கி.பி. 1480 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக இராமேஸ்வரம் தீவும். அதைச் சுற்றி 11 தீவுகளும் தோன்றியுள்ளன, இத்தீவுகள் தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்துதான் துண்டிக்கப்பட்டன என்று இராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.
இந்தத் தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவு என்பது. இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கையிலிருந்து 13 மைல் தொலைவிலும் உள்ளது. இது கிழக்கு மேற்காக ஒரு மைல் தூரமும் வடக்கு தெற்காக அரை மைல் தூரமும் கொண்டது. இதன் பரப்பளவு 3,75 சதுர மைல். அவ்வளவுதான். உள்ள கச்சத்தீவை சுற்றிய கடற்பகுதி, மீன் வளம் நிறைந்தது. சேதுபதி மன்னர்களின் சொத்தான கச்சத்தீவு சுமார் 350 மீட்டர் அகலமும், ஒன்றரை கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. மொத்த பரப்பளவு 285 ஏக்கர். கச்சன்- கச்சம் என கடல் ஆமையை அழைப்பார்கள். இந்தத் தீவில் ஒரு காலத்தில் ஆமைகள் அதிக அளவில் வசித்ததால், இதைக் கச்சத்தீவு என்று அழைக்கின்றனர்.
குத்துக்கால் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, குருசடித் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய 8 தீவுகளும், 69 கடற்கரை ஊர்களும் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவு.
தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீவுகள் எல்லாம் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமாக இருந்தன. இராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னருக்கு வருவாய் தரும் தீவுகளாக இருந்தன. 1947 இல் நாடு விடுதலை அடைந்ததும், ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் வந்தது. அதனால் மன்னரின் உடைமைகள் மக்கள் உரிமையானது. சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் இருந்தவரை இந்தத் தீவு முத்துக் குளிக்கும் இடமாகப் பயன்பட்டு வந்தது. அத்துடன் சித்த மருத்துவத்திற்குப் பயன்படும் மூலிகைகளின் சோலை வனமாகவும் இருந்தது. இராமநாதபுரம் மக்கள் உமிரி என்ற செடிவகையைத் தீராத நோய்களுக்குச் சிறந்த மருந்தாக நம்பினர். அத்துடன் சாயவேர் போன்ற வேர் வகைகளும் பயன்பட்டன.
இந்தத் தீவுக்குச் சென்று இந்த மூலிகைகளைக் கொண்டு வருவதையே தொழிலாகச் சோழ மண்டல மரக்காயர்கள் கொண்டிருந்தனர். இங்கே, முத்துக் குளிக்கவும், மூலிகைகளைக் கொண்டு வரவும், மீன் பிடிக்கவும் விரும்பினால் சேதுபதி மன்னரின் அனுமதி பெறவேண்டும். அவர்கள் குத்தகைக்கு விட்டு வருவாய் பெற்றதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் கச்சத்தீவு இருந்து வந்ததற்கு 1822 முதல் ஆவணச் சான்றுகள் உள்ளன. ராமநாதபுரம் மன்னர் சேதுபதி அவர்களிடம் 1882-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி (THE EAST INDIA COMPANY) லீஸ் ஒப்பந்தத்தில் கச்சத் தீவை எடுத்துள்ளது. அதன் பின்னர் கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், மணலி தீவு, குத்துக்கல் தீவு மற்றும் கச்சத் தீவு மூன்றினையும் அப்போதைய, மெட்ராஸ் பிரசிடென்ஸி (MADRAS PRESIDENCY OF INDIA) யின் ராமநாதபுரம் கலக்டரிடம் லீஸ் ஒப்பந்தம் மூலம் பெற்றுள்ளார்.
1913-ல், மீண்டும் ஒரு லீஸ் ஒப்பந்தத்தை மெட்ராஸ் பிரசிடென்ஸி ஏற்படுத்தியது. அதன்படி, மெட்ராஸ் பிரசிடென்ஸியின் மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை கச்சத் தீவின் மீது கொடுக்கப்பட்டுள்ளது. 1939-ல் புனித அந்தோணியார் ஆலயம் கச்சத் தீவில் கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முகம்மது என்பவர் 1947-ல் கச்சத் தீவை ஒரு லீஸ் ஒப்பந்தம் மூலம் எடுத்துள்ளார். அந்த ஆவணம் எண் 278/1948 ஆக இராமேஸ்வரம் பதிவாளார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தாலுகாவில்… ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, “கச்சத்தீவு இராமேஸ்வரத்தின் எல்லைக்குட்பட்ட வருவாய் கிராமம், கச்சத்தீவின் சர்வே எண் 1250” என ஒரு அரசாணை G.O. No. 2009: 11.08.1949-ல் வெளியிடப்பட்டுள்ளது.
இது எல்லாவற்றிற்கும் மேலாக 1531-ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு செப்பு பட்டயத்தில், ‘கச்சத் தீவு சேதுபதி மன்னர்களின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பகுதி” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய தொல்பொருள் துறையின் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. சேதுபதி மன்னர் நினைவாகத்தான், பல நூறு ஆண்டுகளாக இன்று வரை அந்தக் கடல் பகுதியை அனைவரும் ‘சேது சமுத்திரம்’ என்று உலகளவில் அழைக்கின்றனர். அதனால்தான் இந்திய அரசே ‘சேது சமுத்திர திட்டம்’ என பெயரிடப்பட்டு ஒரு திட்டத்தை தொடங்கியது.
இதைச் சொந்தம் கொண்டாட இலங்கை அரசு கடந்த 100 ஆண்டுகளாக முயன்று வந்தது. ஆனால், இந்தத் தீவு ராமநாதபுரத்தை ஆட்சி செய்த சேதுபதி மன்னர் பரம்பரையினருக்கு உரியது. இந்தியாவின் கிழக்குக் கடலோரத்தில் பாக் நீரிணைப்பில் உள்ள கச்சத்தீவு, தேசப் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு. அந்த சமயத்தில் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான அரசு அமைந்திருந்தது.
இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரன்சிங், “1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவர்களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார். ஆனால் கச்சத் தீவு எவ்வாறெல்லாம் இந்தியாவோடு இணைந்த பகுதி என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை அவர் மறைத்துவிட்டார்.
“கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்த இந்தியாவின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்றும், இலங்கை கடற்படையை கண்டித்தும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து அதனை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பதை வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேதுபதி மன்னர்களின் பரம்பரை சொத்தான கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பேசிவரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்களை மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

No comments:
Post a Comment