பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 104-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஜெயலலிதா. உடன் செய்தி, சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைப்புச் செயலாளர் விசாலாட்சி.
சென்னை நந்தனத்தில் தேவர் சிலைக்கு கீழே உள்ள படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, மத்திய முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி.
தேமுதிக அலுவலகத்தில் தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் கட்சித் தலைவர் விஜயகாந்த். உடன் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள்.
முத்துராமலிங்கத் தேவரின் 104-வது பிறந்த நாள் மற்றும் 49-வது குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் அமைச்சர்கள் (வலமிருந்து) செல்லூர் கே. ராஜு, ஓ. பன்னீர்செல்வம், நத்தம் ஆர். விஸ்வநாதன், ஆர். வைத்தியலிங்கம்,
பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் தி.மு.க. பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின், முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுப. தங்கவேலன் உள்ளிட்டோர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 104-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு. உடன் துணை பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சற்குணபாண்டியன், அமைப்பு செயலாளர்
தேசிய தலைவர் தெய்வத்திருமகன் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 104-வது பிறந்த நாள் மற்றும் 49-வது குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவரின் ஆலயத்தில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், மாநில பொருளாளர் ரவிராஜா சேதுபதி, மாநில துணைப் பொதுச்செயலாளர் T.R.K.மணிகண்டன், மதுரை மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பரமக்குடி நகர செயலாளர் அருன்தேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment