★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Monday, 8 August 2011

தேவர் குல மரபு எது ?

மறத்தமிழர் சேனை இயக்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கை 

                                                                 தேவர் குல மரபு 


மரணமடையாமளிருப்பதால் வாழ்ந்து கொண்டிருக்கிற பலரை பார்க்கும்
போது எதையுமே தீர்மானிக்க முடியவில்லை.  தங்களுக்கு ஒரே ஒரு முறை  
கிடைத்த  இந்த மகத்தான வாழ்க்கையை நன்கு அனுபவித்து, வேறெந்த 'வலி'களுமின்றி இறந்து போகலாமென எண்ணுகின்றார்கள் போலும். மண்ணுலகைவிட்டு நீங்கி பல நூற்றுஆண்டுகளாகியும் வாழ்ந்து கொண்டிருக்கும் 'அவர்களைப்' பற்றிய நினைவு இவர்களுகேது ? சாவு பற்றிய பயமே , வாழ்வை இறுகப் பற்றிக் கொள்ளச்செய்கிறதோ!  ஒரு யுத்தத்தை வென்றவர்களில் சிலர் அரியணைக்கும் வேறு சிலர்  சிறைச்சாலைக்கும்
போவார்கள் . இது உலக நியதேயே ! சிறைச்சாலைகளின் 'நெடிய துயரங்களை '
எண்ணி போரைத் துறக்கும் மரபினர் அல்ல நாமனைவரும் .



                                 "மறக்குடி பிறந்த மாவீரர்களே, சக மனிதனாக நாம்
நடமாடுவதற்கான சந்தர்பங்கள்  வெகுவாகக் குறைந்துவிட்டது. கலாச்சாரத்
தளத்தில்  நமது செயல்பாடுகள் முடக்கப்பட்டுவிட்டன. முந்தின தலைமுறை
வீரத்தை விட்டு விட்டு சமாதானமாக வாழ் வாழத்துவங்கியதன் பலனை இன்று நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் ."

                                      இன்று மிக அவசியமானதும் அவசரமானதுமான 'ஜாதிவாரி
கணக்கெடுப்பு கோரிக்கை’ கண்டு கொள்ளபடாமலேயே இருக்கிறது. நமது
யுத்தத்தின் பயனாக 'கட்சி' களை கட்டமைத்தவர்கள் 'சுகபோகி' களாக உருமாறி
வருவதும் , பொருளாதார 'பெருமுதலை' களாக ஆனதும்தான் மிச்சமா? நடிகர்களின் பின்புலத்தில் கூட்டம் திரட்டும்; நடிகர்களின் தலைமையில் அணிதிரளும் 'திராவிட கருத்தாக்கம்' போரெனில் புகழும் புனை கழல் மறவர் கூட்டத்திற்கும் வந்திருப்பது வேதனையின் உச்சம் .
                                   
 வரலாற்றின் வழித்தடத்தில் நாம் மறைத்து வைக்கப்பட்ட இடங்களை மிகச்சரியாக அடையாளம் கண்டிரத் தெரியாத இவர்களால் பயனேது? கடந்து வந்த    பாதை, இடறி விழுந்த இடங்கள், ஏமாற்றப்பட்ட தருணங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளாமல் எதிர்காலத்திற்கான பாதையில் ஒரு அடியைக்கூட உருப்படியாக எடுத்து வைக்க முடியாது. இதைப் புரிந்து கொண்டு புத்திப்பூர்வமாக அரசியலை இவர்கள்  முன்னெடுக்க போவதில்லை. இவர்களின் 'கோர்வை 'பேச்சு' களிலும்  'அரிதாரபூச்சு ' களிலும் இருக்கின்ற அழகியலுக்காக நாம் 'பலி இடப்' பட வேண்டுமா?

                                அதிகார வெறிக்ககாவும், அரசியல் பொருளாதார நலன்களுக்காகவும் மறவர்கள் பலிஇடப்படுவது வரலாற்றில் புதிய சங்கதி இல்லை . இந்த வெறிக்காக கள்ளர்,மறவர்,அகமுடையர் ஏழை பணக்காரர் என்கிற பேதங்கள் பார்க்கப்படுவதில்லை. தமது நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதே இவர்களின் நோக்கமாகும். இவ்வேளையில் நாம்பெற்ற அரசியல் சுதந்திரம் அனைத்து மக்களுக்கும் சென்றடைந்துள்ளதா? அரசியல் சுதந்திரம் அனைத்து மக்களுக்கும்  பொருளாதார சுதந்திரம் பெற வழிவகுத்துள்ளதா?  என கணக்கு பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

                                     கடும்புலிக்கும் அஞ்சாத கொடுங் தீங்கண் மறவர் மரபுக்கு அரசியலின் பெயரால் செய்த   கொடுஞ்செயல்கள்  எத்தனை? எத்தனை?  அவற்றைச் செயலிழக்கச் செய்ய வேண்டிய பணி இன்னமும் முற்றுப்பெறாமலேயே இருக்கிறது.

                                     தன்னறிவில்லா தலைமைகளின் விருப்பம் கலைந்து போகும்
போது, மிஞ்சுவதெல்லாம் "அவமதிப்பு" மட்டும்தான் என்பதை முதலில் நீங்கள்
உணர்ந்தாக வேண்டும். தம்மைச் சுற்றி இருந்த உலகத்தை அவர்கள் புரிந்து
கொள்ளத்தவறிவிட்டனர். அதனால் ஏற்பட்ட விளைவுகளே பாரதூரமானவையாக அமைந்தன.
         
            முதலில் நமக்குள் விழுந்திருக்கும் முடிச்சுகளை அவிழ்த்தால்தான் சமூகத்தில் இருக்கும் முடிச்சுகளை உடைத்தெறிய முடியும்.

                                     'வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் வந்து அடையணும்'

என்பது பெரியோர்களின் வேதவாக்கு. தர்க்க ரீதியாகவும் இதுவே சரி. தன்னை அழிக்கவரும் நஞ்சையே தனது உணவாக்கிக் கொண்டு உயிர் வாழும் விந்தை பிறவியாக சாதி இருக்கிறது. அதன் சரித்திர பெருமை தற்பொழுது உங்களது கைகளில்.
                                        ஜாதி மட்டுமல்ல முடிவும் தான் .
                                     
எமது கடந்த கால அரசியல் மற்றும் எமது அரசியல் மரபு குறித்த சுய விமர்சனம் தான் இது ...
                                                                                                களம்காணஅழைக்கும்


                                                                                                    மறத்தமிழர்சேனை


No comments:

Post a Comment