★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Sunday, 13 November 2011

நாம் எங்கே செல்கிறோம் ?



தமிழர் நாடு! தமிழர் தேசியம்! மறத்தமிழர் சேனை!

1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது! ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால், அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால், சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால், சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால் உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?



ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்றபோது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது! ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை! கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு! மன்னுரிமையுண்டு!! பிராமினருக்கேது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை? எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது! தேசிய மாயை திணிக்கப்பட்டது! ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது! ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னாபின்னமாயின. ஆனால், எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர். மலையாளிகளும் தெலுங்கரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்.

சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது! முதலையை முறியடிப்பது எப்போது? சேற்றிலிருந்து எழுவது எப்போது? நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்! இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்! திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது! தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இழித்தவாயராக வளம் வருகின்றார். வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது. அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக்கொண்டுள்ளது! தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல! தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டுவந்துவிட்டனர். கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது! ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன! இதுதான் திராவிடம் செய்த கோலம்! தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்துபோனது!!

தாழ்ந்த தமிழகம் தலை நிமிர; இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்! தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவேண்டும்! தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்! இவற்றை முன்னிறுத்தியே மறத்தமிழர் சேனை உருவாக்கப்பட்டது!
தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே (maraththamilar senai) மறத்தமிழர் சேனையாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், செய்யப்பட்டு வருகின்றன.  பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது மறத்தமிழர் சேனை.

No comments:

Post a Comment