தெய்வத் திருமகன் தேவர்
Richard Nixon என்ற அமெரிக்க ஜனாதிபதி “Leaders” என்ற தன் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தலைசிறந்த தலைவனின் காலடித்தடத்தில் வரலாற்றின் இடிமுழக்கத்தை கேட்கிறோம். நூற்றாண்டுகள் பல கடந்து – கிரேக்கம் முதல், ஷேக்ஸ்பியர் தொட்டு, தற்காலம் வரை – சில செய்திகள் தொடர்ந்து வரலாற்று ஆசிரியர்களுக்கும் கவிஞர்களுக்கும் காவியம் படைக்க உந்துகோலாக திகழுமேயானால் அது ஒரு தலைசிறந்த, ஒப்பற்ற ஒரு தலைவனின் நற்பண்புகளும், அவனின் தனிச் சிறப்புமேயன்றி வேறொன்றில்லை.”
எது மற்ற மாந்தர்களில்ருந்து ஒரு தலைவனை வேறுபடுத்துகிறது?
எந்த குணம் அளவற்ற காந்தத் தொடர்பை ஒரு தலைவனுக்கும் மக்களுக்கும் இடையே காலம் கடந்தும் காத்து நிற்கிறது? எது ஒரு தலைவனின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுகிறதென்றால், அவனின் முக்கியத்துவமும் அவன் மக்கள் மனங்களில் ஏற்படுத்தும் தாக்கமுமேயாகும். ஒரு நாடகத்தின் திரை விழுகும்பொழுது, பார்வையாளர்கள் நாடகத்தை மறந்து தத்தம் வாழ்க்கைக்கு திரும்பிவிடுகின்றனர். ஆனால் ஒரு மகத்தான தலைவனின் வாழ்வில் திரைவிழுகும் பொழுது, அவனது வாழ்க்கை ஒரு நாட்டின் வரலாற்றையே முற்றிலுமாக மாற்றிவிட்டிருக்கும்.”
இந்த எண்ணங்கள் இன்று என் மனத்தில் உதித்தமைக்குக் காரணமாக அமைந்தது, நான் இன்று பசும்பொன் தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாற்றினை, நமது தாய்த் திருநாட்டின் விடுதலை வேழ்வியில் அவரது வீரமிகு அருஞ்செயல்களை படித்தமையே ஆகும்.
தேவர் திருமகனார் ஒரு விடுதலை போராடட்ட வீரர் மட்டுமல்லர் அவர் கோடானுகோடி ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீட்டெடுக்க வீரச்சமர் புரிந்து அவர்களை காத்து நின்ற காவல் தெய்வமாவார். அவர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்குத் தடையாய் நின்ற சமூக, மூடப்பழக்க வழக்க, அரசியல் கொடுங்கோன்மைகளிலிருந்து மீட்க்க தன் வாழ்வையே தியாகம் புரிந்த ஒப்புயர்வற்ற தன்னலமற்ற தலைவராவார்.
“வள்ளலார்” என்ற பெயர் ஸ்ரீ ராமலிங்க அடிகளாரை மட்டுமே குறிக்கும்
“பெரியார்” என்ற பெயர் E.V.ராமசாமி நாயக்கரை மட்டுமே குறிக்கும்
“அண்ணா” என்ற பெயர் C.N. அண்ணாதுரையை மட்டுமே குறிக்கும்
அதுபோல்
“தேவர்” என்ற பெயர் தெய்வத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை மட்டுமே குறிக்கும்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் எனும் திருத்தலத்தில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் நாள் அவதரித்தார். அவரது தந்தையார் திரு. உக்கிரபாண்டித் தேவர் அவர்கள் 32 ½ கிராமங்களுக்குச் சொந்தக்காரர், அவரது தாயார் அன்பே உருவான திருமதி. இந்திராணி அம்மையார். தேவர் திருமகனை தெய்வம் பிறந்த இரண்டே மாதங்களில் சோதிக்கத் தொடங்கியது. அவரது தாயார், பிற்காலத்தில் அந்த மண்டலத்துக்கே தாய் போல் விளங்கிய தேவர் திருமகனை விட்டுப் பிரிந்து விண்ணுலகம் சென்றுவிட்டார்.
அதன் பின்னர் அவரது தாய்வழி பாட்டி திருமதி. ராணி அம்மையார், தேவரை தாய்க்குத் தாயாக இருந்து, அணைத்து சமூக அறிவை, பண்புகளை, பக்தி நெறிகளை, ஒழுக்க நெறிகளை ஊட்டி உலகம் போற்றும் உத்தமகராக, ஒரு மகானாக உருவாக்கினார். சிறுவயதிலேயே தேவர் திருமகனார் ராமாயணம், மகாபாரதம், பாகவதம் ஆகிய இதிகாசங்களில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். இந்த இதிகாச நாயகர்களின் ஒத்த பண்புடன் தன் வாழ்நாள் முழுவதும் இம்மியளவும் பிறழாமல் வாழ்ந்து காட்டிய அதிசயப் பிறவி தேவர் திருமகனார். அவர் ராமன் ராவணனை வாதம் செய்து உலகை காத்தது, பாண்டவர்கள் கெளரவர்களின் அநீதியை அழிக்க ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா செய்த லீலைகள் ஆகியவை பெரிதும் கவர்ந்தன. அனைத்துக்கும் மேலாக முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்து தீமைகளை அளித்து நீதியை இவ்வுலகில் நிலைநாட்டியது அவரை வாழ்நாள் முழுக்க ஒரு தலைசிறந்த முருக பக்தராக நிலைநிறுத்தியது.
தேவர் அவர்கள் தனது ஆரம்ப கல்வியை மதுரையில் ஐக்கிய கிறிஸ்தவ பள்ளியில் பயின்றார். பிறகு ராமநாதபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். கல்வியில் சிறந்த மாணவராக திகழ்ந்த தேவர் அவர்களால், 1925ஆம் ஆண்டு ப்ளேக் நோய் பாதிப்பால் மேலும் தொடர முடியாமல் போனது. அந்த தெய்வத் திருமகனிடம் அந்த கலைமகளே குடியிருந்த போது ஏட்டுக்கல்வி எதற்கு? இதன் பின்னர் பசும்போன்னுக்கே திரும்பினார்.
தேவர் அவர்கள் அந்த சிறு வயதிலேயே தன் அறிவு மேன்மையை தான் புத்தகங்களின் மேல கொண்ட அளவிட முடியாத ஆர்வத்தினால் வியக்கவைதார். அவர் அந்த சிறுவயதிலேயே அரசியல், பொது அறிவு, இலக்கியம், ஆன்மிகம், தத்துவம், உலக நாகரீகம் என்று அனைத்தையும் தன்னார்வத்தால் கற்றுத் தேர்ந்தார். Lord Bacon என்ற அறிஞரின் “Reading maketh a full man” என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். இவைமட்டுமின்றி தேவர் அவர்கள் வானசாஸ்திரம், ஆயுர்வேதம், சித்தமருத்துவம் மற்றும் ஜோதிடதிலும் ஆழ்ந்த ஞானம் பெற்று விளங்கினார்.
பண்டைகால தமிழர்களின் கலைகளான சிலம்பம் மற்றும் வால்வீச்சிலும் தலை சிறந்த வீரராக திகழ்ந்தார். குதிரைச் சவாரியில் அவரை மிஞ்ச அந்தப் பகுதியில் மற்றொருவர் இல்லையென்றே கூற வேண்டும். துப்பாக்கி சுடுவதிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார்.
தன் இளம்வயதிலேயே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றி கேட்போரை மகுடிக்கு மயங்கும் சர்ப்பத்தைப் போல் கட்டிப்போடும் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார். தன் அரசியல் வாழ்வின் தொடக்கம் தொட்டே தன்னிகரற்ற நாவன்மை கண்டு வியக்காதவர் இல்லையென்றே கூறவேண்டும்.
1930ஆம் ஆண்டு உப்பு சத்யாகிரஹம் பாரத தேசம் முழுவதும் எழுச்சியுடன் நடந்துகொண்டிருந்த சமயம், மற்றெல்லா இளம் வீரர்களைப்போல் தேவர் அவர்களும் தன்னை முழுதுமாக அற்பனித்துக்கொண்டார். ஆனால் இதற்க்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் முழுநேர அங்கத்தினராக தன்னை சுதந்திரப் போராட்டத்திற்கு அற்பனித்துக்கொண்டிருந்த்தார். இளம் தேவரின் தேஜஸ் கண்டு அங்கு வந்திருந்த காங்கிரசின் முன்னால் தலைவரான திரு. S. ஸ்ரீனிவாச ஐயங்கார் வியந்து அவரை தன் அரசியல் சீடராக ஏற்றுக்கொண்டார்.
1933ஆம் ஆண்டு ஜுன் 23ஆம் நாள், தேவர் தன் முதல் வரலாற்று சிறப்புவாயிந்த சுவாம விவேகானந்தரை பற்றிய தன் முதல் சொற்பொழிவை சாயல்குடியில் உள்ள விவேகானந்தர் உயர்நிலை பள்ளியில் நிகழ்த்தினார். 3 மணி நேரம் நீடித்த அந்த சொற்பொழிவை கேட்ட மாபெரும் கூட்டம் மகுடிக்கு மயங்கிய பாம்பாய் கட்டுண்டு கிடந்தது எனச்சொன்னால் அது மிகையாகாது. அந்த சொற்பொழிவில் ஆன்மீகமும் விடுதலை வேட்கையும் இணைந்த அந்த சொற்பொழிவு அனைவரையும் விடுதலை போரை நோக்கி திருப்பியது.
1934ஆம் ஆண்டு மதராஸ் பிரசிடென்சி அரசு ஒரு அக்கிரமத்தை சட்டம் என்ற பெயரில் அரங்கேற்றியது. அந்த சட்டம் பிரமலை கல்லர் முதலிய பல சாதியனரை குற்றப்பரம்பரை என்று அறிவித்தது. இந்த சட்டத்தை கொண்டு ஆங்கில அரசு பல அக்கிரமங்களை அரங்கேற்றியது. ஒரு சாதியில் பிறந்த ஒரே காரணத்துக்காக ஒருவன் குற்றவாளி என்று அந்த கொடுங்கோல் சட்டம் கூறியது. அந்த சதியை சார்ந்த இளைஞகர்கள் தினமும் காவல் நிலையங்களில் கைநாட்டு வைக்கவேண்டும். யாரையும் எந்த காரணமுமின்றி கைது செய்து சித்திரவதை நடந்தது. இந்த சாதிகளை எதற்கு கட்டம் கட்டியது ஆங்கில அரசு? ஏனென்றால் இந்த மக்களின் வீரமும் தீரமும் கண்டு அஞ்சியதே காரணம்.
இந்த கொடிய சட்டத்தை எதிர்த்து திரு. வரதராசுலு தலைமையில் மாபெரும் போராட்டம் துவங்கியது. அபிராமத்தில் “ஆப்பநாடு மறவர் மாநாடு” என்ற பெயரில் இந்த கொடிய சட்டத்தை எதிர்த்து ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை திரு. தேவர் அவர்கள் நடத்தினார். அதில் அவராற்றிய அனல்தேரிக்கும் தனது பேச்சில் “மறவர்” முதலான பிற்படுத்தப்பட்ட சாதியினரையும் அடக்கி ஒடுக்கும் இந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்தார். இன்னும் பல போராட்டங்களை நடத்தி இந்த சட்டத்தை ரத்து செய்வித்தார். இந்த மகத்தான சாதனையை நிகழ்த்திய தேவர் திருமகனாரை முக்குலத்தோர் மட்டுமன்றி அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதியினரும் கொண்ட்டாடினர்.
தேவர் அவர்களின் தியாகம், நாவன்மை, யார்க்கும் அஞ்சாத வீரம் கடல் கடந்தும் எட்டி இருந்தது. 1936ஆம் ஆண்டு பர்மாவில் வாழும் இந்திய மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு சென்று ஆன்மீகம், சமூக மேம்பாடு மற்றும் விடுதலை வேட்கையை அறிவுறுத்தும் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி அணைத்து மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார்.
1936ஆம் ஆண்டு தேவர் அவர்கள் தனது 28ஆம் வயத்தில், தமிழகத்தின் பட்டுதொட்டி எல்லாம் யார்க்கும் அஞ்சாத நேர்மையும், செயல்திரமும், வீரமும், மனிதநேயமும், ஆன்மீக சிந்தனையும் ஒருங்கே பெற்ற ஒரு மாபெரும் தலைவராக அணைத்து தரப்பு மக்களின் அபிமானத்தை பெற்றிருந்தார். இந்தியாவின் மாபெரும் தலைவர்களான மகாத்மா காந்தி, ராஜாஜி, M.S. ஆணி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜெயப்ரகாஷ் நரெயின் மற்றும் B.G. கேர் ஆகியோரின் பெருமதிப்பைப் பெறத்துவங்கினார்.
அந்த மாபெரும் தலைவர்கள் தேவரின் செயல் திரம் மட்டுமன்றி பல துறைகளில் அவர் பெற்றிருந்த ஆழ்ந்த அறிவுதிரனையும் கண்டு வியந்து பாராட்டினர். இங்கிலாந்தின் அப்போதைய பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் லாரன்ஸ் ஆப் அரேபியா என்ற மாவீரனை புகழ்ந்து கூறிய இந்த கூற்று நமது தேவர் திருமகனுக்கும் அப்படியே பொருந்தும்.
‘Part of the secret of this stimulating ascendency lay of course in his disdain for most of the prizes, the pleasures and comforts of life. The world naturally looks with some awe upon a man who appears unconcernedly indifferent to home, money, comfort, rank, or even power and fame. The world feels not without a certain apprehension, that here is someone outside its jurisdiction; someone before whom its allurements may be spread in vain; someone strangely enfranchised, untamed, untrammeled by convention, moving independently of the ordinary currents of human action; a being readily capable of violent revolt or supreme sacrifice, a man, solitary, austere, to whom existence is no more than a duty, yet a duty to be faithfully discharged.’
No comments:
Post a Comment