★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Tuesday, 29 November 2011

ராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்!

 ராமேஸ்வரத்திலிருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்களை  இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததால் பல மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரத்திற்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததால் மீனவர்கள் படகுகளுடன் காணாமல் போயினர்.

காணாமல் போன மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாததால் மீனவ கிராமங்களில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. நேற்று ராமேஸ்வரத்திலிருந்து 702 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் இரவு 9 மணியளவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை விரட்டியதாக கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாலா புறமும் சிதறிய மீனவர்கள், காலையில் கரை வந்து சேர்ந்துள்ளனர். இதில், மேலும் பல மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. அவர்களை குறித்து எந்த தகவலும் தெரியாததால், மீனவ கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மாயமான மீனவர்களின் நிலை குறித்து அறியவும்  விசாரணை நடந்து வருகிறது.

maraththami zhar senai

No comments:

Post a Comment