★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Wednesday, 28 December 2011

மக்களவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக்பால் மசோதா நிறைவேறியது


மக்களவையில் நாள் முழுவதும் நடந்த சூடான விவாதத்துக்கு பின், நள்ளிரவில்   கடும் கூச்சல் குழப்பத்துக்கும், எதிர்க்கட்சிகள் வெளிநடப்புக்கும் இடையே குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக்பால் மசோதா  நிறைவேற்றப்பட்டது. ஊழலை ஒழிக்க லோக்பால் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தொடர் போராட்டம் நடத்தினார். இதன்விளைவாக, லோக்பால் மசோதாவை மத்திய அரசு தயாரித்தது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த அன்னா குழுவினர் ஜன் லோக்பால் பெயரில் தனி மசோதாவை தயாரித்தனர்.

அரசு தயாரித்த மசோதா மற்றும் அன்னா குழுவின் ஜன் லோக்பால் மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலித்தது. பின்னர், லோக்பால் மசோதாவுக்கு அமைச்சர்கள் குழு இறுதி வடிவம் கொடுத்தது. மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. விவாதம் நடத்தி மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது. மக்களவையில் நேற்று லோக்பால் மசோதா மீது விவாதம் நடந்தது. இதில், பங்கேற்ற பெரும்பா லான கட்சிகளின் எம்.பி.க் கள் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சி.பி.ஐயை லோக்பால் அதிகாரத்துக்குள் கொண்டு வரவேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர். லோக்பால் அமைப்பில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது என்று கோரப்பட்டது. லோக்அயுக்தா அமைக்க கட்டாயப்படுத்துவது மாநிலங்களின் உரிமையில் தலையிடுவதாகும் என்று குற்றம்சாட்டிய எம்.பி.க்கள் அந்த பிரிவை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

லோக்பாலில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது நாட்டை 2வது பிரிவினைக்கு கொண்டு செல்லும் என்று பா.ஜ குற்றம்சாட்டியது. அதிகாரமற்ற லோக்பால் அமைப்பை ஏற்படுத்த தேவையில்லை என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் மீது ஊழல் புகார் வந்ததுமே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவருக்கு லோக்பால் உத்தரவிடலாம் என்று மசோதாவின் 24வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகாருக்குள்ளானவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை லோக்பாலுக்கு மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவர் தெரிவிக்க வேண்டும். இந்த சட் டப்பிரிவுக்கு பெரும்பாலான எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மசோதாவில் 56 திருத்தங்கள் செய்ய மக்களவை சபாநாயகர் மீரா குமாரிடம் எதிர்க்கட்சியினர் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். நாங்கள் கொண்டு வரும் திருத்தங்களை நிறைவேற்றாவிட்டால், மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என்று பா.ஜ எச்சரித்தது. இல்லாவிட்டால், வலுவான லோக்பால் அமைக்கும் வகையில் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு மீண்டும் அனுப்ப வேண்டும் என்று பா.ஜ கூறியது.

இந்த நிலையில், மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரிலேயே இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும் என்பதில் அரசும் உறுதியாக உள்ளது. இது பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் நேற்று மாலை அவசர ஆலோசனை நடத்தினர். அப்போது, லோக்பால் மசோதாவில் அரசே சில திருத்தங்களை கொண்டுவருவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

மசோதாவின் 24வது பிரிவை நீக்கும் தீர்மானம் உள்ளிட்ட 10 திருத்த தீர்மானங்களை அரசே கொண்டு வந்தது. பிரணாப் முகர்ஜி இந்த அறிவிப்புகளை வெளியிட்டு லோக்சபாவில் பதிலளித்தார். அதன் பின் முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பேசினர். அதன் பின், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்த தீர்மானங்கள் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டன. அரசு கொண்டு வந்த 10 திருத்தங்கள் மட்டும் ஓட்டெடுப்பில் ஏற்கப்பட்டன. கடைசியாக லோக்பால் மசோதா குரல் ஓட்டெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.

லோக்பால் வரம்புக்குள் சி.பி.ஐ பிரதமர் மன்மோகன் மறுப்பு

மக்களவையில் நடந்த விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், சி.பி.ஐ.யை லோக்பாலின் அதிகாரத்துக்குள் கொண்டுவரக்கூடாது. அது சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். ஒருவர் எவ்வளவு பெரிய பதவியை வகித்தாலும் அவரது செயல்கள் பற்றி விசாரிக்க லோக்பாலுக்கு அதிகாரம் வழங்கப்படும். மாநிலங்களில் அத்தியாவசிய சேவைகளில் நடக்கும் ஊழலை தடுக்கவே லோக்அயுக்தாக்கள் அமைப்பதை கட்டாயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்று கூறுவதை ஏற்க முடியாது. இந்த நாள் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாளாகும் என்றார்.

அரசியல் சட்ட திருத்த மசோதா தோல்வி

லோக்பால் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறினாலும், அதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா நிறைவேறுவது முக்கியம். இல்லாவிட்டால் அந்த மசோதாவுக்கு உரிய அதிகாரம் இருக்காது. மக்களவையில் அரசியல் சட்ட திருத்த மசோதா மீதும் முதலில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதன் முடிவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏற்கவில்லை. திருத்தங்களுடன் நிறைவேற்ற வேண்டும் என்று கோரினர்.

 மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியான 273 வாக்குகள் இருக்க வேண்டும். நள்ளிரவை தாண்டியும் அரசியல் சட்ட திருத்த மசோதா நிறைவேறுவதில் இழுபறி நீடித்தது. ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் மசோதா தோல்வி அடைந்தது. இதுகுறித்து மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், குரல் வாக்கெடுப்பு மூலம் லோக்பால் மசோதா நிறைவேறிய பின், அதற்கு அரசியல் சட்ட அந்தஸ்து வழங்க வகை செய்யும் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தந்திருக்க வேண்டும்.

ஆனால் பா.ஜ.வும் இடதுசாரிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம் தங்கள் சுயரூபத்தை காட்டி விட்டனÕÕ என்றார். நாங்கள் கொண்டுவந்த திருத்தங்கள் எதையும் ஏற்காமல், அரசு தந்திரத்துடன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதை அரசு லோக்பால் மசோதா என்றுதான் கூற வேண்டும் என பா.ஜ. உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அந்த திக்...திக் வினாடிகள்...

* இரவு பத்து மணி நெருங்கிய நிலையில், அரசு சார்பில் பிரணாப் முகர்ஜியின் பேச்சுதான் கிளைமாக்சாக அமைந்தது.
* மாநிலங்களை ஆலோசிக்காமல் லோக் அயுக்தா அமைக்க முடியாது என்பது உட்பட 10 திருத்தங்கள் கொண்டு வந்தார்.
* அவர் பேசி முடித்ததும், எதிர்க்கட்சி தரப்பில் சலசலப்பு காணப்பட்டது.
* அடுத்த சில நொடிகளில் திருத்த தீர்மானங்கள் மீது ஓட்டெடுப்பு நடத்த ஆரம்பித்தார் சபாநாயகர் மீரா குமார்.
* எதிர்கட்சிகள் கொண்டு வந்த திருத்த தீர்மானங்களை ஒவ்வொரு தொகுப்பாக பட்டியலிட்டு, அதன் மீது குரல் வாக்கெடுப்பு நடந்தது. அவை எல்லாம் நிராகரிக்கப்பட்டன.
* இடதுசாரிகள் கொண்டு வந்த திருத்தமும் குறைந்தபட்ச ஆதரவு கூட இல்லாமல் நிராகரிக்கப்பட்டடது.
* லோக்பால் வரம்பில் தனியார் நிறுவனங்களை கொண்டு வர வேண்டும் என்று கோரி எதிர்கட்சி கொண்டு வந்த திருத்தமும் ஓட்டெடுப்பில் நிராகரிக்கப்பட்டது.
* இந்த நிலையில், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். வேறு சிலரும் வெளியேறினர்.
* இதையடுத்து லோக்பால் மசோதா பெரிய அளவில் எதிர்ப்பின்றி குரல் ஓட்டெடுப்பில் நிறைவேறியது.
*அதன் பின், maraththami zhar senai அதிமுக, கம்யூ, பிஜு ஜனதா தளம் கட்சியும் வெளிநடப்பு செய்தன.

No comments:

Post a Comment