★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Saturday, 10 March 2012

மிகப்பெரிய மாநிலத்திற்கு இளம்வயது முதல்வர் அகிலேஷ் யாதவ்

லக்னோ, மார்ச் 10 : இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமாகக் கருதப்படும் உத்தரப்பிரதேசத்திற்கு சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் மிக இளம் வயது முதல்வராக பதவியேற்க உள்ளார்.இது குறித்த முடிவு இன்று சமாஜ்வாடி கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் அகிலேஷ் யாதவ் உரிமை கோர உள்ளார்.  அம்மாநில ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த பிறகு,  மார்ச் 15ம் தேதி அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.


                                      அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டால், அம்மாநிலத்தில் மிக இளம் வயதில் முதலமைச்சராக பொறுப்பேற்றவராக அகிலேஷ் யாதவ் திகழ்வார். இந்த நிலையில், கட்சியின் மூத்த தலைவரான ஆஸம் கான், முலாயமின் தம்பி ஷிவ்பால் சிங் யாதவ் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை அளிப்பதாகக் கூறி அஸம் கானையும், நமக்கு வயதாகி விட்டது. எனவே இளம் தலைமுறையினருக்கு வழி விட வேண்டும் என்று கூறி தனது தம்பியையும் முலாயம் சிங் யாதவ் சமாதானப்படுத்தியுள்ளார்.எனினும், சமாஜ்வாடிக் கட்சிக் கூட்டம் நடைபெறும் பகுதியில் இருவரது ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமாஜ்வாடிக் கூட்டத்தில் இன்று அஸம் கான் அகிலேஷ் யாதவின் பெயரை முன்மொழிந்தார், ஷிவ்பால் சிங் யாதவ் வழிமொழிந்தார்.


அகிலேஷ் யாதவுக்கு 38 வயதாகிறது. உ.பி.முதல்வரானால் இதுவரை பதவி வகித்தவர்களில் இளமையானவர் என்ற பட்டம் அகிலேஷ்க்கு கிடைக்கும்.

No comments:

Post a Comment