★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Wednesday, 21 December 2011

பார்லிமென்டில் அதிக அமளி: ப.சிதம்பரத்திற்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

ள் துறை அமைச்சர் சிதம்பரத்தை குறி வைத்து பா.ஜ., எம்.பி.,க்கள் பிரச்னையை கிளப்பியதால் பார்லிமென்டின் இரு சபைகளுமே கலகலத்தன. கேள்விகளுக்கு பதில் அளிக்க சிதம்பரம் எழுந்த போது பா.ஜ., எம்.பி.,க்கள் கூச்சல் போட்டு எதிர்ப்பைக் காட்டினர் . டில்லி சொகுசு ஓட்டல் விவகாரம் தொடர்பாக சிதம்பரம் மீது சபை உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரவும் பா.ஜ., நோட்டீஸ் அளித்து அனுமதி கேட்டதாலும் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிதம்பரத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பார்லிமென்டில் அவரை புறக்கணிப்பதாகவும் தேசிய ஜனநாயக  கூட்டணி ஏற்கனவே அறிவித்து அமல்படுத்தியது. இந்நிலையில் சிதம்பரத்திற்கு எதிராக கடந்த வாரம் புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியது.

டில்லியைச் சேர்ந்த தனியார் சொகுசு ஓட்டல் உரிமையாளர் குப்தா என்பவர் மீது தொடரப்பட்டிருந்த மோசடி குறித்த கிரிமினல் வழக்கை வாபஸ் பெறச் சொல்லி சிதம்பரம் நிர்பந்தம் செய்தார் என்று வெளியான செய்தியை வைத்து எதிர்க்கட்சிகள் பிரச்னையை கிளப்பின. பா.ஜ., வும் அ.தி.மு.க.,வும் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை பார்லிமென்ட்டில் அமளியில் இறங்கியதால் Œபைகள் ஒத்திவைக்கப்பட்டன. இதன் பிறகு, இவ்விஷயம் குறித்து பத்திரிகைகளில் விளக்கம் அளித்து இருந்தார் சிதம்பரம். பார்லிமென்ட் நடக்கும் காலங்களில் சபையில் எழுப்பட்ட பிரச்னைக் குறித்து சபைக்கு வெளியில் கருத்து தெரிவித்ததை ஆட்சேபம் செய்து சிதம்பரம் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பா.ஜ., முடிவு செய்தது.

நேற்று காலை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி லோக்சபாவில் யஷ்வந்த் சின்காவும் ராஜ்ய சபாவில் அலுவாலியாவும், இது தொடர்பாக உரிமை மீறல் நோட்டீஸ் அளித்திருந்தனர். இதனையடுத்து, நேற்று லோக்சபா கூடியதும் கேள்வி நேரம் துவங்கியது. அப்போது உள் துறை அமைச்சர் சிதம்பரம் பதில் அளிக்க எழுந்தார். அப்போது பா.ஜ., எம்.பி.,க்கள் பலரும் எழுந்து கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆள் கடத்தல் குறித்து காங்கிரஸ் எம்.பி.,யான மீனாட்சி நடராஜன் எழுப்பிய கேள்விக்கு சிதம்பரம் பதிலளித்துக் கொண்டிருந்த போது அவையில் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. சிதம்பரத்தை பேச விடாமல் தடுக்கும் வகையில் பா.ஜ., எம்.பி.,க்கள் அமளியை கிளப்பினர். இதனால், சிதம்பரம் என்ன பேசுகிறார் என்பதே புரியாத அளவுக்கு நிலைமை இருந்தது. ஆனாலும், எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் எந்த சலனத்திற்கும் இடம் அளிக்காமல் பதில்களை சிதம்பரம் அளித்துக் கொண்டே இருந்தார்.

தனியார் ஓட்டல் அதிபருக்காக தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும், பார்லிமென்டின் விதிமுறைகளை சிதம்பரம் மீறிவிட்டதாகவும் பா.ஜ., எம்.பி.,க்கள் குற்றம் சாட்டி குரல் எழுப்பியபடியே இருந்தனர். ஆனாலும் Œபையை ஒத்திவைக்க மறுத்த சபாநாயகர் மீரா குமார், தொடர்ந்து அடுத்தடுத்த கேள்விகளை எடுத்துக் கொண்டு கேள்வி நேரத்தை நடத்தி முடித்தார்.

பின்னர் துவங்கிய ஜீரோ நேரத்தின் போதும் பா.ஜ., தரப்பில் மூத்த எம்.பி.,யான யஷ்வந்த் சின்கா தலைமையில் அந்த கட்சி எம்.பி.,க்கள் எழுந்து பிரச்னையை கிளப்பினார். உரிமை மீறல் நோட்டீஸ் மீதான முடிவு என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தனர். அ.தி.மு.க.,வும் இதை ஆதரித்தது. காங்கிரஸ் எம்.பி.,க்கள் எதிராகச் சத்தம் போட்டபடி இருந்தனர். இருப்பினும் சபாநாயகர் தலையிட்டு அமைதிப்படுத்தினார்.

ராஜ்யசபாவிலும்ராஜ்ய சபாவிலும் சிதம்பரம் குறித்த விவகாரம் கிளம்பியது. பா.ஜ., எம்.பி.,யான சந்தன் மித்ரா எழுந்து சிதம்பரம் விவகாரத்தை கிளப்பினார்.
கேரளாவைச் சேர்ந்த ராஜிவ் உள்ளிட்ட இடதுசாரி எம்.பி.,க்கள் சிலர் எழுந்து முல்லைப் பெரியாறு அணை பிரச்னை குறித்து சிதம்பரம் தெரிவித்த கருத்தை விமர்சித்து குரல் எழுப்பியபடி இருந்தனர். இதனையடுத்து எழுந்த கூச்சல், குழப்பம் காரணமாக வேறு வழியின்றி 2 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
 -maraththamiz har senai

No comments:

Post a Comment