கமுதி, நவ. 17: கமுதியில் இருந்து மண்டலமாணிக்கம் வழியாக மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. மண்டலமாணிக்கம் அருகே எம்.பச்சேரியைச் சேர்ந்த சிலரும், விருதுநகர் மாவட்டம் சேதுபுரத்தைச் சேர்ந்த சிலரும் அக். 28-ம் தேதி பஸ்ஸில் மோதிக் கொண்டனர். இருதரபப்பினரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் மேலும் மோதல்கள் உருவாகும் பதற்ற நிலை நிலவியது. இதையடுத்து விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் இருந்தும், கமுதி பகுதியில் இருந்தும் மண்டலமாணிக்கம் வழியாகச் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து தடைப்பட்டு, இரு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அவதி அடைந்தனர். நவ. 16-ம் தேதி வரையிலும் 21 நாளாக கமுதியில் இருந்து மண்டல மாணிக்கம் வழியாக பஸ்கள் செல்லவில்லை. கமுதி பகுதியினர் மண்டலமாணிக்கம் வழியாக விருதுநகர் மாவட்ட ஊர்கள் சிலவற்றுக்குச் செல்ல முடியாமல் தடைப்பட்டது. அருப்புக்கோட்டை அல்லது பார்த்திபனூர் வழியாக அதிக நேரமும், பணமும் செலவழித்து பயணம் செய்து பொது மக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து நவ. 16-ம் தேதி தினமணியில் செய்தி பிரசுரமானது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வி.அருண்ராய், காவல் கண்காணிப்பாளர் எஸ்.காளிராஜ் மகேஷ்குமார் மற்றும் அரசுப் போக்குவரத்து அலுவலர்கள் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதனால் நவ. 16 முதல் மண்டலமாணிக்கம் வழியாக கமுதியில் இருந்து விருதுநகர் மாவட்ட ஊர்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடத் தொடங்கி உள்ளன. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-maraththamilar senai
-maraththamilar senai
No comments:
Post a Comment