★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Saturday, 29 June 2013

வரலாறு - சாதிகளின் வரலாறு

கள்ளர் எனப்படுவோர் தமிழகத்திலே தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் குறிக்கும். இப்பொழுது இக்குழுவினரில் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.
முக்குலத்தோர் (தேவர்)
முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
கள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை.
கள்ளர்களின் கிளைப்பிரிவுகள்
கிளைவழிக்கள்ளர்
அம்புநாட்டுக்கள்ளர்
ஈசநாட்டு கள்ளர்
செங்களநாட்டுக்கள்ளர்
மீய்செங்கிளிநாட்டுக்கள்ளர்
ஏழுநாட்டுக்கள்ளர்
நாலுநாட்டுக்கள்ளர்
பிரம்பூர்நாட்டுக்கள்ளர்
மாகாணக்கள்ளர்


சோழப் பெருவேந்தர்கள் தங்களுக்குப் பட்டமுடைய பெயர்களை பூணுவதிலும் தம்மைச் சாந்தோர்களுக்கு பட்டங்களை அளிப்பதிலும் மிகுந்த அக்கரையும் விருப்பமும் கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உணர்துகின்றன. இப் பட்டங்களும், பட்டப்பெயர்களும் அரச அவையில் இருந்த சான்றோர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது. முற்கால மெய்க்கீர்த்திகளின் நடை சிறப்பு, அமைப்பு போன்றவை மூலம் இவை எல்லாம் புலமை படைத்த சான்றோர்களால் எழுதப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் பட்டப் பெயர்களை நான்கு பிரிவுகளாக அறியமுடிகிறது.

1. பேராசர்கள் தங்களின் சிறப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தாங்களே சூடிக்கொண்ட பட்டங்கள். இராசகண்டியன், சிவபாதசேகரன், இரவி குலமாணிக்கம் போன்றவை.

2. பேராசர்கள் தங்களின் அரசுப்பிரதிநிதிகளாக இருந்த தானைத் தலைவர்களுக்கும், தம் உறவினர்களுக்கும் குலத்தவர்களுக்கும் சூட்டிய பட்டங்கள். கடாரம்கொண்டான், சோழங்கன், மாரையன் போன்றவை.

3. பேராசர்கள் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களுக்கும், அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் வழங்கிய பட்டங்கள். காலிங்கராயன், சேதிராயன், மழவராயன், நாடாள்வான் போன்றவை.

4. பேராசர்கள் தங்களின் பல்வேறு கலைஞர்களுக்கும் (அரசியல் மற்றும் அதிகாரம் சார்பற்ற) வழங்கிய பட்டங்கள். கற்றளிப்பிச்சன். தலைக்கோலி, வாச்சிய மாராயன் போன்றவை.

கள்ளர் குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும்.

அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள். எடுத்துகாட்டு பல்லவராயன் (பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன் ), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை.  தமிழகத்தில் தஞ்சை கள்ளர் குலத்தின் 305 பட்டங்கள் அரசர்களை சுட்டும்:

1 பாண்டியராயர்,
2 பல்லவதரையர்,
3 பல்லவராயர்
4 சேதிராயர் (சோழனின் கிளைக்குடி)
5 பழுவேட்டரையர்(சோழன் பெண் எடுத்த சேரன் குலம்)
6 தஞ்சைராயர்
7 பழையாற்றரையர்(பறையாறு சோழர்களின் தலைநகரம் )
8 கொடும்பாளுர்ராயர் (மாமன்னன் ராஜராஜன் மனைவியின் குலம்,ராஜேந்திர சோழன் தாய்
9 வல்லத்தரையர்
10 முத்தரையர்
11 கொல்லத்தரையர்
12 கலிங்கராயர்
13 கொங்குராயர்
14 செம்பியதரையர்
15 கேரளராயர்
16 ஈழ்த்தரையர்
17 கச்சியராயர்
18 காடவராயர்
19 கடாரத்தரையர்
20 கச்சைராயர்
21 கோழிராயர் (கூழி என்றால் கரிகாலன் தலைநகர் உறையூரை குறிக்கும்)
22 கலிங்கராயதேவர்
23 களப்பாளராயர்
24 குறும்பராயர்
25 சோழகன்னகுச்சிராயர்
26 காலிங்கராயர்
27 செம்பியமுத்தரையர்
28 சம்புராயர்
29 சோழரையர்
30 சேதுராயர்
31 செம்பியரையர்
32 சோழதரையர்
33 சீனத்தரயைர்
34 சோழதிரையர்
35 சிங்களராயர்
36 தஞ்சிராயர்
37 செழியதரையர்
38 சிந்துராபாண்டிராயர்யர்
39 தேவராயர்
40 தமிழுதரையர்
41 தெலிங்கராயர்
42 தென்னதிரையர்
43 தென்னரையர்
44 தென்னறையர்
45 தென்னவராயர்
46 பாண்டுராயர்
47 மூவரையர்
48 மூவேந்த்ரையர்
49 மானமுத்தரையர்
50 மீனவராயர்மலைராயர்
51 மலையராயர்
52 மழவராயர்
53 முனைதரையர்
54 மலையராயர்
55 மலையரையர்
56 வங்கத்தரையர்
57 வங்கராயர்
58 வடுகராயர்
59 நாகராயர்
60 வாணாதிராயர்
61 வல்லவராயர்
62 வில்லவதரையனார்
63 வில்லவராயர்
64 வெங்கிராயர்
65 வாணரையர்
66 வாண்டராயர்
67 வண்டைராயர்
68 வேங்கைராயர்
69 வெங்கிராயர்,
70 அங்கராயர்.
71 ஆக்காட்டரையர்.
72 அன்கராயர்.
73 ஆற்காட்டரையர்.
74 அனகராயர்
75 அங்கதராயர்
76 ஆச்சராயர்
77 ஆச்சாண்டார்
78 உழுவாண்டார்.
79 அச்சிராயர்
80 அச்சுதராயர்
81 உமத்தரையர்
82 அத்திராயர்
83 அத்தியரையர்
84 ஆலத்தரையர்.
85 அமராண்டார்
86 அம்பராண்டார்
87 ஆற்க்காடுராயர்
88 அம்மையத்தரையர்
89 இராதராயர்
90 இராமலிங்கராயதேவர்
91 இராலிங்கராயதேவர்
92 ஓந்திரையர்
93 ஓந்தரையர்
94 ஓமாந்தரையர்
95 ஓமாமரையர்
96 இருப்பரையர்
97 அண்ணவசல்ராயர
98 கொங்கரையர்
99 கொங்ககரையர்
100 கொங்குதிரையர்
101 கொடிராயர்
102 காசிராயர்
103 கொடிக்கிராயர்,
104 கொடிக்கவிராயர்
105 கஞ்சராயர்
106 கொடும்பராயர்,
107 கொடும்பைராயர்
108 கடம்பராயர்
109 கொடும்புராயர்
110 கடம்பைராயர்
111 கொடும்மளுர்ராயர்
112 கொடும்பிராயர்,
113 கொடும்பையரையர்
114 கார்யோகராயர்
115 கட்டராயர்
116 கொழுந்தராயர்
117 கொற்றப்பராயர்
118 கொத்தப்பராயர்
119 கொற்றரையர்
120 கண்டராயர்
121 கண்டவராயர்
122 கோட்டரையர்
123 கோட்டையரையர்
124 கண்ணரையர்
125 கரம்பராயர்
126 கீழரையர்
127 கைலாயராயர்
128 கையராயர்
129 கரும்பராயர்
130 குச்சராயர்
131 குச்சிராயர்
132 குச்சியராயர்
133 குமதராயர்
134 கலிராயர்
135 குருகுலராயர்
136 குழந்தைராயர்
137 கொழந்தைராயர்
138 கொழந்தராயர்
139 கொழுந்தைராயர்,
140 களப்பாள்ராயர்,
141 கனகராயர்
142 கூத்தப்பராயர்
143 கன்னகொண்டார்
144 கொத்தப்பராயர்
145 கன்னக்குச்சிராயர்
146 கன்னராயர்
147 கன்னிராயர்
148 கேளராயர்
149 சக்கரையர்
150 சாக்கரையர்
151 சக்கராயர்
152 செம்பரையர்
153 சக்காராயர்
154 சங்கரராயர்
155 சோழுதிரையர்
156 சோதிரையர்
157 செல்லரையர்
158 செனவராயர்
159 சன்னவராயர்
160 சனகராயர்
161 சன்னராயர்
162 சென்னிராயர்
163 சன்னவராயர்
164 சாணரையர்
165 சாத்தரையர்
166 சாமுத்தரையர்
167 சாமுத்திரையர்,
168 சேண்ராயர்
169 செனவராயர்
170 சிங்கராயர்
171 சேந்தராயர்
172 சிந்துராயர்
173 சிறுநாட்டுராயர்
174 சிறுராயர்
175 சேறைராயர்
176 சேற்றூரரையர்
177 சுக்கிராயர்
178 சுக்கிரபராயர்
179 சுக்கிரியராயர்
180 சுந்தரராயர்
181 சொரப்பரையர்
182 சோதிரையர்
183 தேசுராயர்
184 தனஞ்சராயர்
185 திருக்காட்டுராயர்
186 தம்பிராயர்
187 தனராயர்
188 தோப்பைராயர்
189 தலைசைராயர்,
190 துண்டராயர்
191 தனசைராயர்
192 துண்டுராயர்
193 துண்டீரராயர்
194 தனிராயர் ,
195 நண்டல்ராயர்
196 நந்திராயர்
197 நந்தியராயர்
198 நாட்டரையர்
199 நாட்டறையர்
200 நரசிங்கராயர்
201 நெடுந்தரையர்
202 நன்னிராயர்
203 நெல்லிராயர்
204 பகட்டுராயர்
205 பூழிராயர்
206 பூவனையரையர்
207 பங்களராயர்
208 பாச்சிராயர்
209 பேரரையர்,
210 பேதரையர்
211 பாண்டராயர்
212 பஞ்சராயர்
213 பஞ்சந்தரையர்
214 பஞ்சநதரையர்
215 பாப்பரையர்
216 பொய்ந்தராயர்
217 போய்ந்தராயர்
218 போய்ந்தரராயர்
219 பட்டுராயர்
220 பொன்னவராயர்
221 பாலைராயர்
222 பால்ராயர்
223 பிச்சராயர்
224 பதுங்கராயர்
225 பதுங்கரார்
226 பிரமராயர்
227 பிலியராயர்
228 பயிற்றுராயர்
229 பரங்கிலிராயர்
230 பரங்கிராயர்
231 பருதிராயர்
232 புள்ளராயர்
233 பிள்ளைராயர்
234 போதரையர்
235 பூராயர்
236 பனைராயர்
237 மாதராயர்
238 மாதைராயர்
239 மாதுராயர்
240 மாத்துராயர்
241 மங்கலராயர்
242 மாதவராயர்
243 மாந்தராயர்
244 மாந்தையரையர்,
245 மாந்தரையர்
246 மட்டைராயர்
247 மேனாட்டரையர்
248 மணிராயர்
249 மண்டலராயர்
250 மண்டராயர்
251 மாவாளியார்
252 மண்ணிராயர்
253 மணிக்கராயர்
254 மாளுவராயர்
255 மானத்தரையர்
256 மருங்கராயர்
257 பருங்கைராயர்
258 கைராயர்
259 விக்கிரமத்தரையர்
260 விசயராயர்
261 வங்கனராயர்
262 விசையராயர்
263 வங்காரமுத்தரையர்
264 விசராயர்
265 விசுவராயர்
266 வங்கானமுத்திரையர்
267 விசுவரார்
268 வஞ்சிராயர்
269 வாஞ்சிராயர்
270 விஞ்சிராயர்
271 விஞ்சைராயர்
272 வடுராயர்
273 விசலராயர்
274 வடுராயர்,
275 விசுவராயர்
276 வல்லவரையர்
277 விண்டுராயர்
278 வீண்டுராயர்
279 விருதுளார்
280 விலாடத்தரையர்
281 வில்லவதரையர்
282 வில்வராயர்
283 விழுப்பாதராயர்
284 விற்பன்னராயர்
285 வீணதரையர்,
286 வெட்டுவராயர்
287 வணதரையர்
288 வாணதிரையர்
289 வாணாதரையர்
290 வீணாதரையர்
291 வீனைதிரையர்
292 வெங்கிராயர்
293 வாலிராயர்
294 வேம்பராயர்
295 வாளுவராயர்
296 வேள்ராயர்
297 வாள்ராயர்
298 வைகராயர்
299 வையராயர்
300 வைராயர்
301 வயிராயர்
302 பிள்ளைராயர்
303 கழுத்திரையர்
304 செட்டரையர்
305 தழிஞ்சிராயர்

கள்ளர் குல பட்டங்களும் விளக்கங்களும்

அம்மையத்தரையன், அசையாத்துரையன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அம்மையன். அம்மையபுரம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அம்மையப்பன், அம்மளூர் என்னும் ஊர்களையும், அம்மணியாறு என்னும் பேராற்றையும் உண்டாக்கியவன். இவன் மரபோர் அம்மையத்தரையன், அசையாத்துரையன் என்ற பட்டங்களை பெற்றனர்.

அம்பராண்டான், அமரண்டான், அமராண்டான், அம்பர்த்தேவன், அம்மலத்தேவன், அம்மானைத்தேவன், அம்பானைத்தேவன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அம்பன். அம்பர், அம்பர்மாகாளம் என்னும் இரண்டு சிவதலமுடைய அம்பர் என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அம்பராயன், அம்பராண்டான், அம்பர்த்தேவன் எனவும் வழங்கும். அம்பராயன்பேட்டை(அம்பராசன்பேட்டை) அம்பத்தூர்(அம்பகரத்தூர்) அம்புக்கோவில் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் அம்பராண்டான், அமரண்டான், அமராண்டான், அம்பர்த்தேவன், அம்மலத்தேவன், அம்மானைத்தேவன், அம்பானைத்தேவன் எனும் பட்டங்களை கொண்டனர்

அடைக்கப்பட்டான், அடைவளைந்தான், அடவளைந்தான், அடைவளஞ்சான், அண்டம்வளைந்தான்.
அண்டசோழன் மரபில் வந்த மன்னன் அடைவளைசோழன். அடைக்கப்பட்டு என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அடைக்கப்பட்டான், அடைவளைந்தான் எனவும் வழங்கும். அடைப்பாறு என்னும் ஆற்றையும் உருவாக்கி அரசாண்டவன். அடை என்பது நிலம் என்றும், வளைவதாவது சுற்றி வருவது என்றும் பொருள்படும். இதன் மூலம் இவர்கள் நிலத்தை சுற்றி அதன் எல்லைகளை வகுத்து மானியமாக நிலங்களை அளித்தவர்கள் (தினந்தோறும் திருக் கோவில்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு மற்றும் பூசனப்பொருட்களை வழங்குபவர்களுக்கு) என்றும் அறியப்படுகிறது. அடைக்கப்பட்டான், அடைவளைந்தான், அடவளைந்தான், அடைவளஞ்சான், அண்டம்வளைந்தான் என்னும் பட்டமுடைய கள்ளர்கள் திருவையாறு வட்டம் திருச்சினம்பூண்டி, திருச்சி மாவட்டம் கிளியூர் ஆகிய இடங்க்களில் அதிகமாக வாழுகின்றனர்.

அரசாண்டான், அரசுக்குடையான், அரசுக்குழைச்சான், அரச்சுக்குழைச்சான்
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் அரசதேவன், அரசபுரம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அரசரிற் சிறந்தவன் என்று போற்றப்பட்டவன். இவன் அரசாண்டான், அரசுக்குடையான் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டான். அரசிலி, அரநெறி, அரதைப்பெரும்பாழி என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதலங்களையும், அரசூர், அரசங்குளம், அரங்குளம், அரசமங்கலம், அரசங்குடி என்ற ஊர்களையும் உண்டாக்கி ஆட்சிபுரிந்தான். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.

அரியதன், அரிப்பிரியன்,அரியப்பிள்ளை,
பஞ்சநதிசோழன் மரபில் வந்த சக்ரவர்த்தி அரியசந்திரசோழன். அரிசந்திரபுரம் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அரியதன், அரிப்பிரியன் அன்வும் வழங்கும். காவிரி ஆற்றிலிருந்து அரிசிலாறு என்னும் பேராற்ரையும், முள்ளியாற்றிலிருந்து அரியசந்திர நதியையும் உருவாக்கினான். அரியலூர், அரியமங்கை, அரியக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் அரியதன், அரிப்பிரியன், அரியப்பிள்ளை என்னும் பட்டங்களை கொண்டனர்.

அருவாநாட்டான், அருவாத்தலையன்.
கரிகால் சோழன் வழி வந்தவர்கள். காவிரியின் கழிமுகப் பகுதிக்கு வடக்கேயுள்ள பொண்ணையாற்று பள்ளத்தாக்கு அருவாநாடு என்று அழைக்கப்பட்டது. அதனை ஆண்டவர்கள் அருவாளர் எனப்பட்டனர். கரிகால் சோழன் இந் நாட்டை வெற்றி கொண்டு ஆண்டான் என்றும் வரலாறு கூறுகிறது.(30 கல்வெட்டுகள் வை.சுந்தரேசவாண்டையார்) அருவாநாட்டான், அருவாத்தலையன் என்னும் பட்டங்கள் அருவாநாட்டு வெற்றிகளோடு சம்பந்தப்பட்டுள்ளது. அருவா நாட்டின் வடபால் உள்ள பகுதி அருவாவடதலை நாடாகும். இதனை ஆண்டவர்கள் அருவாவடதலையான் என்று அழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் திரிந்து அருவாத்தலையர் என்று வழங்கிவருகிறது. இப் பட்டமுடைய க்ள்ளர் குடியினர் மன்னார்குடி பைங்காநாடு என்ற ஊரில் வாழுகின்றனர்.

அதியமான், அதிகமான்.
அதிகமான் நெடுமானஞ்சி என்னும் கடையெழு வள்ளல்களில் ஒருவனான மன்னரின் பரம்பரையினர். அதியமான் நெடுமான் அஞ்சி என்ற இயற்பெயர் கொண்ட இம் மன்னன் இன்றைய தர்மபுரியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தான். முதன் முதலாக கரும்பினை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய மன்னனும், கருநெல்லிக் கனியை ஔவைக்கு அளித்து பெருமை பெற்றவனும் இவனே. இவனது வம்சாவழியினர் பிற்காலச் சோழர்கள் காலத்தில் தகடூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார்கள்.

அத்திப்பிரியன், அத்திரியன், அத்திரிமாக்கி
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அத்திசோழன். அத்திக்கோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அத்திகொண்டான், அத்தியாண்டான், அத்திப்பிரியன், அத்தியாளி, அத்தியுடையான் எனவும் வழங்கும். அத்தங்குடி, (அதங்குடி) என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தையும், அத்திப்புலியூர் என்னும் சிவதலத்தையும், அத்திக்கரை, அத்திப்பட்டு எனும் திருப்புகள் பெற்ற சுப்பிரமணிய தலங்களையும், அத்திசோழமங்கலம், அத்திக்கடை, அத்திப்பேட்டை, அத்தியூர், அத்திப்பாக்கம், அத்திவெட்டி, அத்திக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினருக்கு அத்திப்பிரியன், அத்திரியன், அத்திரிமாக்கி என்னும் பட்டங்கள் வழங்குகின்றது. அத்திரி என்பது கோவேறு கழுதையை குறிக்கும். பெருங்குடி மக்கள் அத்திரியை பயன்படுத்தி பிரயானம் செய்தனர். பெருங்குடி வணிகனாகிய கோவலன் அத்திரியில் சென்றதை சிலம்பு குறிப்பிடுகிறது. சங்க காலங்களில் தலைவன் கோவேறு கழுதையில் பயனித்ததை சங்க பாடல்கள் செப்புகின்றன.

இதன் மூலம் இப்பட்டங்கள் சங்ககாலம் முதல் வழக்கத்தில் உள்ளது என்பது தெரிய வருகிறது. இப்பட்டமுடையோர் அதிகமாக வாழும் ஊர்கள் தெரியவில்லை.

அங்கராயர்
முதலாம் இராசேந்திர சோழன் தலைமையில் அங்கம் என்ற நாட்டை வென்று கங்கையில் நீர் எடுத்த வீர பரம்பரையினர். அங்கதேசம் மகாபாரத கர்ண மகா ராஜவின் நாடாகும்.

அச்சிராயர்
சோழப் படையில் குதிரை வீரர்களின் தலைமை ஏற்று வெற்றி வாகை சூடிய வீர பரம்பரையினர். அச்சுவவாரியார் என்பது மருவி அச்சிராயர் என வழங்கப்படலாயிற்று.

அதிகாரி
சோழஅரச ஆணைகளை தலைமையேற்று செயல் படுத்திய நிர்வாகிகள். இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் இவர்களின் பட்டப்பெயர்கள் அதிகமாக கானப்படுகின்றன.

அச்சமறியார்
சோழர் படையில் தற்கொலைப் படைப்பிரிவினராக இருந்தவர்கள். அரசர்கள் போர்க்களம் புகுமுன் காளிக்கோயிலின் முன் வைக்கப்பட்டிருக்கும் சூலாயுதங்களின் மீது மோதி தங்கள் தலையை துண்டித்துக்கொள்ள, இவர்களின் குருதியை திலகமிட்டு அரசர் முதல் போர் வீரர்கள் அனைவரும் களம் புகுவார்கள். மரணபயமே இல்லாத இவர்கள் அச்சமறியார் என பட்டம் சூட்டப்பட்டனர்

அம்மாலைத்தேவர்
செம்பியர் மரபில் வந்த அம்பன் என்னும் மன்னனின் சந்ததியினர். அம்பராயன்பேட்டை, அம்பத்தூர், அம்புக்கோயில் என்னும் ஊர்களை உண்டாக்கியவர்கள்.

அச்சுதன், அச்சுதபண்டாரம், அச்சுததேவன், அச்சுத்தேவன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அச்சுதன். அச்சுதபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அச்சுதராயன், அச்சுததேவன் எனவும் வழங்கப்பட்டது. அச்சுதங்குடி, அச்சுதமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் அச்சுதன், அச்சுதபண்டாரம், அச்சுததேவன், அச்சுத்தேவன் என்ற பட்டங்களை பெற்றனர்.

அயிரப்பிரியன், ஐரைப்பிரியன், அய்யப்பிரியன், ஐயப்பிரியன்,
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் அய்வசோழன் (ஐவசோழன்) ஐயனாபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஐயங்கொண்டான், ஐயாண்டான், ஐயப்பிரியன், ஐயுடையன், ஐயாளி எனவும் வழங்கப்பட்டது. ஐவூர், ஐயூர், ஐவனல்லூர், ஐயன்பேட்டை ( அய்யம்பேட்டை) என்னும் ஊர்களையும் உருவாக்கியரசாண்டவன். ஐயனாறு, ஐயவையனாறு என்னும் சிற்றாறுகளையும் உருவாக்கியவன். இவன் மரபோர் அயிரப்பிரியன், ஐரைப்பிரியன், அய்யப்பிரியன், ஐயப்பிரியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.

அருண்மொழிதேவன், அருமொழிதேவன், விருதராசபயங்கரன், விருதலான், உய்யக்கொண்டான், கொங்கணன், நாடன், நாடான், நாடாள்வான், நாட்டரையன், நாட்டரசன், நாட்டான்,

அண்டங்கொண்டான், அண்ணுண்டான், அண்டப்பிரியன்,அண்ணுப்பிரியன்,அண்ணுத்திப்பிரியன், அண்ணமாண்டான், அண்டமாளியன்,
பஞ்சநதிசோழன் மரபில் வந்த சக்ரவர்த்தி. அண்டபுரம் என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அண்டங்கொண்டான், அண்டமாண்டான், அண்டப்பிரியன், அண்டமாளி எனவும் வழங்கலாயிற்று. அண்ணாமலை என்னும் தேவார சிவ தலத்தையும், அண்டக்குடி(அண்ணுகுடி) அண்டக்குளம், அண்டத்துறை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். சுவர்க்கம், அந்தரம், பூமி என்னும் உலகங்களையும் வென்றவன் என புகழப்பட்டவன்.
"மேலனைத்துலகு மிவ்வகில லோகமெலாம் வென்றுகொண்டவனு மென்றிவர்கள் கொண்ட விறலும்" என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது. இவன் மரபோர் அண்டங்கொண்டான், அண்ணுண்டான், அண்டப்பிரியன், அண்ணுப்பிரியன், அண்ணுத்திப்பிரியன், அண்ணமாண்டான், அண்டமாளியன் என்னும் பட்டங்களை கொண்டனர். இப்பட்டங்கள் சங்ககாலத்தில் வழங்கப்பட்டவை என உறுதி செய்யப்படுகிறது

அன்னவாயில்ராயன், அன்னவாசல்ராயன்,
அன்னசோழன்,அன்னவாயில் என்னும் சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அன்னவாயில்ராயன் எனவும் வழங்கும். சோற்றுத்துறை எனும் தேவார சிவ தலத்தையும், அன்னப்பன்பேட்டை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் அன்னவாயில்ராயன், அன்னவாசல்ராயன் என்னும் பட்டங்களை பெற்றனர்.

ஆக்காட்டரையன், ஆக்காட்டியன்.
அழிசிசோழன், ஆக்காடு என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஆக்காட்டுராயன், ஆக்காட்டரையன், ஆக்காடுகொண்டான், ஆக்காடாண்டான், ஆக்காடுடையான், ஆக்காட்டுப்பிரியன், ஆக்காடாளி என்வும் வழங்கலாயிற்று. சிறந்த வீரமும் கொடையுமுடையவன். நக்கண்ணையார் முதலிய புலவர்களால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல்கள் நற்றிணையில் 87,169ம் பாடல்களாக உள்ளன. ஆக்கூர் என்னும் தேவார சிவ தலத்தையும், ஆக்குடி என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டான். இவன் மரபோர் ஆக்காட்டரையன், ஆக்காட்டியன். என்னும் பட்டங்களை பெற்றனர்.

ஆதனழிசியன், ஆதாழியன்
ஆதனழிசிசோழன், ஆதனக்கோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் நன்பன். (பூதப்பாண்டியன் பாடிய புறநானூறு 71ம் பாடல் ஆதனழிசி பற்றி கூறுகிறது, புறநானூறு மூலமும் பழைய உரையும் பக்கம் 63, உ.வே. சாமிநாத ஐயர்) ஆதனக்குடி, ஆதமங்கலம், ஆதமழை, ஆதனப்பேட்டை, ஆதனூர் எனும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் ஆதனழிசியன், ஆதாழியன் எனும் பட்டங்களை பெற்றனர்.

ஆய்ப்பிரியன், ஆளற்பிரியன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஆய். ஆய்க்கோட்டை, ஆய்ப்பாடி என்னும் நகரங்களை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஆய்ப்பிரியன் எனவும் வழங்கும். ஆய்மூர் என்ற தேவார சிவதலத்தையும், ஆய்மழை, ஆய்மங்கலம், ஆய்ப்பட்டி, ஆய்க்குடி, ஆய்ங்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் ஆய்ப்பிரியன், ஆளற்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.

ஆச்சாப்பிரியன், ஆட்சிப்பிரியன்.
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் ஆச்சன், ஆச்சாபுரம் (பெருமணநல்லூர்) என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். ஆதிசைவர்களுக்கும், கம்மியர்களுக்கும் ஆச்சாரி என்று பட்டம் வழங்கி சிறப்பித்தவன். ஆச்சாப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். ஆச்சாபுரம் (ஆதிச்சபுரம்), ஆச்சாமங்கலம், ஆச்சனூர், ஆச்சங்குடி, ஆச்சான்பட்டி எனும் ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.

ஆரம்பூண்டான், ஆர்சுத்தி, ஆரஞ்சுற்றி, ஆரமுண்டான், ஆரக்கண்ணியன், மாலையிட்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஆத்திமன். ஆத்திக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஆரம்பூண்டான், ஆரஞ்சுற்றி, மாலையிட்டான் என்வும் வழங்கலாயிற்று. இவன் காலத்தில் தான் மருத்துவ குணமிக்க ஆத்திமாலை அணியும் வழக்கம் ஏற்பட்டது. ஆத்தூர், ஆத்தமங்கலம், ஆரம்பூண்டான்பட்டி, ஆத்தங்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் ஆரம்பூண்டான், ஆர்சுத்தி, ஆரஞ்சுற்றி, ஆரமுண்டான், ஆரக்கண்ணியன், மாலையிட்டான் என்ற பட்டங்களையும் பெற்றனர்.

ஆலத்தரையன், ஆவத்தயன், ஆவத்தியான்,
ஆவாத்தியான், ஆலங்கொண்டான், ஆலத்தொண்டான், ஆலத்தொண்டமான், ஆலம்பிரியன், ஆளம்பிரியன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான். ஆலசோழன், ஆலங்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஆலத்தரையன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான், ஆலம்பிரியன், ஆலமாளி எனவும் வழங்கலாயிற்று. ஆலந்துறை, ஆலம்பொழில், ஆலங்குடி, ஆலங்காடு என்னும் தேவார சிவ தலங்களையும், ஆலத்தம்பாடி, ஆலத்தூர், ஆலத்தாங்குடி, ஆலங்காடு, ஆலம்பாக்கம், ஆலம்பள்ளம், ஆலம்பாடி, ஆலக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் ஆலத்தரையன், ஆவத்தயன், ஆவத்தியான், ஆவாத்தியான், ஆலங்கொண்டான், ஆலத்தொண்டான், ஆலத்தொண்டமான், ஆலம்பிரியன், ஆளம்பிரியன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான் என்னும் பட்டங்களை பெற்றனர்.

இராயன், இராங்கியன், இராயங்கொண்டான், இராயமுண்டான், இராயாளி, இராசாளி, இராயப்பிரியன், இராசப்பிரியன், இராங்கிப்பிலியன்.
முசுகுந்த மரபில் வந்த மன்னன் இராயன், இராயபுரம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் இராயங்கொண்டான், இராயாளி, இராயப்பிரியன் என்றும அழைக்கப்பட்டான். இராயநல்லூர் ( இராயந்தூர்), இராயன்பேட்டை, இராயமங்கலம், இராயங்குடி, இராயன்பட்டி (இராங்கியன்பட்டி) எனும் ஊர்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் மேற்கண்ட பட்டங்களை கொண்டனர்.

இளங்கொண்டான், இளமுண்டான்.
இளஞ்சேட்சென்னிசோழன், இளநகர் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியகக் கொண்டவன். இவன் பெயர் இளங்கொண்டான், இளமுண்டான், இளம்பிரியன், இளமுடையவன், இளமாளி, இளநாடன் என்வும் வழங்கலாயிற்று. இளமர்( இளமதுக்கூர்) இளங்கடம்பனூர் என்னும் தேவார சிவதலங்களையும், இளமங்கலம், இளங்கார்குடி, இளங்காடு, இளவனூர், இளையான்குடி என்னுமூர்கலையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இரபோரைப் பாதுகாத்தலையே நோன்பாகக் கொண்டவன். சேரனுடைய பாமுளூரை வெற்றி கொண்டு அதன் பக்கத்தில் இருந்த குன்றில் புலிக்கொடியை நாட்டி அதற்குச் சென்னிமலை என்றும் பெயரிட்டான். ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் இவனை புகழ்ந்து பாடியவை புறநானூற்றில் 10,2003ம் பாடல்களாக இடம் பெற்றுள்ளன. இவன் மரபோர் இளங்கொண்டான், இளமுண்டான் என்னும் பட்டங்கள் பெற்றனர்.

இறையாண்டான், இராரண்டான், இராயாண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் இறையமன். இறையூர் (மாறன்பாடி) என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் இறையாண்டான் எனவும் வழங்கும். இறையனூர், இறையன்செரி என்னும் தேவார சிவதல நகரங்களையும், இறையாங்குடி, இறைமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் இறையாண்டான், இராரண்டான், இராயாண்டான் எனும் பட்டங்களை கொண்டனர்

இடங்காப்பிறந்தான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் இடைமன். இடங்கான் கோட்டை என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். முல்லைநில மக்களுக்கு இடையர் என்னும் பட்டம் வழங்கியவன். இவன் இடங்காப்பிறந்தான் என்றும் அழைக்கப்பட்டான். முல்லை நில மக்களுக்கு இடையர் என்ற பட்டத்தை அளித்தவனும் இவனே.இடைமருதூர், இடைவாய் (விடைவாய்) இடைக்குளம்,இடைப்பள்ளி என்னும் தேவார சிவதலங்களையும், இடையாத்திமங்கலம், இடைக்கோரை, இடையூர், இடையகாடு, இடைக்குடி என்ற நகரங்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் வழி வந்தவர்கள் இடங்காப்பிறந்தான் என்ற பட்டம் பெற்றனர்.

ஈங்கொண்டான்.
ஈசசோழன் ஈங்கை என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் ஈங்கொண்டான், ஈங்காண்டான் என்வும் வழங்கும். ஈங்க்கோய்மலை என்னும் தேவார சிவ தலத்தையும் ஈங்கூர், ஈஞ்சூர், ஈசனூர், ஈசனக்குடி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் ஈங்கொண்டான் பட்டத்தை பெற்றனர். மேலும் இப் பட்டம் ஈழநாட்டிற்கும், ஈழத்துரையன், ஈழமுண்டான் ஈழம்கொண்டான் என்ற பட்டங்களுக்கும் தொடர் கொண்டவை எனவும் அறியப்படுகிறது.

24. ஈழத்தரையன், ஈழங்கொண்டான், ஈழமுடையான், ஈழமுண்டான், ஈழத்திரையன், முடியைக்கொண்டான், கோட்டை சுருட்டி, கோட்டைமீட்டான்,

உறந்தைராயன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் உறந்தைமன். உறையூர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் உறந்தைராயன், உறந்தைகொண்டான், உறந்தைபிரியன் எனவும் வழங்கும். உறந்தூர் என்னும் ஊரையும் உருவாக்கியவன் இவன். இவன் வழிவந்தவர்கள் உறந்தைராயன் என்னும் பட்டம் சுமந்தனர்.

உலகுடையன், உலகுடையான், உலகங்காத்தான், உலகுகாத்தான், உலகாண்டான், உலயன், உலகுய்யன். உலகநாதசோழன், உலகுண்டம்(உலயக்குண்டம்) என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் உலகாண்டான், உலகங்கொண்டான், உலகுடையான், உலகங்காத்தான் எனவும் வழங்கும். உலகங்காத்தான்பட்டி என்ற ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் உலகுடையன், உலகுடையான், உலகங்காத்தான், உலகுகாத்தான், உலகாண்டான், உலயன், உலகுய்யன் என்னும் பட்டங்களை பெற்றனர்

ஒற்றையன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஒற்றைமன். ஒற்றியூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். ஒற்றகுடி, ஒற்றன்காடு, ஒற்றனூர், ஒற்றமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் ஒற்றையன் எனும் பட்டம் கொண்டனர்.

ஒளிராயன்,ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் (ஒண்டிப்பிளியன்)
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஒளிமன். ஒளிகோட்டை ( உள்ளிக்கோட்டை) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அறிவிலும், புகழிலும், கொடையிலும் மிகச்சிறந்தவன். இவன் ஒளிராயன், ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான்.
ஒளியூர், ஒளிமங்கலம், ஒளிக்குடி, ஒளிக்கடை (உள்ளிக்கடை) ஒளிமதி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் ஒளிராயன், ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் (ஒண்டிப்பிளியன்) எனும் பட்டங்களை பெற்றனர்.

ஓடம்போகி, ஓட்டம்பிடுங்கி, ஓட்டம்பிடுக்கி, ஓட்டம்பிடிக்கி.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் ஓடம்போகிசோழன். ஓடம்போகி என்னுமாற்றையும், ஓடாசசேரி, ஓட்டப்பிடாகை, ஓட்டக்குடி, ஓட்டத்தட்டை, ஓட்டப்பிடாரம் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் ஓடம்போகி, ஓட்டம்பிடுங்கி, ஓட்டம்பிடுக்கி, ஓட்டம்பிடிக்கி என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஓமாமரையன், ஓமசையன், ஓமனாயன், ஓமாந்தரையன், ஓந்தரையன், ஓந்திரியன், ஓமாம்பிரியன், ஓயாம்பிலியன். முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் ஓமாம்புலிமன், ஓமாம்புலியூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் ஓமாந்தரையன், ஓமாமரையன், ஓமாம்பிரியன், ஓமாமுடையான் என்றும் அழைக்கப்பட்டான். இவன் மரபினர் மேற்கண்ட பட்டங்களை பெற்றனர்.

ஓரி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஓரி. வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். ஓத்தூர் என்னும் தேவார சிவதலத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். ஓரியூர், ஓரிக்குடி, ஓரிமங்கலம், ஓரிச்சேரி எனும் ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் ஓரி எனும் பட்டம் கொண்டனர்.

ஏனாதிகொண்டான், எத்தொண்டான், ஏத்தொண்டான், ஏனாதியான், ஏனாதிபிரியன், ஏனாட்டுப்பிரியன், என்னாட்டுப்பிரியன், எத்திரிப்பிரியன், எத்தியபிரியன், எத்திரியப்பிரியன், ஏனாதி திருக்கிள்ளிசோழன், ஏனாதி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஏனாதிகொண்டான், ஏனாதியாண்டான், ஏனாதிப்பிரியன், ஏனாதியுடையான், ஏனாதியாளி எனவும் வழங்கும்.சிறந்த வீரமும் கொடையுமுடையவன். ஏனாதிமங்கலம், ஏனங்குடி, ஏனனூர், ஏனாதிகுடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இச் சோழ மன்னன் கோனாட்டு எறிச்சிலூர் மாடவன் மதுரைக்குமரனார் என்னும் புலவரால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல் புறநானூற்றில் 167ம் பாடலாக இடம் பெற்றுள்ளது. இவன் மரபினர் ஏனாதிகொண்டான், எத்தொண்டான், ஏத்தொண்டான், ஏனாதியான், ஏனாதிபிரியன், ஏனாட்டுப்பிரியன், என்னாட்டுப்பிரியன், எத்திரிப்பிரியன், எத்தியபிரியன், எத்திரியப்பிரியன், என்னும் பட்டங்களை பெற்றனர். மேலும் இப்பட்டங்கள் படைத் தலைவர்களுக்கு உரியதாக கருதப்பட்டுள்ளது.சங்க காலத்தில் ஏனாதி பட்டம் என்பது அரசன் தன் படைத்தலைவன் மீது கொண்ட நன்மதிப்பினை உணர்த்த வேண்டி தன் பெயர் பொறித்த கணையாளி ஒன்றை அளிப்பதாகும். சங்ககாலத்தில் மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன், ஏனாதி திருக்கிள்ளி, சோழிய ஏனாதி திருக்குட்டுவன் ஆகியோர் ஏனாதிபட்டம் பெற்ற அரசர்களாவார்கள். ஏனாதி சாத்தஞ் சாத்தனார் ஏனாதி பட்டம் பெற்ற புலவராவார். இதன் மூலம் இப் பட்டங்கள் சங்ககாலம் முதல் வழங்கிய பட்டங்கள் என்று அறியமுடிகிறது.

கடம்பன், கடம்பையன், கடம்பராயன், கடம்பரான், கடம்பையாண்டான், கடம்பைகொண்டான், கடம்பைப்பிரியன், கடம்பையுடையான், கடம்பையாளியான், கடம்பசோழன், பெருங்கடம்பனூர் என்னும் தேவார சிவ தலத்தை உருவாக்கி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் கடம்பன், கடம்பராய, கடம்பையாண்டான், கடம்பைகொண்டான், கடம்பைப்பிரியன், கடம்பையுடையவன், கடம்பையாளி என்வும் வழங்கலாயிற்று. குழித்தண்டலை, கடம்பன்துறை, கடம்பூர், கடவூர், கடவூர்மயானம் என்னும் தேவார சிவ தலங்களையும்,கடம்பர்வாழ்க்கை, கடம்பன்குடி, கடலங்குடி என்னும் ஊர்களையும், கடலாழி என்னும் சிற்றாற்றையும் உண்டாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் கடம்பன், கடம்பையன், கடம்பராயன், கடம்பரான், கடம்பையாண்டான், கடம்பைகொண்டான், கடம்பைப்பிரியன், கடம்பையுடையான், கடம்பையாளியான் எனும் பட்டங்களை பெற்றனர்.

கருக்கொண்டான் (கருப்பூண்டான்) கருப்பையன் (கருப்பட்டியன்) கருவூரான் (கருப்பூரான்)
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கருப்பைமன். கருவூர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கருவூரான், கருக்கொண்டான் எனவும் வழங்கப்பட்டது. கருங்குலம், கருவாக்குரிச்சி, கருப்பூர், கருப்புக்களர், கருவிலி, கருப்பறியலூர், கருக்குடி, கருகாவூர், கருப்பட்டிமூலை, கருங்கண்ணி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் கருப்பூண்டான், கருப்பட்டியன், கருப்பூரான் எனும் பட்டங்களை பெற்றனர்.

கஞ்சராயன், கஞ்சன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கஞ்சமன். கஞ்சனூர் என்னும் தேவார சிவதல நகரையுண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கஞ்சராயன் எனவும் வழங்கப்பட்டது. இவன் மரபோர் கஞ்சராயன், கஞ்சன் எனும் பட்டங்களை பெற்றனர்.

கங்கைநாட்டான், கங்கநாட்டான், சோழகங்கநாட்டான், சோழகங்கதேவன், சோழங்கர்.
தென்னிந்திய சாசன புத்தகம் மூன்றாவது தொகுதி முதற்பகுதி 59ம் சாசனம் கூறும் சோழகங்கன் என்னும் பட்டம், இராசராச சோழன் தன் தம்பி மதுராந்தகனுக்கு வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. சோழகங்கன், பினனர் சோழங்கன் என்றும் சோழங்கர் என்றும் மருவி வந்துள்ளது. இராசராசன் வெற்றி கொண்ட நாடுகளில் கங்கபாடி, நுளம்பாடி, தடிகைபாடி என்பனவும் அடங்கும். கங்கபாடி மைசூர் நாட்டின் தென்பகுதியும், சேலத்தின் வடபகுதியும் இனந்த பரப்பாகும். இதனை ஆண்டவர்கள் குவாளாபுர பரமேசுவரர்களான மேலைக்கங்கர்களாவர். கங்கபாடி வெற்றியின் பின்னர் வெற்றி தந்த மறவர்களுக்கு இராசராசன் வழங்கிய பட்டங்கள் கங்கைநாட்டான், கங்கநாட்டான், சோழகங்கநாட்டான், சோழகங்கதேவன், சோழங்கர் என்பனவாகும். இப் பட்டங்களை கொண்ட கள்ளர் குல மக்கள் தஞ்சைமாவட்டம் அம்மாபேட்டை புத்தூர், சோழகன்பட்டி, முத்தாண்டிப்பட்டி, துண்டிராயன்பட்டி, திண்ணமங்கலம், திண்ணகுளம், தொண்டராம்படுகை, தொண்டைமான்பட்டி, நாகத்தி,கண்ணுகுடி, மன்னார்குடி நெடுவாக்கோட்டை, புதுக்கோட்டை இராப்பூசல், திருவப்பூர், திருச்சி கல்விக்குடி ஆகிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர்.

கண்டியன், இராசகண்டியன், கண்டியர்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கண்டியன். கண்டியூர் என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். சின்னக்கண்டியூர், கண்டியன் காடு, கண்டியன்பட்டு (கண்டிதன்பட்டு) கண்டியன்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் கண்டியன், இராசகண்டியன், கண்டியர் எனும் பட்டங்களை கொண்டனர். கண்டியன் என்ற பட்டமுடைய கள்ளர் இனமக்கள் தஞ்சை மாவட்ட முத்துவீரக்கண்டியன்பட்டி, நந்தவனம்பட்டி, மனையேறிபட்டி, ஆவாரம்பட்டி, புங்கலூர், கக்கரை, பின்னையூர், மண்டலக்கோட்டை, நெல்லுப்பட்டு, ஆர்சுற்றிப்பட்டு, மன்னார்குடி பைங்காநாடு, தலையாமங்கலம், எடமேலையூர், வடுவூர், திருக்களர், பெருகவாழ்ந்தான், கருவாக்குறிச்சி, சொக்களாவூர், கீராலத்தூர், சோழபாண்டி, பட்டுக்கோட்டை ஆவிக்கோட்டை, பெரியகோட்டை, அதிராம்பட்டிணம், திருவையாறு திருச்சின்னம்பூண்டி, மகாராசபுரம், புதுக்கோட்டை கீழக்கரைமீண்டார் கோட்டை, புதுக்கோட்டை விடுதி, பாச்சுக்கோட்டை, கீழாத்தூர் முதலிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர்.

இராசகண்டியன், இராசராச சோழனின் சிறப்புப் பட்டங்களில் ஒன்றாகும். இராசகண்டியன், இராசகண்டியர் என்று உருமாறி இன்று கண்டியர் என்று அழைக்கப்படுகின்றனர். செம்பியன் மரபில் வந்தவர்கள். கண்டியூர், கண்டியன்பட்டு (இன்றைய கண்டிதம்பட்டு) கண்டியன் காடு என்னும் ஊர்களையும் உருவாக்கி ஆண்டவர்கள். இவர்களின் கண்டியூர் அரண்மனை சோழநாட்டு நித்தவிநோத வளநாட்டு கிழார்க் கூற்றத்து ஆயிரத்தளி அரண்மனை என்ற பெயருடையது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216 - 1244) சோழர்களை வென்று இந்த அரண்மனையில் தான் முடிசூடிக்கொண்டான் என்பது வரலாறு. இராசராச சோழன் ஈழத்தை வென்று பண்டைய தலைநகரான அணுராதபுரத்தை அழித்த பின் சனநாதமங்கலம் என்ற புதிய ( இன்றைய பொலன்னருவா) தலைநகரை உருவாக்கினான். நாக நாடு, வன்னி, திரிகோணமலை, பொலன்னருவா மற்றும் அணுராதபுரம் போன்ற இடங்களே சோழ ஆட்சிக்கு உட்பட்டிருந்தது (மகாவம்சம்) இக் கால கட்டத்தில் இலங்கையின் தென்பகுதி சோழனின் ஆட்சிக்கு உட்படவில்லை. தொடர்ந்து சிங்கள மன்னர்களின் ஆட்சியில் இருந்ததால் இடையூராக இருந்தது. இந்நிலையை மாற்றி இலங்கை முழுவதும் சோழனின் ஆட்சி அமைய போர் படை அமைத்து தலைமை தாங்கி வெற்றி கண்டவன் கண்டியூர் இளவரசன் இராசகண்டியன். இதன்பின் இலங்கையின் மையப்பகுதியில் புதிய தலைநகரை உருவாக்கி இராச கண்டியன் மாநகரம் என்று பெயரும் சூட்டப்பட்டு சோழனின் பிரதிநிதியாக ஆட்சி ஏற்றான். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இராச கண்டியன் மாநகரம் கண்டி என்ற பெயருடன் ராஜதானியகவே திகழந்தது. இன்றும் சிங்கள மக்கள் கண்டியை மாநுவர என்ற பெயர் கொண்டே அழைக்கின்றனர். மாநுவர என்றால் சிங்கள மொழியில் தலைநகரம், மாபெரும் நகரம் அல்லது ராஜதானி என்று பொருள் படும். உலக நாடுகளில் முதன் முதலில் சோழனின் ஆதிக்கத்தை ஏற்படுத்திய பெருமை இராசகண்டியனுக்கே உரியது. இதனை பெருமைப்படுத்தவே இராசராச சோழன் இராசகண்டியன் என்ற சிறப்புப் பட்டத்தை தான் ஏற்றான் என்பதும் வரலாறு.

கன்னமுடையன், கன்னப்படையன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கன்னன். கன்னபுரம் என்னும்நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். கன்ணாண்டான், கன்னகொண்டான், கன்னமுடையான், கன்னப்பிரியன், கன்னாளி எனும் பெயர்களிளும் அழைக்கப்பட்டான். கன்றாப்பூர் (கன்னாப்பூர்) கன்னாரப்பேட்டை, கன்னந்தகுடி, கன்னக்கொடையான் எனும் ஊர்களையும், கன்னாறு என்னும் காட்டாற்றையும் உருவாக்கி ஆட்சி புரிந்தான். இவன் மரபு வம்சத்தினர் கன்னமுடையன், கன்னப்படையன் என்ற பட்டங்களை பெற்றனர்.
கன்னகுச்சிராயன், குச்சிராயன், திராணி

கண்டன், கண்டராயன், கண்டவராயன், கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி, கண்டப்பிரியன், கண்டப்பிள்ளை, கடாப்பிள்ளை.
கண்டர்கிள்ளி சோழன், கண்டர்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கண்டன், கண்டராயன், கண்டப்பிரியன் எனவும் வழங்கலாயிற்று. கண்டதேவி என்னும் தேவார சிவ தலத்தையும் கண்டமங்கலம், கண்டர்மாணிக்கம், கண்டனூர், கண்டராயன்பட்டி, கண்டர்குடி(கண்ணுகுடி) என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் கண்டன், கண்டராயன், கண்டவராயன், கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி, கண்டப்பிரியன், கண்டப்பிள்ளை, கடாப்பிள்ளை என்னும் பட்டங்களை பெற்றனர்.

கலயன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சாய்மன். சாயக்கோட்டை (கலயநல்லூர்) என்னும் தேவார சிவதலத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். மேலும் சாய்க்காடு, சாய்க்களூர் என்னும் சிவதலங்களையும் உருவாக்கியவன். இவன் மரபு வம்சத்தினர் கலயன் என்ற பட்டம் பெற்றனர். கலியன், கலியாட்சி, கலிச்சி, கலிச்சியன், கலிக்கொண்டார், கலிப்பிரியர், கலியனான், கலியராயன், கலியரையன், கலியாளியன், கலிவுடையான். கலிகாமசோழன் கலியாணபுரம் என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் கலியன், கலிராயன், கலியரையன், கலியாண்டான், கலிகொண்டான், கலிப்பிரியன், கலியுடையான், கலியாளி, கலியாட்சி எனவும் வழங்கலாயிற்று. எதிரிகளுக்கு துன்பம் விளைவிக்கும் ஆற்றல் பெற்றவன், கலிக்காமூர் என்னும் தேவார சிவ தலத்தையும் கலியாணோடை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் பலகாலம் தன்னை கலியன் என்று அழைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. துன்பம் நிறைந்த காலத்தை கலிகாலம், கலியுகம் என்பதும் தெரிந்ததே. கலிகாமசோழன் மரபோர் கலியன், கலியாட்சி, கலிச்சி, கலிச்சியன், கலிக்கொண்டார், கலிப்பிரியர், கலியனான், கலியராயன், கலியரையன், கலியாளியன், கலிவுடையானென்னும் பட்டங்களை பெற்றனர். இப்பட்டமுடையோர் தஞ்சை மாவட்ட நீடாமங்கலம், சித்தமல்லி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலியராயன்பட்டி, கரம்பக்குடி, கீரனூர், இலந்தைவாடி, பிலாவிடுதி, குலத்திரான்பட்டு என்னுமூர்களில் அதிகமாக வாழுகின்றனர்.

கரம்பையன், கரம்பைகொண்டான், கரமுண்டார்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கரம்பைக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். கரவீரம், கரபுரம் என்னும் தேவாரசிவ தலங்களையும் கரம்பை, கரம்பையம், கரம்பைகுடி, கரஞ்சிப்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் கரம்பையன், கரம்பைகொண்டான், கரமுண்டார் எனும் பட்டங்களை சுமந்தனர்.

கச்சிராயன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கச்சிமன். கச்சி என்னும் தேவார சிவதல நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கச்சிராயன் எனவும் வழங்கும். கச்சூர், கச்சியூர், கச்சையூர் என்னும் தேவார சிவதலங்களையும், கச்சிக்குடி, கச்சிமங்கலம் (கச்சமங்கலம்) காஞ்சிப்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கச்சிராயன் எனும் பட்டத்தையும் சுமந்தனர். மேலும் கச்சி என்பது காஞ்சியின் மாற்றுப் பெயராகும். காஞ்சியை ஆண்டோர் தம்மை கச்சிராயன் என அழைத்துக் கொண்டனர் எனவும் தெரிகிறது. சோழர் கல்வெட்டுகளில் கச்சிராயன் என்ற பட்டமுடைய பல தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். அரசன் ஏழிசை மோகனாகிய சநநாதக் கச்சிராயன் என்பவன் பல்லவர் குலத்தில் பிறந்தவனாவான். திருமுனைப்பாடி நாட்டில் திருவதிகை, திருநாவலூர் முதலான ஊர்களை சார்ந்த நிலப்பகுதிகளில் நாடுகாவல் அதிகாரியாக விளங்கியுள்ளான். கி.பி 1171 ஆம் ஆண்டில் திருவதிகை வீரட்டனேசுவரர்க்கு திருவிளக்கு ஏற்ற நிவந்தம் அளித்துள்ளதாக ஒரு கல்வெட்டு உணர்த்துகிறது. இதன் மூலம் கச்சிராயன் என்னும் பட்டம் சோழர்களுக்கும் பல்லவர்களுக்கும் உரிய பட்டம் என்பது தெரிகின்றது.

கத்தரிகொண்டான், கத்தூரிமுண்டான், கத்தரியன், கத்தூரியன், கத்தரிநாடன், கத்திநாடன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கத்தரிமன். கத்தரி என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கத்தரிகொண்டான், கத்தரிநாடன் எனவும் வழங்கும். கத்தரிமங்கலம், கத்தரிக்குடி, கத்தரிக்காடு, கத்தரிப்புலம், கத்தரிக்கொல்லை என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் கத்தரிகொண்டான், கத்தூரிமுண்டான், கத்தரியன், கத்தூரியன், கத்தரிநாடன், கத்திநாடன்.என்ற பட்டங்களை பெற்றனர்.

காவலக்குடியன், காலாக்குடியன்,காவாளி, காவாலி, காவாடி, காலாடி,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காவலன். காவலகுடி என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் காவலகுடியன், காவாளி எனவும் வழங்கும். காலம்(கைச்சினம்) என்னும் தேவார சிவதல நகரத்தையும், காவளூர்,கானூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் காவலக்குடியன், காலாக்குடியன், காவாளி, காவாலி, காவாடி, காலாடி எனும் பட்டங்களை கொண்டனர்.

காரையாட்சி, காரைக்காச்சி
மாந்தாதா மரபில் வந்த மன்னன் கார்மன், காரைக்கோட்டை எனும் நகரத்தை இராசதானியாகக் கொண்டவன். காரைவாயில் (காராயில்), காரைமேடு(கழிப்பாழை), காரைக்காடு, காரைக்கால், காரைப்பாக்கம், காரைபட்டு, காரைப்பட்டி, காரைக்குடி, காரைப்பள்ளம், காரப்பன்காடு, காரைமங்கலம், என்ற ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.

காடவராயன்.
பல்லவ மரபு வழி வந்தவர்கள். தொண்டை மண்டலத்தில் காடுகளை அழித்து நாடு, நகரங்களை உருவாக்கி அரசாண்டவர்கள். சங்க இலக்கிய சான்றுகளால் அறியப்படும் முதல் காடவன் ஐயடிகள் என்னும் சைவ அடிகளாவார். இவரை சுந்தரமூர்த்தி நாயனார் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் என்று திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடுகிறார். நம்பியாண்டார் நம்பி இவரை பக்திக்கடல் ஐயடிகளாகின்ற நம்பல்லவனே என்று கூறுகிறார். சேக்கிழார் இவரை பல்லவர் தம்குலமரபின் வழித்தோன்றல் என்றும் கூறுகின்றனர். பிற்கால சோழர் அரசியலில் காடவச் சிற்றரசர்களின் பங்கு மிகப்பெரியதாக இருந்துள்ளது. எழிசை மோகன் ஆட்கொல்லியான குலோத்துங்கச் சோழக் காடவராயன் (கி.பி 1129), கடலூர் ஆளப்பிறந்தான் மோகனாகிய இராசராச காடவராயன்(1136), செஞ்சியர்கோன் காடவன்(1152) என்போர் அதிகாரிகளாகவும், சிற்றரசர்களாகவும் சோழர் ஆட்சியில் பணிபுரிந்துள்ளனர். காடவராயர் என்ற பட்டம் எவ்வித திரிபும் இன்றி இன்றும் வழங்கிவருவது குறிப்பிடத் தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் காடவராயன்பட்டி, நமல்பட்டி, தஞ்சை மாவட்டம் பஞ்சநதிக்கோட்டை, கருக்காக்கோட்டை, ஈச்சங்கோட்டை, ஆழிவாய்க்கால், சாமிப்பட்டி, மருங்குளம், புதுவூர் முதலிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர்,

காடுவெட்டி
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காடுவெட்டி. காடுகளை வெட்டி அழித்து நகரங்களை உருவாக்கியவன். காட்டூர், மேலக்காட்டுப்பள்ளி, கீழைக்காட்டுப்பள்ளி என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் மரபினர் காடுவெட்டி எனும் பட்டம் கொண்டனர். காடவராயன் என்ற பட்டத்துடன் தொடர்புடைய பட்டம் காடுவெட்டி என்றும், காடுவெட்டி என்பது பல்லவரது பெயராக சாசனங்களிலும் வருகிறது. கங்கவேந்தர்களின் செப்பேடுகள் காஞ்சி மாநகரத்தை காடுவெட்டிகள் ஆண்டதாக கூறுகின்றன. காடுவெட்டி பேரரையன், காடுவெட்டி தமிழ் பேரரையன், விடேல் விடுகு காடுபட்டித் தமிழ் பேரரையன் என்போர் பல்லவ பெரு வேந்தர்களின் கீழிருந்த பல்லவ சிற்ரசர்கள், தலைவர்களென்றும் சுட்டுகின்றன. பழைய திருவிளையாடல் புரானத்தில் பல்லவ குல காடுவெட்டி என்பவனின் பெருமையும் அவனது பக்திச் சிறப்பும் கூறப்பட்டுள்ளது. காடுவெட்டி பட்டமுடையோர் புதுக்கோட்டை அம்மாவட்டத்தில் காடுவெட்டிவிடுதி, பாலக்குடிப்பட்டி, உஞ்சைவிடுதி, அரிமளம் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். காடுவெட்டிகள் சோழர் மற்றும் பல்லவர் மரபினர் என்றும் அறிய முடிகிறது.

காங்கயன், காங்கியன், காங்கேயன்.
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த காங்கமசோழ சக்ரவர்த்தி. காங்கயம்(காங்கயன்பட்டி) என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் காங்கயன் எனவும் வழங்கும். காலனுக்கு இது வழக்கென்று போதித்தவன் (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்) இவன் மரபோர் காங்கயன், காங்கியன், காங்கேயன் எனும் பட்டங்கள் கொண்டனர். வீரசோழப் பெரிய காங்கேயன் என்பவன் சோழ வல்லரசில் பெரும் வீரனாக விளங்கியுள்ளான். இவன் பெரியகுலத் தலைவன், கங்கை முதல்வன் எனவும் அழைக்கப்பட்டுள்ளான். இவன் கொங்குசோழ மன்னர்களின் முதல்வனும் ஆவான். இவன் குடியோறிய இடம் காங்கேயம் எனவும் அழைக்கப்படுகிறது. நன்னிலம் வட்டம் திருவாஞ்சியம் கோயில் கல்வெட்டு ஒன்றில் ஆதி சண்டிகேசுவரர் கோயிலுக்கு நிலம் விற்றுக்கொடுத்த தகவலும் அதில் கையெழுத்திட்டுள்ள அதிகாரிகளுள் ஒருவனாக காங்கேயன் இடம் பெற்றுள்ளான். இவன் வழி வந்தோர் சோழர் படைதலைவராகவும், அதிகாரியாகவும் கொங்குநாட்டில் பணியாற்றி உள்ளனர். இப்படம் முடையோர் தஞ்சை மாவட்ட காங்கேயன்பட்டியில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

காரி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காரி. வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். காரிக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். காரிக்கரை என்னும் தேவார சிவதலத்தையும் உண்டு பண்ணியவன். காரியூர், காரிபட்டி, காரிமங்கலம், காரிகுடி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் காரி எனும் பட்டம் கொண்டனர்.

காசிராயன், காசிநாடான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காசிமன். காசாங்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். தென்காசி, சிவகாசி என்னும் பிரபலமான சிவதலங்களையும், காசாங்காடு என்னும் ஊர்களையும் உண்டு பண்ணி அரசாண்டவன். இவன் மரபினர் காசிராயன், காசிநாடான் எனும் பட்டங்களை பெற்றனர்.

கிள்ளி, கிள்ளியான், கிளாக்கன், கிள்ளிராயன், கிளிராயன், கிள்ளிகொண்டான், கிள்ளியாளி, கிளியிநார், கிளிகண்டான், கிள்ளியாண்டான், கிளியாண்டான் கிள்ளிசோழன், கிள்ளிகோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கிள்ளிராயன், கிள்ளிகொண்டான், கிள்ளியாண்டான், கிள்ளிப்பிரியன், கிள்ளியாளி எனவும் வழங்கலாயிற்று. நிலத்தை கிள்ளி உழுதமையால் இவன் காலம் முதல் சோழர்களுக்கு கிள்ளி என்னும் பெயர் வழங்கலாயிற்று. கிள்ளிக்குடி என்னும் தேவார சிவ தலத்தையும் கிள்ளியனூர்(கிளியனூர்) கிள்ளியூர்(கிளியூர்) கிள்ளிபட்டி(கிளிப்பட்டி) கிள்ளிமங்கலம்(கிளிமங்கலம்) என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். புறநானூறு கிள்ளி என்னும் பெயர்களுடைய ஏழு சோழ மன்னர்களை குறிப்பிடுகிறது.1. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, 2. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், 3. .சோழன் நலங்கிள்ளி, 4. சோழன் வேற்பறடக்கைப் பெருவிறற்கிள்ளி, 5. சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி, 6. சோழன் நெடுங்கிள்ளி,7. சோழன் நெடுமுடிக்கிள்ளி. இவர்களின் வழி வந்தோர் கிள்ளி, கிள்ளியான், கிளாக்கன், கிள்ளிராயன், கிளிராயன், கிள்ளிகொண்டான், கிள்ளியாளி, கிளியிநார், கிளிகண்டான், கிள்ளியாண்டான், கிளியாண்டான் என்னும் பட்டங்களை பெற்றனர். இப்பட்டங்கள் சங்க காலத்தவை என்பதும் புலனாகிறது.

கீரமுடையன்,கீருடையன், கீரரையன், கீரையன்,கீரைக்கட்டயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கீரமன். கீரநகரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கீரங்கொண்டான், கீரமுடையன், கீரரையன் என்வும் வழங்கலாயிற்று. கீரக்களூர் என்னும் சிவதலத்தையும், கீரமங்கலம், கீரனூர், கீரங்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கீரமுடையன், கீருடையன், கீரரையன், கீரையன், கீரைக்கட்டயன் என்ற பட்டங்களை பெற்றனர்.

கீழாண்டான், கிழண்டன், கீழுடையான், கீழாளி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கீழைமன் கீழக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவனை கீழ்கொண்டான், கீழுடையான், கீழ்ப்பிரியன், கீழாளி, கீழாண்டான் என்றும் அழைத்தனர். வேளாளரில் ஒரு வகுப்பாருக்கு கிழார் என்ற பட்டமும் கொடுத்தவன். கீழையிலான் (கீழையூர்) கீழைவழி, கீழையம் என்னும் தேவார சிவதலங்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் வழி வந்தவர்கள் கீழாண்டான், கிழண்டன், கீழுடையான், கீழாளி என்ற பட்டங்களை பெற்றனர்.

குண்டையன், கொன்றையன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் குண்டையன். குண்டையூர், குண்டூர், குண்டாகோயில், குண்ணூர், குண்ணலூர், குண்ணுவாரத்தி என்னும் நகரங்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் குண்டையன், கொன்றையன் எனும் பட்டங்களை கொண்டனர்.

குழந்தைராயன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் குழைமன். குழகு (குழகர்கோயில்) தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். குழையூர் என்னும் சிவதலத்தையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் குழந்தைராயன் எனும் பட்டம் பெற்றனர்.

குளந்தைராயன், கொழுந்தைராயன்.
கிள்ளிவளவ சோழன், உறையூரை இராசதானியாகக் கொண்டவன். குளத்தூர் என்னும் சிவ தலத்தையும், குளமங்கலம், குளக்குடி, குளப்பாடு, குளப்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். வீரமும் கொடையுமுடையவன். கருவூரை முற்றுகையிட்டு சேரனை தூங்கெயிலெறிந்து வென்றவன். அழகிய சோலை சூழ்ந்த குளத்தருகிள் துயின்ற காரணத்தினால் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன் என்று பெயர் பெற்றவன். கவி பாடுவதிலும் வல்லவன். இவன் பாடிய பாடல்கள் புறநானூற்றில் 173ம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஆலந்தூர்கிழார், ஆவூர்மூலங்கிழார், கோவூர்கிழார், வேள்ளைக்குடி நாகனார், இடைக்காடனார், எருக்காட்டூர் தாயங்கண்ணனார், நல்லிறையனார், மானொக்கத்து நப்பசலையார், ஐயூர் முடவனார், ஆடுதுறைமாசாத்தனார், சல்லியங்குமரனார் என்னும் புலவர் பெருமக்கள் புகழ்ந்தும் இறந்தபின் வருந்தியும் பாடப்பெற்றவன். இப் பாடல்கள் புறநானூற்றில் 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 46, 69, 70, 226, 227, 386, 393, 397ம் பாடல்களாகவும், நற்றினையில் 141ம் பாடலாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. இவன் மரபோர் குளந்தைராயன், கொழுந்தைராயன் என்ற பட்டங்களை பெற்றனர்.

குமாராண்டான், குமரண்டான்.
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் குமாரசோழன். குமாரபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் குமாராண்டான் என்வும் வழங்கப்பட்டது. குமாரமங்கலம், குமாரங்குடி, குமாரனூர் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் குமாராண்டான், குமரண்டான் என்ற பட்டங்களை கொண்டனர்.



No comments:

Post a Comment