★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Wednesday, 7 December 2011

பசுமை கலாம் திட்டத்தின் இணையதளம் தொடக்கம்


சென்னை : பசுமை கலாம் திட்டத்தின் இணையதளம் தொடக்கவிழா சென்னையில் நேற்று நடந்தது. இந்தியா முழுவதும் 2020ம் ஆண்டுக்குள் 100 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகளை நடிகர் விவேக் மேற்கொண்டார். தற்போது, இந்த இலக்கை தாண்டி மரக்கன்றுகள் நடும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், ‘பசுமை கலாம் திட்டம்’ என்ற பெயரில்  www.greenkalam.in   என்ற புதிய இணைய தளம் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. நடிகர் விவேக் தலைமை தாங்கினார். அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ், புதிய இணையதளத்தை தொடங்கி வத்தார். இந்த இணையதளத்தில் மரகன்றுகள் நடப்பட்டதற்கான போட்டோக்கள் மற்றும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

முடிவில், நடிகர் விவேக் அளித்த பேட்டி: ‘மரம் வைப்பவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்று சொன்னது அந்த காலம். தற்போது நிலைமை அப்படியல்ல. யாரும் மரத்துக்கு தண்ணீர் ஊற்றலாம். உலகம் வெப்பமயமாகி ஒசோன் படத்தில் மேலும், மேலும் ஓட்டைகள் விழுந்து வருகிறது. இந்த நிலையை போக்கவும், கார்பன் மோனாக்சைடை கட்டுப்படுத்தவும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். இதற்காக, அப்துல் கலாம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கினார்.

தற்போது, தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இலக்கை தாண்டி விட்டதே என்று மரக்கன்றுகள் நடாமல் இருக்க மாட்டோம்.
கூடுதலாக ஒன்றை லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். ஜனவரி மாத இறுதியில் அப்துல் கலாம் கடலூர் மாவட்டத்தில் இறுதி மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் மரம் வளர்ப்பு சம்பந்தமாக தயாரிக்கப்பட்டுள்ள ஆவண குறும்படத்தையும் வெளியிடுகிறார். இவ்வாறு விவேக் கூறினார்.



- maraththami zhar senai

No comments:

Post a Comment