★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Thursday, 15 March 2012

ஜெனிவாவில் கிடைத்திருக்கும் வாய்ப்பை இந்தியா தவறவிடக்கூடாது

ஐ.நா. பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பதன் மூலம் மட்டுமே இலங்கை விவகாரம் சரியான திசையில் நகர்வதை உறுதிப்படுத்துவதாக இருக்க முடியும். அதுவே உறுதியான நகர்வாக இருக்க முடியும்.

இந்தியாவில் வெளியாகும் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில் பொதுநலவாய மனித உரிமை அமைப்பின் பணிப்பாளரான மஜா டர்வாலா எழுதி வெளியிட்ட கட்டுரையின் தமிழாக்கம் இது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இந்தியாவானது தனது தலைமைத்துவத்தை மிகச் சரியாக, உறுதியாகப் பயன்படுத்துவதுடன், இலங்கை விவகாரம் தொடர்பில் உறுதியான தீர்வையும் நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும்.
 
மனித உரிமைகள் தொடர்பில் இந்தியா அனைத்துலக மட்டத்தில் துணிச்சல்மிக்க, மிக நம்பிக்கையான நிலைப்பாட்டை எடுப்பதற்கான தகுந்த நேரம் வந்துவிட்டது. 
அனைத்துலக விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்வது அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் மனித உரிமை விவகாரங்களிலும் இந்தியா தனது தலைமைத்துவ அதிகாரத்தைக் கொண்டு கோரிக்கையை விடுக்கவேண்டும்.
 
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியா, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் தனது வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் முன்னேற்றத்தைக் காண்பிப்பதற்கான சிறந்த நல்வாய்ப்பைக் கொண்டுள்ளது.
 
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். 
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பாக விவாதிப்பதற்காக 2009இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அவ\ர கூட்டத் தொடர் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
 
இந்தக் கூட்டத் தொடரில், மேற்கு நாடுகள் இலங்கை மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் மற்றும் அதன் மீதான விசாரணைகளிலிருந்து இலங்கையை இந்தியா பாதுகாத்தது. அந்தத் தொடர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் இலங்கை போதியளவில் செயலாற்றி இருக்கவில்லை.
 
இறுதிப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதை அது சரிவரச் செயற்படுத்தவில்லை. குற்றச் சாட்டுக்களுக்கு பொறுப்புக் கூறுதல் தொடர்பில் இலங்கை அரசு செயற்றிட்டம் ஒன்றை வரைந்து அதனை மனித உரிமைகள் சபையில் அறிக்கையிடுவதை உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. வேறு வழியில் கூறுவதானால், இலங்கை தனது நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதில் மேலும் பல சிறந்த நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறான நகர்வுகளை உலக நாடுகள் கண்காணிக்கும்.
 
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு உண்மையில் போதியதாக இல்லை. இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள்  மிக வேகமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என இப்பிரேரணை மூலம் அழைப்பு விடுக்கப்படாமையானது அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.
 
இந்நிலையில், இனிவருங் காலங்களில் ஐ.நா. மனித உரிமைகள் சபையால் எடுக்கப்படும் முயற்சிகளில் இலங்கையில் இடம்பெற்ற போர் மீறல்கள் தொடர்பில் நீதி, பொறுப்பளித்தல், சர்வதேச விசாரணை போன்றவை உள்ளடக்கப்பட வேண்டும். ஆகவே இலங்கைக்கு எதிராகத் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு சார்பாக வாக்களிக்க வேண்டும்.
 
இது இலங்கை விவகாரம் தொடர்பில் சரியான திசை நோக்கி நகர்வதை எடுத்துக் காட்டும். ஆனால் இலங்கை விவகாரத்தில் உடனடியாக தேவைப்படும் நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமிடத்தே அது இறுதியான, உறுதியான நகர்வாக இருக்க முடியும். 
 
இந்தியா இலங்கையிடம் தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது வெளிப்படையாகவோ அதன் மீறல் விவகாரங்களில் எதனையும் கேட்டுக் கொள்வதற்கேற்ற முறையில் ஐ.நா. பிரேரணை தயாரிக்கப்படவில்லை என்பதே இந்தியாவின் கருத்தாகும். இந்தியாவானது தனது பிராந்திய நலனையே அதிகம் கருத்திற் கொள்கின்றது. ஆனால் மிக உறுதியான, நல் ஆட்சியை நடத்துகின்ற, பிராந்திய சக்தியாக இலங்கையின் அயல் நாடாக இந்தியாவே உள்ளது.
 
இலங்கை தொடர்பில் இந்தியாவானது இரு விடயங்களைக் கவனத்திற் கொண்டுள்ளது. இலங்கையில் பொருளாதார மற்றும் நிதி முதலீடுகளை சீனா மேற்கொண்டுள்ள நிலையில், கொழும்பு மீதான தனது செல்வாக்கை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்கு உண்டு. அதேவேளையில், இந்தியாவில் 70 மில்லியனுக்கும் மேற்பட்ட சனத்தொகையைக் கொண்டுள்ள தமிழ் நாடானது இலங்கைத் தமிழர்களின் நெருங்கிய இரத்த உறவாகக் காணப்படுகின்றது.
 
இதனால் இலங்கைத் தமிழர்களின் அரசியல் அவாக்களை இந்தியா தட்டிக்கழித்து விடமுடியாது. இதனையும் இந்தியா கவனத்திலெடுக்க வேண்டியுள்ளது. 
 இலங்கை அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்பதற்கு ஆதரவாக இந்தியாவானது தீர்மானம் எடுத்துக் கொள்ளுமானால் மேற்கூறிய இரு தரப்புக்களையும் சமப்படுத்த முடியும்.
 
நீண்ட கால அடிப்படையில் நோக்கினால், குறிப்பாக உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவானது, அனைத்துலக மட்டத்தில் சிறந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளுமிடத்தில் இலங்கையில் தற்போது காலூன்றியுள்ள சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்கான நல்வாய்ப்பையும் பெற்றுக் கொள்ளும். குறுகிய கால அடிப்படையில் நோக்கினால், இலங்கை விவகாரத்தில் சாதகமான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துக் கொள்ளுமிடத்தில் தனது சொந்த மக்களின் கோரிக்கையை நிறைவுசெய்ய முடியாமல் போகும்.
 
இலங்கையில் இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவினர், போர் மீறல்கள் தொடர்பிலான உண்மைகளைக் கண்டறிந்து கொண்டதுடன், உள்நாட்டுப் போரில் பங்குகொண்ட இலங்கைப் படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் மீறல்களைப் புரிந்தனர் என்பதை ஆதாரப்படுத்தி 2011இல் அறிக்கை வெளியிட்டிருந்தனர். 
 
இந்தப் போரின்போது 40,000 வரையான ஆண்கள், பெண்கள், சிறார்கள் என பலதரப்பட்டவர்களும் கொல்லப்பட்டனர் என்று வல்லுனர் குழுவினர் ஆதாரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் இலங்கையில் சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வல்லுனர் குழுவினர் கோரிக்கை விடுத்திருந்தனர், ஆனால் இக்குற்றச் சாட்டை இலங்கை அரசு ஏற்க மறுத்ததுடன், தான் சொந்தப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி விசாரணை மேற்கொள்ளும் வரை காத்திருக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் தெரிவித்தது.
 
இதன் பின்னரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக் குழு உருவாக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டு 18 மாதங்களின் பின்னர் அதனால் கண்டறியப்பட்ட பாடங்கள் தொடர்பிலான அறிக்கை நாடாளுமன்றில் \மர்ப்பிக்கப்பட்டது. அதில் சில முக்கிய பரிந்துரைகள் குறிப்பிடப்பட்ட போதிலும், போர்க் காலத்தில் இடம்பெற்ற மிக மோ\மான சில மீறல்களை இது கவனத்தில் கொள்ளத் தவறியுள்ளது. 
 
இராஜதந்திர ரீதியில் நோக்கில், இந்தியாவின் பதிலானது மறைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் இலங்கை விவகாரம் தொடர்பான செய்தி தெளிவாக உள்ளது. அதாவது இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான சுயாதீன அனைத்துலக பொறிமுறை ஒன்று காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட வேண்டியிருக்கும். இது விடயத்தில் இலங்கை அரசு மேலும் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். 
 
கடந்த ஜனவரியில் இலங்கை அரசு தனது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான இராணுவ நீதிமன்றம் ஒன்றை அமைத்திருப்பதாக அறிவித்தது.
 
இந்த நீதிமன்றுக்கான உறுப்பினர்களை வன்னி போர்க் களத்தில் முன்னர் கட்டளைத் தளபதியாக செயலாற்றிய ஒருவரே நியமித்துள்ளார். ஆனால் இதே கட்டளைத் தளபதியின் கண்காணிப்பின் கீழ் அதே வன்னியில் இலங்கையில் பாதுகாப்புப் படையினரால் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப் பட்டதற்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் உண்டு. 
 
இந்நிலையில், இந்தியா உட்பட உலக நாடுகள் ஐ.நா. பிரேரணைக்கு ஆதரவாக இருக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் அண்மையில் ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான தனது சுற்றுப் பயணத்தை நிறுத்தியிருந்தார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்படும் பிரேரணையில் இலங்கைக்குச் சார்பாக வாக்களிக்குமாறு சில உலக நாடுகளிடம் கோரிக்கை விடுக்க முயற்சி செய்தும் அந்த முயற்சிகள் இடையில் கைவிடப்பட்டதானது, இலங்கை தனது நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதையே தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. 
 
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடான இந்தியா இந்த விடயத்தில் தெளிவாக முடிவெடுத்து தனது இருப்பை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது இலங்கை மீதான பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பதன் மூலம் இதற்கான நல்வாய்ப்பை இந்தியா தவறவிடக் கூடாது.

No comments:

Post a Comment