★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Wednesday, 27 July 2011

கள்ளர் - மன்னர் பரம்பரை மாவிரர்கள்

தமிழகத்திலே தஞ்சை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் கள்ளர் என வழங்கப்படுகிறது. இப்பொழுது இக்குழுவினரில் நீதி மன்றங்கள் பலவும் அமைத்துத் தமது நாட்டினை ஆட்சிபுரிந்து வருகின்ற ஓர் மன்னரும், குறுநில மன்னராய் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.

முக்குலத்தோர் (தேவர்)

முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், அகமுடையர் (அகம்படியர்), மறவர் ஆகிய முக்குலங்களை உள்ளடக்கியதால் இச்சாதியினர் முக்குலத்தோர் என்றும் இந்திர குலத்தினர் என்பதால் தேவர் என்றும் குறிக்கப்பெறுவர்.கள்ளர், அகமுடையர் (அகம்படியர்), மறவர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றனர்

சங்ககாலம்

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய முன்று அரசர்கள் சேரர் சோழர் பாண்டியர் ஆவர இவர்கள் முவேந்தர்கள் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர்அவர்களை தவிர சில சிற்றரசர்களும் அதியமான், மலையமான்,தொண்டைமான், போன்ற கள்ளர் குலப்பெயருடன்ஆட்சி செய்து வந்தனர் இவர்கள் அழைக்கப்பட்டனர்
இந்தியாவின் மிகச் சிறந்த அரசனாகத் திகழ்ந்தவன் மெளரியப் பேரரசன் அசோகன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பெருமன்னன் இவன் தமிழகத்தை தவிர மொத்த இந்தியாவையும் ஆண்டு வந்தான் தனது கல்வெட்டுகளில் சோழர் பாண்டியர் கேரளபுத்ரர் ஸத்யபுத்ரர் ஆகியோரைக் குறிக்கிறான். இவர்களது நாடுகள் அவனது ஆட்சிக்கு உட்பட்டவை அல்ல. தனி ஆட்சி நடத்தியவை.

தொண்டைமான்
கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன் இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான தொண்டைமான் குலத்தை சேர்ந்தவன் இவன் குல மரபினர் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர்.

அதியமான்
தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் அதியமான்கள். இவர்கள் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபான கள்ளர் குலத்தினர் எனக் கருதப்படுகிறது. இவர்கள் மலையமான் என்ற கள்ளர் குலப்பெயருடன்ஆட்சி செய்து வந்தனர் சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன

மலையமான்
மலையமான் திருமுடிக்காரி என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவன். இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான மலையமான் குலத்தை சேர்ந்தவன். இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன்.

சோழர்

சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் அல்லது முக்குலத்தோரின் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. சோழர்கள் கள்ளர்கள் என்பதற்கு பல அதாரங்கள் உள்ளன தொல்லியல் துறையும் பல வரலாற்று ஆசிரியர்களும் இதை உறுதி செய்கின்றனர். இந்திரன் ஆரியர் வழபட்ட கடவுள் என வடமொழி நூல்களிற் பெறப்படுமேனும், தமிழரது தெய்வம் என்று சிலர் கருதுகின்றனர். சோழர் தம் குல முதல்வனாகிய வேந்தனைத் தெய்வமாகக்கொண்டு வழிபட்டு வந்தன ரென்றும் கூறுவர். பழைய நாளில் சோழர்கள் இந்திரனுக்குப் பெருஞ் சிறப்புடன் திருவிழாச் செய்து போந்தமை சிலப்பதிகாரம் முதலியவற்றால் வெளிப்படை, சுராதி ராசன் முதலாகவரு சோழன் எனக் கலிங்கத்துப் பரணி கூறுகின்றது. இவ்வற்றிலிருந்து சோழர் இந்திர குலத்தாரென்பது பெறப்படுமேல் அவர் வழியினராகிய கள்ளர் இந்திர குலத்தினர் எனப்படுவது அதனானே அமையும். தேவர் என்னும் பெயர், இராசராச தேவர், இராசேந்திர தேவர், குலோத்துங்கசோழதேவர் எனச் சோழ மன்னர்க்கு வழங்கியிருப்பதும், கள்ளர், மறவர் அகம்படியர் என்னும் இவ்வகுப்பினரும் தேவர் என வழங்கப்படுவதும் இங்கு அறியற்பாலன.இனி, இம்மூன்று வகுப்பையும் குறித்துப் பூவிந்திர புராணம், கள்ளகேசரி புராணம் என்ற தமிழிலே புராணங்கள் எழுதப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம் பிரமாண்ட புராணம் முதலியவற்றைச் சேர்ந்தனவாம். சோழர்களுக்கு வழங்கப்பட்ட அத்துணை பட்டப்பெயர்களும் இன்று கள்ளர்களுக்கே வழங்கப்படுகின்றன(தேவர்,மேல்கொண்டான், சோழங்கன், சோழகங்கன், நாடாள்வார்.) சோழர்கள் பலர் திருமணம் செய்து கொண்டது மழவராயர் குடும்பத்தில் அந்த மழவராயரும் கள்ளர் தான். மேன்மை பொருந்திய வா. கோபாலசாமி ரகுநாத இராசாளியார் அவர்கள் இந்திர குலாதிபர் சங்கத்தின் நான்காவது அண்டு விழாவில் தலைவராக அமர்ந்து செய்த விரிவுரையில் பின்வருமாறு கூறியுள்ளனர்: 'இந்நாட்டை யாண்ட அரசர் பெருமக்களுள் சோழரைக் கள்வர் எனவே டாக்டர் பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளாரகள். திருவாளர்கள் ம. சீனிவாசையங்கார் அவர்கள், 'சோழர் சாதியிற் கள்ளரென்றும், பாண்டியர் சாதியில் மறவரென்றும் ஒரு சாரார் கொள்கை' என்பர். (செந்தமிழ், தொகுதி -2 , பக்கம்--175 இத்துணையும் காட்டிப் போந்தவைகளால் சோழர்கள் கள்ளர்கள் வகுப்பினரே என்பதில் சந்தேகம் இல்லை.

பல்லவர்

"பல்லவர் யாவர்? எங்கிருந்து வந்தனர்? தென்னாட்டு மன்னர்களில் எங்ஙனம் தலைமை யெய்தினர்? கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன்.
இளந்திரையனுக்குச் சில தலைமுளை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவ ரெனப்பட்டனர். இப்பெயரக்ளும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி யென்னம் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன என்பதில் எத்துணையும் ஐயமில்லை. தொண்டைமான் என்னும் பெயர் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும் .பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும் ஒரு பொருளுள்ளனவே எனச் சிலர் கருதுகின்றனர். பல்லவர்க்கு வழங்கும் போத்தரசர் என்னும் பெயரும் இப்பொருளதே யென்கினறனர். எனவே பல்லவர்கள் சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர். கள்ளர்களின் தலைவராகிய புதுக்கோட்டை மன்னர் தம்மை ராஜபல்லவ ரென்றும், பழைய அரச வமிசத்தின ரென்றும் சொல்லிக் கொள்கின்றனர். சர் வால்டர் எலியட் என்பார் கள்ளர்களில் ஒரு பிரிவினர் கலகக்கூட்டத்தாரில் ஒரு வகுப்பின ரென்றும, ஆண்மையும், அஞ்சாமையும், வீரமும் உள்ளவர்களென்றும் கூறுகின்றார். சரித்திர்ப்படி பல்லவர்களும் அவர்களை யொத்தவர்கள்தான். கள்ளர்கள் இன்று வரையிலும் கருநாடக பூமியிலுள்ள குடிமக்களை அடக்கியாண்டு, அவர்களிடமிருந்து. மகாராட்டியர் செளத் என்ற வரிவாங்கி வந்ததுபோல் ஒருவரியும்வாங்கி வந்திருக்கின்றனர். பல்லவரும் எதிரிகளாகிய தமிழ் மன்னர்களின் வலிமைக்கேற்பத் தமது ஆட்சியை நிலைநிறுத்தி வந்திருக்கின்றனர் இத்துணையும் காட்டிப் போந்தவைகளால் கள்ளர் பல்லவ வகுப்பினரே யென நிலை நாட்டப்படுகின்றது

4 comments:


  1. தஞ்சை கோவை பகுதியில் பள்ளி பசங்க” என்று வன்னியர்களை திட்டுவது சாதரணமான ஒன்று இதில் கள்ளர்களை இவர்கள் வீட்டுக்குள் நீங்கள் விடமாட்டார்களாம். நல்ல யோசிச்சு எதாவது சொல்லு.

    முக்குலத்தோர் வரலாற்றை திருடும் வன்னியர்கள் :

    800 வருடங்களாக நாயக்கர் மற்றும் வெள்ளையர்களுக்கும் கட்டுப்பட்டு அடிமையாக வாழ்ந்தா வன்னியர்கள் மன்னர் பரம்பரையா மற்றும் சத்திரியனா? இங்கு முக்குலத்தோர் மட்டுமே மன்னர் இனம் என்று சொல் வதற்கு ஏற்றார் போல் வாழ்ந்த இனம், முக்குலத்தோர் மன்னர்கள் நாயக்கர்களுக்கு அடங்காது எதிர்த்து விரட்டிய 14, 15 ம் நூற்றண்டில் சேதுபதி மன்னர்கள், கள்ளர் நாடு அம்பலகாரர்கள் ,16ம் நூற்றாண்டில் தொண்டைமான், சேதுபதிகள் , 17 ம் நூற்றண்டில் வெள்ளையர்களை விரட்டியடித்த பூலித்தேவர்,வெள்ளைய தேவன் , கள்ளர் நாடு அம்பலகாரர்கள், மறவர் நாட்டு பாளையத்தார்கள் ,18 ம் நூற்றண்டில் வேலுநாச்சியார், மருது பாண்டியர், வாளுக்கு வேலி அம்பலம், 19 ம் நூற்றண்டில் மறவர் நாட்டு பாளையத்தார்கள், கள்ளர் நாடு அம்பலகாரர்கள், இராமு தேவர் மற்றும் ஜானகி தேவர் (நேதாஜி ஆர்மி ) இன்னும் பல நூறு பேர்கள் , இவர்கள் யாருக்கும் அடங்காமல் வீரத்தோடு வாழ்ந்தவர்கள் (அதுக்காக கிடைத்த பரிசு குற்ற பரம்பரை சட்டம் ), ஓரு சத்திரியனும் யாருக்கும் அடங்கி வாழ்வானா? , இந்த 800 வருடங்களாக வன்னியர் சாதியினர் எல்லோரும் எங்க இருந்திங்க, அய்யோ பாவம்;

    800 வருடங்கள் முன் சோழர்கள் பாண்டிய பல்லவ சேர சாளுக்கிய, சிங்களவர் கலப்பு திருமணம் நடந்தது, இதில் எங்கே சாதி வந்தது,

    முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல் சிலையெழுபது. இவர்கள் கருணாகரத் தொண்டைமான் (இவன் பல்லவன்) முதலாம் குலோத்துங்க சோழரின் (இவன் சாளுக்கிய கலப்பு ) படைத்தளபதி வன்னியர் குலம் என்று சொல்கிறார்கள் அனால் அரசனும் வன்னியரா எப்படி, பல்லவர் வன்னியர் குலம் என்றால் சோழ சேர பாண்டிய மன்னர்கள் எப்படி வன்னியர்கள் ஆவர்.

    வன்னியர் குலம் என்பது வன்னியரா? ஆமாம் அப்போ பள்ளி, படையாச்சி அதுவும் தான், அப்போ சூர்ய, சந்திர, அக்கினி, ருத்ர, இந்திர, வன்னிய குலமா? ஆமாம் எல்லாம் வன்னியர்களுக்கு உள்ளது மற்ற சாதியினர்க்கு உள்ள வன்னியர் பட்டம்? அதுவும் எங்களுக்கு உள்ளதுதான் அது திருடப்பட்டது
    அப்ப சோழ, சேர, பாண்டிய, பல்லவ எல்லாரும்? அதுவும் நாங்கள் தான் , நீங்கள் கடந்த 800 வருடங்களாக எங்க இருந்திங்க, அது வந்து அது வந்து முக்குலத்தோர் ஜமீன்களை யும் பபட்டங்களையும் எப்படி திருடுவதுனு இருந்தோம். அது சரி
    வன்னியன் உங்களுக்கு 100 அல்லது 150 பட்டம் இருக்கலாம் ஆனால முக்குலத்தோர்க்கு 2000 பட்டம் உள்ளது அது வன்னியர் களிடம் இருந்து திருடியதாக சொல்லுறிங்க ஆனால 80 % வன்னியர்களுக்கு பட்டமே இல்லையே, அதுவதான் முக்குலத்தோர் திருடினார்களா. டேய் உங்கள் அக்கப்போருக்கு அளவேயில்லையா,
    நீங்கள் என்னதான் முக்கினாலும் வன்னியர் ராசாவா ஆகமுடியாது.

    ReplyDelete
  2. Hindu Castes and sects, 1896, Jogendra Nath Bhattacharya;
    ஹிந்து சாதிகளும் பிரிவுகளும் என்ற நூலிலும் மிலிட்டரி, அதாவது போற்குடிகள் என்ற பிரிவில் பள்ளிகள் இல்லை. மாறாக விவசாய கூலிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் போற்குடிகள் முக்குலத்தோர் மட்டுமே . வன்னியர் 1871 ல் புள்ளிவிவர கணக்கெடுக்கும் போது, தங்களை சத்திரியர் என்று வகைப்படுத்த கெஞ்சி-மன்றாடி கோரிக்கை வைத்தனர்.

    இங்கு வன்னி-வன்னியன், மள்ளர் -மல்லர், மறவர் - கள்ளர் என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் மன்னரை மட்டும் குறிக்கும் சாதியை அல்ல

    வன்னியர்கள் இப்போது சொல்ல வரலாறு இல்லை அதான் வாரிசுகள் இல்லாத மறவர் கள்ளர் ஜமீன்களை தங்களுடைய திருட்டு வரலாறு க்கு சேர்த்துக் கொண்டு மேலும் கள்ளர் பட்டங்களான வன்னியர், கொங்கரையர் மற்றும் மறவர் பட்டங்களான வன்னியனார் தங்களுடையது என்று கூறுவது மிகவும் கேவலமாக இருக்கிறது.

    முக்குலத்தோர் வன்னியர் ஜமீன்கள் கீழே இருந்தார்களாம் இவர்கள் நாயக்கர் ஜமீன்கள் கீழே மட்டுமே சில இடங்களில் இருந்திருக்கிறார்கள் ஆனால் வன்னியர்களுக்கு கீழ் கண்டிப்பாக இல்லை

    வ.சூரக்குடி முக்குலத்தோர் வழி வந்தவர்களை அவர்களும் வன்னியர் எனறு கூறும் கேவலமான செயல், மேலும் தலைவன் கோட்டை, ஏழாயிரம் பண்ணை ஜமீன்கள் தங்களது என்று முக்குலத்தோர் ஜமீன்களை திருடுவது.

    மேலும் நீங்கள் சொல்லும் கதைக்கு ஒரு உதாரணம்

    தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்" என்ற நூலில் உள்ள கல்வெட்டு தொடர் எண் : 01/1999, கிழ் கண்ட பெயரை குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டின் காலம் கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டு ஆகும் :-

    "கொங்கரையர் கள்ளப் பெருமானார் தேவியார் கொங்கச்சியார்"

    இப் பெயரை சில கள்ளர் சமூகத்தவர்கள் குறிப்பாக "படியான் அம்பலம்", "நெடுவை அருண்" போன்றவர்கள் தங்களது வம்சத்தவர்களாக தெரிவிக்கிறார்கள்.

    ஆனால் அது முற்றிலும் தவறானதாகும் என்பதை கிழ் காணும் அதே "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்" என்ற நூலில் உள்ள கல்வெட்டு தொடர் எண் : 05/2004, லில் இருந்து நமக்கு தெளிவாக தெரியவருகிறது. இக் கல்வெட்டின் காலம் கி.பி.1194 ஆகும் (மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலம்).

    "கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன் சிவக்கொழுந்துக் கண்ணப்பன்"

    இக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் "கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன்" என்பவர் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை" சேர்ந்தவர் என்பது மிகத் தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது. மேலும் "கொங்கரையர்" என்பது அவர்களது "பட்டப் பெயர்" ஆகும்.

    எனவே கி.பி. 8-9 ஆம் நுற்றாண்டுகளில் குறிப்பிடப்படும் "கொங்கரையர் கள்ளப் பெருமானார்" என்பவர் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை" சேர்ந்தவர் என்பதை கி.பி.1194 ஆம் ஆண்டு சோழர்கள் காலத்து கல்வெட்டில் குறிப்பிடப்படும் "கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன்" என்பவரின் "கொங்கரையர்" பட்டப் பெயர் மூலம் தெரியவருகிறது. "கள்ளப் பெருமானார்" என்பது பெயராகும். அது "கிருஷ்ண பகவானைக்" குறிப்பிடும் பெயராகும்.

    மேலும் கள்ளர் சமூகத்தவர்களான "படியான் அம்பலம்", "நெடுவை அருண்" போன்றவர்கள் தங்களது வம்சத்தவர்களாக தென்னிந்திய கல்வெட்டு தொகுதியில் (S.I.I. Vol-XIII) இருந்து குறிப்பிடுவதும் தவறானதாகும். சில கல்வெட்டுகள் "பெரும்பிடுகு முத்தரைய மன்னரை" குறிப்பதாகும். அதே போல தருமபுரி கல்வெட்டும் "ஒருவருடைய பெயரையே" அது தெரிவிக்கிறது.

    // இப்படி மனசாட்சி இல்லாமல் பொய் சொல்லிக்கொண்டே இருக்கிங்க, கொங்கரையர் பட்டம் கள்ளர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது ஒரு வன்னியர் கூட இல்லை மேலும் அதில் உள்ள பள்ளி என்பது இடத்தை குறிக்கும் சாதியை அல்ல.

    சரியான விளக்கம் கிழே :
    கலிக்கம்பசேரியில் வாழும் கொங்கரையன் சிவக்கொழுந்துக் கண்ணப்பன்

    சிவகிரி ஜமீன் வாரிசு நான் மறவர் என்று அவர் சொல்லிய பிறகும் அதற்கு ஓரு கதை சொல்வது.

    வன்னியர்கள் வடக்கில் ஏதாவது உங்கள் வீர வரலாறு சோல்வதற்க்கு இருக்கா என்று பாருங்கள், பிச்சாவரம் ஜமீன் (இவர்களுக்கு வீர வரலாறு ஓன்றும் இல்லை) பட்டம் கட்டுவதை வைத்துக் கொண்டு சோழர்கள் என்று பெருமை பேசலாம் ஆனால் அதுவே 18 ம் நூற்றண்டில் அவர்களுக்கு வந்தது அதர்க்கு முன் இல்லை. இந்த கோவிலில் உள்ள நடராசர் எத்தனையோ நுற்றாண்டு மதுரையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தார்.

    ReplyDelete
  3. மேலும்
    தேவகோட்டை அருகிலுள்ள சூரைக்குடியில் கள்ளர் குலத்தைச் சேர்ந்த விசயாலத் தேவன் என்பவருக்கு வன்னியர் என்ற சாதிப்பட்டம் உண்டு. இவ்விசயாலத் தேவ வம்சத்தவர்கள் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வலங்கை வாழவந்த விசயாலயத் தேவர் என்றே பட்டம் புனைந்தனர். சாத்தூர்ப் பகுதியிலுள்ள ஏழாயிரம் பண்ணை வன்னியர் (கள்ளர்) வரலாறு பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது. வன்னியக் கள்ளர்கள் பன்றிக் குட்டிக்குப் பாலூட்டிய திருவிளையாடற் புராணத்தினைத் தங்கள் குலத் தொன்மமாகக் குறிப்பிட்டு உரிமை கோருகின்றனர். (கி.பி. 1806ஆம் ஆண்டைய பாளையப்பட்டு வம்சாவளி.) பள்ளி (வன்யர்) குலத்தவரோ வலைவீசிய திருவிளையாடற் புராணத்திற்கு உரிமை கோருகின்றனர். (கி.பி. 18ஆம் நூற்றாண்டைய குற்றாலம் செப்பேடு.)

    ReplyDelete
  4. மேலும்
    தேவகோட்டை அருகிலுள்ள சூரைக்குடியில் கள்ளர் குலத்தைச் சேர்ந்த விசயாலத் தேவன் என்பவருக்கு வன்னியர் என்ற சாதிப்பட்டம் உண்டு. இவ்விசயாலத் தேவ வம்சத்தவர்கள் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வலங்கை வாழவந்த விசயாலயத் தேவர் என்றே பட்டம் புனைந்தனர். சாத்தூர்ப் பகுதியிலுள்ள ஏழாயிரம் பண்ணை வன்னியர் (கள்ளர்) வரலாறு பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது. வன்னியக் கள்ளர்கள் பன்றிக் குட்டிக்குப் பாலூட்டிய திருவிளையாடற் புராணத்தினைத் தங்கள் குலத் தொன்மமாகக் குறிப்பிட்டு உரிமை கோருகின்றனர். (கி.பி. 1806ஆம் ஆண்டைய பாளையப்பட்டு வம்சாவளி.) பள்ளி (வன்யர்) குலத்தவரோ வலைவீசிய திருவிளையாடற் புராணத்திற்கு உரிமை கோருகின்றனர். (கி.பி. 18ஆம் நூற்றாண்டைய குற்றாலம் செப்பேடு.)

    ReplyDelete