிறந்த பள்ளி என்பதைக் காட்டிக் கொள்வதற்கான முறைகேடாக இது தனியார் பள்ளிகளில் நுழைந்திருக்கிறது. காரணம் என்ன? தங்கள் புகழைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், கணிதப் பாடத்தில் தமிழக மாணவர்கள் அனைவரும் திணறியபோது எங்கள் பள்ளி மாணவர்கள் 100-க்கு 100 வாங்கிவிட்டார்கள் என்று பெருமை பேச வேண்டும். அதற்காக எந்தவித முறைகேடுக்கும் தனியார் பள்ளிகள் தயாராகிவிட்டன. கல்விக் கட்டணத்தை மிக மிக அதிகமாக உயர்த்தவும் அதை நியாயப்படுத்தவும் இவை அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றன.  

                       அப்படியானால், உண்மையாகவே படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் கணிதத் தேர்வில் 100 மதிப்பெண் பெறமுடியாதவர்களாக இருக்க, யார், யாரோ 100 விழுக்காடு மதிப்பெண் பெறுவார்கள். இது எத்தகைய கீழ்த்தரமானது என்பதைக் கல்வி நிறுவனங்களோ அல்லது கல்வித் துறையோ சிந்திக்கவே இல்லை. 

                    இவர்களது வியாபாரப் போட்டியில் இவர்களது பந்தயக் குதிரை வெற்றி பெற எந்த முறைகேட்டிலும் ஈடுபடுவார்கள். இதற்கு கல்வித் துறை அதிகாரிகளின் அலட்சியமும், அரசியல்வாதிகளின் ஆதரவும்தான் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

                         இந்த முறைகேட்டுக்குத் துணைபோயிருக்கும் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இவர்களுக்காக ஆசிரியர் உலகம் போராடும் என்பதுதான் அதைவிடக் கேவலமான அவலம். ஆசிரியர் தொழிலுக்கே இழுக்குத் தேடித் தந்திருப்பவர்களைத் தங்களது சக ஆசிரியர்கள் என்று சகதாபத்துடன் பார்ப்பவர்கள்தான் அதனினும் இழிந்தவர்கள் என்று யார் அவர்களுக்குப் புத்தி புகட்டுவது?  

                              ஆசிரியர்களும் அவர்களது குடும்பங்களும் தமிழ்ச் சமூகத்தின் அங்கமல்லாமல் போய் விடுவார்களா? இப்படியே போனால், தமிழ்ச் சமூகம் என்ன ஆகும்? வினை விதைத்தவன் வினை அறுப்பான், வேறென்ன?
                      
-நன்றி-தின மணி , maraththamizhar senai 

Monday, 16 April 2012

மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் பிறந்த நாள் விழா

மறத்தமிழர் சேனையின்  மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா நமது அமைப்பின் மூலம் வெகுவிமரிசையாக கொண்டாடப் படுகிறது. பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்.





நமது தோழமை போற்றக் கூடிய நண்பர்கள் ஒட்டிய சுவரொட்டிகள்










Friday, 13 April 2012

கச்சத் தீவு மீட்க R.சரத்குமார் - புதுமலர் பிரபாகரன் சந்திப்பு

கி.பி. 1480 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக இராமேஸ்வரம் தீவும். அதைச் சுற்றி 11 தீவுகளும் தோன்றியுள்ளன, இத்தீவுகள் தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்துதான் துண்டிக்கப்பட்டன என்று இராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

இந்தத்  தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவு என்பது. இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கையிலிருந்து 13 மைல் தொலைவிலும் உள்ளது. இது கிழக்கு மேற்காக ஒரு மைல் தூரமும் வடக்கு தெற்காக அரை மைல் தூரமும் கொண்டது. இதன் பரப்பளவு 3,75 சதுர மைல். அவ்வளவுதான்.  உள்ள கச்சத்தீவை சுற்றிய கடற்பகுதி, மீன் வளம் நிறைந்தது. சேதுபதி மன்னர்களின் சொத்தான கச்சத்தீவு சுமார் 350 மீட்டர் அகலமும், ஒன்றரை கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. மொத்த பரப்பளவு 285 ஏக்கர். கச்சன்- கச்சம் என கடல் ஆமையை அழைப்பார்கள். இந்தத் தீவில் ஒரு காலத்தில் ஆமைகள் அதிக அளவில் வசித்ததால், இதைக் கச்சத்தீவு என்று அழைக்கின்றனர்.


குத்துக்கால் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, குருசடித் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய 8 தீவுகளும்,  69 கடற்கரை ஊர்களும் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவு.
 தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

   இந்தத் தீவுகள் எல்லாம் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமாக இருந்தன. இராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னருக்கு வருவாய் தரும் தீவுகளாக இருந்தன. 1947 இல் நாடு விடுதலை அடைந்ததும், ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் வந்தது. அதனால் மன்னரின் உடைமைகள் மக்கள் உரிமையானது. சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் இருந்தவரை இந்தத் தீவு முத்துக் குளிக்கும் இடமாகப் பயன்பட்டு வந்தது. அத்துடன் சித்த மருத்துவத்திற்குப் பயன்படும் மூலிகைகளின் சோலை வனமாகவும் இருந்தது. இராமநாதபுரம் மக்கள் உமிரி என்ற செடிவகையைத் தீராத நோய்களுக்குச் சிறந்த மருந்தாக நம்பினர். அத்துடன் சாயவேர் போன்ற வேர் வகைகளும் பயன்பட்டன.

இந்தத் தீவுக்குச் சென்று இந்த மூலிகைகளைக் கொண்டு வருவதையே தொழிலாகச் சோழ மண்டல மரக்காயர்கள் கொண்டிருந்தனர். இங்கே, முத்துக் குளிக்கவும், மூலிகைகளைக் கொண்டு வரவும், மீன் பிடிக்கவும் விரும்பினால் சேதுபதி மன்னரின் அனுமதி பெறவேண்டும். அவர்கள் குத்தகைக்கு விட்டு வருவாய் பெற்றதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் கச்சத்தீவு இருந்து வந்ததற்கு 1822 முதல் ஆவணச் சான்றுகள் உள்ளன. ராமநாதபுரம் மன்னர் சேதுபதி அவர்களிடம் 1882-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி (THE EAST INDIA COMPANY) லீஸ் ஒப்பந்தத்தில் கச்சத் தீவை எடுத்துள்ளது. அதன் பின்னர் கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், மணலி தீவு, குத்துக்கல் தீவு மற்றும் கச்சத் தீவு மூன்றினையும் அப்போதைய, மெட்ராஸ் பிரசிடென்ஸி (MADRAS PRESIDENCY OF INDIA) யின் ராமநாதபுரம் கலக்டரிடம் லீஸ் ஒப்பந்தம் மூலம் பெற்றுள்ளார்.

1913-ல், மீண்டும் ஒரு லீஸ் ஒப்பந்தத்தை மெட்ராஸ் பிரசிடென்ஸி ஏற்படுத்தியது. அதன்படி, மெட்ராஸ் பிரசிடென்ஸியின் மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை கச்சத் தீவின் மீது கொடுக்கப்பட்டுள்ளது. 1939-ல் புனித அந்தோணியார் ஆலயம் கச்சத் தீவில் கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முகம்மது என்பவர் 1947-ல் கச்சத் தீவை ஒரு லீஸ் ஒப்பந்தம் மூலம் எடுத்துள்ளார். அந்த ஆவணம் எண் 278/1948 ஆக இராமேஸ்வரம் பதிவாளார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தாலுகாவில்… ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு,       “கச்சத்தீவு இராமேஸ்வரத்தின் எல்லைக்குட்பட்ட வருவாய் கிராமம், கச்சத்தீவின் சர்வே எண் 1250” என ஒரு அரசாணை G.O. No. 2009: 11.08.1949-ல் வெளியிடப்பட்டுள்ளது.

இது எல்லாவற்றிற்கும் மேலாக 1531-ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு செப்பு பட்டயத்தில், ‘கச்சத் தீவு சேதுபதி மன்னர்களின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பகுதி” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய தொல்பொருள் துறையின் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. சேதுபதி மன்னர் நினைவாகத்தான், பல நூறு ஆண்டுகளாக இன்று வரை அந்தக் கடல் பகுதியை அனைவரும் ‘சேது சமுத்திரம்’ என்று உலகளவில் அழைக்கின்றனர். அதனால்தான் இந்திய அரசே ‘சேது சமுத்திர திட்டம்’ என பெயரிடப்பட்டு ஒரு திட்டத்தை தொடங்கியது.
இதைச் சொந்தம் கொண்டாட இலங்கை அரசு கடந்த 100 ஆண்டுகளாக முயன்று வந்தது. ஆனால், இந்தத் தீவு ராமநாதபுரத்தை ஆட்சி செய்த சேதுபதி மன்னர் பரம்பரையினருக்கு உரியது.  இந்தியாவின் கிழக்குக் கடலோரத்தில் பாக் நீரிணைப்பில் உள்ள கச்சத்தீவு, தேசப் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு. அந்த சமயத்தில் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான அரசு அமைந்திருந்தது.


இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரன்சிங், “1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவர்களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார். ஆனால் கச்சத் தீவு எவ்வாறெல்லாம் இந்தியாவோடு இணைந்த பகுதி என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை அவர் மறைத்துவிட்டார்.

 “கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்த இந்தியாவின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்றும், இலங்கை கடற்படையை கண்டித்தும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து அதனை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பதை வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில்  கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேதுபதி மன்னர்களின் பரம்பரை சொத்தான கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பேசிவரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி  தலைவர் சரத்குமார் அவர்களை மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Tuesday, 10 April 2012

மதுரை அமெரிக்கன் கல்லூரியை இழுத்துப் பூட்டினர்

மதுரை அமெரிக்கன் கல்லூரியை இழுத்துப் பூட்டினர்





கல்லூரி முற்றுகை போராட்டம்

Monday, 2 April 2012

நான் ஒரு குற்றப் பரம்பரையினன் . . .

                          நான் ஒரு குற்றப் பரம்பரையினன் என்று மார்தட்டிச் சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன். ஏனென்றால் இந்த சட்டம்தான் எங்களின் எதிர்ப்பு அரசியலின் வீரத்தையும், விவேகத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தியது. வருகின்ற ஏப்ரல்-03 அன்று பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூடு நினைவு நாள்.

                          இயற்கையின் இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருந்த சமூக, பழங்குடிகளில் ஒன்றான பிரமலைக் கள்ளர் இனத்தின் மீது சுரண்டல்களின் ஒட்டுமொத்த பழியையும் சுமத்தி சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்ததிலிருந்து, ஆண்ட பரம்பரையின் ஆளுமை வேகத்தை அடக்கி வைப்பதற்காக சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் குற்றப்பரம்பரைச் சட்டம்.

                         
                              காடுகட்டி நாடாண்ட கள்ளர்கள் கைநாட்டு வைப்பதா ? அகிலம் ஆண்ட நம் மீது கரும்புள்ளி வைத்திட, வந்தேறிக் கூட்டத்தின் வழிகாட்டுதலின் படி, வியாபார நோக்கில் வந்து நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையன் கொண்டு வந்த  குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து, மானத்தைக் காக்க மரணத்தை முத்தமிட்ட பெருங்காமநல்லூர்  மாமறவர்கள் 17 பேர்களையும்  வணங்கி, வீர வணக்கம் செலுத்துவோம்.

                                20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, உலக அரசியல் அரங்கில் ஆங்கிலேய அரசுக்கு அச்சம் ஏற்படும் நிலை வந்தது. நாட்டுப் பற்றுடன் அரசாங்கத்தை எதிரியாக நினைத்து சட்டங்களையும் அதிகாரங்களையும் வெறுத்து வரும் தன்னரசு பற்றுதல் கொண்ட மானமுள்ள மறத்தமிழர் சேனைக் கூட்டங்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் சட்டப் பூர்வமாக ஒடுக்கி வைத்திருக்க முற்பட்டனர்.

                    அதன் காரணமாகவே இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களில் பூலம், ஆப்பநாடு, முதுகுளத்தூர் முதலிய இடங்களில் ரேகைச் சட்ட அமுல் பிரகடனம் செய்யப்பட்டது. இன்றைய தமிழீழம் முள்வேலி முகாம்களைப் போல 1930 களில் 1,35,000 பேர்  கைரேகைகள் பதியப்பட்டு தடுப்புக் காவலில் கண்காணிக்கப் பட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் காங்கிரசும், திராவிட இயக்கத்தினரும் அதிகாரத்திற்காக ஆங்கிலேயரிடம் கை கட்டி நின்றுகொண்டிருந்தனர்.