Thursday, 29 March 2012
Wednesday, 28 March 2012
தென் இந்தியாவின் ஜாலியன்வாலாபாக் 1920 ஏப்ரல் 3
ரேகைச்சட்டம், குற்றப்பரம்பரைச் சட்டம், நெருக்கடிச்சட்டம் எனப்பல பெயர்களால் அழைக்கப்பட்ட "குற்றப்பழங்குடிகள் சட்டம் 1911"
அடிமை விலங்கொடிந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் தழும்புகள் அழியாமல் தங்கிவிட்டன.எல்லோரையும் அடிமைப்படுத்தி வைத்திருத்த பிரிட்டிஷ்காரன், குறிப்பிட்ட சில இனங்களை பங்கப்படுத்தி அழிக்க நினைத்தான்.அந்த பிரிவினரால் மட்டுமே வெள்ளையன் மீதான கோபத்தை இன்றும் விட்டொழிக்க இயலவில்லை.
களவை தடுக்க வந்ததே "குற்றப்பரம்பரைச் சட்டம்" என மேலோட்டமாக சொல்லப் படுவதுண்டு. அது சுத்தபொய். பிரிட்டிஷ் நிருவாகத்திற்கு எதிராக வெகுண்டு எழுந்தவர்களில் அடக்க முடியாத, நெஞ்சுரமிக்க இனக் குழுக்களை இழிவு படுத்த ஒழிக்க வந்த கொடுஞ்சட்டம் இது.
பிரெஞ்சுப்புரட்சி உருவாக்கிய மக்கள் எழுச்சியை கூர்ந்து கணித்தது வெள்ளை ஏகாதிபத்தியம். காலனி நாடுகளில் தன் வல்லாதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும். ஒழுங்கு படுத்தப்பட்ட அரசியல் போராட்டக்குழுக்களை எதிர்கொள்வதில் பெரும் சிக்கல் ஏதும் இல்லை. தடியடி, கைது, பேச்சுவார்தை, உடன்படிக்கையை எட்டுவதும் கிழித்தெறிவதுமாக நாட்களை போக்கிவிடலாம். ஆபத்தில்லை. ஆனால் சுதந்திரமான வாழ்வியலைக் கொண்ட இனக்குழுக்களே ஆதிபத்திய அடித்தளத்தை மூர்க்கமாய் மோதி தகர்க்கும் வல்லமை மிக்கவர்கள் என்கிற வரலாற்றுபாடம் அவர்களை பயமுறுத்தியது.
இந்தியா முழுக்க 200 சாதியினர் பட்டியலிடப்பட்டு 'பிறவிக் குற்றவாளிகள்' என அந்நியனால் அடையாளப்படுத்தப்பட்டனர். தமிழ்நாட்டில் மட்டும் 90 சாதியினர் மீது இச்சட்டம் பாய்ந்தது.1911 இல் பல திருத்தங்களோடு புதிய வடிவம் கண்ட சட்டம், கள்ளர், மறவர், அகமுடையார், படையாச்சி, குறவர், தொம்பர், என எண்ணிக்கையை சுருக்கி இறுக்கியது. இந்த இனக்குழுவினரே அந்நிய ஆட்சிக்கு முந்தைய போர்ப்படைகளில் பெரும் பங்காற்றியவர்கள்.
இந்தச் சட்டத்தை எதிர்த்து எந்த தேசியவாதியும் வாய் திறந்ததாக பதிவுகளே இல்லை."கைரேகை வைக்காதே.கட்டை விரலை வெட்டி ஏறி " என பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மட்டும் முழக்கமிட்டார். தோழர்கள் ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி போன்ற பொதுவுடைமைவாதிகள் ஆதரவு குரல் கொடுத்தனர்,
தேச விடுதலைப்போர் உச்சதில் இருந்த நேரம். ரௌலட் சட்டத்தை எதிர்த்து திரண்டதால் 1919 இல் ஜாலியன்வாலாபாக் கொடூரம் அரசியல் படுகொலையாய் வரலாற்றில் பதிவானது. 1920 இல், தம் பிறப்பையே இழிவுபடுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து உசிலம்பட்டி- பெருங்காமநல்லூர் பிறமலைக் கள்ளர் இன மக்கள் 16 பேர் துப்பாக்கி குண்டுக்கு இரையான கொடூரம் போலீஸ் குறிப்புகளில் மட்டுமே பதிவானது. செத்து விழுந்தவர்களில் மாயக்காள் என்கிற பெண்ணும் ஒருவர். சுட்ட போலிஸ்களில் எவரும் வெள்ளையர் இல்லை. எல்லாம் பிற சாதித் தமிழர்களே. பெருங்காமநல்லூரியில் செத்து விழுந்தவர்களின் மார்பிலும், மாயக்காளின் பிறப்பு உறுப்பிலும் துப்பாக்கி முனை 'பைனட்' கத்தியை செருகி, பூட்ஸ் கால்களால் நெஞ்சில் மிதித்து நின்று கொக்கரிதவர்கள் பிற சாதித்தமிழர்கள். இந்த தமிழன் மீது அந்த தமிழனுக்கு அத்தனை கோபம்!
வெள்ளையனை எதிர்கொண்டு அவர்கள் விழ்ந்து மடிந்த ஏப்ரல் 3 தேதியை நாம் எப்படி மறக்கலாம். மறைக்கபட்ட தென் இந்தியாவின் ஜாலியன்வாலாபாக்கை மறக்கலாமா? 1947 ஜீன் 05இல் ரேகைசட்டம் ரத்து செய்யப்பட்டது.
உயிரை, தலையிலிருந்து உதிரும் மயிராய் கருதி ஏகாதிபத்திய துப்பாக்கி ரவைகளுக்குப் பலியான பெருங்கமாநல்லூர் தியாகிகளுக்கு அணையா விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்துவோம்.
Monday, 26 March 2012
கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து கடந்த 7 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு உலை பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
இதனை எதிர்த்து கூடங்குளம் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கடந்த ஒரு வார காலமாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை இடிந்தகரையில் நடத்தி வருகிறார். போராட்டக்காரர்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கக் கூடாது என்பதற்காக ராதாபுரம் தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக் குழுவினரை போலீசார் கைதுசெய்து ஜெயிலில் அடைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், கூடங்குளம் அணுமின்நிலையத்தை முற்றிலும் மூடவேண்டும் என்று வலியுறுத்தி கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும் 7 பெண்கள் உள்பட 15 பேர் சாகும் வரை உண்ணா விரத போராட்டத்தை தொடங்கினார்கள்.
இன்று அவர்களது போராட்டம் 8-வது நாளை எட்டியுள்ள நிலையில் தொடர் உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஒருவரான மில்ரெட் என்ற பெண்ணின் உடல் நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது.
ஆகையால் அந்த பெண் உண்ணாவிரத பந்தலில் இருந்து இடிந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மற்ற 14 பேர் இன்று 8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், அனைவரும் சோர்வுடன் உண்ணாவிரத பந்தலில் படுத்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில் போராட்டக்குழுவினருக்கும் நக்சலைட்டுகளும் தொடர்பு இருக்கிறது என்று காவல்துறையினர் கூறினர்.
இன்று பத்திரிகையாளர்களிடம் உதயகுமார் பேசியதாவது:
இந்திய மக்களாகிய எங்களை நக்சலைட்டுகளுடன் தொடர்புபடுத்தி, தேசத்திற்கு எதிராக நாங்கள் செயல்படுவதாக கூறுவதை கண்டிக்கிறேன். இந்த போராட்டத்தை நாங்கள் கைவிட வேண்டுமெனில் போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அத்தனை வழக்குகளையும் நீக்க வேண்டும். எங்களுடன் மத்திய அரசும், மாநில அரசும் பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
நெல்லை மாவட்ட கலெக்டரும், மாவட்ட எஸ்.பி.யும் எங்களை நிறைய முறை சந்தித்திருக்கின்றனர். நாங்கள் தமிழக முதல்வரை 2 முறையும், பிரதமரை 1 முறையும் சந்தித்திருக்கிறோம். ஆனால் நாங்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டதிலிருந்து மத்திய குழுவோ, மாநிலக் குழுவோ எங்களை சந்திக்கவில்லை.
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
தமிழக பட்ஜெட் : எண்ணெய் முதல் சரக்கு வரை விலை எகிறும்
சென்னை: தமிழக அரசின் 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ.1500 கோடிக்கு புதிய வரிகள்
விதிக்கப்பட்டுள்ளன. முதல்வர் தலைமையில் தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அமைக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஏழைகளுக்கு இந்த ஆண்டில் 1 லட்சம் வீட்டு மனை பட்டா, 60 ஆயிரம் பசுமை வீடுகள், குடிசைகளுக்கு இலவச சிஎப்எல் பல்புகள் உள்பட புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாள் என்பதால் எம்எல்ஏக்கள் காலை 9 மணி
முதலே சபைக்கு வரத் தொடங்கினர். முதல்வர் ஜெயலலிதா, 9.45-க்கு அவைக்கு வந்தார். அப்போது அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து
முதல்வருக்கு வணக்கம் தெரிவித்தனர். திமுக எம்எல்ஏக்கள், மு.க.ஸ்டாலின் தலைமையில் அவைக்குள் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட தேமுதிகவினர் வந்தனர்.காலை 10 மணிக்கு சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறள் சொல்லி அவையை தொடங்கி வைத்தார். பின்னர், பட்ஜெட் தாக்கல் செய்ய நிதி அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வத்தை சபாநாயகர் அழைத்தார். இதைத் தொடர்ந்து, 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் சபையில் தாக்கல் செய்து படித்தார்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கடந்த ஆண்டு பொறுப்பேற்ற பிறகு 2011-12ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது, பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் ஆகும்.
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தானே புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நிரந்தர சேதம் அடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
* இயற்கை இடர்பாடுகளை சமாளிக்க விரைவாகவும் திறமையாகவும் செயல்படக்கூடிய மாநில பேரிடர் மீட்பு படை ஏற்படுத்தப்படும்.
* முதல்வர் தலைமையில் தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அமைக்க விரைவில் சட்டம்.
* கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முதல்கட்டமாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.
* 100 பின்தங்கிய வட்டாரங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கல்வி, சுகாதாரம், தனிநபர் வருமானத்தில் உள்ள குறைபாடுகளை போக்க ‘மாநில
சரிநிகர் வளர்ச்சி நிதி’ என்ற சிறப்பு நிதி உருவாக்கப்படும். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* இந்த ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு ரூ.28 ஆயிரம் கோடி.
* பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார திட்டம்’ இந்த ஆண்டில்
தொடங்கப்படும். இதற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கித்தர 37 மாவட்ட அளவிலான உதவி மையங்கள் ரூ.1.93 கோடியில் அமைக்கப்படும்.
* வட்டாட்சியர் அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்டந்தோறும் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு.
* இந்த ஆண்டில் ஏழைகளுக்கு ஒரு லட்சம் வீட்டு மனை பட்டா வழங்கப்படும்.
* சென்னை மாநகரப் பகுதியில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.
* தலா ரூ.1 கோடி செலவில் 13 மாவட்டங்களில் புதிதாக ஓட்டுனர் பயிற்சி பள்ளி ஏற்படுத்தப்படும்.
* நீதித்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.736.15 கோடி ஒதுக்கீடு.
* வேளாண் துறைக்கு ரூ.3,805 கோடி ஒதுக்கீடு.
* திருச்சியில் வேளாண் வர்த்தக மேம்பாட்டு மையம்.
* கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்க இந்த ஆண்டில் ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
* 20 கால்நடை மருந்தகங்கள், 50 கால்நடை துணை மையங்கள் அமைக்கப்படும்.
* நீர்வள மேலாண்மை பணிகளுக்கு ரூ.3,624.73 கோடி ஒதுக்கீடு.
* அணைகளை மேம்படுத்த ரூ.745.49 கோடியில் அணைகள் புனரமைப்பு - மேம்பாட்டு திட்டம்.
* பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ரூ.100 கோடி.
* 2012-13ம் ஆண்டுக்கான உணவு மானியம் ரூ.4,900 கோடி.
* இந்த நிதியாண்டில் ரூ.740 கோடி செலவில் 1,500 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும்.
* சாலை பராமரிப்பு பணிகளுக்கு ரூ.1180.95 கோடி நிதி ஒதுக்கீடு.
* ரூ.548 கோடி செலவில் புதிதாக 3 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும்.
* மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இந்த ஆண்டில் ரூ.750 கோடி ஒதுக்கீடு.
* தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க ரூ.3,068 கோடி நிதி ஒதுக்கீடு.
* 14.62 லட்சம் குடிசைகளுக்கு ரூ.14.62 கோடி செலவில் இலவசமாக சிஎப்எல் விளக்குகள் வழங்கப்படும்.
* 60 ஆயிரம் வீடுகளுக்கு ரூ.180 கோடியில் சூரிய மின் விளக்குகள் அளிக்கப்படும்.
* மேலும் 50 கோயில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும்.
* ஸ்ரீரங்கம் ரங்கநாதர், பழநி தண்டாயுதபாணி கோயில்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
* மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.720 கோடி ஒதுக்கீடு.
* பள்ளி மாணவர்களுக்கான சீருடையில் ஆண்களுக்கு முழுக்கால் சட்டையும், மாணவிகளுக்கு சல்வார் கமீசும் வழங்கப்படும். இதற்காக ரூ.329.89 கோடி நிதி
ஒதுக்கீடு.
* பசுமை வீடு திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு ரூ.1080 கோடியில் மேலும் 60 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும்.
* எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்கு இந்த ஆண்டில் ரூ.470 கோடி ஒதுக்கீடு.
* சென்னை நகரில் உள்ள நீர்வழித்தடங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க 337 இடங்களில் ரூ.300 கோடியில் சுத்திகரிப்பு செய்ய திட்டம்.
* ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டத்துக்கு ரூ.748.39 கோடி ஒதுக்கீடு.
* மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் பயனாளிகளின் தகுதி 60 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக குறைக்கப்படும்.
* இலங்கை அகதிகளுக்கு 2,500 வீடுகள் கட்டித் தர ரூ.25 கோடி ஒதுக்கீடு.
* ஓய்வூதியதாரர்கள் இறக்கும்போது வழங்கப்படும் நிதியுதவி, ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* கோதுமை, ஓட்ஸ், ஹெல்மெட், இன்சுலின் மீதான மதிப்பு கூட்டு வரி முழுமையாக ரத்து.
* எலக்ட்ரிக் பைக்குகள், காம்பக்ட் புளோரசன்ட் குழல் விளக்குகள், மரக் குச்சிகள், மரப்பட்டைகள், சானிடரி நாப்கின், டயாபர்களுக்கு மதிப்பு கூட்டு வரி 14.5
சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.
ரூ.1500 கோடிக்கு வரி உயர்வு
* வெளிமாநிலங்களில் இருந்து வாங்கியோ, கொள்முதல் செய்தோ விற்கப்படும் அனைத்து மது வகைகளுக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட விற்பனை நிலையில் 14.5 சதவீத விற்பனை வரி விதிக்கப்படும்.
* ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு குறைவாக தாவர எண்ணெய்களின் விற்பனை அளவு இருந்தால், அதற்கு அளிக்கப்பட்டு வந்த மதிப்பு கூட்டு வரி விலக்கு நீக்கப்பட்டு, அந்த விற்பனைக்கும் 5 சதவீத மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படும்.
* சுற்றுலா, மேக்ஸி மற்றும் தனியார் சேவை வாகனங்கள், ஸ்பேர் பஸ், கட்டுமானத்துக்கு பயன்படும் வாகனங்கள், பிற மாநில ஒப்பந்த வாகனங்கள் மீதான வரிகள் சீரமைக்கப்படும்.
* முன்னுரிமையில் விருப்ப எண்களை பதிவு செய்வதற்கான கட்டணம் இரு மடங்காக உயர்த்தி சில மாற்றங்கள் செய்யப்படும். இந்த மாற்றங்கள் இரு சக்கர
வாகனங்களுக்கு பொருந்தாது.
* திருத்தி அமைக்கப்பட்ட சொத்து வழிகாட்டி மதிப்பு (கைடு லைன் வேல்யூ) ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
* விற்பனை ஆவணங்கள் மற்றும் அதே நிலையில் முத்திரை தீர்வை விதிக்கப்படும் ஆவணங்களுக்கு தற்போது விதிக்கப்படும் 6 சதவீத முத்திரை தீர்வை,
ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5 சதவீதமாக குறைக்கப்படும்.
* உள்ளூர் திட்ட அமைப்புகள் மூலம் வசூலிக்கப்பட்டு வரும் கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டணம் 50 சதவீதம் உயர்த்தி நிர்ணயிக்கப்படும்.
இந்த நடவடிக்கைகள் மூலம் அரசுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.
முதல்வர் புகழ் பாடிய நிதியமைச்சர்
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் பன்னீர் செல்வம் வழக்கம் போல தொடக்கத்தில் ஜெயலலிதா சாதனைகளை புகழ்ந்து பேசினார். எடுத்த காரியம் யாவினும் வெற்றி என்ற பாரதியின் பாடல் வரியுடன் பட்ஜெட் உரையை தொடங்கியவர், அறிவின் ஊற்றுக்கண், மாபெரும்
வெற்றியை மக்களுக்கு அர்ப்பணித்த தலைவி, இந்திய தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் மக்கள் சக்தி, உலக வல்லரசு நாடுகள் வரிசையில் இந்தியாவை நிறுத்தப்போகும் மகா சக்தி என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார். அவரது புகழ் பாடலுக்கு அதிமுக உறுப்பினர்களும் அசராமல் வரிக்கு வரி மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

Saturday, 24 March 2012
அரவான் - விமர்சனம்
பல்வேறு வரலாற்று ஆதாரங்களை வைத்து எழுதப்பட்ட நாவல் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம். அதின் சில சுவாரஸ்யமான பகுதிகளை திரைக்கதையாக அமைத்து அரவான் படத்தை உருவாக்கி இருக்கிறார் வசந்தபாலன். ’காவல் கோட்டம்’ சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.
18ஆம் நூற்றாண்டில் நடக்கிற கதை என்ற சவாலை ஏற்ற வசந்தபாலன், கதாபாத்திரங்களின் உடை, சிகை, பேச்சு, உடல் அசைவுகள், கலை, ஒளிப்பதிவு என அனைத்திலும் அந்த காலகட்டதின் உணர்வை ஏற்படுத்துகிறார். இதுவே வசந்தபாலனின் வெற்றி என கருதலாம்.
இது நாவலில் இருந்து அமைக்கப்பட்ட திரைக்கதையாக இருப்பதால், கதையைப் பற்றி நாம் அதிகமான விமர்சனங்களை வைக்க முடியாது. அது காட்சிப்படுத்தப்பட்ட விதத்தையே அலசிப்பார்க்க முடியும். மதுரையை சுற்றியுள்ள சிற்றூர்களும் அந்த மக்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களுமே கதையின் மையம். கிராமிய தெய்வங்கள் உருவான விதத்தையும் பதிவு செய்வதாக உள்ளது.
இரண்டு கிராம மக்களுக்கு இடையேயான பகை, தீர்ப்பு சொல்லும் பண்ணையக்காரரால் (ராஜா) வருவதும், அந்த சூழ்ச்சியே ஒருவர் தெய்வமாக்கப்படுகிறார் என்ற செய்தியும் இதில் அடங்கி இருக்கிறதை நாம் உணர முடியும். இன்னும் தெளிவாக சொன்னால், பட்டாடை உடுத்தும் ராஜாவின் தவறுக்கு மேல்சட்டை அணியாத கிராம மக்கள் பலியாகிறார்கள் என்பதை உணரலாம்.
வேம்பூர் கிராமம் கள்ளர் வம்சத்தை சேர்ந்தவர் பசுபதி. களவாடுவதில் வல்லவர்களாக இந்த கிராமத்தில் இருக்கிறவர்கள் கருதப்படுகிறார்கள். வேம்பூர் கிராமத்தின் பேரைச் சொல்லி களவாடி வருகிறார் ஆதி. மகாராணியின் வைர அட்டிகையை களவாடியதும் ஆதிதான் என்று பசுபதிக்கு தெரியவர, ஆதியை பிடித்து வைர அட்டிகையை திரும்ப பெற்று அதை அரண்மனையில் ஒப்படைக்கிறார். இதனால் அவர் கிராமத்துக்கு 100 மூட்டை நெல் தரப்படுகிறது. ஆதியின் திறமையைப் பார்த்து அவரை தன் களவுகளில் சேர்த்துக் கொள்கிறார் பசுபதி.
ஆனால் ஆதி தன்னைப் பற்றிய முழு உண்மைகளையும் சொல்லாமல் மறைத்து வருகிறார். மாத்தூரில் களவாடும் போது பசுபதி சிக்கிக்கொள்கிறார். அவரை மீட்டெடுத்து வருகிறார் ஆதி. திருவிழா நேரம் மாடுபிடி போட்டி நடக்கிறது. வேம்பூர் கிராமத்தின் சார்பில் களமிரங்குகிறார் பசுபதி.
பசுபதிக்கு ஆபத்து வர, மீண்டும் அவரை மீட்டெடுக்க, களத்தில் ஆதி இறங்குகிறார். இவன் வேம்பூர்காரனே இல்லை என்று கூடி இருந்தவர்கள் அடித்து தாக்கும் போது. ஆதி தான் யார் என்ற உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வருகிறது. ஆதி சின்னவீரம்பட்டி நாக வம்சத்தை சேர்ந்தவர், அவர் ஏற்கெனவே திருமணமானவர், அவர் மாத்தூருக்கு பலிகொடுக்க வேண்டிய பலியாள் என்ற உண்மைகளை படத்தின் இரண்டாம் பாதி சொல்கிறது.
முதல் பாதியில் வரிபுலி கதாபாத்திரமாகவும் இரண்டாம் பாதியில் சின்னா கதாபாத்திரமாகவும் ஆதி மிரட்டி இருக்கிறார். கமர்ஷியல் ஹீரோக்களின் அந்தர் பல்டி சாகசங்களுக்கு பெப்பே காட்டுகிற மாதிரியான பல சவால்களை மேற்கொண்டிருக்கிறார். தன்ஷிகாவுடனான பாடல் காட்சிகளிலும் கதையைவிட்டு விலகாமல் அதற்கே உறிய நளினமான நடிப்போடு அசத்துகிறார். காளை மீது பசுபதியை மீட்டு வருகிற காட்சியில் காளைகளின் கூட்டத்தைவிட ஆதியின் நடிப்பே பிரம்மாண்டத்தை ஏற்படுத்தியது.
பசுபதி நல்ல நடிகர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். இதிலும் பிண்ணியெடுக்கிறார் மனுஷன். படத்தின் முதல் பாதியில் ஆதியுடனான நையாண்டித் தனமான பேச்சுகளிலும், ஆதியின் மீது வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், க்ளைமாக்ஸில் கலக்கத்தோடு இருக்கிற காட்சியிலும், முக்கியமாக களவாடுகிற காட்சிகளிலும் நடிப்பதே தெரியாமல் சவாலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பசுபதி.
தன்ஷிகா அச்சுஅசல் மழைவாழ் பெண் மாதிரியே காட்சியளித்தார். கொடுக்கப்பட்ட காட்சிகளில் நன்றாக நடித்திருந்தாலும் அவர் கதாபாத்திரம் அழுத்தம் பெறவில்லை என்பதே உண்மை. சொந்தக்குரலில் பேசியிருக்கும் தன்ஷிகாவுக்கு ஒரு சபாஷ் போடலாம்.
ஆதியின் அம்மாவாக வரும் டி.கே.கலா, பசுபதியின் தங்கையாக வரும் அர்ச்சனா கவி, வில்லனாக சித்தரிக்கப்படும் கரிகாலன், ஊர் பெரியாளாக வரும் பெயர் தெரியாத பெரியவர்கள் முதல் ஆதியின் மகனாக வரும் சிறுவன் வரை அனைவரின் முகங்களும் மனதில் பதிந்து போகிற வகையில் படமாக்கப்பட்டு இருக்கிறது. ”களவில் இருந்து தான் காவல் பிறக்கிறது” என்று சொல்லும் ஆதிக்கு அவர் அம்மாவுடனான உரையாடல் காட்சி ரசிக்க வைக்கிறது.
சிறப்புத் தோற்றத்தில் வரும் பரத்தும், அஞ்சலியும் கொஞ்ச நேரம் வந்தாலும் நிறைவாகவே ஞாபகத்தில் இருக்கிறார்கள். பரத் அஞ்சலி வரும் காட்சிகளே படத்தின் கதைக்கு திருப்புமுனையாக இருப்பதும் இதற்கு காரணமாக இருக்கக் கூடும். காமெடியில் கலக்கும் சிங்கம் புலியை சொல்லாமல் இருக்க முடியாது.
ராஜாவாக வருபவர் நடிகர் கபிர் பேடி, அனைத்துவித சினிமாத்தனங்களையும் தூக்கிப்போட்டு இப்படித்தான் ராஜாக்கள் இருந்தார்கள் என்ற உண்மையை பதிவு செய்கிற விதத்தில் அமைந்திருக்கிறது அவர் கதாபாத்திரம்.
கதையின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களும் இருக்கக் கூடும்.
Wednesday, 21 March 2012
வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் பிறந்த நாள் விழா
ம றத்தமிழர் சேனை கமுதி ஒன்றியத்தின் சார்பில் நான்மாடக் கூடல் மதுரை மாநகரில், நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த வள்ளல், பாலவநத்தம் மன்னர் பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழா கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தேவர் மகாலில் 20-03-2012 செவ்வாய்கிழமை அன்று மாலை 3 00 மணியளவில் மறத்தமிழர் சேனை கமுதி ஒன்றிய செயலாளர் S.ராமசெல்வம் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக கமுதி நகர் மாணவர் சேனை செயலாளர் S.சுரேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வில் மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில துணைத்தலைவரும், இராமநாதபுரம் மாவட்ட தேவர் பேரவையின் தலைவருமாகிய வீ.கா.இராமசாமித்தேவர், கமுதி கோட்டைமேடு தேவர்சிலை அமைப்பாளர் சண்முகவேல்த்தேவர், மாநில இளைஞர் சேனை செயலாளர் ம.கார்த்திக், மாநில இளைஞர் சேனை துணைச் செயலாளர் G.M.P.மருதுபாலா, மாநில மாணவர் சேனை செயலாளர் மு.வெள்ளைப்பாண்டியன், மதுரை மாவட்ட செயலாளர் M.A.முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த வள்ளல், பாலவநத்தம் ஜமீன்தார் பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் சிங்கப்புலியாபட்டி மாயகண்ணன், ராமநாதன், சண்முகவேல் , கண்ணன் மற்றும் பெருந்திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக கமுதி ஒன்றிய மாணவர் சேனை தலைவர் கணேசன் நன்றி கூறினார்.
வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மறத்தமிழர் சேனையின் சார்பில் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்.
கமுதி கோட்டைமேடு தேவர்சிலைக்கு மாநில அமைப்பாளர் மாலை அணிவித்த பொழுதில், உடன் மாநில இளைஞர் சேனை செயலாளர் ம.கார்த்திக், மாநில இளைஞர் சேனை துணைச் செயலாளர் G.M.P.மருதுபாலா, மதுரை மாவட்ட செயலாளர் M.A.முத்துக்குமார், மற்றும் சிங்கப்புலியாபட்டி கண்ணன் மற்றும் உறவினர்கள்.
கமுதி நகர் முழுவதும் நடைபெற்ற வாகனப்பேரணி மற்றும் இருசக்கர வாகனப்பேரணி
மாவீரர்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாநில அமைப்பாளர் மாலை அணிவித்த பொழுதில், உடன் மாநில இளைஞர் சேனை செயலாளர் ம.கார்த்திக், சிங்கப்புலியாபட்டி கண்ணன், கமுதி கோட்டைமேடு தேவர்சிலை அமைப்பாளர் சண்முகவேல்த்தேவர், மாநில இளைஞர் சேனை துணைச் செயலாளர் G.M.P.மருதுபாலா, மதுரை மாவட்ட செயலாளர் M.A.முத்துக்குமார், மற்றும் சிங்கப்புலியாபட்டி கண்ணன் மற்றும் உறவினர்கள்.
விழா மேடையை நோக்கி மாநில நிர்வாகிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த வள்ளல், பாலவநத்தம் ஜமீன்தார் பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழாவை சிறப்பித்து மாநில மாணவர் சேனை செயலாளர் மு.வெள்ளைப்பாண்டியன் அவர்கள் சிறப்புரை வழங்குகிறார். உடன் மாநில நிர்வாகிகள்.
நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த வள்ளல், பாலவநத்தம் ஜமீன்தார் பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழாவை சிறப்பித்து கமுதி கோட்டைமேடு தேவர்சிலை அமைப்பாளர் சண்முகவேல்த்தேவர் அவர்கள் சிறப்புரை வழங்குகிறார். உடன் மாநில நிர்வாகிகள்.
நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த வள்ளல், பாலவநத்தம் ஜமீன்தார் பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழாவை சிறப்பித்து மாநில இளைஞர் சேனை துணைச் செயலாளர் G.M.P.மருதுபாலா அவர்கள் சிறப்புரை வழங்குகிறார். உடன் மாநில நிர்வாகிகள்.
நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த வள்ளல், பாலவநத்தம் ஜமீன்தார் பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழாவை சிறப்பித்து மாநில இளைஞர் சேனை செயலாளர் ம.கார்த்திக் அவர்கள் சிறப்புரை வழங்குகிறார். உடன் மாநில நிர்வாகிகள்.
மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் விழாவை சிறப்பித்து சிறப்புரை நிகழ்த்தினார்.
மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில துணைத்தலைவரும், இராமநாதபுரம் மாவட்ட தேவர் பேரவையின் தலைவருமாகிய வீ.கா.இராமசாமித்தேவர் அவர்கள் சிறப்புரை வழங்குகிறார். உடன் மாநில நிர்வாகிகள்.
வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கூட்டத்தினரில் சில பகுதி...
Thursday, 15 March 2012
ஜெனிவாவில் கிடைத்திருக்கும் வாய்ப்பை இந்தியா தவறவிடக்கூடாது
ஐ.நா. பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பதன் மூலம் மட்டுமே இலங்கை விவகாரம் சரியான திசையில் நகர்வதை உறுதிப்படுத்துவதாக இருக்க முடியும். அதுவே உறுதியான நகர்வாக இருக்க முடியும்.
இந்தியாவில் வெளியாகும் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில் பொதுநலவாய மனித உரிமை அமைப்பின் பணிப்பாளரான மஜா டர்வாலா எழுதி வெளியிட்ட கட்டுரையின் தமிழாக்கம் இது.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இந்தியாவானது தனது தலைமைத்துவத்தை மிகச் சரியாக, உறுதியாகப் பயன்படுத்துவதுடன், இலங்கை விவகாரம் தொடர்பில் உறுதியான தீர்வையும் நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும்.
மனித உரிமைகள் தொடர்பில் இந்தியா அனைத்துலக மட்டத்தில் துணிச்சல்மிக்க, மிக நம்பிக்கையான நிலைப்பாட்டை எடுப்பதற்கான தகுந்த நேரம் வந்துவிட்டது.
அனைத்துலக விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்வது அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் மனித உரிமை விவகாரங்களிலும் இந்தியா தனது தலைமைத்துவ அதிகாரத்தைக் கொண்டு கோரிக்கையை விடுக்கவேண்டும்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியா, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் தனது வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் முன்னேற்றத்தைக் காண்பிப்பதற்கான சிறந்த நல்வாய்ப்பைக் கொண்டுள்ளது.
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பாக விவாதிப்பதற்காக 2009இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அவ\ர கூட்டத் தொடர் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத் தொடரில், மேற்கு நாடுகள் இலங்கை மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் மற்றும் அதன் மீதான விசாரணைகளிலிருந்து இலங்கையை இந்தியா பாதுகாத்தது. அந்தத் தொடர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் இலங்கை போதியளவில் செயலாற்றி இருக்கவில்லை.
இறுதிப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதை அது சரிவரச் செயற்படுத்தவில்லை. குற்றச் சாட்டுக்களுக்கு பொறுப்புக் கூறுதல் தொடர்பில் இலங்கை அரசு செயற்றிட்டம் ஒன்றை வரைந்து அதனை மனித உரிமைகள் சபையில் அறிக்கையிடுவதை உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. வேறு வழியில் கூறுவதானால், இலங்கை தனது நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதில் மேலும் பல சிறந்த நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறான நகர்வுகளை உலக நாடுகள் கண்காணிக்கும்.
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு உண்மையில் போதியதாக இல்லை. இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் மிக வேகமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என இப்பிரேரணை மூலம் அழைப்பு விடுக்கப்படாமையானது அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில், இனிவருங் காலங்களில் ஐ.நா. மனித உரிமைகள் சபையால் எடுக்கப்படும் முயற்சிகளில் இலங்கையில் இடம்பெற்ற போர் மீறல்கள் தொடர்பில் நீதி, பொறுப்பளித்தல், சர்வதேச விசாரணை போன்றவை உள்ளடக்கப்பட வேண்டும். ஆகவே இலங்கைக்கு எதிராகத் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு சார்பாக வாக்களிக்க வேண்டும்.
இது இலங்கை விவகாரம் தொடர்பில் சரியான திசை நோக்கி நகர்வதை எடுத்துக் காட்டும். ஆனால் இலங்கை விவகாரத்தில் உடனடியாக தேவைப்படும் நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமிடத்தே அது இறுதியான, உறுதியான நகர்வாக இருக்க முடியும்.
இந்தியா இலங்கையிடம் தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது வெளிப்படையாகவோ அதன் மீறல் விவகாரங்களில் எதனையும் கேட்டுக் கொள்வதற்கேற்ற முறையில் ஐ.நா. பிரேரணை தயாரிக்கப்படவில்லை என்பதே இந்தியாவின் கருத்தாகும். இந்தியாவானது தனது பிராந்திய நலனையே அதிகம் கருத்திற் கொள்கின்றது. ஆனால் மிக உறுதியான, நல் ஆட்சியை நடத்துகின்ற, பிராந்திய சக்தியாக இலங்கையின் அயல் நாடாக இந்தியாவே உள்ளது.
இலங்கை தொடர்பில் இந்தியாவானது இரு விடயங்களைக் கவனத்திற் கொண்டுள்ளது. இலங்கையில் பொருளாதார மற்றும் நிதி முதலீடுகளை சீனா மேற்கொண்டுள்ள நிலையில், கொழும்பு மீதான தனது செல்வாக்கை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்கு உண்டு. அதேவேளையில், இந்தியாவில் 70 மில்லியனுக்கும் மேற்பட்ட சனத்தொகையைக் கொண்டுள்ள தமிழ் நாடானது இலங்கைத் தமிழர்களின் நெருங்கிய இரத்த உறவாகக் காணப்படுகின்றது.
இதனால் இலங்கைத் தமிழர்களின் அரசியல் அவாக்களை இந்தியா தட்டிக்கழித்து விடமுடியாது. இதனையும் இந்தியா கவனத்திலெடுக்க வேண்டியுள்ளது.
இலங்கை அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்பதற்கு ஆதரவாக இந்தியாவானது தீர்மானம் எடுத்துக் கொள்ளுமானால் மேற்கூறிய இரு தரப்புக்களையும் சமப்படுத்த முடியும்.
நீண்ட கால அடிப்படையில் நோக்கினால், குறிப்பாக உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவானது, அனைத்துலக மட்டத்தில் சிறந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளுமிடத்தில் இலங்கையில் தற்போது காலூன்றியுள்ள சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்கான நல்வாய்ப்பையும் பெற்றுக் கொள்ளும். குறுகிய கால அடிப்படையில் நோக்கினால், இலங்கை விவகாரத்தில் சாதகமான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துக் கொள்ளுமிடத்தில் தனது சொந்த மக்களின் கோரிக்கையை நிறைவுசெய்ய முடியாமல் போகும்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவினர், போர் மீறல்கள் தொடர்பிலான உண்மைகளைக் கண்டறிந்து கொண்டதுடன், உள்நாட்டுப் போரில் பங்குகொண்ட இலங்கைப் படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் மீறல்களைப் புரிந்தனர் என்பதை ஆதாரப்படுத்தி 2011இல் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்தப் போரின்போது 40,000 வரையான ஆண்கள், பெண்கள், சிறார்கள் என பலதரப்பட்டவர்களும் கொல்லப்பட்டனர் என்று வல்லுனர் குழுவினர் ஆதாரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் இலங்கையில் சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வல்லுனர் குழுவினர் கோரிக்கை விடுத்திருந்தனர், ஆனால் இக்குற்றச் சாட்டை இலங்கை அரசு ஏற்க மறுத்ததுடன், தான் சொந்தப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி விசாரணை மேற்கொள்ளும் வரை காத்திருக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் தெரிவித்தது.
இதன் பின்னரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக் குழு உருவாக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டு 18 மாதங்களின் பின்னர் அதனால் கண்டறியப்பட்ட பாடங்கள் தொடர்பிலான அறிக்கை நாடாளுமன்றில் \மர்ப்பிக்கப்பட்டது. அதில் சில முக்கிய பரிந்துரைகள் குறிப்பிடப்பட்ட போதிலும், போர்க் காலத்தில் இடம்பெற்ற மிக மோ\மான சில மீறல்களை இது கவனத்தில் கொள்ளத் தவறியுள்ளது.
இராஜதந்திர ரீதியில் நோக்கில், இந்தியாவின் பதிலானது மறைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் இலங்கை விவகாரம் தொடர்பான செய்தி தெளிவாக உள்ளது. அதாவது இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான சுயாதீன அனைத்துலக பொறிமுறை ஒன்று காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட வேண்டியிருக்கும். இது விடயத்தில் இலங்கை அரசு மேலும் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
கடந்த ஜனவரியில் இலங்கை அரசு தனது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான இராணுவ நீதிமன்றம் ஒன்றை அமைத்திருப்பதாக அறிவித்தது.
இந்த நீதிமன்றுக்கான உறுப்பினர்களை வன்னி போர்க் களத்தில் முன்னர் கட்டளைத் தளபதியாக செயலாற்றிய ஒருவரே நியமித்துள்ளார். ஆனால் இதே கட்டளைத் தளபதியின் கண்காணிப்பின் கீழ் அதே வன்னியில் இலங்கையில் பாதுகாப்புப் படையினரால் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப் பட்டதற்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் உண்டு.
இந்நிலையில், இந்தியா உட்பட உலக நாடுகள் ஐ.நா. பிரேரணைக்கு ஆதரவாக இருக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் அண்மையில் ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான தனது சுற்றுப் பயணத்தை நிறுத்தியிருந்தார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்படும் பிரேரணையில் இலங்கைக்குச் சார்பாக வாக்களிக்குமாறு சில உலக நாடுகளிடம் கோரிக்கை விடுக்க முயற்சி செய்தும் அந்த முயற்சிகள் இடையில் கைவிடப்பட்டதானது, இலங்கை தனது நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதையே தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடான இந்தியா இந்த விடயத்தில் தெளிவாக முடிவெடுத்து தனது இருப்பை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது இலங்கை மீதான பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பதன் மூலம் இதற்கான நல்வாய்ப்பை இந்தியா தவறவிடக் கூடாது.
ஐ.நா. மனித உரிமை தீர்மானம்: இலங்கைக்கு எதிராக 8 நாடுகள் விவாதம்
இலங்கை இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தாக்கல் செய்தது.
இதன் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், நார்வே, கனடா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டினை முன் வைத்து பேசின.அந்த நாட்டு பிரதிநிதிகள் இலங்கையை கண்டித்து பேசினார்கள்.
இதனால் கூட்டத்தில் இலங்கை பிரதிநிதி பதிலளிக்க முடியாமல் திணறினார். கனடா பிரதிநிதி பேசுகையில், இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். போர்க் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இலங்கை தவறி விட்டது. இதில் ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையை கவனிக்கவும் இலங்கை தவறி விட்டது.
சர்வதேச சட்டங்களுக்கு புறம்பாக இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை தேவை என்றார். இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை ஆதரிப்பதாக இங்கிலாந்து பிரதிநிதி தனது விவாதத்தின்போது குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில், மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை களைய இலங்கை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.
நார்வே பிரதிநிதி பேசுகையில், இலங்கை தீவில் நடந்த சர்வதேச சட்ட மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை காலதாமதமின்றி பதிலளிக்க வேண்டும்.அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை நாங்கள் முழுமனதுடன் ஆதரிக்கிறோம் என்றார்.
இதேபோல டென்மார்க், பிரான்ஸ், ஆஸ்திரேலியா நாட்டு பிரதிநிதிகளும் இலங்கைக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.
சர்வதேச நீதியாளர் ஆணையம் என்ற அமைப்பு இதில் வார்த்தைஜாலம் வேண்டாம், செயல்தான் முக்கியம், காலவிரயம் செய்யாமல் சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை, ராஜபக்சே கடந்த 3 ஆண்டுகளாக தனது பொறுப்பில் இருந்து தவறி விட்டார்.
சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், சர்வதேச சட்டங்கள் ஆகிய வற்றுக்கு புறம்பாக அவர் செயல்பட்டுள்ளார். என்று குற்றம் சாட்டியது.இதற்கு பதில் அளித்த இலங்கை பிரதிநிதி, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடு தேவையில்லை. எங்கள் நாட்டு விவகாரத்தை நாங்களே கவனித்துக் கொள்வோம் என்றார்.
Wednesday, 14 March 2012
பிரபாகரன் மகன் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் உண்மையானது- சேனல் 4
லண்டன், மார்ச். 14-
பிரபாகரன் மகன் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் உண்மையானது என சேனல்-4 தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதி கட்ட போரின் போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் சுட்டு கொன்றது. இந்த காட்சிகளை இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல்-4 தொலைக்காட்சி இன்று இரவு 10.55 மணி அளவில் (இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.25 மணியளவில்) வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
அதில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள காட்சியும் ஒளிபரப்பாகிறது என உறுதி செய்துள்ளது.
இந்த தகவல் இங்கிலாந்தின் “தி இன்டி இன்டி பெடன் டென்ட்” நாளேட்டில் வெளியாகி உள்ளது. மேலும் பாலச்சந்திரன் சுட்டு கொல்லப்பட்டு பிணமாக கிடக்கும் படமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. சேனல்-4 ஆவணப்படத்தை தயாரித்துள்ள காலம் மாக்ரே எழுதியுள்ள கட்டுரை மூலம் இது வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோ காட்சிகள் உண்மையானதா? என்ற கேள்வியை இலங்கை அரசு விடுத்துள்ளது.
மேலும் இது கிராபிக்ஸ் மூலம் புனையப்பட்ட காட்சி என சேனல்-4 தொலைக்காட்சி மீது குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் பிரபாகரன் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ ஆதாரம் உண்மையானது என சேனல்-4 தொலைக் காட்சி உறுதி பட தெரிவித்துள்ளது.
பாலச்சந்திரன் உடலில் குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடக்கும் காட்சியையும், அவரது அருகில் பிணமாக கிடக்கும் பாதுகாவலர்களின் புகைப்பட காட்சியையும், உடல் பிரேத பரிசோதனை நிபுணர் பேராசிரியர் டெர்ரிக் பவுண்டர் ஆய்வு செய்தார்.
அப்போது சரண் அடைய வந்த பாலச்சந்திரனை அருகில் நின்ற சிங்கள ராணுவ வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர். அதே நேரத்தில், அவரது பாது காவலர்களின் கண்களை கட்டியும், கைகளை பின்புறம் கட்டியும் சுட்டு கொன்றுள்ளனர் என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார். இந்த தகவலை பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான காலம் மாக்ரேயும் உறுதி செய்துள்ளனார்.
Saturday, 10 March 2012
மிகப்பெரிய மாநிலத்திற்கு இளம்வயது முதல்வர் அகிலேஷ் யாதவ்
லக்னோ, மார்ச் 10 : இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமாகக் கருதப்படும் உத்தரப்பிரதேசத்திற்கு சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் மிக இளம் வயது முதல்வராக பதவியேற்க உள்ளார்.இது குறித்த முடிவு இன்று சமாஜ்வாடி கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் அகிலேஷ் யாதவ் உரிமை கோர உள்ளார். அம்மாநில ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த பிறகு, மார்ச் 15ம் தேதி அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.
அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டால், அம்மாநிலத்தில் மிக இளம் வயதில் முதலமைச்சராக பொறுப்பேற்றவராக அகிலேஷ் யாதவ் திகழ்வார். இந்த நிலையில், கட்சியின் மூத்த தலைவரான ஆஸம் கான், முலாயமின் தம்பி ஷிவ்பால் சிங் யாதவ் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை அளிப்பதாகக் கூறி அஸம் கானையும், நமக்கு வயதாகி விட்டது. எனவே இளம் தலைமுறையினருக்கு வழி விட வேண்டும் என்று கூறி தனது தம்பியையும் முலாயம் சிங் யாதவ் சமாதானப்படுத்தியுள்ளார்.எனினும், சமாஜ்வாடிக் கட்சிக் கூட்டம் நடைபெறும் பகுதியில் இருவரது ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமாஜ்வாடிக் கூட்டத்தில் இன்று அஸம் கான் அகிலேஷ் யாதவின் பெயரை முன்மொழிந்தார், ஷிவ்பால் சிங் யாதவ் வழிமொழிந்தார்.
அகிலேஷ் யாதவுக்கு 38 வயதாகிறது. உ.பி.முதல்வரானால் இதுவரை பதவி வகித்தவர்களில் இளமையானவர் என்ற பட்டம் அகிலேஷ்க்கு கிடைக்கும்.

Thursday, 1 March 2012
திராவிட ஆட்சிகளால் இதுவரை தமிழ்நாடு எந்த நிலையிலும் முன்னேறவில்லை - டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாடு நதிநீர் உரிமையை இழந்ததற்கு கருணாநிதிதான் காரணம்: டாக்டர் ராமதாஸ் பேட்டி
சென்னை: அதிமுக ஆட்சியில் தமிழகம் இருண்டு போய் உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். பாமக நிறுவனர் ராம தாஸ் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:
திமுக தலைவர் கருணாநிதி திராவிட இயக்க நூற்றாண்டு விழாவில், தமிழ் வாழ, தமிழர்கள் வாழ என்று சொல்வது புரிகிறது. திராவிடம் செழிக்க என்று அவர் சொல்வது எனக்கு புரியவில்லை.திராவிடம் செழிக்க என்றால் என்ன அர்த்தம். 45 ஆண்டாக தமிழகத்தை ஆண்டு 5 முறை முதல்- அமைச்சராக இருந்த கலைஞர் என்ன சமதர்மத்தை கொண்டு வந்துள்ளார். எப்போதெல்லாம் அவர் ஆட்சியில் இல்லையோ அப்போதெல்லாம் ஆரியர், திராவிடர் என்று பேசுவார். மத்திய அரசில் திமுக பல ஆண்டுகளாக அங்கம் வகிக்கிறது. ஆனால் தமிழை ஆட்சி மொழியாக்கவோ, உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வரவோ முயற்சி எடுக்கவில்லை.
இதற்காக விரைவில் திராவிட மாயை என்ற கருத்தரங்கம் சென்னையில் நடத்த உள்ளோம். திமுக ஆட்சியில் இருக்கும்போது பக்கத்து மாநிலங்களால் தமிழகம் ஆற்று நீர் உரிமையை இழந்தது. தமிழகம் இன்று நதிநீர் உரிமையை இழந்ததற்கு கலைஞர்தான் காரணம். செம்மொழிக்காக கலைஞர் என்ன செய்தார். மாநாடு நடத்தினால் மட்டும் போதுமா? அ.தி.மு.க. ஆட்சியில் யாரும் எதுவும் சொல்ல முடியாது திராவிட ஆட்சிகளால் இதுவரை தமிழ்நாடு எந்த நிலையிலும் முன்னேறவில்லை. அதிமுக ஆட்சியிலும் தமிழகம் இருண்டுபோய் தான் இருக்கிறது.கூடங்குளம் மட்டுமல்ல எங்கேயும் அணு உலைகளே வேண்டாம் என்பதுதான் எப்போதும் என்னுடைய நிலைப்பாடு. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Subscribe to:
Posts (Atom)