★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Saturday, 27 October 2012

மாவீரர்களின் 211 வது குருபூஜை விழா

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 211 வது குருபூஜை விழா 27-10-2012 அன்று மறத்தமிழர் சேனை சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப் பட்டது.













எழுச்சிமிக்க கூட்டத்தின் நடுவே மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் 





மேலும் செய்திகள் விரைவில் ஏற்றப்படும்.









Saturday, 29 September 2012

pothai illa thamilnadu

pothai ozhippu


avasiyam


vendum


inraiya thinaththil...



intha


vanakkam


ok

Friday, 31 August 2012

கமுதியில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாளி அடித்து கொல்லப்பட்டார்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற  தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. காதர் பாட்சா என்ற வெள்ளைச்சாமி (வயது 70) இவர் கமுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் ருக்குமணி இவர்களுக்கு 2 மகன், 5 மகள்கள் உள்ளனர்.

வெள்ளைச்சாமி தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். இன்று அதிகாலையில் வெள்ளைச்சாமி வாக்கிக் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். பின்பு அவர் வீட்டில் இருந்தபோது மேலராமநதியை சேர்ந்த தனசீலன் (வயது 42) என்பவர் வந்தார். அவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெள்ளைச்சாமியை வெட்டினார். அவர் கூச்சல் போட்டு அலறினார். அலறல் சத்தம் கேட்டு மனைவி ருக்குமணி ஓடிவந்தார். அவரையும் தனசீலன் அரிவாளால் வெட்டினார்.

சரமாரியாக வெட்டுப்பட்ட வெள்ளைச்சாமி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். இதற்கிடையில் வெள்ளைச்சாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். இதை அறிந்ததும் தனசீலன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.  ஆனால் அவர்கள் தனசீலனை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அவரும் பரிதாபமாக  இறந்தார்.


இதுபற்றிய தகவல் கமுதி போலீசாருக்கு தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த வெள்ளைச்சாமி-தனசீலன் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

முன்னாள் எம்.எல்.ஏ. கொலை செய்யப்பட்ட சம்பவம் கமுதி முழுவதும்  பரவியது. அங்கு ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனால்  அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Monday, 27 August 2012

மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 297 வது பிறந்தநாள் விழா

அருப்புக்கோட்டை ஒன்றிய , நகர மறத்தமிழர் சேனை சார்பாக நெற்கட்டும்செவ்வேல் மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 297 வது பிறந்தநாள் விழா வருகின்ற செப்-1 அன்று அருப்புக்கோட்டை, மதுரை ரோடு, ராமலிங்கா சமுதாய கூடத்தில் மாலை 5.௦௦ மணியளவில் நடைபெறுகிறது.

பிறந்தநாள் விழாவிற்கு அருப்புக்கோட்டை நகர செயலாளர் ச.லட்சுமணபாண்டியன் அவர்கள்  தலைமை தாங்குகிறார். விழாவில் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள்,  தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவை தலைவர் எஸ்.ஆர்.தேவர் அவர்கள்,  தமிழக மக்கள் பார்வர்ட் பிளாக் தலைவர் Dr.சு.மனோகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.


விருதுநகர் மாவட்ட செயலாளர் மு.ஆறுமுகம் அவர்கள் முன்னிலை வகிக்க, அருப்புக்கோட்டை நகர தலைவர் ம.இராமலிங்கம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார்கள். கூட்டத்தில் மாநில துணைப்பொதுச் செயலாளர் T.R.K.மணிகண்டன் அவர்கள், மாநில இளைஞர் சேனை  செயலாளர் ம.கார்த்திக் அவர்கள், மாநில மாணவர் சேனை செயலாளர் மு.வெள்ளைப்பாண்டியன் அவர்கள், மாநில தொண்டர் சேனை செயலாளர் பசும்பொன் மு.முத்துகுமார் அவர்கள், விருதுநகர் மாவட்ட இளைஞர் சேனை  செயலாளர் மு.நாகேந்திரன் அவர்கள், விருதுநகர் மாவட்ட இளைஞர் சேனை  தலைவர் மு.சுப்பிரமணி அவர்கள், விருதுநகர் மாவட்ட மாணவர் சேனை செயலாளர் ம.மாரீஸ்வரன் அவர்கள், விருதுநகர் நகர் செயலாளர் சு.ஹரிபாஸ்கர் அவர்கள், கலந்து கொள்கிறார்கள்.

அருப்புக்கோட்டை நகர் பொருளாளர் ஜெ.செந்தில் அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார்கள்.



விழா ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர் சு.சரவணன் அவர்கள் , நகர இளைஞர்சேனை தலைவர் ப.சதீஸ்குமார் அவர்கள், நகர இளைஞர்சேனை செயலாளர் எம்.சரவணபாண்டி அவர்கள், ஒன்றிய இளைஞர்சேனை செயலாளர் ர.பாண்டியராஜன் அவர்கள் செய்கிறார்கள்.

Saturday, 28 July 2012

viruthunagar

மறத்தமிழர் சேனை "விருதுநகர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்" 29-07-2012 அன்று மாலை 4.00 மணியளவில் விருதுநகரில் நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் M.ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் மாநில அமை...ப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள், மாநில துணைப் பொதுச் செயலாளர் T.R.K.மணிகண்டன் அவர்கள், மாநில தொண்டர் சேனை செயலாளர் பசும்பொன் மு.முத்துக்குமார் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

Thursday, 5 July 2012

அகில இந்திய பார்வர்ட் பிளாக் செயற்குழு


அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டமும், இராமநாதபுரம் மாவட்ட அரசியல் ஆலோசனை கூட்டமும் 03-07-2012 அன்று கமுதி தேவர் மகாலில் மாலை 03.00 மணியளவில் தமிழ் மாநில பொதுச்செயலாளர் P.V.கதிரவன் M.L.A அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.   

கூட்டத்தில் பார்வர்ட் பிளாக் மாநில தலைவர் M.K.பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார். மாநில தலைமைசெயற்குழு உறுப்பினர்கள் R.மாயத்தேவன், திருப்பூர் ராஜசேகர், திண்டுக்கல் ஜெயராமன், கமுதி ராஜேஸ்வரன், முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துவேல், மாநில தொழிலாளர் அணிச்செயலாளர் ஆனந்தமுருகன் இராமநாதபுரம் மறவர் முன்னேற்ற சங்கம் தலைவர் முத்துப்பாண்டி, செல்வக்குமார், தெளிச்சாத்தநல்லூர் மாரிசெல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கமுதி கோட்டைமேட்டில் அமைந்துள்ள தெய்வீகத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி எவ்வித வளர்ச்சியுமின்றி இருப்பதால் உடனடியாக அரசு தலையிட்டு I.A.S அளவில் நிர்வாக அதிகாரியை நியமித்து பல்வேறு சிறப்பு பாடபிரிவுகள் மற்றும் கட்டிடம் விடுதி போன்ற வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


              மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகையில் “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களாலும், வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் அவர்களாலும் வழிநடத்தப்பட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியானது, தேவர் தந்த தேவர் P.K.மூக்கையாத் தேவர் அவர்களுக்குப் பிறகு ஒரு திறமையான, வலிமையான தலைவர் இன்றி திணறிவருகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் அசைக்க முடியாத அரசியல் கட்சியான பார்வர்ட் பிளாக் கட்சி உசிலம்பட்டி தொகுதிக்குள் மட்டுமாக முடங்கி போய்விட்டது. இந்நிலை மாறவேண்டுமெனில் அந்தந்த பகுதிக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும். விரிவான செயல்திட்டமும், செயல் படுத்துவதற்கு ஆனந்தமுருகனைப் போன்ற தன்னலமில்லா போராளிகளையும் உருவாக்க வேண்டும். வலுவான போராட்டங்களும், முறையான நடைமுறை விதிகளும் பின்பற்றப்படாத எந்த இயக்கமும் பின்னடைவை சந்திக்கும் என்பதற்கு பார்வர்ட் பிளாக் முன்னுதாரணம் ஆகிவிட்டது. தற்பொழுது திரு கதிரவன் அவர்கள் உசிலம்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆளும் கூட்டணி அரசிலும் அங்கம் வகிக்கிறார். இத்தகைய சூழலில் தமிழக முதல்வரிடம் நம் இனம் சார்ந்த, நலன் சார்ந்த முக்கியமான முடிவுகளில் ஒப்புதல் வாங்கிவிடலாம். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அவர்களின் திருநாமத்தை சூட்ட வலியுறுத்தி கடந்த 20 வருடங்களாக போராடிவருகிறோம்.  தமிழக அரசிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவேயில்லை. ஆனால் எந்தவிதமான போராட்டத்தையும் நடத்தாமலே இம்மானுவேலுவின் சமாதிக்கு 2.60 கோடி பணத்தை பொதுப்பணித்துறை மூலமாக பெற்றுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட அரசாணையின் மூலமாக, சேதுபதிசீமையில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் சிலை அமைக்கப்பட்டு விடும் என்கிற நம்பிக்கையில் மண் விழுந்ததுதான் முக்கியம்.

     இன்றைய தமிழக அரசு நமது உரிமைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை. உண்மையான தியாகிகளுக்கு மதிப்பளிக்கப் போவதுமில்லை. ஆக இந்த குள்ளநரித்தனங்களை தட்டிக்கேட்கும் இடத்திலே இருக்கக்கூடிய தாங்கள் தான் இதனை சீர்செய்திட வேண்டும். அப்படி செய்கின்ற பொழுதில் இந்த இயக்கம் தானாகவே வலுப்படத் தொடங்கும் என்பதில் ஐயமில்லை” என்று கூறினார்.  

Tuesday, 3 July 2012

இம்மானுவேலுக்கு அரசுபணம் விரயம்.


பெண் சகவாசத்தல் வெட்டிக் கொல்லப்பட்ட இம்மானுவேலுக்கு தமிழக அரசு பொதுபணித்துறை சார்பாக அரசாணை எண் 131, நாள் 12-06-2012 மூலமாக ரூபாய் 2 கோடியே 60 லட்சம் ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. இந்த நிதியின் மூலமாக பரமக்குடி - முத்துச்செல்லாபுரம் சாலையில்  ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நல்ல பாலத்தை இடித்து அகலமாக கட்ட போகின்றனர். மேற்கொண்டு பரமக்குடி - முத்துச்செல்லாபுரம் சாலையிலிருந்து பரமக்குடி - முதுகுளத்தூர் சாலை வரை பிரதான சாலையை நீர்பிடிப்புகள் அதிகமுள்ள கண்மாய் கரைகளை சிதைத்து , அதன்மீதே தார்ச்சாலைகளாக போடப்போகின்றனர். இந்த பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் 26-06-2012 அன்று கோரப்பட்டு அன்று 01-07-2012  நண்பகல் 12.30 மணியளவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  சுந்தரராஜ் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளன.

                         அடிக்கல் நாட்டியதோடு அமைச்சர் அந்த பகுதிகளில் வாழுகின்ற முக்குலத்தோர் , முஸ்லீம் , கிருத்துவ மக்களின் அடிவயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியுள்ளார். பரமக்குடியின் அனைத்து பகுதிகளும் பள்ளர்களின் அடாவடித்தனத்தாலும், காவல்துறையின் அலட்சியத்தாலும், அதிகாரிகளின் வெறுப்பினாலும் மற்ற சமூகத்தவர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக மாற்றப்பட்டுவிட்டது. தற்போதைய சூழலில் பரமக்குடி சந்தைக்கடை தெருவிலிருந்து கிருஷ்ணா தியேட்டர் , வேந்தோணி வரையிலான பகுதிகள் தான் பிறமக்களும், முக்குலத்தோரும் நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது. அதனையும் கெடுத்து கடைசி தேவன் வரை ஊரை காலிசெய்து ஓடட்டும் என்கிற எண்ணத்தில் , இம்மானுவேல் சமாதியிலிருந்து புதிதாக ஒரு சாலை போட்டு அதனை  கிருஷ்ணா தியேட்டர் , வேந்தோணி பகுதிகளின் வழியாக கொண்டு செல்லவிருப்பதாக அறிவித்துள்ளார்.


                      அமைச்சரின் ஜாதிவெறி தனத்திலான இந்த அறிவிப்பை மறத்தமிழர் சேனையின் சார்பாக கண்டித்ததோடு, அவரது கண்மூடித்தனமான இந்த அறிவிப்புகளை ரத்து செய்திட வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு மாநில அமைப்பாளர் கடிதம் எழுதியுள்ளார். அதற்கு பரிந்துரைக்கும் படி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் , மாவட்ட வருவாய் அலுவலர் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என அனைத்து உயர் அதிகாரிகளையும் நேரில் சந்தித்து மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் அழ.முனியசாமி, சிவக்குமார், முருகேச பூபதி, முத்தருள், சோலை , குட்டீஸ் சேதுபதி , புதுமலர் ராஜா, உள்ளிட்ட அனைவரும் மனு செய்தனர். உடனடியாக மேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

Sunday, 1 July 2012

தறிகெட்டு திரியும் தமிழக அமைச்சர். ஜாதிவெறியில் அவசர அறிவிப்பு.

                                மிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த  டாக்டர் சுந்தரராஜ்  ஜாதி உணர்வுக்கும் , ஒரு சார்பு தன்மைக்கும் பெயர் பெற்றவர். கடந்த காலங்களில் அவர் அதிகாரத்தில் இருந்த பொழுதுகளில் மாற்றுசமூகத்தவர்கள் அடைந்த துயரங்களுக்கு அளவில்லை. இருந்த பொழுதிலும் தி.மு.க வின் குடும்ப ஆட்சியின் கொடுங்கோலாட்சியையும், அதன் உறுப்புகட்சியான காங்கிரஸ் மீதான வெறுப்புகளையும், தொடர்ந்து இரண்டு முறை தொகுதியை தக்கவைத்தும், எவ்வித வளர்ச்சி பணியையும் மேற்கொள்ளாத கே.வி.ஆர்.ராம்பிரபு மீதான  கடுங்கோபத்தையும் மனதில்கொண்ட மக்கள் இவர் மாறியிருப்பார் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் வெற்றிபெற செய்தனர்.

                           இவர் சார்ந்த தாழ்த்தப்பட்ட சமூகமான பள்ளர்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய பகுதிகளில் இவருக்கு குறைவான வாக்குகளே கிடைத்தன. முக்குலத்தோர் , யாதவர் சமூக மக்கள்தான் இவரது தேர்தல் வெற்றியை உறுதிசெய்தனர். சில மாதங்கள் அமைதியானவர் போல் நாடகமாடியவருக்கு, கடந்த வருடம் இம்மானுவேல் நினைவுநாளில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற சூழலில் ஏற்பட்ட துப்பாக்கிசூடு சம்பவத்தில் 6 பேர் பலியாயினர். அதனை தொடர்ந்து சங்கரன்கோவிலை  அடுத்த புளியம்பட்டியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமி மரணமடைந்தார். துப்பாக்கி சூடு சம்பவத்தினால் அரசுக்கு எதிராக செயல்பட்ட  தாழ்த்தப்பட்ட மக்களை சமாதானப்படுத்தவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த அமைச்சரின் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவும் பரமக்குடி எம்.எல்.ஏ. சுந்தரராஜ் அமைச்சர் ஆக்கப்பட்டார்.

                                அமைச்சர் ஆன அடுத்த நொடியிலிருந்து  தனது சுயஜாதி பற்றை வெளிப்படுத்த தொடங்கிவிட்டார். அதன் தொடர்ச்சியாக யாதவர் சமூகத்தை சார்ந்தவரின் ஆடுகள் அமைச்சரின் பெயரில்  தொடர்ந்து களவாடப் பட்டு,  கறி சமைக்கப்பட்டு பின்பு யாதவர் சங்கங்களால் நீதிமன்றம் வரை அந்த பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது வாகன ஓட்டுநர் உட்பட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

                         தற்போது, பெண் சகவாசத்தல் வெட்டிக் கொல்லப்பட்ட இம்மானுவேலுக்கு தமிழக அரசு பொதுபணித்துறை சார்பாக அரசாணை எண் 131, நாள் 12-06-2012 மூலமாக ரூபாய் 2 கோடியே 60 லட்சம் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியின் மூலமாக பரமக்குடி - முத்துச்செல்லாபுரம் சாலையில்  ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நல்ல பாலத்தை இடித்து அகலமாக கட்ட போகின்றனர். மேற்கொண்டு பரமக்குடி - முத்துச்செல்லாபுரம் சாலையிலிருந்து பரமக்குடி - முதுகுளத்தூர் சாலை வரை பிரதான சாலையை நீர்பிடிப்புகள் அதிகமுள்ள கண்மாய் கரைகளை சிதைத்து , அதன்மீதே தார்ச்சாலைகளாக போடப்போகின்றனர். இந்த பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் 26-06-2012 அன்று கோரப்பட்டு இன்று 01-07-2012  நண்பகல் 12.30 மணியளவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  சுந்தரராஜ் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளன.

                         அடிக்கல் நாட்டியதோடு அமைச்சர் அந்த பகுதிகளில் வாழுகின்ற முக்குலத்தோர் , முஸ்லீம் , கிருத்துவ மக்களின் அடிவயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியுள்ளார். பரமக்குடியின் அனைத்து பகுதிகளும் பள்ளர்களின் அடாவடித்தனத்தாலும், காவல்துறையின் அலட்சியத்தாலும், அதிகாரிகளின் வெறுப்பினாலும் மற்ற சமூகத்தவர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக மாற்றப்பட்டுவிட்டது. தற்போதைய சூழலில் பரமக்குடி சந்தைக்கடை தெருவிலிருந்து கிருஷ்ணா தியேட்டர் , வேந்தோணி வரையிலான பகுதிகள் தான் பிறமக்களும், முக்குலத்தோரும் நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது. அதனையும் கெடுத்து கடைசி தேவன் வரை ஊரை காலிசெய்து ஓடட்டும் என்கிற எண்ணத்தில் , இம்மானுவேல் சமாதியிலிருந்து புதிதாக ஒரு சாலை போட்டு அதனை  கிருஷ்ணா தியேட்டர் , வேந்தோணி பகுதிகளின் வழியாக கொண்டு செல்லவிருப்பதாக அறிவித்துள்ளார். அவர்கள் எதையாவது செய்து தொலையட்டும் நாங்கள் தடுக்கவில்லை. அதையேன் எங்கள் மக்களின் நிம்மதி மீது போட்டுத்தொலைகிறார்கள் என்பதுதான் எங்கள் கேள்வி ?


                            தமிழக அரசின் கொள்கை முடிவுகள் நம்மை வியக்க வைக்கின்றன. தியாகிகளுக்கான அளவீடாக எதனை நிர்ணயம் செய்துள்ளனர். இம்மானுவேல் தியாகிக்கான எந்த வரையறைக்குள் வருகிறான் என்பதையும் மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.  12-06-2012 ம் தேதி அரசாணை வெளியிட்டு,  26-06-2012 அன்று ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு 01-07-2012  அன்று அடிக்கல் நாட்டப்படுகிறதென்றால், இந்த அரசை இத்தனை விரைவாக செலுத்தியது எது ? 18 நாட்களில் ஒரு அரசாணையை செயல்படுத்துகிற, அடிக்கல் நாட்டி வேலையை தொடங்கிய  இதே அரசுதான் உண்மையான தியாகிகளை புறந்தள்ளுகிறது.

                                இராமநாதபுரம் மன்னரும், சுதந்திர போராட்டவீரரும் , சென்னை ஜெயிண்ட் ஜார்ஜ்  கோட்டை சிறையிலேயே உயிர் நீத்தவருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களுக்கு இராமநாதபுரத்தில் வெண்கல சிலை நிறுவிட தொடர்ந்து போராடியதன் விளைவாக கடந்த 21-12-2010 அன்று வருவாய்துறை சார்பாக அரசாணை எண் 683 மூலமாக , இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் கிராமம் , மாவட்ட ஆட்சியர் அலுவலக நுளைவு வாயில் அருகில் 8 அடி உயர வெண்கல சிலை நிறுவிட   புல எண் 320 ல் 0.00.5 எக்டேர் நிலமும், ரூ 4,51,620 ம் ஒதுக்கப்பட்டது.  ஆனால் , ஒதுக்கப்பட்டது ஒதுக்கப்பட்டதாகவே உள்ளது பணிகள்தான் இம்மியளவு கூட நகரவில்லை. இரண்டு வருடமாக மறத்தமிழர் சேனை உள்ளிட்ட தேவரின இயக்கங்கள் தொடர்ந்து மனு கொடுத்தும், போராடியும் வந்துள்ள போதிலும் துளியளவு கூட பிரயோசனமில்லை. சிலை அமைப்பது தொடர்பான, அரசாணை விபரங்கள் குறித்த எவ்வித கோப்புகளும் இங்கே பராமரிக்கபடவில்லை என்று மறத்தமிழர் சேனைக்கு தகவல் அனுப்பிய மாவட்டஆட்சியர்  18 நாட்களில் இம்மானுவேலுக்கு எந்த அடிப்படையில் பணிகளை தொடங்கினார் என்பதனையும் விளக்க வேண்டியது அரசின் கடமை.


                    இம்மானுவேல் என்பவன் யார் ? அவன் எந்த அளவுகோலின் அடிப்படையில் தியாகி ஆக்கப்பட்டான் ? அவனது மனைவி அமிர்தம் கிரேஸ்க்கு  மத்திய, மாநில அரசுகளின் தியாகி பென்ஷன் ஏன் வழங்கப்பட வில்லை ? வெறும் கூட்டத்தை திரட்டினால் கூட அரசு அதற்கு மதிப்பளித்து பொதுநிதியை விரையமாக்குமா ? எத்தனை ஆண்டுகளாக இப்படி விழா நடக்கிறது ? தொடர்ந்து வன்முறையை ஏற்படுத்துவதன் மூலமாகவும் , கல்லறையை சிதைத்துவிட்டு அரசிடம் கட்டிதர வேண்டுவதன் மூலமாகவும் பெரும் தலைவராக உருமாற்றி விட முடியுமா ? இப்படி வெகுஜனங்களின் மத்தியில் நிறைய கேள்விகள் உள்ளன. இவர்களின் நியாயமான உணர்வுகளுக்கு இந்த அரசும், அதிகாரிகளும் மதிப்பளிக்கப் போவதில்லை. 

                          இன்று 'மனிதக் கழிவு' களுக்கு மத்தியிலும் , 'மனக்கழிவு' களுக்கு மத்தியிலும் அமைந்திருக்க கூடிய இம்மானுவேலின் கல்லறையானது பல 'கரை படிந்த' வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாக இன்றும் திகழ்கிறது. அதனை போலவே அமைச்சர் சுந்தரராஜ் செயல்பாடுகள் எதிர்கால ஆய்வாளர்களால் தூற்றப்படும். அவர் அமைச்சராக நீடிக்கும்வரை  அனைத்து ஜாதி, சமூக மக்களுக்கும் பொதுவானவர் என்பதனை நினைவில் கொள்ளவேண்டும்.                                   

Tuesday, 26 June 2012

மன்னர் முத்துவடுகநாதத் தேவர் 240 வது நினைவுநாள் விழா

வானமே வசப்படினும், மானமே பெரிதென வாழும் மறத்தமிழர் கூட்டத்திற்கு மறத்தமிழர் சேனையின் வீரவணக்கம்.

சிவகங்கை சீமை ஆண்ட வீரமறவன் மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாதத் தேவர், கௌரி நாச்சியார் அவர்களின் 240 வது நினைவுநாள் விழா 25-06-2012 அன்று மாலை 4.00 மணியளவில் காளையார்கோவில் மன்னர் மாலையீடில் நடைபெற்றது. 

சங்க கால இலக்கியங்களிலும், இந்த ஈராயிரம் ஆண்டுகளில் சில நூற்றாண்டுகளில் வரலாற்றிலும் பதிவான தமிழினத்தின் வீர வரலாறு எங்கள் சிவகங்கை சீமை மண்ணில் வெளிப்பட்டது.

இந்த வீரத்திருமகனின் வாழ்க்கையே , தமிழினத்தின் கைகளில் உள்ள அத்துணை காவியங்களில், இலக்கியங்களில் கூறப்பட்ட வீர வரலாறுகள் யாவும் உண்மையே என்பதை நிரூபணமாக்கியது.

மறத்தமிழர் சேனையை கட்டமைத்து ‘எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு, 240 வது நாளான இன்று (25-06-2012) மாலை 4.50 மணியளவில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.


எதிர்வரும் காலங்களில் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் அவர்களின் புகழை இளைஞர்களிடம் எடுத்துசெல்லும் விதமாக;மன்னரது வீரவரலாற்றை மாணவர்களிடம் பரப்பும் விதமாக இந்நிகழ்வை மிகப்பிரமாண்டமாக நடத்துவது என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

 

Tuesday, 19 June 2012

சேதுபதி தேசிய நெடுஞ்சாலை பெயர்ப்பலகை நீக்கம்

இராமநாதபுரம் பசும்பொன் நகர் சாலை விலக்கிலிருந்து இராமேஸ்வரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 49 க்கு "சேதுபதி தேசிய நெடுஞ்சாலை" என்கிற பெயரை மத்திய அரசு சூட்டியது. இது அவர்களே வலிய சூட்டியதில்லை. பாம்பன் பாலம் கட்டிய தருணத்தில் அந்தபாலத்திற்கு இராமநாதபுரம் மன்னர்கள் சேதுபதி பெயர் சூட்ட தமிழ்நாடு தேவர் பேரவை கோரிக்கை வைத்தது. அதனை மறுத்து இந்திராகாந்தி பெயர் வைக்க முயற்சி மேற்கொண்டனர். இதனை கடுமையாக எதிர்த்த தேவர்களுக்கு அஞ்சி அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி பாலம் திறக்கும் தேதியை தள்ளிவைத்து சமாதானம் பேச முற்பட்டதன் விளைவாக அந்த சாலைக்கு சேதுபதி பெயரும் பாலத்திற்கு இந்திராகாந்தி பெயரும் வைக்கப்பட்டது.
தற்போது தேசிய நெடுஞ்சாலையில் "சேதுபதி தேசிய நெடுஞ்சாலை எல்கை ஆரம்பம்" என்கிற பெயர் பலகையை நெடுஞ்சாலை துறையினர் நீக்கியுள்ளனர். இதனை கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மறத்தமிழர் சேனையின் சார்பாக கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தொடர்ந்து தேவர்களின் அடையாளங்களை அழிக்க முற்படும் மத்திய அரசை கண்டித்து போராட்டகளம் புக தயாராக இருங்கள்.
 
 
 

Monday, 18 June 2012

அகில இந்திய பார்வர்டு பிளாக் - மறத்தமிழர் சேனை சந்திப்பு


அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக இலங்கை பயணம் மேற்கொண்டு, போரினால் காயம்பட்ட ஈழ மக்களை சந்தித்து ஆறுதல்கூறி, கள ஆய்வு நடத்தி அவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை கண்டறிந்து இன்று (16-06-2012) காலை தாயகம் திரும்பிய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக பொதுச்செயலாளரும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமாகிய அண்ணன் P.V.கதிரவன் அவர்களை இன்று மாலை மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் சந்தித்து நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். உடன் மாநில தொண்டர்சேனை செயலாளர் பசும்பொன் மு.முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள்.