★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Monday, 26 December 2011

பிரதமர் மன்மோகனுக்கு கறுப்புக் கொடி: விஜயகாந்த் கைது

சென்னை, டிச. 26-
பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த அவர் கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கினார். நேற்று இரவு முதல்- அமைச்சர் ஜெயலலிதாவும், இன்று காலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினர்.

சென்னை பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் இன்று காலை மன்மோகன்சிங் கலந்து கொண்டார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரதமர் மன்மோகன்சிங் சென்னை வரும்போது அவருக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.  
இதன்படி பிரதமர் மன்மோகன்சிங், பல்கலைக்கழக விழாவுக்கு செல்லும் வழியில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆயிரக்கணக்கான தே.மு. தி.க. தொண்டர்கள் காலை முதலே திரண்டனர். சரியாக 8.45 மணியளவில் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு விஜயகாந்த் காரில் வந்து இறங்கினார். அவர் கறுப்பு நிற சட்டை அணிந்திருந்தார். 
தே.மு.தி.க. மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதிசும் உடன் வந்தார். விஜயகாந்தை பார்த்ததும் அங்கு கூடியிருந்த தே.மு. தி.க. தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். கேப்டன் வாழ்க என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். கறுப்புக் கொடி போராட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க. தொண்டர்கள் சாலையை விட்டு வெளியில் செல்ல முடியாத அளவுக்கு போலீசார் அரண் போல சுற்றி நின்றனர். பலத்த பாதுகாப்பு வளையதுக்குள் மத்தியில் விஜயகாந்த் தொண்டர்களுடன் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றார். அவருக்கு பின்னர் தே.மு. தி.க. தொண்டர்கள் அணி வகுத்து சென்றனர்.
 சைதாப்பேட்டை சின்ன மலை நீதிபதிகள் குடியிருப்பு அருகில் வைத்து விஜயகாந்தை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்தனர். ஆயிரக்கணக்கான தே.மு.தி.க. தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மா.பா.பாண்டியராஜன், கு.நல்லதம்பி, பார்த்தசாரதி, சேகர், அருண் சுப்பிரமணியம், சந்திரகுமார், சுந்தர்ராஜன், அனகை முருகேசன் ஆகியோர் கைதானார்கள்.
பின்னர் இவர்கள் அனைவரும் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வேன்களில் ஏற்றப்பட்டு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.   விஜயகாந்தை கைது செய்து போலீசார் வேனில் ஏற்றிய போது, அதில் ஏறுவதற்காக தே.மு.தி.க. தொண்டர்களும் முண்டியடித்தனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்ட்டது.
போராட்டம் முடிந்து அனைவரும் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர், அப்பகுதி முழுவதும் கறுப்புக் கொடிகளும் செருப்புகளும் சிதறிக் கிடந்தன. விஜயகாந்தின் போராட்டம் காரணமாக அண்ணா சாலையில் இன்று காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் பரபரப்பும் நிலவியது. 
-maraththami zhar senai

No comments:

Post a Comment