ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. காதர் பாட்சா என்ற வெள்ளைச்சாமி (வயது 70) இவர் கமுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் ருக்குமணி இவர்களுக்கு 2 மகன், 5 மகள்கள் உள்ளனர்.
வெள்ளைச்சாமி தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். இன்று அதிகாலையில் வெள்ளைச்சாமி வாக்கிக் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். பின்பு அவர் வீட்டில் இருந்தபோது மேலராமநதியை சேர்ந்த தனசீலன் (வயது 42) என்பவர் வந்தார். அவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெள்ளைச்சாமியை வெட்டினார். அவர் கூச்சல் போட்டு அலறினார். அலறல் சத்தம் கேட்டு மனைவி ருக்குமணி ஓடிவந்தார். அவரையும் தனசீலன் அரிவாளால் வெட்டினார்.
சரமாரியாக வெட்டுப்பட்ட வெள்ளைச்சாமி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். இதற்கிடையில் வெள்ளைச்சாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். இதை அறிந்ததும் தனசீலன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவர்கள் தனசீலனை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அவரும் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கமுதி போலீசாருக்கு தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த வெள்ளைச்சாமி-தனசீலன் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. கொலை செய்யப்பட்ட சம்பவம் கமுதி முழுவதும் பரவியது. அங்கு ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment