★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Tuesday, 19 July 2011

முக்குலத்தோர் (தேவர்)

முக்குலத்தோர் (தேவர்) முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், அகமுடையர் (அகம்படியர்), மறவர் ஆகிய முக்குலங்களை உள்ளடக்கியதால் இச்சாதியினர் முக்குலத்தோர் என்றும் இந்திர குலத்தினர் என்பதால் தேவர் என்றும் குறிக்கப்பெறுவர்.
தேவர் என்பது தென் தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதியினரையும் குறிக்கும். கள்ளர், அகமுடையர் (அகம்படியர்), மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் குறிப்பிடுவதுண்டு.
தேவர் (முக்குலத்தோர்)

தேவர் சமூகத்தினர் போர்க்குணம் படைத்த வீரம்செரிந்தவர்களாக வரலாற்றுகாலம் தொட்டு இன்றுவரை விளங்கி வருகின்றனர்.தேவர் என்போர் கள்ளர்,மறவர் மற்றும் அகமுடையர் இம்மூவரும் உள்ளடக்கிய ஒரு சமூக கூட்டமைப்பு.இம்மூவரும் இணைந்தவொரு வீரவர்க்கமானது முக்குலத்தோர் யென்று வழங்கப்பட்டு வருகிறது.
ஆங்கில காலணித்துவ காலங்களில் அவர்களுக்கு கீழே அடிமைப்படுவதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர்.ஆங்கிலேய ஆதிக்கத்தின் போது தமிழகத்திலிருந்து சட்டிஸ்கர் பகுதிக்கு இடம் பெயர்ந்த தேவரின மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.
தேவர் (முக்குலத்தோர்) சமூகத்தினர் பெரும்பான்மையானோர் தென் தமிழகத்து மாவட்டங்களை பூர்வீகமாகக் கொண்டுள்ளனர்.மேலும்,தஞ்சை,திருவாரூர்,நாகப்பட்டினம்,புதுக்கோட்டை,திருச்சி யென தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.குறிப்பாக தென் தமிழகத்திலும்,மத்திய தமிழகத்திலும் தேவரின மக்கள் அதிகம் காணப்படுகின்றனர்.
முக்குலத்தோர் தமிழை வளர்க்க மிகவும் செம்மையான பணிகளை செய்துள்ளனர்.
“கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்” என்ற பாடலை செவி வழி கேட்டறிந்து இருக்கலாம்,
கள்ளர், அகமுடையர் (அகம்படியர்), மறவர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றனர். சங்ககாலம் பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய முன்று அரசர்கள் சேரர் சோழர் பாண்டியர் ஆவர இவர்கள் முவேந்தர்கள் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர் அவர்களை தவிர சில சிற்றரசர்களும் அதியமான், மலையமான்,தொண்டைமான்,பழுவேட்டரையன் போன்ற கள்ளர் குலப்பெயருடன்ஆட்சி செய்து வந்தனர்.
இந்தியாவின் மிகச் சிறந்த அரசனாகத் திகழ்ந்தவன் மெளரியப் பேரரசன் அசோகன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பெருமன்னன் இவன் தமிழகத்தை தவிர மொத்த இந்தியாவையும் ஆண்டு வந்தான் தனது கல்வெட்டுகளில் சோழர் பாண்டியர் கேரளபுத்ரர் ஸத்யபுத்ரர் ஆகியோரைக் குறிக்கிறான். இவர்களது நாடுகள் அவனது ஆட்சிக்கு உட்பட்டவை அல்ல. தனி ஆட்சி நடத்தியவை.
தொண்டைமான் கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன் இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான தொண்டைமான் குலத்தை சேர்ந்தவன் இவன் குல மரபினர் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர்.
அதியமான் தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் அதியமான்கள். இவர்கள் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபான கள்ளர் குலத்தினர் எனக் கருதப்படுகிறது. இவர்கள் மலையமான் என்ற கள்ளர் குலப்பெயருடன்ஆட்சி செய்து வந்தனர் சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன மலையமான் மலையமான் திருமுடிக்காரி என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவன். இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான மலையமான் குலத்தை சேர்ந்தவன். இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன்.
சோழர்: சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் அல்லது முக்குலத்தோரின் ஒரு குலத்தவர் என்பது பரவலான கருத்து
. மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. சோழர்கள் கள்ளர்கள் என்பதற்கு பல அதாரங்கள் உள்ளன தொல்லியல் துறையும் பல வரலாற்று ஆசிரியர்களும் இதை உறுதி செய்கின்றனர். இந்திரன் ஆரியர் வழபட்ட கடவுள் என வடமொழி நூல்களிற் பெறப்படுமேனும், தமிழரது தெய்வம் என்று சிலர் கருதுகின்றனர். சோழர் தம் குல முதல்வனாகிய வேந்தனைத் தெய்வமாகக்கொண்டு வழிபட்டு வந்தன ரென்றும் கூறுவர். பழைய நாளில் சோழர்கள் இந்திரனுக்குப் பெருஞ் சிறப்புடன் திருவிழாச் செய்து போந்தமை சிலப்பதிகாரம் முதலியவற்றால் வெளிப்படை, சுராதி ராசன் முதலாகவரு சோழன் எனக் கலிங்கத்துப் பரணி கூறுகின்றது. இவ்வற்றிலிருந்து சோழர் இந்திர குலத்தாரென்பது பெறப்படுமேல் அவர் வழியினராகிய கள்ளர் இந்திர குலத்தினர் எனப்படுவது அதனானே அமையும். தேவர் என்னும் பெயர்,அரிஞ்சய தேவர்,கண்டராதித்ததேவர்,உத்தம சோழ மதுராந்தக தேவர், இராசராச தேவர், இராசேந்திர தேவர், குலோத்துங்கசோழதேவர் எனச் சோழ மன்னர்க்கு வழங்கியிருப்பதும், கள்ளர், மறவர் அகம்படியர் என்னும் இவ்வகுப்பினரும் தேவர் என வழங்கப்படுவதும் இங்கு அறியற்பாலன.இனி, இம்மூன்று வகுப்பையும் குறித்துப் பூவிந்திர புராணம், கள்ளகேசரி புராணம் என்ற தமிழிலே புராணங்கள் எழுதப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம் பிரமாண்ட புராணம் முதலியவற்றைச் சேர்ந்தனவாம். சோழர்களுக்கு வழங்கப்பட்ட அத்துணை பட்டப்பெயர்களும் இன்று கள்ளர்களுக்கே வழங்கப்படுகின்றன(தேவர்,மேல்கொண்டான், சோழங்கன், சோழகங்கன், நாடாள்வார்). சோழர்கள் பலர் திருமணம் செய்து கொண்டது மழவராயர்,பழுவேட்டரையர்,மலையமான்,வேளார் குடும்பத்தில் அந்த மழவராயரும்,பழுவேட்டரையரும்,மலையமான்  கள்ளர் தான்.
எடுத்துக்கட்டாக:
சுந்தர சோழனுடைய பாட்டி பழுவூர் பழுவேட்டரையர் வம்சத்தை சேர்ந்தவர்கள்.
கண்டராதித்தர் சோழன் – மழவராயர் மகள்
செம்பியன்  மாதேவி
சுந்தர சோழன்-மலையமான் வம்சத்து  வானவன் மாதேவி
இராஜராஜ சோழன் – கொடும்பாளூர் வேளார்  வம்சத்து வானதி
குந்தவை பிராட்டியை பற்றி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் ராஜ ராஜ தேவரின் திருத் தமக்கையார், வல்லவரையர் வந்திய தேவரின் மகாதேவியார், ஆழ்வார் பராந்தக குந்தவையார் என்று பொறிக்கப்பட்டு விளங்குகின்றது.
மேன்மை பொருந்திய வா. கோபாலசாமி ரகுநாத இராசாளியார் அவர்கள் இந்திர குலாதிபர் சங்கத்தின் நான்காவது அண்டு விழாவில் தலைவராக அமர்ந்து செய்த விரிவுரையில் பின்வருமாறு கூறியுள்ளனர்: ‘இந்நாட்டை யாண்ட அரசர் பெருமக்களுள் சோழரைக் கள்ளர் என டாக்டர் பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளாரகள். திருவாளர்கள் ம. சீனிவாசையங்கார் அவர்கள், ‘சோழர் சாதியிற் கள்ளரென்றும், பாண்டியர் சாதியில் மறவரென்றும் ஒரு சாரார் கொள்கை’ என்பர். (செந்தமிழ், தொகுதி -2 , பக்கம்–175 இத்துணையும் காட்டிப் போந்தவைகளால் சோழர்கள் கள்ளர்கள் வகுப்பினரே என்பதில் சந்தேகம் இல்லை.

மறவர்: கள்ளர், மறவர், அகமுடையர் எனும் மூன்று சாதியினங்கள் அடங்கிய தேவர் எனும் சாதீய அமைப்பில் மறவர் சாதியும் ஒன்று. முற்காலத்தில் தமிழகத்தின் பலபகுதிகளை ஆண்ட மன்னர்களும், போர்ப்படையில் வீரர்களாக இருந்தவர்களும் இந்த சாதியினர்தான் என்று சொல்கிறார்கள்.
அகமுடையர் :அகமுடையர் என்போர் முக்குலத்தோர் என்னும் இனத்தை சேந்ததாகக் கருதும் மூன்று குலங்களில் ஒன்று. இம் முக்குலத்தோர் இனமானது தமிழகத்தையே ஆண்ட ஓர் இனம் என்று சிலர் கருதுகிறார்கள்.சேரன்,சோழன்,பாண்டியன் என இந்த மூன்று மன்னர்குலங்களும் “தேவர்” இனத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது. மேலும் தேவர் சாதியுடைய மக்கள் அனைவரும் அரச குலத்தை சேர்ந்தவர்கள் என்Ru சில ஆய்vuகள் தெரிவிக்கின்றன. “கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்” என்ற பாடl செவி வழியாக வருவதாக சிலர் கூறுகின்றார்கள். பொதுவாக தேவர் இனத்தினர் வீரம் செறிந்தவர்களாக இருப்பதாகக் கூறுவார்கள் .இந்திய துணை கண்டத்தின் தென் பகுதியையே தங்களது கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்து வந்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. மேலும் தமிழை வளர்க்க மிகவும் செம்மையான பணிகளை செய்துள்ளனர். தேவர் இனத்தவர்களாக கருதப்படும் அரசர்களான சோழ,சேர ,பாண்டிய மன்னர்கள் அனைவருமே இந்தியாவை தாண்டி அருகில் உள்ள சில நாடுகளின் சில பகுதிகளையும் ஆட்சி செய்து வந்துள்ளனர்.

No comments:

Post a Comment