மறவர்களின் மரபுரிமை சொத்தான கச்சத்தீவை கைப்பற்ற இந்திய தேசம் 65 வது சுதந்திர தினம் கொண்டாடிக்கொண்டிருக்கிற அதே தருணத்தில் நமது "தேசிய கொடியை" கச்சத்தீவில் ஏற்ற இராமேஸ்வரம் நகரில் ஊர்வலமாக சென்ற மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன்ஜி, இந்து மக்கள் கட்சி பொதுச்செயலாளர் பல்லடம் அண்ணாதுரை ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கச்சதீவை நோக்கி கோஷமிட்டபடி புறப்பட்ட பொழுது தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
-maraththamilar senai (maraththamizhar senai) 15-08-2011
உடன் வருகைதந்த இயக்கத்தின் முன்னணி நிர்வாகிகள் உட்பட 200 பேர் கைதுசெய்யப்பட்டு திருமண மகாலில் தங்க வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப் பட்டனர்.
-maraththamilar senai (maraththamizhar senai) 15-08-2011
No comments:
Post a Comment