★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Monday, 21 May 2012

மறத்தமிழர் சேனை 60,000 பார்வையாளர்களைக் கடந்துள்ளது, வணங்குகிறோம்.

பிறந்த பொழுதே இறந்து போவோமென அறிந்து வாழும் அடலேறுகளே ! வணக்கம்.

                       இந்த உலகத்திலே பிறந்த ஒவ்வொரு மனிதனும், தான் பிறந்து வளர்ந்ததற்கு அடையாளமாக எதையேனும் விட்டுவிட்டு செல்லவேண்டும். அப்பொழுதுதான் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும். இல்லையென்றால் "கூற்றுக் கிரையெனப் பின்மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே" நாமும் வரலாறு அற்ற, மறந்துபோன இறந்து போனவர்களில் ஒருவராக ஆகித்தான் ஆவோம். இந்த எண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மறத்தமிழர் சேனை இணையதளம் தொடங்கப்பட்ட மிகக்குறுகிய நாட்களிலேயே  60,000 உறவுகளை தாண்டி வெற்றிநடை போடுகிறது. நாங்கள் இணையத்தில் மட்டும் இயங்கும் 'வாய்ச்சவடால்' அமைப்பு அல்ல. அதே சமயம் இணைய அரசியலிலும் எங்களால் சிறப்பாக இயங்கமுடியும் என்பதற்கான அத்தாட்சி இது. 

                     இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இதனை, இத்தனை எளிதில் சாத்தியமாக்கிய மறத்தமிழர் சேனை நிர்வாகிகளையும், எங்கள் மீது அளவிடமுடியாத பிரியங்கொண்ட உறவினர்களையும், எவ்வளவு சிறப்பான செயல்களையும் ஒருநொடியில் உதறிவிட்டு தொடர்ந்து விமர்சிக்கும் ஆலோசகர்களையும், நெடிய பயணத்தில் உடன்வருவதைப் போல் நடித்து எங்களை பலவீனப்படுத்த முயற்சிக்கும் சக இயக்கத்தார்களையும், எதிரியாகவே இருந்தாலும் என்னதான் எழுதுகிறார்கள் என்று தினந்தினம் எங்களை பார்வையிடும் மாற்று சமூகத்தார்களையும் பெருமையுடன் வணங்குகிறோம்.
   
                                              இது நம் சமூகத்திற்கான வெற்றி. 

No comments:

Post a Comment